Entertainment

முகுந்தா முகுந்தா கிருஷ்ணா : உங்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் கிருஷ்ணர் பாடல்கள் !

Nithya Lakshmi  |  Aug 21, 2019
முகுந்தா முகுந்தா கிருஷ்ணா : உங்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் கிருஷ்ணர் பாடல்கள் !

ஸ்ரீ கிருஷ்ண பகவானின் பிறப்பை ஆண்டுதோறும் பக்தர்கள் ஜென்மாஷ்டமி/ கோகுலாஷ்டமி/கிருஷ்ண ஜெயந்தி (janmashtami/krishna jayanthi) என்ற பெயர்களில் உலகமெங்கும் பிரம்மாண்டமாக கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு இந்த விழா வரும் ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆம் தேதி வருகிறது. கிருஷ்ணஜெயந்தியின்  வழிபாடுகள், பூஜைக்குரியவைகள், படிக்க வேண்டிய நூல்கள், நைவேத்திய பொருட்கள் மற்றும் வேடிக்கையான விளையாட்டுகள் என்று பக்தர்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் நாள் இது. இந்நிலையில் பகவான் பெருமாளின் 9 வது அவதாரமான  கிருஷ்ண அவதாரத்தை  போற்றி சில அழகிய பாடல்களின் பட்டியலை நாங்கள் இங்கு தொகுத்துள்ளோம். இந்த திருநாளில் இந்த பாடல்களை கேட்டு கொண்டாடி மகிழுங்கள்!

1. ஆயர்பாடி மாளிகையில்

“ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைபோல் மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ….” என்று ஆரம்பிக்கும் இந்த அழகிய பாடலை இசை அமைத்தது திரு. M.S.விஸ்வநாதன். கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் அமைந்திருக்கும் இந்த பாடலை திரு. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் குரலில் கேட்க இங்கு  கிளிக் செயுங்கள்.

2. ஸ்ரீ மதுராஷ்டகம்

Pinterest

ஸ்ரீ வல்லபாச்சார்யாவின் வரிகளில் – “அதரம் மதுரம், வதனம் மதுரம், நயனம் மதுரம்…. “ என்று ஆரம்பிக்கும் இந்த சமஸ்க்ரித பாடல்,  “மதுராப்த்திப்பதே அகிலமும் மதுரம்” அதாவது பிரபஞ்சத்தில் அனைத்தும் மதுரம் (இனிமையே)  என்று மிக அற்புதமாக விளக்கும் பாடல் ஆகும். 

மனதிற்கு இனிமை தரும் இந்த பாடலை திரு. கே ஜே யேசுதாஸின் குரலில் கேட்க இங்கு  கிளிக் செயுங்கள்.

3. முகுந்தா முகுந்தா

திரு வாலியின் வரிகளில், ஹிமேஷ் ரேஷ்மையாவின் இசையில், தமிழ் மொழியே தெரியாதவர்களையும் ஈர்த்த ஒரு அற்புதமான பாடல் –  “ முகுந்தா முகுந்தா கிருஷ்ணா, முகுந்தா முகுந்தா, வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா… , … மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே! “  என்று பகவான் கிருஷ்ணனின்  தசாவதாரங்களையும் போற்றி பாடிய ஒரு அழகிய பாடல்.

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சாதனா சர்கமின் குரலில் கேட்க இங்கு  கிளிக் செய்யுங்கள். 

4. என்ன தவம் செய்தனை

பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் என்றும் நினைவில் இருக்கும் கண்ணனின்  ஒரு அழகிய பாடல் ஆகும். காபி ராகத்தில் அமைந்துள்ள இந்த பாடலை இயற்றியவர் திரு.பாபநாசம் சிவன். 

“…பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள, உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாய் கண்ணனை..”  என்று மனதை கொள்ளை கொள்ளும் குரலில் பாடி இருக்கிறார் பத்மஸ்ரீ சுதா ரகுநாதன். 

இதைக் கேட்க இங்கே  கிளிக் செய்யுங்கள்.

5. ஸ்வாகதம் கிருஷ்ணா

Pinterest

” ஸ்வாகதம் கிருஷ்ணா, ஸ்வாகதம் கிருஷ்ணா, சரணாகதம் கிருஷ்ணா. மதுராபுரி சதனா ம்ரிது வதனா மதுசூதனா…”  என்ற வரிகளை கொண்ட  இந்தப் பாடலை ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் அவர்கள் இயற்றியுள்ளார். 

மனதிற்கு ஆழ்ந்த அமைதியையும் ஆனந்தத்தையும் அளிக்கும் இந்த பாடல் மோகன ராகத்தில் அமைந்துள்ளது. இந்த பாடலை திரு  கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் குரலில் கேட்க இங்கு கிளிக் செய்யுங்கள்.

6. குறை ஒன்றும் இல்லை

 “குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா… ” என்று வாழ்க்கையில் எவ்வளவு சோகங்கள் மற்றும் துன்பங்கள் வந்தாலும்  கிருஷ்ண பரமாத்மா இருக்கிறார் என்று அவரை நம்பி வணங்கும் ஒரு அழகிய பாடல். 

எக்காலத்துக்கும் அழியாத  பாடலாக நம் அனைவரின் மனதிலும் இடம் பெற்றிருக்கும் இந்த பாடலை திரு ராஜகோபாலச்சாரி இயற்றியுள்ளார்.  எம்.எஸ்.சுப்புலட்சுமி தாயாரின் குரலில் இந்த பாடலை கேட்க இங்கு கிளிக் செயுங்கள். 

7. அலைபாயுதே கண்ணா

இப்பாடலில் கண்ணனின் குழலூதும் அழகை போற்றி எழுதி இருக்கிறார் திரு வெங்கடசுப்பையர்.   இந்தப் பாடலில் – “குழல் ஊதிடும் பொழுது, ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவோடு …” அதாவது காற்றில் குழைகள் ஆடும் இசைக்கேற்ப , அதுபோல எனது மனம் சஞ்சலத்தில் ஊசலாடுகிறது என்று மிக அழகாக வர்ணித்திருக்கிறார் பாடலாசிரியர்! 

இதை திரு ஏ.ஆர்.ரகுமானின் இசையில் புது பாணியில்  கேட்க இங்கே கிளிக் செய்யுங்கள் . 

8. அச்சுதம் கேசவம்

Pinterest

பகவான் கிருஷ்ணனின் பாடல்களை எந்த மொழியில் கேட்டாலும் மனதிற்கு பேரின்பமே ! இந்த  பாடல் அணைத்து சிந்தனைகளையும் மறந்து நம்மை மெய் மறக்க வைக்கும் ஒரு அற்புத பாடல் ஆகும்.   இந்தவகையில் நம் அனைவரின் மனதையும் தனது குரலால் ஈர்த்த ஸ்ரேயா கோஷலின் குரலில் ஹிந்தியில்   கேட்க இங்கே கிளிக் செய்யுங்கள் .

இதை  மலையாளத்தில்  கே.எஸ். சித்ரா அவர்களின் குரலில், சஞ்சீவ்  இசையமைப்பில் மலையாளத்தில் கேட்க இங்கு கிளிக் செய்யுங்கள்.

9. கிருஷ்ணா நீ பேகனே பரோ

 “கிருஷ்ணா நீ பேகனே பரோ … “  என்ற இந்த அழகான பாடலை கன்னட மொழியில் இயற்றியிருக்கிறார் வ்யாஸராயா.  இந்த பாடல் கூறுவது என்னவென்றால் கிருஷ்ணா நீ விரைவாக வருவாயா, வந்து உந்தன் முகத்தை  காண்பிப்பாயா … என்று காப்பு ராகத்தில் மிக அற்புதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. 

இதை கே.எஸ்.சித்ராவின் குரலில் கேட்க இங்கு கிளிக் செயுங்கள். 

10. குழலூதி மனமெல்லாம்

” குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும் குறையேதும் எனக்கேதடி … ” 

கண்ணனின் குழல் ஊதும் அழகைப்பற்றி பாடிக் கொண்டே போகலாம். இதற்கான மற்றுமொரு பாட்டு தான் இந்த ‘குழலூதி மனமெல்லாம்’!  இதை தனது வரிகளில் மிக அற்புதமாக கூறியிருக்கிறார் வெங்கடசுப்பையர் அவர்கள் .

காம்போதி ராகத்தில் இந்த பாடலை பத்மஸ்ரீ சுதா ரகுநாதன் அவர்களின் குரலில் கேட்க இங்கு கிளிக் செய்யுங்கள்.

11. கண்ணே கண்மணியே கண்ணனே

Pinterest

பிறக்கும் குழந்தைகளை கிருஷ்ணருடன் ஒப்பிட்டு பார்த்து மழலையின் அனைத்து விஷயங்களையும் கொண்டாடுவது வழக்கம். ” கண்ணே என் கண்மணியே கண்ணனே கண்வளராய், மண்ணுலகில் என் வாழ்வு வளம் பெற வந்துதித்த கண்ணனே…” என்ற அழகிய வரிகள் கொண்ட இந்த பாடல் மனதிற்கு இன்பத்தை கொடுக்கும் தாலாட்டுபாடல் ஆகும். பாபநாசம் சிவன் அவர்கள் இதை அமைத்துள்ளார்.

இதை குறிஞ்சி ராகத்தில் பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் பாடிய குரலில் கேட்க இங்கு கிளிக் செய்யுங்கள்.

 

மேலும் படிக்க – கிருஷ்ண ஜெயந்தி வழிபாடுகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள்

பட ஆதாரம் – Pinterest, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Entertainment