Entertainment

தேசப்பற்றை உணர்த்தும் தமிழ் மற்றும் ஹிந்தி பாடல்களின் தொகுப்பு! (Patriotic Songs In Tamil)

Swathi Subramanian  |  Jul 24, 2019
தேசப்பற்றை உணர்த்தும் தமிழ் மற்றும் ஹிந்தி பாடல்களின் தொகுப்பு! (Patriotic Songs In Tamil)

இந்திய தேசப்பற்று பாடல்கள் அனைவருக்கும் தேச பற்றை (patriotic) தூண்டுவதோடு, ஒவ்வொருவருக்குளும் நம் மண்ணின் உணர்வையும், ஒற்றுமையையும் வலியுருதிகின்றது. சுதந்திரத்திற்கு முன் இருந்தே பல கவிஞர்களும், சுதந்திரப் போராட்ட வீரர்களும் பல தேசபற்று பாடல்களை எழுதியுள்ளனர். அவற்றில் பல இன்றளவும் மக்களிடையே மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. சிறந்த தேசப்பற்று பாடல்களை இங்கு காணலாம்.

தமிழ் தேசப்பற்று பாடல்கள் (Patriotic Songs In Tamil)

தமில் சினிமாவில் ஏராளமான தேசப்பற்று பாடல்கள் உள்ளன. இத்தகைய பாடல்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மனதில் ஒரு நம் இந்திய மண்ணின் மீது இருக்கும் பற்றை நினைவு கூறும் வகையில் உள்ளது. அப்படிப்பட்ட பாடல்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த தமிழ் பாடல்கள் : காதல், சமீபத்தில் வெளியான பாடல்கள் குறித்த விவரங்களின் தொகுப்பு!

பாருக்குள்ளே நல்ல நாடு (Parukulle Nalla Nadu)

கப்பலோட்டிய தமிழன் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் “பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு இந்த நாடு” என தொடங்குகிறது. ஜி. ராமநாதன் இசையில் பாரதியாரின் வரிகளில் பாடல் வெளியாகியுள்ளது. சீர்காழி கோவிந்தராஜன் பாடிய இந்த பாடல் சிறந்த நாட்டுப்பற்று பாடலாக உள்ளது.

Also Read About காதல் தமிழ் திரைப்படங்கள்

 

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் (Velli Panimalai)

கப்பலோட்டிய தமிழன் படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு நாட்டு பற்று பாடலாக இந்த பாடல் உள்ளது. “வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்… அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்” என்ற பாரதியாரின் வரிகள் இன்றும் கேட்க தூண்டுபவை. ஜி. ராமநாதன் இசையில் இந்த பாடல் அமைந்துள்ளது.

சிந்து நதியின்மிசை நிலவினிலே (Sindhu Nadhiyin – Kai Kodutha Deivam)

கை கொடுத்த தெய்வம் படத்தில் சிந்து நதியின்மிசை நிலவினிலே பாடல் இடம் பெற்றுள்ளது. டி. எம். சௌந்தர்ராஜன், எல்.ஆர். ஈஸ்வரி, ஜெ.வி. ராகவுலு உள்ளிட்டோர் இந்த பாடலை பாடியுள்ளனர். மஹாகவி பாரதியார் வரிகளில் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி இசையில் சிறந்த தேசபக்தி பாடலாக இந்த பாடல் உள்ளது.

பாரத சமுதாயம் பாரத சமுதாயம் வாழ்கவே (Bharatha Samuthayam)

பாரதி படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. பாரதியாரின் வரிகள் “பாரத சமுதாயம் வாழ்கவே …. முப்பது கோடி ஜனங்களின் சங்கம்” என்று தொடங்குகிறது. இந்த பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 

 

வந்தே மாதரம் ஜய (Vandhe Maadharam)

பாரதி படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடல் வந்தே “மாதரம் வந்தே மாதரம்” பாடலாகும். பாரதியாரின் வரிகள் “ஆரிய பூமியில் நாரிய ரும்நர… சூரிய ரும்சொலும்” என்று தொடங்குகிறது. இந்த பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

சினிமாவில் சுதந்திர தாகம் : தேசப்பற்றை உணர்த்தும் தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்கள்!

தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் (Thaiyin Manikodi)

நடிகர் அர்ஜுன் நடித்த ஜெய் ஹிந்த் படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. வைரமுத்து வரிகளான “தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த்… என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது” என உணர்வு மிக்க வரிகள் இந்த பாடலில் உள்ளது. இந்த பாடலிற்கு வித்யா சாகர் இசையமைத்துள்ளார்.

ஜன கன மன (Jana Gana Mana)

ஆயுத எழுத்து படத்தில் இந்த பாடல் உள்ளது. இந்த பாடலை ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்து அவரே பாடியும் உள்ளார். இந்த படத்தில் மாதவன், சூரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

கப்பலேறிப் போயாச்சு (Kapaleri Poyachu)

கமல் நடித்த இந்தியன் படத்தில் இந்த பாடல் வெளியாகியுள்ளது. வைரமுத்து வரிகளான “கப்பலேறிப் போயாச்சு…….. சுத்தமான ஊராச்சு கண்ணம்மா” என்ற சிறந்த வரிகள் இந்த பாடலில் உள்ளது. ஏ. ஆர். ரஹ்மான் இசையில் பி. சுசிலா, எஸ். பி. பாலசுப்ரமணியன் இந்த பாடலை பாடியுள்ளனர்.

தமிழா தமிழா (Tamizha Tamizha)

ரோஜா படத்தில் இடம்பெற்றுள்ள தமிழா தமிழா பாடல் சிறந்த தேசப் பக்தி பாடலாக உள்ளது. வைரமுத்து வரிகளான “தமிழா தமிழா நாளை நம் நாளே” என்று பாடல் தொடங்குகிறது. இந்த பாடலுக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

நெஞ்சில் உரமின்றி நேர்மை (Nenjil Uram Indri)

கப்பலோட்டிய தமிழன் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் “நெஞ்சில் உரமின்றி நேர்மை திறனின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி” என தொடங்குகிறது. ஜி. ராமநாதன் இசையில் பாரதியாரின் வரிகளில் பாடல் வெளியாகியுள்ளது. சீர்காழி கோவிந்தராஜன் பாடிய இந்த பாடல் சிறந்த நாட்டுப்பற்று பாடலாக உள்ளது.

 

இந்திய நாடு என் வீடு (Indhiya Nadu Enn Veedu)

சிவாஜி கணேஷன், கே. ஆர். விஜயா நடித்த பாரத விலாஸ் படத்தில் இந்த பாடல் வெளியாகியுள்ளது. டி. எம். சௌந்தரராஜன், பி. சுசிலா, எல்.ஆர். ஈஸ்வரி உள்ளிட்ட பாடல் குழுவினரே இந்த பாடலை பாடியுள்ளனர். எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். “இந்திய நாடு என் வீடு … இந்தியன் என்பது என் பேறு” என்ற நாட்டுப்பற்று மிக்க வாலியின் வரிகள் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளது.

அச்சம் அச்சம் இல்லை (Acham Acham Illai)

சுகாசினி மணிரத்தினம் இயக்கத்தில் வெளி வந்த இந்திரா படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. “அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை” என்ற வைரமுத்து வரிகள் பாடலுக்கு உயிரூட்டியுள்ளது. அனுராதா ஸ்ரீராம், ஜி.வி. பிரகாஷ் குமார், சுஜாதா மோகன் உள்ளிட்டோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

ஹிந்தி தேசப்பற்று பாடல்கள் (Hindi Patriotic Songs)

இந்தி சினிமாவிலும் ஏராளமான நாட்டுபற்றை உணர்த்தும் பாடல்கள் வெளியாகியுள்ளன. இந்த பாடலைகள் யாவும் இந்தியன் என்கின்ற உணர்வை அதிகப்படுத்துவதாக உள்ளது. அத்தகைய தொகுப்பின் சில உங்களுக்காக இங்கே,

இந்தியாவில் மழைக்காலத்தில் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ரம்மியமான இடங்கள்!

து பூலா ஜீஸ் (Bhoola Jise)

ஏர்லிப்ட் படத்தில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலை அமால் மாலிக் இசையமைத்து அமால் மாலிக், கிருஷ்ணகுமார் குன்னத் ஆகியோர் பாடியுள்ளனர். ராகேஷ் குமாரின் பாடல் வரிகள் தேச பற்றை உணர்த்தும் வகையில் உள்ளது.

இந்துஸ்தானி பாடல் (Hindustani Song)

ஓமுங் குமார் இயக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. விவேக் ஓபராய் நடித்த இந்த படத்தில் ஹிந்துஸ்தானி என்ற தேசப்பற்று பாடல் உள்ளது. சித்தார்த் மகாதேவன், ஷாஷி சுமன் இந்த பாடலை பாடியுள்ளனர்.

தாரே வாஸ்டே (Thare Vaaste)

பார்மனு படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. அபிஷேக் சர்மா இயக்கத்தில் வெளியான இந்தப் படம் 1998ம் ஆண்டு பொக்ரானில் நடத்திய அனுகுண்டு சோதனையை அடிப்படையாக வைத்து எடுக்கபட்டுள்ளது. திவ்யா குமார் இந்த பாடலை பாடியுள்ளார்.

தெரி மீட்டி மீ மில் ஜாயுன் (Teri Mitti)

அனுராக் சிங் இயக்கத்தில் வெளியான கேசரி படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. நடிகர் அக்‌ஷய் குமார் இந்த படத்தில் நடித்துள்ளார். ‘கேசரி’ என்றால் ‘காவி’ என்று அர்த்தம். ஆர்கோ பிராவோ இசையில் பி பராக் இந்த பாடலை பாடியுள்ளார். 

சந்தசே ஆட்டே ஹேன் (Sandese Aate Hai)

சிறந்த தேசபக்தி இந்திய திரைப்படங்களில் ஒன்றானது பார்டர் திரைப்படம் பார்டர் இந்தி திரைப்படத்தில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது. ஜே.பி. தத்தா இயக்கிய இந்த படத்தில், சந்தசே ஆட்டே ஹேன் என்ற பாடலை ரூப் குமார் ரத்தோட், சோனு நிகம் ஆகியோர் பாடியுள்ளனர். அனு மாலிக் இசையமைத்துள்ளார்.

ரங் தே பசந்தி (Rang De Basanti)

2006ம் ஆண்டு வெளிவந்த ரங் தே பசந்தி பாலிவுட் திரைப்படத்தில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் அமர் கான், மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் கோல்டன் குலோப் விருதிற்காக 2006 மற்றும் 2007ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. இந்த பாடலுக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

கந்தோ சே மில்டே கந்தே (Kandhon Se Milte Hai Kandhe)

போர் குறித்த திரைப்படமான லஷ்க்யாவில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. நடிகர் அமிதாப் பச்சன், ப்ரீத்தி ஜிந்தா, ஹ்ருதிக் ரோஷன் முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். பர்ஹான் அக்தர் இயக்கிய இந்த திரைப்படம் நேஷனல் பிலிம் பேர் விருதை வென்றுள்ளது. கந்தோ சே மில்டே கந்தே பாடலை குணால் குஞ்சவாலா, சோனு நிகம், ரூப் குமார் ரத்தோட், விஜய் பிரகாஷ் மற்றும் ஹரிஹரன் உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.

சல்லா மெயின் லெட் (Main Lad Jaana)

உரி : தி சர்ஜிகல் ஸ்ட்ரைக் படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. ஆதித்யா தார் தயாரித்த இந்த படத்தில் விக்கி கவுஷல், யாமி கௌதம் முதலானோர் நடித்துள்ளனர். ரோமி, விவேக் ஹரிகரன், ஷாஷ்வாடீ சச்தேவ் இந்த பாடலை பாடியுள்ளனர். குமார் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

சக் டே இந்தியா(Chak De! India)

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் “சக் தே இந்தியா”. திரைப்படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஷாருக் கான் நடித்திருப்பார். சலீம் சுலைமான் இந்த படத்தில் இசை அமைத்துள்ளார். ஜைதீப் சாஹ்னி பாடல் வரிகளை சுக்விண்டெர் சிங், சலீம் சுலைமான், மரியான்னே டி கிருஸ் பாடியுள்ளனர்.

டேஸ் ரங்கீலா (Desh Rangila)

பானா படத்தில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது. அமீர் கான், கஜோல் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜட்டின்-ஜாலிட் இசையமைத்துள்ளனர். மகாலக்ஷ்மி ஐயர் இந்த பாடலை பாடியுள்ளார். தேசப்பற்று மற்றும் காதலை மையமாக கொண்ட இந்த படத்தில் டேஸ் ரங்கீலா பாடல் சிறந்த பாடலாக உள்ளது.

ஏஹ் ஜோ டேஸ் ஹை தேரா (Ye Jo Des Hai Tera)

அஷுடோஷ் கௌரிகெர் இயக்கத்தில் வெளியான சுதேசி படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. ஷாருக்கான், காயத்ரி ஜோஷி இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜாவேத் அக்ஹடர் இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்து அவரே பாடியுள்ளார். மேலும் இந்த பாடல் உந்தன் தேசத்தின் குரல் என தமிழுலும் வெளியாகியுள்ளது.

மா துஜே சலாம் (Maa Tujhe Salam)

டினு வர்மா இயக்கிய மா துஜே சலாம் படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. சஜித் – வாஜித் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். சங்கர் மஹாதேவன் இந்த பாடலை பாடியுள்ளார். “பாரத தாய்க்கு தலை வணங்குகிறோம்” என இந்த பாடல் தொடங்குகிறது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Entertainment