
ஏப்ரல் 7ம் தேதி 1962ம் ஆண்டு கோயம்பத்தூரில் பிறந்தவர் தான் இந்த கோவை சரளா(Kovai Sarala). தனது ஊரின் காரணமாக இவர் கோவை என்கிற பெயர் இவருக்கு முன்னால் சேர்க்கப்பட்டு கோவை சரளா(Kovai Sarala) என அழைக்கப்பட்டார். நகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை நடிகர்கள் குறைவாகவே உள்ளனர். ‘ஆச்சி’ மனோரமாவிற்கு அடுத்து, அவ்விடத்தை நிறைவு செய்தவர், நடிகை கோவை சரளா அவர்கள்.
அவரது ’என்ன இங்க சத்தம்’, ‘என்னை ஜப்பான்ல கூப்பிட்டாகோ’, ’சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’, ‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’ போன்ற நகைச்சுவைக் காட்சிகளை எப்போது பார்த்தாலும் அனைவருக்கும் சிரிப்பு வரும். அத்தகைய திறமைமிக்க நகைச்சுவையாளினியாக விளங்கும் நடிகை கோவை சரளா(Kovai Sarala) அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி பார்ப்போம்.
கல்வியும் இளமை பருவமும்
தனது பள்ளிப்படிப்பைக் கோவையில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கினார். சிறு வயதிலிருந்தே நல்ல பேச்சுத் திறமை வாய்ந்தவராக விளங்கிய கோவை சரளா(Kovai Sarala) அவர்கள், ஒருமுறை எம்.ஜி.ஆர். கோவை சென்ற போது, அவரை ஒருவர் அறிமுகம் செய்து வைத்தார். அவருடைய திறமைகளைப் பற்றியறிந்த எம்.ஜி.ஆர் அவர்கள், அவரிடம் ‘உனக்கு நிறைய திறமை இருக்கு.. நீ நல்லாப் படிக்கணும்னு சொல்லி, மேலும் படிப்பதற்காக உதவித் தொகை வழங்கினார்.
திரையுலக பயணம்
திரையுலகில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்த சேர்ந்த அவர், வாய்ப்புகள் தேடி அலைந்தார். அப்போது, பாக்யராஜை சந்திக்க நேர்ந்ததால், அவரை சந்தித்துத் தனது திறமைகளை வெளிப்படுத்தினார். அவரது பேச்சால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பாக்யராஜ் அவர்கள், அவர் திரைக்கதை எழுதி, நடித்த படமான 1983ல் வெளியான ‘முந்தானை முடிச்சு’ என்ற திரைப்படத்தில் அவரை ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்தார். அப்படமே, தமிழ்த் திரையுலகில் கோவை சரளா(Kovai Sarala)வின் முதல் படமாகும்.
மூன்றாண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், மீண்டும்’ காஞ்சனா’ (2011) திரைப்படம் மூலம் தனது இரண்டாம் இன்னிங்க்சை தொடங்கிய அவர், ‘வானவராயன் வல்லவராயன்’ (2013), ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா?’ (2012), ‘பாகன்’ (2012), ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ (2012), ‘தில்லு முல்லு’ (2013), ‘ரகளைப்புரம்’ (2013)போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ்ப் படங்களைத் தவிர, தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
பிரபலமான அவரின் சில டையலாக்குகள்
’என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம்’ – கரகாட்டக்காரன்
‘என்னை காரைக்குடி பார்ட்டியில கூப்பிட்டாகோ, தஞ்சாவூர் பார்ட்டியில கூப்பிட்டாகோ, அங்கெல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்’ – கரகாட்டக்காரன்
’சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’ – ஷாஜஹான்
‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’ – ஷாஜஹான்
1983ல் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய கோவை சரளா(Kovai Sarala) அவர்களுக்கு, 2008 ஆம் ஆண்டிற்குப் பின்னர், திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால், தொலைக்காட்சியின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். அவர், சன் டிவியில் ‘சுந்தரி சௌந்தரி’, கலைஞர் டிவியில் ‘வந்தனா தந்தனா’ மற்றும் ஜெயா டிவியில் ‘சபாஷ் மீரா’ போன்ற நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். பின்னர், சன் டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சியான ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியில் ஒரு நடுவராக இருந்தார். இப்போது, கலைஞர் டிவியில் ‘பாசப் பறவைகள்’ என்ற குடும்ப விளையாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.
ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை
கோவை சரளா(Kovai Sarala) அவர்கள், இன்றுவரை யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. பரந்த உள்ளமும், இறக்க குணமும் நிறைந்த அவர், தனது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக நினைத்து அவர்களைக் கண்டிப்போடு வளர்த்து வருகிறார். மேலும், அவர் பல ஏழைக் குழந்தைகள் படிப்பிற்கும், வயதானவர்கள் நலனுக்காகவும் பல உதவிகள் செய்து வருகிறார்.
விருதுகள்
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001) மற்றும் ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ (2003) என்ற படங்களில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான ‘நந்தி விருதுகளையும்’ வென்றுள்ளார்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi