Beauty

இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலம் பற்றி இத்தனை விஷயங்களா ! அறிந்து பயன்பெறுங்கள் !

Deepa Lakshmi  |  Nov 4, 2019
இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலம் பற்றி இத்தனை விஷயங்களா ! அறிந்து பயன்பெறுங்கள் !

கூந்தல் வளர்ப்பு என்பது ஒரு கலையாகவே மாறி விட்டது. இதற்காகவே சில மணி நேரங்கள் ஒதுக்கு கூந்தலுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் தரும் எண்ணெய் வகைகள், மூலிகைகள் மற்றும் ஆர்கானிக் ஷாம்புக்கள் என இதற்கான வரைமுறைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

அதுமட்டும் அல்லாமல் சாப்பிடும் உணவில் சரியான அளவு புரத சத்துக்கள் சேர்ப்பதும் அவசியம் என்பதால் கூந்தல் வளர்க்க உணவு முறைகளிலும் மாற்றங்களை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம்.

இது போன்ற சிரமங்கள் இல்லாமல் ஒரே ஒரு எண்ணெய் உங்கள் கூந்தல் வளர்ப்பிற்கு உத்திரவாதம் தரும் என்றால் அது இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலம் தான்! (indulekha bringa hair oil) 

இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலத்தின் மூலப்பொருள்கள்


இது போன்ற பல்வேறு மூலிகைகள் மூலப்பொருள்களாக கொண்டது இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலம்.

albaith

இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலத்தை பயன்கள்

இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலம் பல்வேறு வித பலன்களை பயன்படுத்துபவருக்கு தருகிறது. கூந்தல் வளர்ச்சி மட்டும் அல்லாமல் தலையில் இருந்துதான் உடல் ஆரோக்கியமே ஆரம்பிக்கிறது அதனால் அங்கிருந்தே நமது உடலை பலமாக பாதுகாக்க ஆரம்பிக்கிறது.

முடி வளர்ச்சிக்கு

வலுவிழந்து உதிர்ந்த மயிர்க்கால்களில் இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலம் படுவதால் ஆரோக்கியமான கூந்தல் முளைக்கிறது. இந்த எண்ணெய் தடவ ஆரம்பித்த பின்னர் அடர்த்தியான நீளமான கூந்தல் கிடைப்பதோடு அழகான கூந்தலையும் பெறுவீர்கள்

கூந்தலை பராமரிக்கிறது

உங்கள் கூந்தல் வளர்ந்தால் மட்டும் ஆரோக்கியமானது அல்ல. பொடுகு பேன் போன்ற பூஞ்சை தொற்றுக்களில் இருந்து உங்கள் கூந்தல் காக்கப்பட வேண்டும். இளநரை சிக்கல்கள் நீங்கி கருகரு கூந்தல் உங்கள் அழகை மேம்படுத்த இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலம் உதவுகிறது.

கூந்தல் தொடர்பான சிக்கல்களை அடையாளம் காட்டுகிறது

நுனி முடி பிளவு, வறண்ட அலை அலையான கூந்தல் என கூந்தல் சிக்கல்களை அடையாளம் கண்டு அதனை சரி செய்கிறது. தலையில் உள்ள அரிப்பு மற்றும் எரிச்சலை போக்குகிறது

Youtube

இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைல விலை

100மிலி அளவுள்ள இந்துலேகா பிரிங்கா தைலம் ரூபாய் 432க்கு விற்கப்படுகிறது. அமேசான் போன்ற தளங்களில் தள்ளுபடி விலையில் 360ரூபாய்க்கு இதனை பெறலாம். 

இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலத்தை பயன்படுத்தும் முறைகள்

முதல் படிநிலை  – இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலத்தை முதலில் திறந்து அதில் சிறு ஓட்டை போட வேண்டும். அதன் மூலம் எண்ணெய் தெளிவாக சீப்பு போன்ற பாகத்தில் விழும். அங்கிருந்து மயிர்கால்களுக்கு அது பரவும். 

இரண்டாம் படிநிலை  – அதன் பின்னர் நீங்கள் அந்த சீப்பு போன்ற பாகத்தை போட்டு நன்றாக இறுக்கமாக திருகி பாட்டிலை மூடுங்கள். 

மூன்றாம் படிநிலை  – இந்துலேகா பிரிங்கா அப்ப்ளிகேட்டர் மூலமாக அல்லது சீப்பின் மூலமாக  உங்கள் கூந்தலை நன்றாக பிரித்து எண்ணெய் தேய்ப்பதற்கு வாகாக சிக்கெடுத்து வைத்து கொள்ளுங்கள்.

நான்காம் படிநிலை  – இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலத்தை சீப்பு போன்ற பாகத்தை தலையில் படுமாறு வைத்துக் கொண்டு லேசாக எண்ணெய் பாட்டிலை அழுத்துங்கள். அதிலிருந்து எண்ணெய் வெளியேறி உங்கள் கூந்தலின் வேர்க்கால்களில் படுமாறு சீவுங்கள். 

ஐந்தாம் படிநிலை   – இப்படியாக தலையின் எல்லா பாகங்களிலும் எண்ணெய் படுமாறு நன்கு சீவ வேண்டும். எல்லா பாகங்களிமு எண்ணெய் இறங்கி விட்டால் நிறுத்தி விடவும். 

ஆறாம் படிநிலை  – எண்ணெய் தலையில் நன்கு இறங்கியதை உறுதி செய்து கொண்டு அதன் பின்னர் உங்கள் கைகளால் மசாஜ் செய்யவும். 

இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலத்தை நன்மை தீமைகள்

உங்கள் சருமத்திற்கு ஒரு பொருளை பயன்படுத்தும் போது அதன் நன்மை மற்றும் அறிந்து கொள்ளாமல் அதன் தீமைகளையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலத்தின் நன்மை தீமைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

நன்மை

மற்ற எந்த எண்ணெய்களை விடவும் தனித்துவம் வாய்ந்த பாட்டில் இதன் சிறப்பு 

கூந்தலை சிக்கல் சிடுக்குகளில் இருந்து காக்கிறது 

பொடுகை கட்டுப்படுத்துகிறது 

நுனி முடி பிளவுகளை சரி செய்கிறது 

உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. 

தேவையான ஊட்டசத்துக்களுடன் கூந்தலை பாதுகாக்கிறது. 

தீமைகள்

இதன் விலை அதிகமாக இருப்பதாக பலர் கருதுகின்றனர். 

இதன் அடர்த்தியான மூலிகை வாசனை ஒரு சிலருக்கு பிடிப்பதில்லை 

எல்லோருக்கும் கூந்தல் உதிர்வுகளுக்கு தீர்வாக இது இருப்பதில்லை

இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலம் பற்றிய விமர்சனங்கள்

பயண வலைதள நிறுவனர் ஸ்ருதி ராஜ் குறிப்பிடுகையில் இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலம் அவருக்கு நல்ல பலன்களை கொடுத்திருப்பதாக குறிப்பிடுகிறார். இதில் பக்க விளைவுகள் என்பதுடன் உங்கள் உச்சந்தலைக்கு தேவையான எல்லாம் இதில் அடங்கி இருப்பதாக கூறுகிறார். தலைமுடி கொட்டிய இடங்களில் எல்லாம் வளர்ந்ததாகவும் ஆனால் அதற்காக சில காலம் காத்திருப்பது முக்கியம் என்றும் குறிப்பிடுகிறார். 

கூந்தல் வளர்ச்சி மூன்று விதங்களில் நிர்ணயிக்கப்படுகிறது. பரம்பரை காரணங்கள், மன அழுத்தம் மற்றும் காற்றில் ஏற்படும் மாசு போன்றவைகளால் கூந்தல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்கிறார் ஜே ஃபெர்னாண்டோ. 35 வயதிற்கும் கீழ் உள்ளவர்களுக்கு மேற்கண்ட காரணங்களால் முடி வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்தால் இந்துலேகா இதனை சரி செய்வதாக கூறுகிறார் இவர்.

ஹாடி மெஹ்மூத் என்பவரே மூன்று முதல் நான்கு நாட்கள் பயன்படுத்தி வருவதாகவும் இரண்டு மூன்று நாட்களில் முடி உதிர்வது சரியாகவில்லை என்றும் தலைவலி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கூடவே எந்த பொருளாகவும் ஒருமாதம் உபயோகிக்க வேண்டும். அதன் பின்னர் தான் தெரியவரும் என்கிறார்.                            
வைஷ்ணவி என்பவர் இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலம் சந்தையில் மிகப் பெரிய நிறுவனம். இது போன்ற பெரு நிறுவனங்கள் தங்கள் பொருளை விற்பனை செய்வதற்காக என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். விளம்பரத்திற்காக வழுக்கை தலையில் முடி முளைக்கும் என்பார்கள். அவர்கள் கொடுத்திருக்கும் மூலப்பொருள்களை கொஞ்ச அளவுகள் மட்டுமே பயன்படுத்துவார்கள். எல்லாவற்றையும் தாண்டி திடீரென முடி உதிர்தல் இருந்தால் நீங்கள் ஹோமியோபதி அல்லது ஆயுர்வேத மருத்துவரை சென்று சந்தித்து அதன்பின்னர் முடிவெடுப்பதே நல்லது என்கிறார். 

Youtube

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலத்தை நான் எப்போது உபயோகிக்க வேண்டும்?

பொதுவாக இரவு வேளைகளில் உபயோகப்படுத்தலாம். அல்லது பகல் வேளைகளில் வீட்டில் இருக்கும்போது பயன்படுத்துவது நல்லது. நீண்ட நேரம் மூலிகை எண்ணெய் தலையில் இருப்பது நல்லது. அதற்கேற்றார் போல உங்களுக்கு வசதியான நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.                                        


இந்துலேகா எண்ணெய் தடை செய்யப்பட்டதா ?

தவறான எண்ணங்களை மக்கள் மனதில் விதைக்கும் வண்ணம் இந்துலேகா மற்றும் தாத்ரி போன்ற எண்ணெய் நிறுவனங்கள் செய்த விளம்பரங்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன. எண்ணெய் பயன்படுத்துவதால் என்ன பாதிப்பும் வராது.                    


இந்துலேகா மூலம் மீண்டும் முடி வளருமா ?

பிரிங்கராஜ் எனும் மூலிகை இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலத்தில் இருப்பதால் கொட்டிய இடத்திலேயே மீண்டும் வேகமாக வளர்கிறது. இதனுடன் பயன்படுத்தும் ஷாம்ப்பூ போன்ற பொருள்கள் சரியான பொருத்தமாக இல்லாவிட்டால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்காமல் போகலாம்.                                      


ஒரு வாரத்திற்கு எத்தனை முறை இந்துலேகா பிரிங்கராஜ் எண்ணெய்யை தடவ வேண்டும் ?

அது உங்கள் சருமத்தின் தன்மையை பொறுத்தது. உங்கள் சருமம் உலர்வானது என்றால் வாரத்திற்கு மூன்று முறை நீங்கள் இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலத்தை தடவ வேண்டும். எண்ணெய்ப்பசை சருமம் என்றால் வாரம் ஒருமுறை போதுமானது.                       

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Beauty