Lifestyle

பெண்கள் ஏன் தினமும் வளையல்கள் அணிய வேண்டும் : ஆச்சரியப்பட வைக்கும் நன்மைகள்!

Swathi Subramanian  |  Oct 11, 2019
பெண்கள் ஏன் தினமும் வளையல்கள் அணிய வேண்டும் : ஆச்சரியப்பட வைக்கும் நன்மைகள்!

பண்டைய காலத்திலும் சரி, தற்போதைய நவீன காலத்திலும் சரி பெண்களுக்கு தனி அழகு தருவது அவர்கள் அணியும் வளையல் தான். குறிப்பாக சுமங்களி பெண்கள் வளையல் அணியாமல் இருக்ககூடாது என்ற விதி தற்போதும் பின்பற்றப்படுகிறது. உணவு பரிமாறும் போதும், கோவிலுக்கு செல்லும் போதும் பெண்கள் வளையல்கள் அணிவது அவசியம். 

வளையல்களில் (bangles) கண்ணாடி வளையல், தங்க வளையல், வெள்ளி வளையல், செம்பு வளையல், பிளாஸ்டிக் வளையல், மெட்டால் வளையல், முத்து வளையல், பேன்சி வளையல், நூல் வளையல், பிளாஸ்டிக் வளையல்கள் என விதவிதமாக உள்ளன. நமது முன்னோர்கள் வளையல் அணியும் பழக்கத்தை காரணமாகத் தான் ஏற்படுத்தியுள்ளனர். அவை என்ன என்பது குறித்து இங்கு விரிவாக பாப்போம். 

pixabay

வளையல் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்

இரத்த ஓட்டம் அதிகரிக்க: வளையல்கள் அணிவதால் தொடர்ந்த உராய்வு ஏற்படுகிறது. இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டத்தை கொடுத்து உடலில் ஏற்படும் நிறைய பிரச்சனைகளை தவிர்க்கிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு: கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல்களின் ஒலி சந்தோஷத்தை கொடுத்து மன அழுத்தத்தைக் குறைக்கின்றது. இதனால் குழந்தையும் நல்லமுறையில் வளரும் என்பது உண்மை.

மேலும் வளையல்களின் ஓசை கர்ப்பிணி பெண்களின் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கேட்கும் திறனை அதிகரிக்கின்றது.

தீபாவளி பரிசு பொருட்கள் வாங்க தயாரா? இங்கே சில யோசனைகள் உங்களுக்காக!

சுறுசுறுப்பு: வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது ஏற்படும் ஒலி நமக்குள் தோன்றும் நேர்மறையான எண்ணங்களை குறைக்கிறது. இதனால் நம்முடைய எண்ணங்கள் தெளிவு பெற்று, மூளையின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாகும்.

pixabay

கொழுப்பை கரைக்க: பருமனான உடல்வாகு கொண்டவர்கள் செம்பு வளையல்கள் அணியலாம். உடலில் தேவையில்லாத கொழுப்பை கரைக்க அது உதவும். பித்தளை வளையல் கனமாக இருக்கும். அதனால் கைகளில் இருக்கும் பிரெஷர் பாயின்ட்டுக்கு நல்லது. 

மன அமைதி : கண்ணாடி வளையல்கள் (bangles) ஒலிகள் மென்மையானதாக இருப்பதால் அது அணிபவர்களுக்கு மட்டும் அல்லாமல் உடனிருப்பவர்களின் மன நிலையையும் மேம்படுத்துகிறது. ஆகையால் அந்த இடமே சண்டை சச்சரவின்றி அமைதியாக மாறுகிறது. இதனால் நம் மனம் அமைதியாகிறது. இதனால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கை நிறைய வலையல்கள் அணிவது நல்லது. 

தீபாவளி விருப்பங்களையும் படியுங்கள்

pixabay

வளையல் நிறங்களின் தேர்வு

பழுப்பு நிற வளையல்கள் –  உடலில் சந்தோஷம் பரவுகிறது.

சிவப்பு – கெட்டதை அழிக்கும் சக்தி கொண்டது.

ஊதா நிற வளையல்கள் – முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கும்.

மஞ்சள் நிற வளையல்கள் – நேர்மறையான எண்ணத்தைக் கொடுக்கும்.

கறுப்பு நிற வளையல்கள் – மன தைரியத்தை அதிகரிக்கும்.

தங்கம் மற்றும் வெள்ளி வளையல்கள் – எதிர்மறை எண்ணங்களை குறைக்கும்.

உலகில் 5வது பெரிய வைர மோதிரத்தை பரிசாக பெற்ற தமன்னா : கவுண்டமணியை சந்திக்க விருப்பம்!

கண்ணாடி வளையல்களில் இரண்டு நிறங்கள் அதிகமாக பரிந்துரைக்கப்படுகின்றன. அவை சிவப்பு மற்றும் பச்சை. ஆகையால் வேறு எந்த நிறமும் கலக்காமல் சிவப்பு மற்றும் பச்சை நிற வளையல்களை (bangles) அணிவது சிறந்த பலனை கொடுக்கும்.

pixabay

தவிர்க்க வேண்டியவைகள் :

ஒவ்வொரு அம்மாவும் தெய்வம்தான்..சினேகாவின் பிரசவ வலி பற்றி மனம் திறக்கும் பிரசன்னா !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Lifestyle