Food & Nightlife

சுவையான சூடான விதவிதமான முட்டை ஆம்பிளேட் கறி செய்வது எப்படி!

Mohana Priya  |  Aug 7, 2019
சுவையான சூடான விதவிதமான முட்டை ஆம்பிளேட் கறி செய்வது எப்படி!

முட்டை மிகவும் ஆரோக்கியம் மற்றும் அதிகமான புரோட்டீன்கள் நிறைந்த உணவாக பார்க்கப்படுகின்றது. முட்டையை காலை உணவாக அதிக பேர் சாப்பிடுவார்கள். ஆனால் ஒரே மாதிரி தினமும் சாப்பிட்டால் நமக்கே சலிப்பாகிவிடும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணும் முட்டையை எப்படியெல்லாம் வித விதமாக செய்து சாப்பிடலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

காய்கறி முட்டை ஆம்பிளேட்( Ingredients to make Veg egg omelette)
தேவையான பொருட்கள்: முட்டை – 3
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
வெங்காயத் தாள் – சிறிது (நறுக்கியது)
குடைமிளகாய் – 1 (நறுக்கியது)
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு பௌலில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, குங்குமப்பூ மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி, பேஸ்ட் கலவையுடன் முட்டை சேருமாறு நன்கு அடிக்க வேண்டும். பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் அனைத்தையும் போட்டு மீண்டும் 10-15 நிமிடம் அடிக்க வேண்டும். இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல்லானது காய்ந்ததும், அதில் எண்ணெய் தடவி அடித்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி ஆம்லெட் போட்டு சாப்பிட வேண்டும்.

 

Youtube

முட்டை ஆம்பிளேட் குழம்பு ( Ingredients to make egg omelette Curry)
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – அரை ஸ்பூன்
உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – தேவையான அளவு
மல்லித்தூள் – அரை ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் – ஒரு கைப்பிடி
முந்திரி – 10
கடுகு – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தக்காளியை சுடுதண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு ஆறியதும் தோலை உரித்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* முந்திரி, தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் முட்டை, மிளகு தூள், சிறிது மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

* நன்றாக அடித்த முட்டை கலவையை ஓவன் என்றால் 5 நிமிடம் அல்லது பிரஷர் குக்கர் என்றால் 10 நிமிடம் வைத்து வேக வைக்கவும். வெந்தவுடன் ஆறி வைத்து சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போக வதக்கிய பின்னர் மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.

* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை போட்டு நன்றாக கிளறவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த வைத்துள்ள தேங்காய் விழுது, 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

* கிரேவி நன்றாக கொதித்து கெட்டியாகி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சுவையான முட்டை அடை குழம்பு ரெடி.

 

Youtube

பெப்பர் முட்டை ஆம்பிளேட்
முட்டை ஆம்லெட் தேவையான பொருட்கள் ( Ingredients to make egg omelette)
முட்டை ஒன்று
மிளகு சீரகப் பொடி அரை டீஸ்பூன்
உப்பு தேவையான
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை
தோசை கல்லின் மேல் எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றவும்
அதன் மேல் உப்பு மற்றும் மிளகு சீரகத்தூள் சேர்த்து திருப்பி போடவும்
இருபுறமும் நன்கு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்
சுவையான ஆரோக்கியமான ஆம்லெட் ரெடி

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்கு மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Food & Nightlife