Beauty

குளிர்கால வறட்சியை நீக்கி பொலிவான சருமத்தை பெற வெண்ணெய் பயன்படுத்துங்கள்!

Swathi Subramanian  |  Dec 14, 2019
குளிர்கால வறட்சியை நீக்கி பொலிவான சருமத்தை பெற வெண்ணெய் பயன்படுத்துங்கள்!

எல்லோருக்கும் பளபளப்பான சருமம் வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் சருமத்தில் நீரேற்றம் இல்லாத காரணத்தினால் வறண்டு மற்றும் சோர்வாகக் காணப்படும். 

சில நேரங்களில் வறண்ட சருமத்தால் எரிச்சல் ஏற்படும். சரும அரிப்பு, ஒவ்வாமை பிரச்சினைகளும் தலைதூக்கும். சருமம் மிருதுவாகவும், பொலிவு குறையாமலும் காட்சியளிக்க வெண்ணெய்யை பயன்படுத்தி வரலாம். 

வெண்ணெய் (butter) சருமத்திற்கு மிகவும் நல்லது. அதிலும் இதில் செலினியம் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்து இருப்பதால், அது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதனுடன் மேலும் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் சரும பளபளப்பை தக்க வைத்து கொள்ளலாம். 

ரோஸ் வாட்டர் மற்றும் வெண்ணெய்

சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கு ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பசைபோல் நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம். வாரம் இருமுறை இதனை தொடர்ந்து செய்து வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

pixabay

வெண்ணெய் மற்றும் வாழைப்பழம்

வாழைப்பழம் மற்றும் வெண்ணெய் கலந்த கலவை உங்கள் முகத்திற்கு ஒரு இயற்கையான பளபளப்பை தரும். ஒரு வாழைப்பழம், ஒரு தேக்கரண்டியளவு உப்பு இல்லாத வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 10-15 நிமிடங்கள் விட்டு பின்பு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.  இதனை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம், முகம் பளபளப்பாகும். 

மேலும் படிக்க – கண் பார்வையை அதிகரிக்க சில எளிய வழிகள்!

பாதாம் பருப்பு மற்றும் வெண்ணெய் 

சிறிது வெண்ணெய் (butter) , பாதாம் பருப்பு ஒன்று, சிறிது எலுமிச்சை சாறு காலந்து நன்கு அரைக்கவும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடம் ஊற விட வேண்டும். பின்னர் சிறிது காட்டன் பஞ்சை பாலில் நனைத்து அதை முகத்தைச சுற்றி தடவி, பின்னர் பன்னீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இரத்த ஓட்டம் சீராகும்.

pixabay

வெள்ளரிக்காய் மற்றும் வெண்ணெய்

வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து அதனுடன் வெண்ணெய் சேர்த்துக் கலக்கிக் கொள்ளுங்கள். இப்போது கலவையை எடுத்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தினை கழுவுங்கள்.

இந்த முறையை நீங்கள் வாரத்தில் 2 முதல் 3 முறை செய்தால் விரைவில் மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்தினை பெறலாம். வெள்ளரிக்காய் மற்றும் வெண்ணெய் இரண்டும் சேர்ந்த கலவை உங்கள் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் சிவப்பு நிற தோல் அழற்சி போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்க உதவும்.

மேலும் படிக்க – உங்கள் பளபளப்பான முக அழகை சில பருக்கள் வந்து கெடுக்கிறதா ! சிம்பிளாக சரி செய்து விடலாம் !

பால் மற்றும் வெண்ணெய்

பால் மற்றும் வெண்ணெய் இரண்டும் கலந்த கலவை உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி புதுப்பிக்கிறது.  ஒரு தேக்கரண்டியளவு பால், ஒரு தேக்கரண்டி வெண்ணெய் எடுத்து ஒரு சுத்தமான கிண்ணத்தில் கலந்து காட்டன் பஞ்சினை எடுத்து அதில் நனைத்து உங்கள் முகம் மற்றும் கழுத்தில் நன்றாக அப்ளை செய்து 15 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் முகத்தினை கழுவி மாய்ஸ்சரைசரை பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள். இந்த முறையை நீங்கள் வாரத்தில் 3 முதல் 4 முறை செய்யலாம். சருமம் பொலிவாகும். 

வெண்ணெய் மற்றும் தக்காளி 

ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன், 2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு சேர்த்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சருமம் பொலிவுடன் இருப்பதை நீங்கள் கண்கூடாக காணலாம்.

pixabay

 

ஆலிவ் எண்ணெய் மற்றும் வெண்ணெய் 

ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன், 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து பசைபோல் நன்றாக குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரத்திற்கு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சருமம் பிரகாசமாக காட்சியளிப்பதை தவிர்க்க இயலாது.

தேன் மற்றும் வெண்ணெய் 

சிறிதளவு வெண்ணெயுடன் (butter) கொஞ்சம் தேன் கலந்து வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசினால் தோல் சொர சொரப்பு விரைவில் குணமாகும். பனி காலங்களில் காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக சருமம் வறட்சிக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. சில நேரங்களில் சரும அரிப்பு, ஒவ்வாமை பிரச்சினைகளும் வரலாம். இந்த பிரச்சனைகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க வெண்ணெயை பயன்படுகிறது. 

மேலும் படிக்க – குளிர்காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான சூப் வகைகள்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Beauty