
தாய்மை அடைவது என்பது பெண்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய விஷயமாகும். இதை ஒவ்வொரு பெண்ணும் புனிதமாக கருதுகின்றனர். ஆனால் அந்த 10 மாதக் காலம் பெண்கள் படும் பாடு இருக்கின்றதே அடேங்கப்பா அதை வார்த்தையால் சொல்லி மாலாது. மிகவும் சிரமப்பட்டு தான் ஒவ்வொரு வரும் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். குறிப்பாக பிரசவ வலி என்பது மிக பயங்கரமானது. இவற்றை எல்லாம் சொல்லி உங்களை பயம் காட்ட நாங்கள் விரும்ப வில்லை.
கர்ப்பமான பெண்கள் முதலாவது உங்களை நீங்கள் நேசிக்க வேண்டும். உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை குறித்து அதிக கவலை பட வேண்டாம். குறிப்பாக மாற்றங்கள் ஒவ்வொன்றையும் ரசிக்கத் தொடங்குங்கள். கட்டாயம் பயமும் கவலையும் உங்களை விட்டு ஓடி போய் விடும். நீங்கள் யாராலும் செய்ய முடியாத அளவிற்கு ஒரு உயிரை உண்டாக்குகிறீர்களே. இது இந்த உலகத்தில் எந்த மந்திவாதியாலும் முடியாது. பெண்களாகிய உங்களால் மட்டும் தான் முடியும்.
உங்கள் உடம்பை நேசிக்க தொடங்குங்கள்
தாய்மை என்பது ஓர் அற்புதமான வரம். கர்ப்ப காலத்தில் உங்கள் உடம் நீங்கள் எதிர்பார்க்கும் வடிவத்தினை பெறாது. மாறாக அது உங்கள் விருப்பமின்றி தான் இருக்கும். அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்குள் ஓர் உயிர் உருவாகி கொண்டிருக்கின்றது என நினைத்துக் கொள்ளுங்கள்.
பிறருடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்
கர்ப்பமாக(pregnant) இருக்கும் பெண்கள் மற்ற பெண்களுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். அவர்களின் உடல் வடிவம் வேறு. உங்கள் உடல் வடிவம் வேறு. மற்ற பெண்களை போன்று நீங்கள் இருக்க வேண்டும் என நினைப்பது தவறு. உங்களின் உடல் வடிவத்தை வயிற்றில் இருக்கும் குழந்தை தான் தீர்மானிக்கின்றது.
சந்தோஷமாக இருக்க முயற்சி செய்யுங்கள்
கர்ப்பமாக(pregnant) இருக்கும் போது எப்போதும் உங்கள் மனதையும் உடலையும் சந்தோஷமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால் அது உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையை தான் பாதிக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் உங்கள் குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும். இல்லாவிட்டால் அசைவுகள் இன்றி சோர்வுடன் காணப்படும்.
அதிக தண்ணீர் குடியுங்கள்
கர்ப்பமாக(pregnant) இருக்கும் பெண்கள் அதிக தண்ணீர் குடிப்பது நல்லது. கர்ப காலத்தில் உங்கள் உடலின் எடை உங்கள் கட்டுப்பாடின்றி அதிகரிக்க தொடங்கும். அந்த நேரத்தில் தோலில் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தோல் சுருக்கங்களை இயற்கையாக சரி செய்யும் ஆற்றல் தண்ணீருக்கு உள்ளது. இது உங்கள் உடலில் ஏற்படும் சுருக்கங்களை குறைத்து உடலை பளபளப்புடன் வைத்திருக்க உதவுகின்றது.
குழந்தையுடன் பேசுங்கள்
கர்ப்பமாக(pregnant) இருக்கும் பெண்கள் தனியாக பேசுவதை அதிகம் உணர்ந்திருப்பீர்கள். அவர்கள் தனியாக பேசவில்லை. வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். அதை நீங்கள் உற்ற கவனித்தால் புரியும். இது ஒரு மிகச்சிறந்த நல்ல முறை என மருத்துவ ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கர்ப்பமாக(pregnant) இருக்கும் பெண்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் அதிக நேரம் பேச வேண்டும். அப்போது தான் குழுந்தை தாயின் சத்தத்தை கேட்க தொடங்கும். அம்மா சொல்வதை வயிற்றில் இருக்கும் போதே கேட்க பழகிக் கொள்ளும்.
குழந்தைக்கு காத்திருங்கள்
குழந்தையில் வரவை குறித்து எதிர்பார்த்து காத்திருங்கள். அதை உங்கள் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே சொல்லுங்கள். தந்தைக்கும் அந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துங்கள். அப்போது தான் குழந்தை பிறந்த பிறகு இருவரும் பராமரிப்பில் ஈடுபடுவார்கள். இல்லை எனில் குழந்தை தந்தையிடம் செல்லாது.
உடல் எடை
கர்ப்பமாக(pregnant) இருக்கும் பெண்கள் உடல் எடை கூடுகின்றது என்கிற கவலை வேண்டாம். குழந்தை பிறந்த சிறிது காலத்திற்கு பிறகு உடலை குறைத்து விடலாம். நமது நடிகைகளை பாருங்கள். தற்போது குழந்தை பிறப்பில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். உடல் எடையையும் குறிப்பிட காலத்தில் குறைத்து விடுகின்றனர். அதனால் உடல் எடை குறித்த கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கவலைப்பட வேண்டாம்.
வீட்டிலேயே தக்காளி பேஷியல் செய்துக்கொள்வது எப்படி
சரியான பிரா சைஸ்சை கண்டுபிடிப்பது எப்படி? மார்கெட்டில் கிடைக்கும் பிரா வகைகள்!
கோடை காலத்தில் பெண்கள் விரும்பும் துப்பட்டா ஸ்டைல்ஸ்
பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube, shutter stock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi