Lifestyle

இன்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் மஹாளய அமாவாசை… நீங்கள் வேண்டிய முக்கிய விஷயங்கள்!

Swathi Subramanian  |  Sep 27, 2019
இன்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் மஹாளய அமாவாசை… நீங்கள் வேண்டிய முக்கிய விஷயங்கள்!

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது. திதிகளில் மிகவும் சிறப்பும், மகத்துவங்களும் கொண்ட அமாவாசை திதி எல்லா மாதங்களில் வந்தாலும் புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை ‘மஹாளய அமாவாசை” என்று சிறப்பித்து கூறுவார்கள். சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். 

ஆனால் மஹாளயபட்ச அமாவாசை தினத்தில் தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் என அனைவருக்கும் தர்ப்பணம் கொடுப்பதே மகாளய அமாவாசையின் தனி சிறப்பாகும். மஹாளய அமாவாசை (mahalaya amavasya) அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு நமக்கு உதவிய அத்தனை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. 

எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான். நாம் தர்ப்பணம் செய்யும்போது ஐந்து பிதுர் தேவதைகள் வரவேற்கப்படுகின்றனர். நம் பித்ருக்கள் (மண்) புரூரவர் (நீர்) விசுவதேவர் (நெருப்பு) அஸீருத்வர் (காற்று) ஆதித்யர் (ஆகாயம்)என பஞ்ச பூத அம்சமாக ஐவரும் ஒரு சேர பூமிக்கு வருவது மஹாளய பட்சத்தில்தான் என கருட புராணம் விளக்கமாக கூறுகின்றது.

twitter

நமது மூதாதையர்கள் இறந்து போன தேதி தெரியாதவர்கள், மஹாளய பட்சத்தில் தர்ப்பணம் செய்தால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக நம்பிக்கை உள்ளது.

மகாளய அம்மாவாசை காலம்:

இந்த ஆண்டு மஹாளயஅமாவாசை (mahalaya amavasya) 2019 செப்டம்பர் 14 முதல் 28 செப்டம்பர் 2019 வரை நடக்கிறது. 28ம் தேதி மகாளய அமாவாசை தினம் சனிக்கிழமையில் வருகின்றது. மகாளய அம்மாவாசையன்று கர்ணன் அன்னதானம் செய்ய மீண்டும் பூமிக்கு வந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. 

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு : பெருமாளுக்கு படைக்க வேண்டிய படையல் பிரசாதங்கள்!

இந்த நேரத்தில் மூதாதயரை நினைத்து காகத்திற்கு வீட்டின் தென்மேற்கு பாகத்தில் அல்லது தென்கிழக்கு பாகத்தில் சாதம் வைத்து வழிபட்டால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும்

மஹாளய அம்மாவாசையன்று செய்ய வேண்டியவை :

அரசமர விநாயகர் வழிபாடு : 

மரங்களில் மிக புனிதத்தன்மை வாய்ந்த மரம் அரச மரத்தடியில் அமர்ந்து காட்சி தருபவர் விநாயகர். மஹாளய அம்மாவாசை தினத்தில் அரசமரத்தை சுற்றி வந்து பிள்ளையாரை வணங்குவது மிக சிறந்த புண்ணியத்தை தரும். இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிடைத்து நோய் நொடியின்றி வாழ முடியும். 

உணவளித்தல் :

இந்த மஹாளய அமாவாசை தினத்தில் எறும்பு, பசு, காகம், நாய், பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து அவர்களின் வயிற்றை நிறைத்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.

தானம் அளித்தல்:

இந்த மஹாளய அமாவாசை தினத்தின் போது கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உப்பு, உடைகள், பார்லி ஆகியவை நாம் தானம் அளித்தால் மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிட்டும்.

twitter

தண்ணீர் தானம்:

தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம் என்பார்கள். அதே போல் தண்ணீர் தானமும் பார்க்கப்படுகின்றது. தேவையான மக்களுக்குத் தண்ணீர் தானம் கொடுப்பது, குடிக்க இனிப்பு கலந்த தண்ணீர் கொடுப்பது மிகவும் சிறந்தது.

பக்தி மணம் கமழும் புரட்டாசி மாதத்தின் சிறப்பு விசேஷங்கள்!

முன்னோர்களை வணங்குவது:

இந்த நாளில் நம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறந்தது. இதனால் அவர்களின் ஆசி நமக்கு கிடைத்து வாழ்க்கை வளம்பெறும். மேலும் திறந்த வெளியில் தெற்கு திசை பார்த்து ஒரு விளக்கு அல்லது தீபத்தை பார்த்து வணங்குவது மிகவும் நல்லது.  

புனித நீராடல் : 

மஹாளய பட்ச காலத்தில் (mahalaya amavasya) புனித நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து தர்ப்பணம் செய்வது நல்லது. பிரதமை துவங்கி அமாவாசை வரை உள்ள காலத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும். 

புனித நீர் ஸ்தலங்கள்: காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஷரோவர், சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம். திருக்கோவரணம். தமிழகத்தில் ராமேஸ்வரம், பவானி கூடுதுரை, ஸ்ரீரங்கம், பாபநாசம், செதலபதி ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம்.

twitter

சனி பகவான் வழிபாடு:

இன்று சனி பகவான் வழிபாடு சிறப்பு வாய்த்தது. ஏழை மக்களின் உருவில் சனி பகவான் இருக்கிறார். நாம் அவர்களுக்கு உதவியோ, மரியாதை கொடுத்தாலே போதும் சனி பகவானின் ஆசி கிடைக்கும். முடிந்தால் அருகில் இருக்கும் சனி பகவான் கோவிலுக்கு சென்று எள் விளக்கு போடுவது நன்மை தரும். 

மஹாளய அமாவாசை வழிபாட்டால் கிடைக்கும் நன்மைகள்

மஹாளய அமாவாசையின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதற்கும் ஒருவித பலன்கள் உள்ளன. 

  1. முதல்நாள் பிரதமை – பணம் சேரும் 
  2. இரண்டாம் நாள் துவிதியை – ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும். 
  3. மூன்றாம் நாள் திரிதியை – நினைத்தது நிறைவேறும். 
  4. நான்காம் நாள் சதுர்த்தி – பகைவர்களிடமிருந்து தப்பித்தல் 
  5. ஐந்தாம் நாள் பஞ்சமி – செல்வம் சேரும்  
  6. ஆறாம் நாள் சஷ்டி – புகழ் கிடைக்கும்
  7. ஏழாம் நாள் – சப்தமி – சிறந்த பதவிகளை அடைதல்
  8. எட்டாம் நாள் – அஷ்டமி – சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல் 
  9. ஒன்பதாம் நாள் நவமி – திருமண தடை நீங்கும்
  10. பத்தாம் நாள் – தசமி – நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல், 
  11. பதினொன்றாம் நாள் ஏகாதசி – படிப்பு, கலையில் வளர்ச்சி 
  12. பன்னிரெண்டாம் நாள் துவாதசி –  ஆடை ஆபரண சேர்க்கை 
  13. பதின்மூன்றாம் நாள் திரயோதசி – பசுக்கள், விவசாய அபிவிருத்தி
  14. பதினான்காம் நாள் சதுர்த்தசி – ஆயுள் விருத்தியாகும்
  15. பதினைந்தாம் நாள் மகாளய அமாவாசை – முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மை சேர முன்னோர் ஆசி வழங்குவார்கள். 

மஹாளய அமாவாசையன்று நமது மூதாதையர்களை நினைத்து வழிபட்டால் அவர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று கவலைப்பட்டாலும் அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும். எத்தகைய தடைகளையும் தாண்டி வெற்றியடையலாம்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Lifestyle