Lifestyle

புத்தாண்டு தினத்தன்று 67,385 குழந்தைகள் பிறப்பு : சீனாவை முந்தி முதலிடத்தில் இந்தியா!

Swathi Subramanian  |  Jan 2, 2020
புத்தாண்டு தினத்தன்று 67,385 குழந்தைகள் பிறப்பு : சீனாவை முந்தி முதலிடத்தில் இந்தியா!

புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 67 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளனர். இதனால் ழந்தை பிறப்பு விகிதத்தில் முதலிடத்தைப் பிடிக்கும் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. 

ஆண்டுதோறும் புத்தாண்டு தினத்தன்று உலகில் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்ற தகவலை ஐ.நா. சபை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020-ஆம் ஆண்டில் எந்தெந்த நாடுகளில் எத்தனை குழந்தைகள் பிறந்தன என்ற தகவலை ஐ.நா. சபை வெளியிட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 3 லட்சத்து 92 ஆயிரத்து 078 குழந்தைகள் பிறந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. இதில் இந்த ஆண்டு சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல் இடத்துக்கு வந்துள்ளது.

twitter

இந்தியாவில் நேற்று 67 ஆயிரத்து 385 குழந்தைகள் (babies) பிறந்துள்ளனர். சீனா நாட்டில் 46 ஆயிரத்து 299 குழந்தைகள் பிறந்து பிறப்பிடத்தில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

நைஜீரியா 26 ஆயிரத்து 039 குழந்தைகளுடன் 3-வது இடத்திலும், பாகிஸ்தான் 16 ஆயிரத்து 787 குழந்தைகள் பிறப்புடன் 4-வது இடத்திலும், இந்தோனேசியா 13 ஆயிரத்து 20 குழந்தைகள் பிறப்புடன் 5-வது இடத்திலும் உள்ளன.

முன்னணி சீரியல் நடிகை ஸ்ரித்திகாவிற்கு கேரளாவில் திருமணம் : வைரலாகும் புகைப்படங்கள்!

அமெரிக்காவில் 10 ஆயிரத்து 452 குழந்தைகள் பிறந்து 6-வது இடத்தில் உள்ளது. உலகில் புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகளில் 17 சதவீதம் குழந்தைகள் இந்தியாவில் பிறந்தவை.

ஐரோப்பிய நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ளதாக ஐ.நா.வின் புள்ளிவிவரத்தில் தெரியவருகிறது. 2020ஆம் ஆண்டின் முதல் குழந்தை பிஜி நாட்டில் பிறந்துள்ளதாவும், கடைசி குழந்தை அமெரிக்காவில் பிறந்ததாக ஐ.நா. சபை வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

twitter

பல நாடுகளில் புத்தாண்டு தினத்தில் குழந்தை பிறப்பது அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. சில நாடுகளில் உள்ள பெண்கள் புத்தாண்டில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை (babies) பெற்றுள்ளனர் எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கிரேட்டர் டொராண்டோ பகுதி முழுவதும் உள்ள மருத்துவமனைகள் புத்தாண்டு 2020 அதிகாலை முதல் குழந்தைகளை வரவேற்றன.

அதன்படி டொராண்டோவில் உள்ள ஹம்பர் ரிவர் மருத்துவமனையில் சரியாக நள்ளிரவில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆரோக்கியமான 8.3 பவுண்டுகள் எடையுள்ள அமீர் தீக் முகமது தனது தாயின் கைகளில் தவழ்ந்தார்.

பிரபுதேவா உடன் காதல்..? வாரம் ஒருமுறை பிரபுதேவாவை சந்திக்கும் சாய் பல்லவி!

இதுகுறித்து பேசிய குழந்தையின் தந்தை   “நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அற்புதமான, சிறப்பு ஆண் குழந்தையைப் பெற்றதில் நான் பெருமையடைகிறேன் என்றார்.

twitter

ஜி.டி.ஏ-வின் சில பகுதிகளுக்கு சேவை செய்யும் மருத்துவமனை அமைப்பான ட்ரில்லியம் ஹெல்த் பார்ட்னர்ஸ், மிசிசாகாவில் உள்ள கிரெடிட் வேலி மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் நள்ளிரவுக்குப் பிறகு இந்த ஆண்டின் முதல் குழந்தை (babies) பிரசவிக்கப்பட்டது என்று தெரிவித்தது.

ஆரியன் என்ற இந்த சிறுவனின் எடை சுமார் எட்டு பவுண்டுகள் இருந்தான். இதுகுறித்து குழந்தையின் தாய் கூறுகையில், அந்த நேரத்தில், இந்த ஆண்டு மிசிசாகாவில் பிறந்த முதல் குழந்தை ஆரியன் என்று எனக்கு தெரியாது.

குழந்தை பிரசவிக்கப்பட்டபோது, ​​எல்லோரும் மிகவும் உற்சாகமாக இருந்தனர் என்றார். இதேபோல் ஓஷாவாவில் உள்ள லேக்கரிட்ஜ் ஹெல்த் அவர்களின் முதல் குழந்தை அதிகாலை 12:34 மணிக்கு பிறந்ததாக அறிவித்தது.

இறுதி நேரத்தில் மலர்ந்த காதல்..நெகிழ்வில் முடிந்த நேசம்..திருமணத்தில் இணைந்த முதிய நட்பு !

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Lifestyle