நாம் வீட்டில் வளர்க்கும் ஒவ்வொரு செடிகளுக்கும், ஒரு தனித்துவம் உள்ளது. யாருக்குத்தான் அழகிய செடிகள் பிடிக்காது? செடிகளை வீட்டில்(home) அன்போடு, ஆசையாக வளர்த்து வரும் போது, அவைகள் உங்களுக்கு தரும் ஆனந்தமான உணர்வுகளை, உணரமட்டுமே முடியும், விவரிக்க வார்த்தைகள் இல்லை!
Table of Contents
- வீடுகளில் செடிகள் வளர்ப்பதன் முக்கியத்துவம்(Importance of house plants)
- அதிர்ஷ்ட செடிகளை தேர்வு செய்யும் முறை(plants to attract luck )
- செடிகளை எப்படி தேர்ந்தெடுக்கக்கூடாது (How not to select the plants)
- எந்த திசைகளில் செடிகளை வைக்க வேண்டும்(Direction for indoor plants)
- நேர்மறை சக்தி, அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் செடிகள்(Plants to attract luck positivity)
- அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் பால்கனி செடிகள்(positive luck balcony plants )
- கேள்வி பதில்கள்(FAQ)
செடிகள் பல வகைகளில் கிடைகின்றன. குறிப்பாக வீட்டிற்குள் அல்லது நிழல் பகுதிகளில் வளர்ப்பவை, நல்ல வெயில் படும் வெளிப்புற தோட்டங்களில் அல்லது மொட்டைமாடியில் வளர்ப்பவை, மருத்துவ குணங்கள் உள்ள செடிகள், அழகிற்காக வளர்க்கும் செடிகள் என்று பல. இந்த வரிசையில், அதிர்ஷ்டத்தை (luck) கொண்டுவருவதாக நம்பப்பட்டு சில பிரத்யேக செடிகலும் வீடுகளில் வழக்கப்படுகின்றன. இந்த வகை செடிகள், இன்று பிரபலமாகி வருகின்றது.
அதிர்ஷ்ட செடிகளை (plant) பற்றி நீங்கள் மேலும் பல சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ள, தொடர்ந்து இந்த தொகுப்பை படியுங்கள்;
வீடுகளில் செடிகள் வளர்ப்பதன் முக்கியத்துவம்(Importance of house plants)
பல நூற்றுக் கணக்கான செடிகள் வீடுகளில் வளர்க்க கிடைகின்றன. நீங்கள் ஒரு நல்ல பெரிய தோட்டத்திற்கு சென்றால், அங்கு அவர்கள் பல வகை செடிகளை விற்பனை செய்வதை பார்க்கலாம். பொதுவாக அனைத்து வகை செடிகளுக்கும் ஏதாவது ஒரு முக்கியத்துவம் உள்ளது. அவற்றை புரிந்து கொண்டும், தெரிந்து கொண்டும் சரியான தேர்வை செய்து, உங்கள் வீட்டிற்கு ஏற்ற செடிகளை வளர்த்தால், அவை நிச்சயம் நீங்கள் எதிர் பார்த்த பலனைத் தரும். மேலும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செடிகளை வாங்கி வளர்க்கும் போது, அவை உங்கள் மனதிற்கு மேலும் மகிழ்ச்சியையும், அமைதியையும் தருகின்றது.
நீங்கள் ஏன் செடிகளை வளர்க்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய காரணங்கள் இங்கே;
- முதலாவதாக செடிகள் ஒரு அழகிய மற்றும் ரமியமான சூழலை உங்கள் வீட்டில் உண்டாக்கும்
- அதை நீங்கள் ஆசையோடு வளர்க்கும் போது, உங்கள் மன உளைச்சல், கவலை மற்றும் மன அழுத்தும் போன்ற பிரச்சனைகள் குறையும்
- செடிகளுக்கும் உணர்வுகள் உள்ளது. மற்ற வீட்டு வளர்ப்பு பிராகியால் போலவே, தங்கள் எஜமாநிகளின் நலனுக்காக வேண்டி வாழ்கின்றன
- செடிகளும் தங்கள் உணர்வுகளை நல்ல மனம் மூலம் வெளிபடுத்தும். ஆனால் அவற்றை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்
- செடிகள் வீட்டில் நல்ல நேர்மறை சக்திகளை அதிகரிக்கும்
- அதிக இடம் இருந்து நீங்கள் நிறைய செடிகளை தோட்டம் போல அமைத்து வளர்க்கும் போது, பல பறவைகளும், பட்டாம்பூசிகளும் ஈர்க்கப்படுகின்றன. இவை மேலும் உங்கள் வீட்டிற்கும், தோட்டத்திற்கும் அழகு சேர்க்கும்
- அனைத்து செடிகளுக்கும் ஒரு முக்கிய மருத்துவ குணங்கள் உள்ளது. உங்கள் தேவைக்கு ஏற்ற வாறு நீங்கள் தேர்வு செய்து வளர்க்கும் போது, உங்கள் வீட்டில் யாருக்காவது உடனடி மருந்து தேவைபட்டால், இந்த செடிகளின் இலைகள் மற்றும் பூக்களை பயன்படுத்திக் கொள்ளலாம்
- உங்கள் வீட்டு சமையல் தேவைக்கு ஏற்றவாறும் நீங்கள் செடிகளை தேர்வு செய்து வளர்க்கலாம். இத்தகைய செடிகள் உங்களது ஏதோ ஒரு காய்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகின்றது. இதனால் கடைகளில் வாங்கும் செலவுகளும் குறைகின்றது
- வாஸ்து செடிகள் மற்றும் அதிர்ஷ்டம் தரக்கூடிய செடிகள் மேலும் வீட்டிற்கு நன்மைகளை தருகின்றன. இத்தகைய செடிகள் வீட்டில் நேர்மறை சக்திகளை அதிகப்படுத்தி, ஆரோக்கியம், செல்வம், ஆயுள் என்று பல நன்மைகளை அதிகரிக்க உதவுகின்றன
அதிர்ஷ்ட செடிகளை தேர்வு செய்யும் முறை(plants to attract luck )
இன்று பெரும்பாலான மக்கள், பிடித்திருகின்றதோ அல்லது விருப்பம் இருகின்றதோ, அதிர்ஷ்டம் வரும் என்ற நம்பிக்கையிலாவது பல செடிகளை வாங்கி ஆர்வத்தோடு வளர்த்து வருகஈன்றனர். இந்த ஆர்வத்தில், நீங்கள் தேர்வு செய்யும் செடிகளும் உங்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். உங்களுக்காக இங்கே சில குறிப்புகள்;
- முதலில் நீங்கள் செடிகளை வாங்கும் முன், நீங்கள் வாழும் இடத்தின் தட்பவெப்ப நிலை அந்த செடிகள் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்குமா என்று பார்க்க வேண்டும்
- உங்கள் வீட்டிற்குள் வரும் சூரிய ஒளியின் அளவு, மற்றும் சுத்தமான காற்றின் அளவும் கூட செடிகள் ஆரோக்கியமாக வாழ உதவும். அதனால் போதிய காற்றோட்டமும், வெளிச்சமும் வீட்டிற்குள் வருதற்கு ஏற்றவாறு செடிகளை தேர்வு செய்யவும்
- சில செய்தகள் விற்பனை தோட்டத்தில் பார்ப்பதற்கு அழகாகவும், ஆரோக்கியமானதாகவும் இருந்தாலும், உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்ததும், ஓரிரு நாட்களில் குன்றிவிடக் கூடும். இதன் காரணத்தை நீங்கள் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறான செடிகளை தேர்வு செய்ய வேண்டும்
- செடிகளின் விலைகளையும் கவனிக்க வேண்டியது முக்கியம். சில செடிகள் மலிவான விலையில் கிடைக்கும், ஆனால் சில செடிகள் அதிக விலை உடையதாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்தவாறு செடிகளை தேர்வு செய்ய வேண்டியது முக்கியம்
- செடியின் பராமரிப்பு. சில செடிகளுக்கு அதிக பராமரிப்புத் தேவைப் படும், சில செடிகளை எளிதாக குறைந்த பராமரிப்பு, அல்லது வாரம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ தண்ணீர் ஊற்றுவதை தவிர வேறு எந்த பராமரிப்பும் இல்லை என்பது போலவும் செடிகள் இருக்கும். அவற்றில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்
- ஒரு சில செடிகள் சிறியதாக வாங்கி வந்து வளர்த்தாலே, நாளடைவில், விரைவாக பெரிதாகவும், அடர்த்தியாகவும் மற்றும் படர்ந்தும் பல செடிகளாக பெருகி விடக் கூடும். அத்தகைய செடிகளை பராமரிக்க உங்கள் வீட்டில் போதிய இடம் உள்ளதா என்று நீங்கள் பார்த்து வாங்க வேண்டும்
- சில செடிகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், பெரிதாக வளரவே வளராது. அவை அழகிர்க்காகவும், வாஸ்து காரணங்களுக்காகவும் வளர்க்கப்படும். இது உங்கள் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இருக்குமா என்று பார்த்து பின் தேர்வு செய்ய வேண்டும்
- நீங்கள் வாங்கும் செடியை எந்த இடத்தில் உங்கள் வீட்டில் வைக்கப் போகின்றீர்கள் மற்றும் அந்த இடம் அந்த செடிக்கு ஏற்றதாக இருக்குமா என்றும் பார்த்து வாங்க வேண்டும்
செடிகளை எப்படி தேர்ந்தெடுக்கக்கூடாது (How not to select the plants)
வண்ண வண்ண அழகான செடிகளை பார்த்து விட்டாலே அனைவரும் ஒரு கணம் மயங்கி நின்றுவிடுவார்கள். அத்தனை செடிகளும், ஏதோ ஒரு விதத்தில் ஒரு அழகுதான். எனினும், பெரும்பாலும், செடிகளை வாங்கும் போது பலர் சில தவறுகளை செய்து விடுகின்றனர். இதனால், அவர்களது தேர்வு தவறாகி, செடிகளை வாங்கும் நோக்கமும் நிறைவீராமல் போய் விடுகின்றது. அப்படி நேராமல், நீங்கள் செடிகளை வாங்கும் போது சில விடயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.
உங்களுக்காக இங்கே சில குறிப்புகள்;
- பெரும்பாலான வெட்ப மண்டல செடிகள் காற்றில் இருக்கும் நச்சுத்தனமையை சுத்தம் செய்ய உதவும். குறிப்பாக வீட்டினுள் வளர்க்கப்படும் செடிகள் காற்றை சுத்தம் செய்து, பிராண வாயுவை அதிகம் வெளியிடும். அப்படி பட்ட செடிகளை நீங்கள் கவனமாக தேர்வு செய்வது நல்லது
- அழகிற்காக மட்டுமல்லாது, வீட்டினுள் வைக்கப்படும் செடிகள் வேறு பல பலன்களையும் தருமா என்று பார்க்க வேண்டும்
- சிறிய அறைகளில் வைக்கும் செடிகளுக்கு முற்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அதாவது முற்கள் உள்ள செடிகளை தவிர்ப்பது நல்லது
- நட்சத்திர வடிவில் இருக்கும் செடிகள் மற்றும் முற்கள் இருக்கும் செடிகள் அதிக தீ(நெருப்பு) சக்தியை ஊக்கவிக்கும். அதனால், அத்தகைய செடிகளை நீங்கள் வீட்டின் அகலாமான மற்றும் பரவலான ஹால் போன்ற பகுதியில் வைக்கலாம்
- வட்டமாகவும், நெகிழ்வுத் தன்மையும் இருக்கும் இலைகளை கொண்ட செடிகள் அமைதியையும், நிம்மதியையும் தரும். அதனால், அப்படி பட்ட செடிகளை தேர்வு செய்யுங்கள்
- மரம் போன்று பெரிதாக வளரும் செடிகளை அல்லது மர வகைகளை வீட்டினுள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். அவைகளுக்கு அதிக வேர்கள் ஓட இடம் வேண்டும். மேலும் அவை அடர்ந்து, படர்ந்தும் வளரும். அப்படியான செடிகளை வீட்டினுள் வளர்க்க தேர்வு செய்யக் கூடாது
- காய்ந்த பூக்களை கொண்ட செடிகளை தவிர்பப்து நல்லது. பூக்கள் பார்ப்பதற்கு புதிதாக பூத்திருந்தாலும், சில பூக்கள் காய்ந்து போனது போன்ற தோற்றம் தரும். அத்தகைய செடிகளை தவிர்ப்பது நல்லது
- மூன்று எண்ணிக்கைகளில் இருக்கும் செடிகளை தவிர்ப்பது நல்லது. அவை உறவுகளுக்குள் இருக்கும் ஒற்றுமையை பாதிக்கக் கூடும்
- உங்கள் வீட்டின் கிழக்கு மற்றும் தேன் கிழக்கு திசைகளில் வைத்தால் நன்கு வளரக்கூடிய செடிகளை கவனித்து தேர்வு செய்யவும்
- சிலர் பாத்ரூமில் செடிகள் வளர்க்க விரும்புவார்கள். ஆனால், அங்கேயும், போதிய சூரிய ஒளி வருகின்றதா, சற்று காற்றோட்டமாக இருகின்றதா என்பதை கவனித்து, அப்படி வைக்க ஏதுவான செடி எதுவாக இருக்கும் என்று பார்த்து தேர்வு செய்யவும்
எந்த திசைகளில் செடிகளை வைக்க வேண்டும்(Direction for indoor plants)
- பொதுவாக, உங்கள் வீட்டிற்குள் எங்கெல்லாம் அதிக சூரிய வெளிச்சமும் காற்றும் வருகின்றதோ அந்த அறையிலும், திசையிலும் செடிகளை வைக்கலாம்.
- எனினும், கிழக்கு மற்றும் தேன் கிழக்கு திசைகளில் செடிகளை வைத்தால், சூரிய கதிர்கள் இயல்பாகவே தேவையான அளவு செடிகளுக்கு கிடைக்கும்
- உங்கள் வீட்டின் அமைப்பில் மேற்கு திசையில் அதிக சூரிய கதிர்கள் வரும் என்றாலோ மற்றும் காற்றும் நன்றாக வரும் என்றாலோ, மேற்கு திசைகளிலும் நீங்கள் செடிகளை வைக்கலாம்
- சிலர் வீட்டின் ஹால் பகுதியில் செடிகளை வளர்ப்பார்கள். அப்படி வளர்க்க வேண்டும் என்றால், நீங்கள் வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை அந்த செடிகளை வெயிலில் எடுத்து வைக்க வேண்டும், அப்படி இல்லையென்றால், தினமும் சூரிய கதிர்கள் அதன் மீது படும்படியான இடத்தில் வைக்க வேண்டும்
- அடுப்பங்கரையிலும் செடிகளை நீங்கள் வைக்கலாம். ஆனால், அடுப்பின் அக்னி வெப்பம் செடிகளை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம்
நேர்மறை சக்தி, அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் செடிகள்(Plants to attract luck positivity)
பல வகை செடிகள் வீட்டினுள் வளர்ப்பதற்காக கிடைகின்றன. இவற்றில் பெரும்பாலான செடிகள் நேர்மறை சக்திகளை ஈர்ற்பதாகவும், அதிர்ஷ்டத்தை அதிகப்படுத்துவதாகவும் தான் இருக்கும். அந்த வகையில் நீங்கள் எந்த செடியை வாகலாம் என்று தேடிக்கொண்டிருந்தால், இங்கே உங்களுக்காக சில செடிகளின் தொகுப்பு:
1. மணி மரம்:
இது அதிகம் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் கிடைக்கும் செடி வகை. இது பெங் ஷுய் அதிர்ஷ்டத்திற்கு புகழ் பெற்றது. இது அதிக செல்வத்தை ஈர்க்கும் என்று நம்ப்பப்படுகின்றது.
2. மணி பிளான்ட்
இது மிகவும் பிரபலமான செடி. இது அனைத்து சீர்தொஷா நிலைகளிலும் வளரும். இது மிக எளிதாக கிடைக்ககூடிய கொடி வகையை சேர்ந்தது. இது அதிக செல்வத்தை ஈர்க்கும் என்று நம்பப்படுகின்றது. இது பல வண்ண இலைகளில், அதாவது வெள்ளை மற்றும் பச்சை கலந்த இலைகள், வெளிர் பச்சை அல்லது சற்று மஞ்சள் சாயல் கொண்ட நிற இலைகள், அடர் பச்சை நிற இலைகள் என்று பல வகைகளில் கிடைகின்றது.
3. அதிர்ஷ்ட மூங்கில்
இந்த மூங்கில் செடி, மிக சிறியதாக இருக்கும். இதனை வீட்டின் எந்த பகுதியிலும் வைத்து வளர்க்கலாம். இதற்கு சிறிது தண்ணீர் மட்டுமே தேவை. பராமரிப்பும் எளிது. இந்த செடி அதிக செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும் என்று நம்பப்படுகின்றது.
4. கோல்டன் பதோஸ்
இந்த வகை செடிகள் மணி பிளான்ட் வகையை சேர்ந்தது. இது இந்தியாவில் மிகவும் பிரபலமான செடி. இதற்கு பல்வேறு பெயர்களும் உள்ளன. இதற்கு இருதய வடிவில் இருக்கும் இலைகள் இருக்கும். இந்த செடி, செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டுவருவதாக நம்ப்பப்படுகின்றது.
5. பீஸ் லில்லி
இந்த செடி பெங் ஷுய் வகையை சேர்ந்தது. இது நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாக நம்பப்படுகின்றது. இதற்கு காற்றை சுத்தம் செய்யும் பண்புகள் உள்ளன. எனினும், இதற்கு வாரம் ஒரு முறையாவது தேவையான தண்ணீர் ஊற்ற வேண்டும் மற்றும், சூரிய வெளிச்சம் ஓரளவிற்காவது தேவைப்படும்.
6. சினேக் பிளான்ட்
இந்த செடி வீட்டில் அதிக அளவு வளர்க்கப்படும் செடி வகை. இதற்கு பல பெயர்களும் உள்ளன. இது பெங் ஷுய் வகையை சேர்ந்த செடி. இது நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாக நம்பப்படுகின்றது. இதற்கு காற்றை சுத்தம் செய்து, காற்றின் தரத்தை அதிகப்படுத்தும் பண்புகள் உள்ளது.
7. அக்லானிமா
இந்த செடி வகை வீட்டினுள் அதிகம் வளர்க்கப்படுபவை. இது தென் ஆசிய பகுதிகளில் அதிகம் காணப்படும். இது பல வகைகளில் உள்ளது. அதிக குளிர் உள்ள இடங்களில் இது அதிகம் வளரும். காற்றை சுத்தம் செய்யும் பண்புகள் இதற்கு உண்டு. வீட்டிமுள் இருக்கும் மாசுபட்ட காற்றை அகற்றி சுத்திகரிக்கும் தன்மை இதற்கு உண்டு. வெள்ளை நிறத்தில் இருக்கும் செடி, அதிக அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாக நம்பப்படுகின்றது.
8. ஆர்சிட் செடி
இந்த செடி வகை மிகவும் பிரபலமானவை. இது நல்ல அதிர்ஷ்டத்தையும், நன்மைகளையும் வீட்டிற்குள் கொண்டுவருவதாக நம்ப்பப்படுகின்றது. இது அழகிய மலர்களைத் தரும். இந்த செடியை தென்மேற்கு பகுதியில் வைத்து வளர்த்தால் அதிக அதிர்ஷ்டம் உண்டாகும். மேலும் நேர்மறை சக்திகளையும் அதிகரிக்கும்.
9. ஜேட் செடிகள்
இந்த செடிகளை அதிகமாக தொழில் நடக்கும் இடங்களில், அலுவலகங்களில் வைப்பார்கள். இது சிறிய அளவு இருந்தாலும், நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டுவருவதாக நம்ம்பப்படுகின்றது. இது அதிக செல்வம் மற்றும் வெற்றியை கொண்டு சேர்க்கும் என்றும் நம்புகின்றனர்.
10. பாட்டட் ஆர்சிட்
இந்த வகை செடிகள் அழகிய பூக்களை கொண்டிருக்கும். இது அழகிற்காக மட்டும் வளர்க்கப்படுபவை அழல். இது பெங் ஷுய் வகையை சேர்ந்தது. இதற்கென்றே தனித்துவம் உள்ளது. இது அன்பு, அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தை கொண்டுவருவதாக நம்பப்படுகின்றது.
11. பிலோடேன்றோன்
இந்த செடி வீட்டினுள் வளர்க்க ஒரு ஏற்ற செடியாக உள்ளது. இதற்கு இருதம் போன்ற வடிவிலான இலைகள் உள்ளன. இது அன்பு மற்றும் நல்ல அமைதியான சூழலை வீட்டினுள் உண்டாக்குவதாக நம்பப்படுகின்றது. வெளிச்சம் குறைந்த மற்றும் குளிர்ந்த இடத்தில் இதனை வைக்கலாம்.
12. இங்கிலீஷ் ஐவி
இந்த செடி கூர்மையான முனை கொண்ட இலைகளை கொண்டிருக்கும். இது நச்சு தன்மையை காற்றில் இருந்து அகற்றி, நல்ல சூழலை வீட்டினுள் உண்டாக்கும்.
அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் பால்கனி செடிகள்(positive luck balcony plants )
வீட்டினுள் வளர்ப்பதை போலவே, வீட்டிற்கு வெளியே வளர்க்கப்படும் சில செடிகளும் நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்குகின்றன. அவற்றில் சில இங்கே, உங்களுக்காக:
1. ஸ்பைடர் பிளான்ட்
இது ஒரு மூலிகை வகையை சேர்ந்த செடி என்றும் கோரலாம். இது தென் ஆப்ரிக்காவில் அதிகம் காணப்படும். இதை அதிகம் வீட்டில் வளர்ப்பார்கள், இது 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நன்கு வளரும். இது காற்றின் தரத்தை அதிகரிக்கும். மேலும் இதனை வீட்டில் வளர்க்கும் போது, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் குறைய உதவும்.
2. மீன் வாழ் பெர்ன் (fish tail fern)
இந்த செடி ஆஸ்திரேலியா நாடுகளில் அதிகம் காணப்படுகின்றது. இது அதிக பிரபலமான செடி வகை. இது காற்றில் இருக்கும் பக்டீரியா, பூஞ்சை மற்றும் கிருமிகளை கொன்று விடுகின்றது. இதற்கு அதிக சூரிய ஒளி தேவை இல்லை. மேலும் சிறிது வெளிச்சம் இருந்தாலே போதும், இது நன்கு வளரும்.
3. லெமன் பாம் (lemon balm)
இந்த வகை செடி மத்திய ஆசிய நாடுகளில் அதிகம் காணப்படும். இது நல்ல எண்ணங்களை தோன்ற செய்யும். இது நல்ல மன நிலையை உண்டாக்கும். இது காற்றை சுத்தம் செய்யும். மேலும் காற்றில் இருக்கும் கிருமிகளை அளிக்கும். இது அதிக வெப்பம் நிறைந்த பகுதிகளிலும் நன்கு வளரும். இதனை வீட்டினுள் மற்றும் வீட்டிற்கு வெளியிலும் வளர்க்கலாம்.
4. ரப்பர் செடி
இது மிகவும் பிரபலமான செடி வகை. இது பொதுவாக அனைத்து சீர்தொஷா நிலைகளிலும் நன்கு வாழும் தன்மைக் கொண்டது. இது செல்வத்தை ஈர்க்கும் என்று நம்ப்பப்படுகின்றது. இது பெங் ஷுய் வகையை சேர்ந்தது. இது அதிர்ஷ்டத்தை அதிகம் உண்டாக்கும் என்று நம்ப்பப்படுகின்றது.
5. துளசி
இதை பற்றி கூறவே வேண்டாம். இதற்கு அதிக மருத்துவ குணங்கள் இருந்தாலும், மக்கள் இந்த செடியை கடவுளுக்கு நிகராக வைத்து பூஜை செய்கின்றனர். இது நல்ல அதிர்ஷ்டத்தையும், நன்மைகளையும், செல்வத்தையும், ஆயுள் ஆரோகியத்தையும் கொண்டு வருவதாக நம்ப்பப்படுகின்றது.
6. பாம்பு செடி (snake plant)
இந்த செடி வீட்டினுள் மற்றும் வெளி புறங்களிலும் வளர்க்கலாம். இது நீண்ட அடர்ந்த இலையை கொண்டிருக்கும். இது காற்றில் இருக்கும் நச்சை சுத்தம் செய்யும், சுத்தமான பிராணவாயுவை வெளியேற்றும். இது நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்குவதாக நம்பப்படுகின்றது.
7. பால்ம் செடிகள்
இந்த வகை செடிகள் மிகவும் அழகாக இருக்கும். இவை அதிர்ஷ்டத்தை கொண்டுவருவதாக நம்பப்படுகின்றது. இந்த செடிகளுக்கு சிறிது சூரிய ஒளி தேவை, ஆனால் அதிக அளவு படக் கூடாது. பால்கனி போன்ற இடங்களில் வைத்து வளர்க்க ஏற்ற செடியாக இந்த செடி இருக்கும்.
8. மணி மரம் (money tree)
இந்த வகை செடிகள் வீட்டிற்குள்ளும், வெளி புறங்களிலும் வளர்க்க ஏற்றதாக இருக்கும். போதுமான சூரிய ஒளி மற்றும் பராமரிப்பு இருந்தால், இது சற்று பெரியதாக வளரும். இது அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் ஈர்ப்பதாக நம்பப்படுகின்றது.
9. போஸ்டன் பெர்ன்
இந்த செடி வகைகளை வீட்டின் முகப்பு மற்றும் அதிக பரந்த இடங்களில் வைக்கலாம். நல்ல அழகை சேர்க்கும் செடியாக இது இருக்கும். இந்த செடியை பால்கனி போன்ற இடங்களில் மேலே தொங்க விட்டும் வளர்க்கலாம். இது நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும். மேலும் செல்வத்தையும், நன்மைகளையும் ஈர்க்கும் என்று நம்பப்படுகின்றது.
1௦. மார்னிங் க்ளோரி (morning glory)
இந்த வகை செடி அழகான மலர்களை கொண்டது. இது மகிழ்ச்சியையும், நிம்மதியையும் உண்டாக்கும் என்று நம்பப்படுகின்றது. இது நல்ல தூக்கத்தை தரும். மேலும் ரமியமாக இருக்கும். இந்த செடிகளை நன்கு பராமரித்து வந்தால், நன்கு அடர்த்தியாக வளர்வதோடு, அதிக பூக்களையும் தரும். இதனை வீட்டினுள்ளும் வளர்க்கலாம்.
கேள்வி பதில்கள்(FAQ)
1. போன்சாய் செடிகளை வீட்டில் வளர்க்கலாமா?
போன்சாய் செடிகள் இரண்டு வகைகளில் கிடைகின்றனர், ஒன்று வீட்டினுள் வளர்ப்பவை, மற்றொன்று வெளியில், பால்கனி அல்லது மொட்டைமாடியில் வளர்ப்பவை. போன்சாய் செடிகள் அல்லது மரங்களுக்கு நீங்கள் அதற்கு ஏற்ற தட்ப வெட்ப நிலை இருக்கும் இடத்தில் ஆரோக்கியமான சூழல் கொண்ட இடத்தை தேர்வு செய்து வளர்க்க முடியும் என்றால், வீட்டில் இந்த அவகை செடிகளை தாராளமாக வளர்க்கலாம்.
2. மணி பிளான்ட் செடிகள் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருமா?
இது முக்கியமாக நம்பிக்கை சார்ந்த ஒரு விடயம், எனினும், பெரும்பாலான மக்கள், மணி பிளான்ட் செடிகள் நலல் அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாகவே நம்பி, இதனை அதிக அளவு வீட்டில் வளர்கின்றனர். இவை நிச்சயம் அதிக பிராணவாயுவை வெளியிடுவதாலும், ஒரு குலவை தண்ணீரில் கூட இந்த செடிகள் நன்கு வளரும் என்பதாலும், இதற்கு அதிக பராமரிப்பு தேவை இல்லை என்பதாலும், மேலும் வீட்டிற்கு அழகு சேர்க்கும் என்பதாலும், இதனை மக்கள் அதிகம் வாங்க விரும்புகின்றார்கள்.
3. எந்த வித செடிகள் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தைத் தரும்?
பல வகை செடிகள் இருந்தாலும், குறிப்பிடத்தக்க சில செடிகள் உங்களுக்காக இங்கே :
துளசி, அதிர்ஷ்ட மூங்கில் செடி, சோற்று கற்றாளை, மணி பிளான்ட், அள்ளி, மல்லிகை செடி, ஆர்சிட்ஸ் செடிகள் மற்றும் பயோனி செடிகள்.
4. வாஸ்து காரணங்களுக்காக வளர்க்கப்படும் செடிகள் என்னென்ன?
ரப்பர் செடி. இதன் இலைகள் வட்ட வடிவில் இருப்பது இதன் தனித்துவம். வட்ட வடிவம் இல்லை இருக்கும் செடிகள் நல்ல செல்வத்தை கொண்டு வருவதாக நம்ப்பப்படுகின்றது
- மூங்கில் செடி. இதற்கு பராமரிப்பு குறைவு மேலும் இதனை எளிதாக வளர்த்து விடலாம்
- ஆர்சிட்ஸ் / துளசி
- தாமரை / அள்ளி
5. சப்பாத்தி கள்ளி அல்லது கள்ளி வகைகள் அதிர்ஷ்டம் தரக்கூடிய செடியா?
கள்ளிச் செடிகள் மனிதர்கள் மற்றும் விலங்குகள் போல சக்தி ஆற்றல்களை எடுத்துக் கொண்டும், வெளிபடுத்தியும் இருக்கும். இதற்கு அதிக பாதுகாக்கும் சக்தி உள்ளது. எனினும், இதில் இருக்கும் முற்கள் ஒரு பிரச்சனை. முற்கள் அதிகம் இருக்கும் செடிகளை வீட்ட்னுள் வளர்க்கக் கூடாது.
6. செடிகள் கெட்ட அதிர்ஷ்டத்தை உண்டாக்குமா?
எந்த செடிகளும் அப்படி இல்லை. எனினும், உங்கள் பராமரிப்பும் முக்கிய பங்கு வகிக்கின்றது. செடிகளில் இலைகள் மற்றும் பூக்கள் காய்ந்து விட்டால், அதனை உடனடியாக அகற்றி விட வேண்டும். எப்போதும் செடிகள் புத்துணர்ச்சியோடும், உயிரோட்டத்தோடும் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க – மழையின்றி வறளும் பூமி .. மனிதர்களால் மாசடையும் காற்று.. இதில் நமது பொறுப்புகள் என்னென்ன?
பட ஆதாரம் – Pexels
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi