Beauty

குளிர் காலங்களில் ​​முடி கொட்டுவதை​ ​​எளிதாகவும் சுலபமாகவும் ​​ கையாள்வது எப்படி?

Nithya Lakshmi  |  Dec 19, 2018
குளிர் காலங்களில் ​​முடி கொட்டுவதை​ ​​எளிதாகவும் சுலபமாகவும் ​​ கையாள்வது எப்படி?

குளிர் காலம் வந்தாலே பலரது மனக்கவலை தலை முடி உதிர்வு பற்றியது தான்.குளிர் காலங்களில் சரும பாதிப்புகள் மட்டுமின்றி , தலை முடி உதிர்வு மிகப்பெரிய பிரச்சினை ஆகும்.அதற்கான காரணங்கள் மற்றும் எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள் மூலம் எவ்வாறு சமாளிப்பது என்பதை பற்றிய தொகுப்பினை இங்கே காணலாம்.

தலை முடி உதிர காரணங்கள் :

பொதுவாக எந்த வகையான கால நிலையிலும் முடி உதிர்வு (hairfall) காணப்படும். அது கோடை காலமாக இருக்கலாம், மழை  காலமாக இருக்கலாம் மற்றும் குளிர் காலத்திலும் இருக்கலாம். ஆனால் மற்ற காலங்களை விட குளிர் காலத்தில் அதற்கான வாய்ப்புகள் அதிகம். முடி உதிர்வதற்கான பொதுவான காரணங்கள்

1. அழுத்தம்

முடி உதிர்வதற்கான முக்கிய காரணம் அழுத்தம் ஆகும். அது கடுமையான வலியினால் கூடிய உடல் அழுத்தம், மன அழுத்தம் மற்றும்  வசப்படுவதால் வரும் அழுத்தம் போன்றவைகளில் ஒன்றாக இருக்கலாம். இது உடலுக்கு எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கி தலை முடி உதிர்வை உண்டாக்குகிறது.

2. தீய பழக்கங்கள்

   முறையற்ற உணவு பழக்கம் , புகை பிடித்தல் மற்றும் ஆல்கஹால் அருந்துதல் போன்றவை முடி உதிர்வை அதிகப்படுத்தும் காரணிகள் ஆகும்.

3.  முறையற்ற தலை முடி பராமரிப்பு

     சரியான முறையில் தலை முடியை பராமரிக்காமல் விடுவது முடி உதிர்வின் முக்கியமான காரணமாகும். அடிக்கடி ட்ரையர் உபயோகிப்பது, சுருள் முடியை நேராக்குதல் , நேர் முடியை சுருள்  செய்யுதல் , கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை அடிக்கடி உபயோகித்தல் மற்றும் ஜெல் பயன்படுத்தல் போன்றவை முடி உதிர காரணங்களாகும்.

4. உலர்வான தலை மற்றும் பொடுகு

   குளிர் காலங்களில் சருமம் மட்டுமின்றி தலையில் உள்ள மயிர்கால்களும் உலர்ந்து விடும். இது காரணமாக முடி உதிர்வு ஏற்படலாம். இது மட்டுமின்றி தலையில் உள்ள பொடுகு முடி உதிர்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. சரியான முறையில் பொடுகை நீக்குதல் அவசியம்.

முடி உதிர்வை தவிர்க்க நாம் நம் வீட்டில் பின்வரும் முறைகளை பின்பற்றினால் எளிதில் சரி செய்ய முடியும். வீட்டில் இருந்த படியே முடி உதிர்வை தடுக்கும் வழிமுறைகளை இங்கே காணலாம்.

எளிய வீட்டு வைத்திய முறைகள் :

1.முட்டை மற்றும் தயிர் 

மூன்று முட்டைகளின் வெள்ளைக்கருவை எடுத்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தயிரை கலந்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். அதனுடன் சீகைக்காய் தூளை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு அதனை நன்றாக தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து அலசவும். இதுபோல் வாரம் ஒருமுறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

2.ஆலிவ் எண்ணை மற்றும் தேன்

ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் அளவு ஆலிவ் எண்ணையையும், இரண்டு ஸ்பூன் தேனையும் கலக்கவும். பின்னர் அதனுடன் இலவங்க பட்டையை பொடி செய்து நன்றாக மிருதுவாக வரும் வரை  கலக்கவும்.  பின்னர் அதனை தலையில் நன்றாக தேய்த்து 20~30 நிமிடங்கள் கழித்து அலசவும்.  முடி கொட்டுவதை முழுவதும் குறைக்க இதனை வாரம் ஒருமுறை பயன்படுத்தவும்.

3.வெங்காயம்

ஒரு வெங்காயத்தை எடுத்து அதனை இரண்டாக நறுக்கவும். பின்னர் ஒரு பாதியை எடுத்து நன்றாக மை போல் அரைத்து அதனுடன் 2 ஸ்பூன் தேனை கலக்கவும். அதன் பின்னர் அதனை தலையில் நன்றாக தடவவும். 15 நிமிடங்கள் களைத்து மிதமான தண்ணீரில் அலசவும். இதனை வாரம் இரு முறை செய்து வர முடி உதிர்வு கட்டுப்படும்.

4.வேப்பிலை

ஒரு பாத்திரத்தில் வேப்பிலையை எடுத்து அதனை பாதியாக வரும் வரை கொதிக்க வைக்கவும். அதன் பின்னர் அந்த தண்ணீரை கொண்டு தலையை அலசவும். இதன் மூலம் தேவையற்ற கிருமிகள் தலையில் இருந்து வெளியேறி முடி உதிர்வு சரியாகும்.

5.கற்றாழை மற்றும் வேப்பிலை

கற்றாழையை எடுத்து அதனுடன் வேப்பிலையை போடி செய்து நன்றாக கலக்கவும். பின்னர் நெல்லிக்காய் எண்ணையை அதனுடன் கலந்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து அலசவும். வரம் இரு முறை செய்து வர முடி பிரகாசமாக இருக்கும்.6. பொடுகு தொல்லையை முற்றிலுமாக ஒழிக்க இஞ்சியை நன்றாக பசை போல் அரைத்து தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து அலசவும். பொடுகு தொல்லை இனி இல்லை !

 

என்ன மக்களே ! இனிமே முடி உதிர்வை பற்றி கவலை வேண்டாம். மேலே சொன்ன குறிப்புகளை பயன்படுத்தி குளிர் காலத்தை வென்றிடுங்கள் !!

 படங்களின் ஆதாரங்கள் – பிக்ஸாபெ, ஜிபி, பேக்செல்ஸ் 

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Beauty