DIY Life Hacks

மாதவிலக்கு ரத்தப்போக்குக்கு அருமருந்தாகும் கருணைக்கிழங்கு! மேலும் அதன் சிறப்புகள்!

Deepa Lakshmi  |  Dec 15, 2019
மாதவிலக்கு ரத்தப்போக்குக்கு அருமருந்தாகும் கருணைக்கிழங்கு! மேலும் அதன் சிறப்புகள்!

பொதுவாக மலிவாக கிடைக்கும் எவற்றையும் நாம் மதிப்பது இல்லை. அது கிடைத்தற்கரிய அன்பாக இருந்தாலும் சரி ஆரோக்கியம் தரும் காய்கறியாக இருந்தாலும் சரி எல்லாவற்றையும் நாம் அலட்சியப்படுத்தி சென்று விடுகிறோம்.

அவற்றில் ஒன்றுதான் பெயரிலேயே கருணை கொண்டிருக்கும் கருணைக்கிழங்கு (yam). பூமிக்கு மிக நெருக்கமாக இருந்து விளையும் வகைகள் கிழங்கு வகைகள். அதனால் இவற்றில் உயிர்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். பல கிராமங்களில் இன்றளவும் அருமருந்து கருணைக்கிழங்கு. வாரத்தில் அதிகம் உண்ணப்படும் கிழங்கு.

ஆனால் நகரங்களில் உடலுக்கு வாயு உற்பத்தி செய்யும் உருளைக்கிழங்கு உண்பதே அதிகம். நமது உடலை கருணையோடு அணுகி நமது உடலை நேசித்து வாஞ்சையோடு நம்மை ஆரோக்கியமாக இருக்க செய்வது கருணைக்கிழங்கு. கருணைக்கிழங்கை நாம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்.

வளர் இளம்பெண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய ஆரோக்கிய உணவுகள்!

Pinterest

நமது உடல் ஒரு வடிவத்தோடு இருப்பதற்கும் நடத்தல் போன்ற செயல்களை செய்வதற்கும் நமக்கு உதவி செய்வது எலும்புகள். கால்சியம் எலும்புகளை வலுவாக்கும் என்பதை இன்றைக்கு டிவி பார்க்கும் குழந்தைகள் கூட சொல்வார்கள். அந்த கால்சிய சத்து (calcium) கருணைக்கிழங்கில் அதிகமாக இருக்கிறது.

வலிமையற்ற எலும்புகள் கொண்டவர்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள்தான்.எலும்புகள் வலிமை பெற குழந்தைகள் முதியவர்களுக்கு வாரம் ஒருமுறை கருணைக்கிழங்கை உணவில் சேர்த்து வரலாம்.

உடலில் மூன்று வகையான நாடிகள் உண்டு வாதம் பித்தம் மற்றும் கபம் என்பதுதான் அவை. கருணைக்கிழங்கு உடலில் உள்ள பித்த நாடியை சமன் செய்கிறது. பித்தம் அதிகரித்தால் தலைவலி தலைசுற்றல் வாந்தி போன்றவை ஏற்படும். கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் பித்தம் கட்டுப்படும். பித்தக்கற்கள் (gall bladder stones) உருவாகாமல் தடுக்கும்.

சரும அழகிற்கு கமலாப்பழம் தோல் – வீட்டில் எளிய முறையில் பேஸ் பாக் செய்யலாம்!

Pixabay

ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை பசியுணர்வு ஏற்பட வேண்டியது இயல்பானது. அப்படி இல்லாமல் பசியுணர்வு இல்லாதவர்கள் கருணைக்கிழங்கை சாப்பிட்டு வரலாம். ஆரோக்கிய குறைபாடுகளால் இந்த பசியின்மை ஏற்படுகிறது. சரியாக சாப்பிட முடியாமல் போகிறது.எவ்வளவு நேரம் ஆனாலும் பசிக்காமல் இருப்பதும் சாப்பிட்டவை ஜீரணம் ஆகாமல் இருப்பதும் ஆரோக்கிய குறைபாடுகளின் அடையாளங்கள். இதனை பக்கவிளைவே இல்லாமல் சரி செய்கிறது கருணைக்கிழங்கு.

வாரம் ஒருதடவை கருணைக்கிழங்கை மசியல் செய்தோ குழம்பு வைத்தோ சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றில் உள்ள சிக்கல்கள் எல்லாம் நீங்கும். வயிற்றில் உள்ள அமிலப்பை சுரப்பை சீராக்கி பசி எடுக்க வைக்கிறது கருணைக்கிழங்கு.ஏற்கனவே உண்ட உணவு செரிமானம் ஆகவும் கருணைகிழங்கு உதவி செய்கிறது.

குளிர்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் சுரத்தை போக்க வீட்டு வைத்தியம்!

Pinterest

மாதவிலக்கு வலிகள் (periods pain) பெண்களுக்கென்றே உருவானது. இந்த நேரங்களில் அதிக ரத்தப்போக்கால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அருமருந்து கருணைகிழங்கு. கருணைக்கிழங்கை சமைத்து சாப்பிடுவதன் மூலம் அதிக ரத்தப்போக்கின் மூலம் இழந்த உடல் சத்து அனைத்தையும் திரும்ப பெறுவார்கள்.

மூலவியாதியால் (piles) துன்பப்படுபவர்கள் வாரம் இரண்டு முறை அல்லது மூன்று முறை கூட கருணைக்கிழங்கு சமைத்து சாப்பிட வேண்டும். இப்படி செய்து வந்தால் உள்மூலம் வெளிமூலம் எல்லாம் குணமாகும். சித்த மருத்துவத்தில் இது மருந்தாகவே பயன்படுகிறது.

மூல நோய்க்கு கடவுள் மாதிரியானது கருணைக்கிழங்கு. மூல நோய் உள்ளவர்கள் அறுவை சிகிச்சை இல்லாமலே அதனைக் குணப்படுத்திக் கொள்ள முடியும். அதற்கு வாரத்தில் நான்கு முறை கருணைக்கிழங்கு உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் பளபளப்பான முக அழகை சில பருக்கள் வந்து கெடுக்கிறதா ! சிம்பிளாக சரி செய்து விடலாம் !

Pinterest

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From DIY Life Hacks