காதல்… காதல்… காதல்…
காதல் போயின் சாதல்… என்று காதலை மட்டுமே வாழ்க்கையாக நினைப்போரின் பல உயிர்களை காதல் பறித்து இருக்கிறது. ஆனால், காதல் வாழ்வின் ஒரு அங்கம் தான். காதல் தோல்வி, வாழ்க்கையின் முடிவல்ல. காதல் தோல்வியால், கண்ட காயதிற்கு மருந்து இன்னொரு காதல் தரும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். இதனை மிகவும் அழகாக பல தமிழ் திரைப்படம் (movie) விளக்கி உள்ளது. ஆகையால், உங்கள் மனது புண்பட்டு இருக்கிறது என்றால் நன்றாக அழுது தீர்த்து விடுங்கள். அதற்குப் பிறகு உங்களுக்கு பிடித்தமான உணவை சாப்பிடுங்கள். அதற்கு பிறகு கீழ் கூறியிருக்கும் அணைத்து படத்தையும் பார்த்து விடுங்கள். இதுவே எங்கள் கட்டளை!
லவ் பிரேக்கப்பில் இருந்து மீண்டு வர 6 ஊக்குவிக்கும் தமிழ் திரைப்படங்கள்
1. மௌன ராகம்
துருதுரு கல்லூரி மாணவியான ரேவதி தன்னைப் போலவே குறும்பு தனம் கொண்ட அஞ்சா நெஞ்சரான கார்த்திக்கை காதல் கொள்கிறாள். அதனால் பல சமூக பிரச்சனையில் ஈடுபட, பதிவு திருமணம் ஏற்பாடு தோல்வியில் முடிய, குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டில் ஏற்பாடு செய்யும் திருமணதிற்கு ஒப்புக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ள படுவார் ரேவதி.
தனது அக்மார்க் கணவர் மோகனையும் அவரது அன்பையும் எவ்வாறு புரிந்து கொண்டு இவர்கள் இருவரும் இணைகிறார்கள் என்பதுதான் மீதிக்கதை.
காதலின் இன்னொரு பரிணாமத்தை வெளிப்படுத்தியது இப்படம்.
நடிகர்கள் – மோகன், கார்த்திக், ரேவதி.
இயக்குனர் – மணிரத்னம்.
இதை இங்கே பார்க்கலாம்
2. ஜில்லுனு ஒரு காதல்
கல்லூரியில் ஒரு காதலி, அதற்குப்பிறகு சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்ட திருமணம்.இருப்பினும் தனக்கு அமைந்த அன்பான மனைவி அழகான குழந்தை உடன் சந்தோஷமாக வாழுகிறார் சூர்யா. மிகவும் அழகாக சொல்லிய காதல் காவியத்தை உயர்த்தி பிடித்தது ஏ. ஆர். ரகுமான் அவர்களின் இசை.
மெட்ரோ சிட்டிகளில் பலபேருக்கு ஜில்லுனு ஒரு காதல் கதை இருந்திருக்கலாம். அதை மிக அழகாகவும் ஆழமாகவும் காட்டியுள்ளார் இப்படத்தின் இயக்குனர் கிருஷ்ணா.
நடிகர்கள் – ஜோதிகா, சூர்யா, பூமிகா.
இயக்குனர் – கிருஷ்ணா.
இதை இங்கே பார்க்கலாம்
3. வாரணம் ஆயிரம்
ரயில் பயணத்தில் உருவாகும் ஒரு காதல் கதை. கவுதம் வாசுதேவ் மேனனின் காதல் கவிதை படங்களில் இதுவும் ஒன்று. கல்லூரியில் விளையாட்டு பிள்ளையாக வலம் வரும் சூர்யா, ரயில் பயணத்தில் சமீரா ரெட்டி மீது காதலில் விழ, மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்ற காதலியை நேரில் பார்க்க செல்கிறார். விபத்தில் இழந்த காதலியை மறந்து, மீண்டும் தன் வாழ்க்கையை எவ்வாறு சரி செய்கிறார் என்று அழகாக காட்டியுள்ளார் இயக்குனர்.
கடந்தகாலத்தை மறந்து முன்னோக்கி சென்றால் அங்கு ஒரு அழகிய வாழ்க்கை காத்திருக்கிறது என்று இப்படத்தின் முலமாக தெரிந்துகொள்ளலாம்
நடிகர்கள் : சூர்யா, சிம்ரன், சமீரா ரெட்டி, ரம்யா.
இயக்குனர் : கௌதம் வாசுதேவ் மேனன்.
இதை இங்கே பார்க்கலாம்.
4. ஆட்டோகிராப்
இயக்குனர் சேரனை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த திரைப்படம். பள்ளி காதல் ( பப்பி லவ் ), பெரும்பாலான பள்ளி காதல் தோல்வி அடையும், கல்லூரி காதல், பின்னர், குடி பழக்கம், என கலங்கிய சேரன், தோழி சினேகா உதவியோடு வாழ்க்கையை எதிர் கொள்வதே பிற்பாதி.
இதில் காதல் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு பரிணாம வளர்ச்சி அடையும் என்பதை புரிய வைத்திருக்கிறார் இயக்குனர் சேரன்.
நடிகர்கள் : சேரன், கோபிகா, சினேகா.
இயக்குனர் :சேரன்.
இதை இங்கே பார்க்கலாம்.
5. விண்ணைத் தாண்டி வருவாயா
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளி வந்த உணர்வு பூர்வமான படம். தன்னை விட வயதில் மூத்தவரான த்ரிஷாவை காதலித்து , குழப்பத்தில் பிரிந்து (பிரேக்கப்) மனம் வாடிய சிம்பு, தன் லட்சியம் ஆன இயக்குனர் வேலையில் தன் கவனத்தை செலுத்தி, எவ்வாறு வெற்றி காண்கிறார் என்பதை பல சுவாரஸ்ய முடுச்சுகள் உடன் சொல்லி இருப்பார் இயக்குனர்.
சிம்பு, திரிஷா இருவரையும் வேறு ஒரு பரிணாமத்தில் காட்டிய படம்.
நடிகர்கள் : சிம்பு, திரிஷா, சமந்தா.
இயக்குனர் : கவுதம் வாசுதேவ் மேனன்.
இதை இங்கே பார்க்கலாம்.
6. ராஜா ராணி
இரு வேறு காதல் தோல்வி. இன்றைய தலைமுறையினர் மிகவும் விரும்பிய காதல் படம்.இருவரும் இஷ்டம் இல்லாமல் இல்லறம் தொடங்கும் சில நாட்களில் இருவருக்கும் காதல் பின்னணி இருப்பதை இருவரும் அறிந்துக் கொள்வார்கள்.
இருவேறு காதல் தோல்வி (breakup) கண்ட உள்ளம், இணையும் போது எவ்வாறு காதலாக மாறுகிறது என்பதை மூன்று அழகிய காதல் கதையை முடிச்சிட்டு அமைந்திருக்கும் இந்தப்படத்தை நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும்.
திரித்துக் காட்டிய காதல் கதைகளின் அழகிய முடிவை இங்கு பார்க்கலாம்
நடிகர்கள் : ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா.
இயக்குனர் : அட்லீ
இதை இங்கே பார்க்கலாம்
மேலும் படிக்க – திரைப்பிரபலங்கள் தங்கள் காதலை எப்படி ப்ரொபோஸ் செய்தனர் ! சுவாரஸ்ய காதல் கதைகள் !
7. உள்ளம் கேட்குமே
கல்லூரி கதை. பெரிய நடிகர் பட்டாளமே அறிமுகம் செய்யப்பட்ட படம். கல்லூரி என்றால் கல்வியோடு, அன்பு, நட்பு, காதல், என அமைந்து இருக்கும். இதில் குறிப்பாக, ஆர்யா, பூஜா காதல் கல்லூரியில் அனைவருக்கும் தெரியும் அளவுக்கு பிரபலம்.
வாழ்க்கையில் தனது லட்சியம் ஒரு பக்கம் காதல் இனொரு பக்கம் என்று நிற்கும் போது அதை எவ்வாறு திறமையாகக் கையாள வேண்டும் என்று சிந்திக்க வைக்கும் ஒரு படம் ஆகும்.
காதலில் தோல்வி அடைந்தாலும் , வாழ்க்கையில் ஹீரோ எவ்வாறு வெற்றி அடைகிறார் என்பதை தெளிவாக கூறி இருக்கிறார் இயக்குனர்.
நடிகர்கள் : ஆர்யா, ஷ்யாம், பூஜா, அசின், லைலா.
இயக்குனர் :ஜீவா
இதை இங்கே பார்க்கலாம்.
வாழ்க்கையை நாம் ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்த அடியை தான் சிந்திக்க வேண்டும். சில சறுக்கல் வரலாம். காதல் தோல்வி என்ற பள்ளம் வரலாம். அதை பள்ளம் என்று மட்டும் நினைக்க வேண்டும்.
பாதாள குழி அல்ல.காதல் தந்த வலிக்கு காதல் மருந்திடும், வேறு இதயம் கொண்டு!
பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi