Food & Nightlife

இன்று சர்வதேச காபி தினம் : காபி குறித்த ஆச்சர்யமூட்டும் தகவல்கள் மற்றும் நன்மைகள்!

Swathi Subramanian  |  Oct 1, 2019
இன்று சர்வதேச காபி தினம் : காபி குறித்த ஆச்சர்யமூட்டும் தகவல்கள் மற்றும் நன்மைகள்!

நமக்கு சுறுசுறுப்பு தேவை என்று நினைத்தாலே  நம் கண்ணுக்கு முன்னாடி வந்து நிற்கும் ஒன்று  காபி. நம்மில் பலருக்கு காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். அதனை அனுசரிக்கும் விதமாக இன்று சர்வதேச காபி தினம் கொண்டாடப்படுகிறது.

ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள எத்தியோப்பியாவை பூர்விகமாக கொண்ட காபி 12ம் நூற்றாண்டுகளில் எத்தியோப்பியாவிருந்து எகிப்து மற்றும் எமன் நாடுகளுக்குப் பரவியது. இதனை தொடர்ந்து 17ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு காபி பரவியது. காபியை  சுறுசுறுப்பு, உற்சாகம் அளிக்கும் பானம் என்று சொன்னாலும், நம் உடலுக்கு ஆரோக்கியமற்றது என்ற கருத்துக்கள் இன்றும் விவாதத்தில் இருந்து வருகிறது.

pixabay

ஆனால் காபியில் (coffee) ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சில ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது உண்மையே. காபி இன்று பலவகையான மாற்றங்களுக்குட்பட்டு இருக்கிறது. ஃபில்டர் காபி, டிகிரி காபி, டிகாக்ஷன் காபி, வடிகட்டாத எஸ்ப்ரஸ்ஸோ காபி, இன்ஸ்டன்ட் காபி, கிரீன் காபி என்று பல அவதாரங்களை எடுத்திருக்கிறது. 

சர்வதேச காபி கழகத்தின் தரவின்படி, உலகிலேயே பின்லாந்தை சேர்ந்த மக்கள்தான் அதிகளவில் காபி பருகுகின்றனர். அதாவது ஒரு வருடத்திற்கு, பின்லாந்தை சேர்ந்த ஒருவர் சுமார் 12 கிலோ காபியை பருகுகிறார்.

சுவையான சைவ மீன் குழம்பு செய்வது எப்படி?

காபி குடித்தால் இதய நோய் ஏற்படும் என்று பல ஆய்வுகள் கூறுகிறது. இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் நடத்த பட்ட ஆய்வில் காபி குடிப்பதால் இதயத்திற்கும், தமணிக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் ஒரு நாளைக்கு 20 கப்பிற்கும் மேல் காப்பி குடிப்பவர்களையும் மற்றும் 1 கப் காப்பி குடிப்பவரையும் வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் காபி குடிப்பதால் தமனியில் எந்த விதமான இறுக்கமும் ஏற்படவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

pixabay

காபி அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்

முத்து போன்ற ஜவ்வரிசியை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் மற்றும் ரெசிபிகள்!

pixabay

கூந்தலை அலங்கரிக்க இத்தனை பொருட்களா ! இவ்வளவு மலிவான விலையிலா! வாங்கி விடலாம் வாருங்கள்!

pixabay

காபி குடியுங்கள், காபி தினத்தை கொண்டாடுங்கள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Food & Nightlife