DIY Life Hacks

சாகும்வரை 1 ரூபாய்க்குத்தான் இட்லி விற்பேன்..ஊருக்கெல்லாம் ஆக்கிப்போடும் கமலாத்தாள்பாட்டி!

Deepa Lakshmi  |  Sep 4, 2019
சாகும்வரை 1 ரூபாய்க்குத்தான் இட்லி விற்பேன்..ஊருக்கெல்லாம் ஆக்கிப்போடும் கமலாத்தாள்பாட்டி!

ஒரு ரூபாய்க்கு இந்தியாவில் என்ன மதிப்பு இருக்கப்போகிறது என்று நிறைய பேர் அலட்சியமாக இருக்கலாம். ஆனால் கோவை வாசிக்காரர்களுக்கு ஒரு ரூபாய் இருந்தால் அதன் மூலம் ஒரு பிஞ்சு வயிற்றின் பசியாற்ற முடியும் என்று நம்பிக்கை தருகிறார் கமலாத்தாள் பாட்டி.

கோவை வடிவேலம்பாளையத்தை சேர்ந்த மக்கள் உண்மையாலுமே அதிர்ஷ்டக்காரர்கள்தான் ! பின்னே கமலாத்தாள் பாட்டியின் கைப்பக்குவத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டு சந்தோஷமாகப் பசியாறுகிறார்களே!

இந்த பணவீக்கம் நிறைந்த ஜிஎஸ்டி வரிகள் சூழ்ந்த காலத்திலும் ஒற்றை ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டிக்கு வயது 80.

சத்குருவின் நதிகளை மீட்கும் திட்டத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு !மேலும் சில பிரபலங்கள் இணைந்தனர்

 

Youtube

இந்த வயதிலும் காலை 5.30கு எழுந்து சட்னி அரைக்கிறார். சாம்பார் வைக்கிறார் . பின்னர் இட்லி ஊற்ற ஆரம்பித்தால் மதியம் 12 வரைக்கும் இட்லி (idlies) ஊற்றி விற்கிறார். இதில் விசேஷமான விஷயம் என்னவென்றால் இந்த டிஜிட்டல் யுகத்திலும் கிரைண்டர் மிக்சி உதவி இல்லாமல் ஆட்டுக்கல்லிலேயே மாவாட்டி ஆட்டுக்கல்லில் சட்னி அரைத்து அந்தக் காலத்தின் அற்புத சுவை அவர் வாடிக்கையாளர்களுக்கு தருகிறார் பாட்டி.

இந்த தள்ளாத வயதிலும் பாட்டி இத்தனை தெம்புடன் ஒற்றை ஆளாக அத்தனை வேலைகளையும் செய்வதற்கு காரணம் அவர் காலத்தில் அவர் அரிசி சாதம் சாப்பிட்டதில்லையாம். கேப்பங்கஞ்சி , ராகி களி போன்ற உணவுகளையே சாப்பிட்டதனால் தாம் இந்த வயதிலும் தெம்பாக இருப்பதாக பாட்டி கூறுகிறார்.

சென்னையில் உங்கள் டேஸ்ட் பட்களுக்கு சவால் விடும் சில ஸ்ட்ரீட் ஃபுட் கடைகள் !

 

Youtube

ஒரு ரூபாயை நாம் யாருக்காவது சும்மா கொடுத்தால் கூட வாங்க மறுத்து நம்மை ஏற இறங்க பார்த்து விட்டுப் போகும் நபர்கள் மத்தியில் ஒரு ரூபாய்க்கு எப்படி இட்லி சட்னி எல்லாம் பாட்டியால் கொடுக்க முடிகிறது என்ற கேள்விக்கு பாட்டியின் பதில் பல்வேறு ஹோட்டல்களில் ஒரு இட்லி 32ரூபாய் விற்கும் முதலாளிகளின் செவிகளில் அறையாகவே விழுகிறது.

அரிசி, பருப்பு, தேங்காய், கடலை எண்ணெய் , காய்கள் இதற்கெல்லாம் சேர்த்து எனக்கு ஒரு நாளைக்கு 300 ரூபாய் செலவாகும். 200 ரூபாய் லாபம் கிடைக்கும். அவ்வளவுதான் என்கிறார். நான் சாகும் வரைக்கும் ஒரு ரூபாய்க்குத்தான் இட்லி விற்பேன் என்று வைராக்கியமாக கூறுகிறார் கமலாத்தாள் பாட்டி.

இங்கு ஏழைகள் பல பேர் இருக்கிறார்கள். ஒரு சிலரிடம் அந்த ஒரு ரூபாய் கூட இருக்காது. அவர்களுக்கு சும்மாவே கொடுத்து விடுவேன். நான் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கப் போகிறேன் யார் சொன்னாலும் விலை ஏற்ற மாட்டேன் என்று பாட்டி கூறுவதைக் கேட்கையில் நமக்கும் நெகிழ்கிறது மனது.

வயதென்பது எண்களால் ஆனதுதான் .. நம்பிக்கை தரும் செல்வக்கனி பாட்டி !

 

Youtube

இந்த பெருந்தன்மை மனம் படைத்த கமலாத்தாள் பாட்டியிடம் இட்லி வாங்க பல இடங்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். பாட்டியின் கை ருசியால் அடிமையானவர்கள் பார்சல் வாங்கி வீட்டிற்கும் கொண்டு செல்கின்றனராம்.

இந்தக் கடையின் வாடிக்கையாளரான ராமசாமி கூறுகையில் மற்ற கடைகளில் ஒரு தோசை 40ரூபாய்க்கு வாங்கி சாப்பிட்டாலும் உடனே பசியெடுக்க ஆரம்பிக்கும். ஆனால் கமலாத்தாள் பாட்டியிடம் 10 ரூபாய்க்கு இட்லி வாங்கி சாப்பிட்டால் வயிறும் மனதும் நிறைந்து போகும் என்று அவர் நன்றியுடன் கூறுகிறார். இன்று என்னிடம் காசில்லை என்றால் முதலில் பசியாறு அப்புறமா பணம் தந்துக்கலாம் என்பாராம் பாட்டி.

பாட்டியின் கடைக்கு அருகில் வேலை பார்க்கும் செல்வ சுந்தரம் என்பவர் கூறுகையில் சில சமயங்களில் பாட்டி போண்டா சுட்டு கொடுப்பார். அந்த சுவை வேறு எங்குமே கிடைக்காது. போண்டா 2 ரூபாய்க்கும் இட்லி ஒரு ரூபாய்க்கும் பாட்டி விற்பனை செய்வார் என்று கூறுகிறார்.

ஊருக்கெல்லாம் ஆக்கிப் போடும் கமலாத்தாள் பாட்டி பற்றி கேள்விப்பட்ட உடன் முதலில் உங்கள் மனதில் என்ன எழுகிறது? அங்கே போய் சாப்பிட வேண்டும் என்றுதானே! எனக்கும் அதேதான். வருகிற லீவில் கோவை கிளம்ப பிளான் போட்டுக் கொண்டிருக்கிறேன்!

கமலாத்தாள் பாட்டியை வெளியுலகுக்கு அறிமுகம் செய்த பிபிசி தமிழுக்கு நன்றி.

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From DIY Life Hacks