Celebrity Life

கோச்சடையான் விவகாரம் – ரஜினி காந்தின் மனைவி லதா கைதாக வாய்ப்பு!

Mohana Priya  |  May 13, 2019
கோச்சடையான் விவகாரம் – ரஜினி காந்தின் மனைவி லதா கைதாக வாய்ப்பு!

தென்னிந்திய திரையுலகின் ஜாம்பவான், சூப்பர் ஸ்டார் என அனைவராலும் பேசப்படுபவர் நடிகர் ரஜினி காந்த்(rajinikanth). அனைவருக்கும் பாசிட்டிவ் எனர்ஜியை தருபவர் என்கிற நல்ல பெயர் திரைத் துறையில் இவருக்கு உண்டு. அது போன்று பண விஷயத்தில் எந்த வித மோசடியும் செய்யாதவர் அனைவரிடமும் நியாயமாக நடந்துக் கொள்வார் என்கிற நல்ல பெயரும் உண்டு. ஆனால் இது அனைத்திற்கும் பங்கம் விளைவிக்கும் விதமாக இந்த கோச்சடையான் பண விவகாரம் அவ்வப் போது பேசப்பட்டு வருகின்றது.

லதா ரஜினி காந்த(rajinikanth) பண விவகாரத்தில் எங்களது நிறுவனத்தை ஏமாற்றி விட்டதாக கர்நாடக நிறுவனம் சமீபத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கு விசாரணைக்கு லதா வராமல் தவிர்த்து வந்தார். இதன் முழு விபரம் தான் என்ன?

2014ம் ஆண்டு ரஜினி(rajinikanth) நடித்த அனிமேஷன் படம் கோச்சடையான். இதனை அவரது மகள் சவுந்தர்யா இயக்கி இருந்தார். தமிழ் நாட்டில் தாயரிக்கப்பட்ட முதல் அனிமேஷன் படம் என்கிற பெருமையை இது பெற்றது. இதில் ரஜினியின்(rajinikanth) மகள் சவுந்தர்யா இத்திரைப்படத்தை இயக்குகிறார் என்பது கூடுதல் தகவலாக அனைவரையும் படத்தை பார்க்க ஈர்த்தது. ஆனால் என்னவோ எதிர்பார்த்த அளவிற்கு படம் நல்ல வரவேற்பை பெறவில்லை. ஏகப்பட்ட சொதப்பல்கள் தொழிநுட்ப கோளாறுகள் என திரை துறையை சார்ந்த பலராலும் இத்திரைப்படம் பல விமர்சனங்களை சந்தித்தது.

தொடர்ந்து கலவையான விமர்சனத்தால் இந்தப் படம் பெரும் தோல்வியை தழுவியது. இந்தப் படத்தின் கர்நாடக மாநில விளம்பரம் மற்றும் வியாபாரத்தை ஒரு தனியார் நிறுவனம் கவனித்துக் கொண்டது.

வெயிலால் முகத்தில் ஏற்படும் கருமையை காணாமல் ஆக்கும் வீட்டு வைத்தியங்கள்!

படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் அந்த நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்த நிறுவனம், லதா ரஜினிகாந்தை(rajinikanth) கேட்டது. அவர் எங்களுக்கும் நஷ்டம் தான், அதனால் இழப்பீடு தர முடியாது என்று தெரிவித்து விட்டதாக தெரிகிறது.

இந்த பிரச்சினையில் லதா ரஜினி காட்டிய கணக்கும், அவரது கடிதமும் போலியானது என்று அந்த நிறுவனம், பெங்களூர் அல்சூர்கேட் நீதி மன்றத்தில்(rajinikanth) லதா மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி, நீதிமன்றம் இருமுறை சம்மன் அனுப்பியும் லதா ஆஜராகவில்லை.

தற்போது 3வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது. இதற்கும் ஆஜராகாவிட்டால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்பதால் வருகிற 20ந் தேதி லதா ஆஜராவார் என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ரஜினியிடம்(rajinikanth) கேட்ட போது இந்த விவகாரம் பற்றி ஆரம்பம் முதல் எனக்கு தெரியாது. என் மனைவி லதா தான் இதை கவனித்து வருகின்றார். இது தொடர்பாக அவரை நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள் என ரஜினி பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளார். வருகிற 20ம் திகதி தான் வழக்கு விசாரணை என்பதால் என்ன தீர்ப்பு என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை சரி செய்ய என்ன செய்யலாம்?

நோட்டீஸ்

இந்த நிலையில், மோசடி தொடர்பாக லதா ரஜினிகாந்திடம்(rajinikanth) விசாரணை நடத்தும்படி அல்சூர்கேட் போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட்டு கூறியது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு அக்ேடாபர் மாதம் 10-ந் தேதி லதா ரஜினிகாந்திடம்(rajinikanth) சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து அல்சூர்கேட் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றனர். தற்போது கூடுதல் தகவல்களை பெற லதா ரஜினிகாந்திடம்(rajinikanth) விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதனால் விசாரணைக்கு ஆஜராகும்படி லதா ரஜினிகாந்துக்கு(rajinikanth) அல்சூர்கேட் போலீசார் நோட்டீசு அனுப்பினர். அதில் மே மாதம் 6-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அன்றைய தினம் லதா ரஜினிகாந்த்(rajinikanth)போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.

20-ந் தேதிக்கு பிறகு

அதே வேளையில், லதா ரஜினிகாந்த்(rajinikanth) போலீசாரிடம் விசாரணையை தள்ளி வைக்கும்படி கேட்டு கொண்டுள்ளார். அதாவது, தான் பயணத்தில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. இதனால் விசாரணை தேதியை வருகிற 20-ந் தேதிக்கு பிறகு மாற்றும்படி அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். அதன்படி, வருகிற 20-ந் தேதிக்கு பின்னர் லதா ரஜினிகாந்த்(rajinikanth) போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இனி அன்பான உறவுகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம்!

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Celebrity Life