Lifestyle

வாழ்க்கை துணை உங்களிடம் சண்டை போடுவதை நிறுத்தி மகிழ்ச்சியான வாழ்க்கையை எப்படி வாழ்வது?

Meena Madhunivas  |  Dec 9, 2019
வாழ்க்கை துணை உங்களிடம்  சண்டை போடுவதை நிறுத்தி மகிழ்ச்சியான வாழ்க்கையை  எப்படி வாழ்வது?

கணவன் மனைவி என்று வந்துவிட்டாலே, சண்டை இல்லாமல் எப்படி வாழ்வது?சண்டை தான் சிறிது சுவாரசியத்தை உங்களுக்கு அவ்வப்போது தரும்!

எனினும், இந்த சண்டை மிகையாகி விட்டால், வாழ்க்கை கவலைக்கிடம் தான்! இதை தக்க சமயத்தில் தடுத்து நிறுத்தி விட வேண்டும். இல்லையென்றால், எதிர்காலம் கேளிவிக்கிடமாகி விடும்!

உங்கள் கணவனோ அல்லது மனைவியோ உங்களிடம் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருகின்றாரா? இது நிச்சயம் உங்கள் நிம்மதியையும், நம்பிக்கையையும் எடுத்து விடும். ஆனால், இதனை எப்படி நிறுத்துவது, மேலும் மகிழ்ச்சியான வாழ்க்கையை (happy married life) எப்படி வாழ்வது என்று தெரியவில்லையா? அப்படி என்றால், இந்த தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்! தொடர்ந்து படியுங்கள்!

1. கோபம் வந்தால் படுக்கைக்கு சென்று தூங்கி விடுங்கள்

Pexels

இது மிக முக்கியமான ஒன்று. உங்களுக்கோ அல்லது உங்கள் வாழ்க்கை துணைக்கோ கோபம் வந்தால், வேறு எதுவும் பேசாமல், நேராக படுக்கைக்கு சென்று தூங்கி விடுங்கள். சில மணி நேர தூக்கத்திற்கு பிறகு உங்கள் மனம் தெளிவாக இருக்கும். அதற்குள் தானாகவே உங்கள் இருவருக்கும் இந்த சண்டை இப்போது தேவைதானா என்று தோன்றி விடும். அப்படி இல்லையென்றால், ஒரு நல்ல தீர்வு உங்கள் மனதில் உதிக்கும்.

2. சண்டைக்கு ஓய்வு கொடுங்கள்

உங்கள் இருவருக்குள்ளும் சண்டை முத்திக் கொண்டு போனால், சிறிது நேரம் எதுவும் பேசாமல் விட்டு விடுங்கள். இந்த அமைதி உங்கள் மனதை தெளிவு படுத்தி, கோபத்தை குறைத்து பின்னர் ஒரு நல்ல தீர்வை எடுக்க உதவும்.

3. உங்கள் மீது தவறு இருந்தால் ஒப்புக் கொள்ளுங்கள்

Pexels

உங்கள் வாழ்க்கை துணை உங்கள் மீது ஏதாவது ஒரு தவறை கண்டு பிடித்தால், அது அவருக்கு அவநம்பிக்கையையும், அசௌகரியத்தையும் உங்கள் மீது உண்டாக்கினால், நீங்கள் செய்த தவறு உண்மை என்றால், அதனை ஒப்புக் கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால், அவரிடம் உங்கள் மீது தவறு இல்லை என்பதை அவருக்கு பிரியும் படியாக எடுத்துக் கூறுங்கள்.

4. மகிழ்ச்சியான சூழலை உண்டாக்குங்கள்

உங்கள் வாழ்க்கை துணை ஒரு கோபக்காரர் அல்லது எதற்கும் உடனடியாக உணர்ச்சிவசப் படுபவர் என்றால், அவரை அமைதியாகவும், மன நிம்மதியாகவும் வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இதற்கு அவர் மனம் முதலில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதனால் அவருக்கு எப்போதும் ஒரு மகிழ்ச்சியாக சூழலை உங்கள் வீட்டிலும், வாழ்க்கையிலும் உண்டாக்க முயற்சி செய்யுங்கள்.

5. முக்கியமானவற்றிகு மட்டும் முக்கியத்துவம் கொடுங்கள்

Pexels

உங்கள் வாழ்க்கையில் தினமும், ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விடையம் நடந்து கொண்டே இருக்கும். அவை அனைத்திற்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால், அது உங்கள் நிம்மதியை முற்றிலும் எடுத்து விடும். இதனால் உங்கள் இருவருக்கும் தேவையற்ற சண்டைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அதனால், தேவையற்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உண்மையில் முக்கியம் என்று கருதும் விடயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

6. முக்கிய தினங்களை நினைவு வைத்ததுக் கொள்ளுங்கள்

இது மிகவும் முக்கியமான ஒன்று. பொதுவாக பெண்கள் தங்கள் திருமண நாள், கணவனின் பிறந்த நாள், புது வீடு புகுந்த நாள் என்று வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு முக்கியமான நாட்களையும் நினைவில் வைத்துக் கொண்டு அந்த நாளில் ஏதாவது மகிழ்ச்சியாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், ஆண்களோ, அவற்றிற்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காமல், இன்னும் மோசமான சூழலில் தன் மனைவியின் பிறந்த நாள் மற்றும் திருமண நாளையும் மறந்து விட்டு, என்றும் போல கண்டு கொள்ளாமல் இருப்பார்கள். இது நிச்சயம் பெண்களுக்கு அதிக மன உளைச்சலையும், கோபத்தையும் உண்டாக்கி விடும். மேலும் சங்கடமான சூழலும் வீட்டில் ஏற்பட்டு விடும். அதனால், கணவன் மற்றும் மனைவி, இருவரும் தங்கள் வாழ்க்கையில் முக்கியமான நாட்களை நினைவில் வைத்துக் கொண்டு, அந்த நாளில் இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.

7. ஆலோசகரை அணுகுங்கள்

Pexels

முடிந்த வரை உங்கள் பிரச்சனைகளுக்கு உங்களால் சரியான தீர்வை காண முடியவில்லை என்றால், ஒரு நல்ல தேர்ச்சி பெற்ற ஆலோசகரை அணுகி வரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். பின்னர் அதன் படியும் நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இதனால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகி, சண்டைகள் குறையும். 

மேலும் படிக்க – உங்கள் வாழ்க்கை துணையிடம் சொல்லவே கூடாத சில விஷயங்கள் – இதோ!

பட ஆதாரம் – Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

 

Read More From Lifestyle