
இதென்ன கைகுலுக்க எனக்கு தெரியாதா என்று நீங்கள் மட்டுமல்ல நான் கூட நினைத்தேன். ஆனால் அதனைப் பற்றி முழுமையாக அறிந்த உடன் நாம் அறியாதது நிச்சயம் வானளவு என்றே அறிந்தேன்.
Table of Contents
கைகுலுக்கல் (handshake or shake hands) அதுவும் பெண்ணுடன் குலுக்கும் போது ஒரு சில வரைமுறைகள் நீங்கள் கடைபிடித்தாக வேண்டும். உங்களை பற்றி அவர் சரியாக நினைக்க நேர்த்தியான ஒரு கைகுலுக்கலை நீங்கள் செய்தாக வேண்டும்.
கைகுலுக்கலுக்கான சரியான சூழ்நிலைகள்
ஒரு நேர்முக தேர்வு முதல் சாதாரண புதிய நபர் அறிமுகம் வரை இப்போது அனைவரிடமும் கைகுலுக்கல் கலாச்சாரம் வந்து விட்டது. ஒரு திருமண விசேஷமோ அல்லது டீக்கடை ஸ்நேகமோ எல்லா இடங்களிலும் இந்த கைகுலுக்கல் தேவைப்படுகிறது
நேர்த்தியான முறையில் எப்படி கைகுலுக்கலாம்
நீங்கள் சரியான முறையில்தான் கை குலுக்குகிறீர்களா.. சில சமயம் நான் உணர்ந்திருக்கிறேன். நான் லேசாக அழுத்தமில்லாமல் கை குலுக்குவது போல உணர்ந்திருக்கிறேன். இதையே வேறு சிலர் எனக்கு செய்த போதுதான் என் தவறை நான் திருத்திக் கொண்டேன்.
உங்கள் நட்புணர்வையும் திறந்த மனதையும் வெளிக்காட்டும் கண்ணாடியாக கைகுலுக்கல் இருக்கிறது. ஆகவே சரியான முறையில் இதனை நீங்கள் செய்யாது போனால் நல்லதொரு நட்பை நீங்கள் இழக்க நேரிடலாம்.
எப்போது கைகுலுக்கலை ஆரம்பிக்க வேண்டும்
காரணமே இல்லாமல் நாம் எப்படி இன்னொரு நபருடன் கை குலுக்குவோம். ஆகவே அதற்கான சரியான காரணங்கள் இருந்தால் மட்டுமே நீங்கள் கை குலுக்க வேண்டும். உதாரணமாக ஒரு உயர் அதிகாரியுடன் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் முதலில் அவர்தான் கை குலுக்க முன்வர வேண்டும். வருங்கால மாமியார் மாமனாரை சந்திக்க போகிறீர்கள் என்றாலும் இதுவே முறை.
ஒருவேளை நீங்கள் முதலில் கையை நீட்டி விட்டிர்கள் என்றால் பயப்படவோ வருத்தப்படவோ செய்யாமல் தைரியமாக அந்த கைகுலுக்கலை தொடர்ந்து விடுங்கள். நீட்டிய கையை மடக்கினால் அது அவமானமாக கருதப்படலாம்.
கண்கள் தொடர்பில் இருக்க வேண்டும்
ஒருவேளை நீங்கள் அமர்ந்திருக்கும் போது எதிரே இருக்கும் பெண் உங்களுடன் கைகுலுக்க முற்படுகிறார் என்றால் லேசாக எழுந்து உங்கள் கையை கொடுத்து குலுக்குங்கள். அது அவர்களை நீங்கள் மதிப்பதற்கான அடையாளமாக கருதப்படும். அந்த நேரங்களில் வேறெங்கோ பார்த்துக் கொண்டு கை குலுக்காதீர்கள். கை குலுக்குபவர் கண்களோடு தொடர்பில் இருப்பது கம்பீரத்தை காட்டும்.
முன்னும் பின்னும் வாழ்த்துதல்
உங்களிடம் கை குலுக்க ஒரு பெண் தயார் ஆகி அவர் கையை நீட்டியும் விட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் உங்களைப் பற்றியோ அல்லது ஒரு நல்லதாகவோ ஒரு வார்த்தை சொல்ல விரும்பினால் சற்றே உங்கள் கையை மெதுவாக நீட்டி கொடுப்பதற்கு முன்னும் கொடுக்கும்போதும் ஹாய் சௌக்கியமா என்றோ உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றோ கூறுங்கள். அவசர அவசரமாக ஒப்பித்து விடாதீர்கள். அது மற்றொருவரை சங்கடத்தில் ஆழ்த்தும்.
நிதானமான உறுதியான கைகுலுக்கல்
ஒரு லேசான கைகுலுக்கல் உங்களுக்கு எந்த பலனையும் தராது. அதே சமயம் கை தானே குலுக்கிட்டா போச்சு என்று குலுக்கோ குலுக்கு என்று குலுக்கி விடவும் கூடாது. கைகள் நொறுங்கும் அளவிற்கு அழுத்தம் காட்டும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி செய்யாமல் உறுதியாக அதே சமயம் ஸ்திரமாக உங்கள் கை குலுக்கல் இருக்க வேண்டும்.
ஒரு கை குலுக்கலின் நேரம் எவ்வளவு
பொதுவாக ஒரு கைகுலுக்களின் நேரம் என்பது 2 முதல் ஐந்து வினாடி வரைதான் நீள வேண்டும். அடுத்தவர் எவ்வளவு தூரம் நீட்டிக்கிறார் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். முக்கியமாக அவர் உங்கள் உயர் அதிகாரி எனும்போது கவனம் வேண்டும்.
ஐந்து வினாடிகளை தாண்டியும் ஒரு பெண் உங்கள் கையை விடாமல் குலுக்குகிறார் என்றால் நீங்கள் அவர் கண்களை பார்த்து புன்னகைத்த படி நிதானமாக அந்த கைகுலுக்கலில் இருந்து உங்கள் கைகளை விடுவித்துக் கொள்ள வேண்டும். உங்கள் மேன்மை அவரை ஆச்சர்யப்பட வைக்கும்.
இன்னொரு கையை என்ன செய்வீர்கள்
பெரும்பாலான மக்கள் வலது கையை பயன்படுத்தி கைகுலுக்கல் செய்வதால் இடது கையை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதும் இங்கே முக்கியம். அந்த நேரத்தில் உங்கள் இன்னொரு கையை பாக்கெட்டில் வைக்கலாம். அது தவறானது. நீங்கள் ஜாக்ரதையானவர் என அவர்களுக்கு தோன்றலாம். அதே போல இன்னொரு கையை உங்களுக்கு கை குலுக்கும் பெண்ணின் தோளிலோ இடுப்பிலோ வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது யாருக்கும் பிடிக்காது. நெருக்கமானவரை தவிர.
ஒரே மாதிரி மூன்று முறை
ஒரு பெண்ணிடம் கைகுலுக்கும் போதும் சரி ஆணாக இருந்தாலும் சரி மேலும் கீழுமாக மூன்று முறைக்கு மேல் நீங்கள் கை குலுக்கி விடாதீர்கள். இது அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கும்.
மேலும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்
இப்போது மக்கள் சுத்தம் சுகாதாரம் என கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். கைகுலுக்கினால் வைரஸ் பரவலாம் என கருதுகிறார்கள். ஆகவே அவர்கள் கைகுலுக்க தயாராக இல்லை என்றால் நீங்கள் ஒன்று செய்யலாம்.
உங்கள் கையை முஷ்டி போல மடக்கி செல்லமாக அவர்கள் முஷ்டியை லேசாக முட்டுங்கள். அதுவே கைகுலுக்கலுக்கு சமம்தான்!
அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்
கை குலுக்கும்போது எழுந்து நிற்க வேண்டுமா ?
பொதுவாக ஆமாம். அமர்ந்தபடியே கொடுப்பது நமது தலைக்கனத்தை காட்டலாம். எதிராளி அமர்ந்தே இருந்தாலும் அவர் கைகுலுக்கல் செய்ய விரும்பினால் நீங்கள் லேசாக எழுந்து கொடுங்கள்.
ஒரு பெண் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு குலுக்கினால் என்ன அர்த்தம்?
இப்படியாக சில முறை நடக்கலாம். அதனால் தவறில்லை. அந்தப் பெண்ணுக்கு உங்கள் மீது பிரியம் அதிகம். அதனை காட்டவே அப்படி இருக்கிறார்.
யார் அதிக நேரம் நீட்டிக்க வேண்டும்?
உங்கள் உயர் அதிகாரி அல்லது மூத்தவர்கள் என்றால் முதலில் அவர்கள் நீட்டித்தால் மட்டுமே நீங்கள் அதனை அதிகரிக்க முடியும். நேர்முக தேர்விலும் இன்டர்வியூ எடுப்பவர் இதனை நீட்டிக்க விரும்பினால் நீட்டிக்கலாம்.
கை குலுக்காவிட்டால் தவறா?
நிச்சயமாக அதற்கான சரியான காரணத்தை நீங்கள் சொல்லா விட்டால் அது கடுமையான உங்கள் மனநிலை என புரிந்து கொள்ளப்படும். நன்றி நான் கை குலுக்குவதில்லை என்பதை மென்மையாக சொல்லி விடுங்கள்.
ஒவ்வொரு முறை ஒவ்வொருவரையும் சந்திக்கும்போதும் கைகுலுக்குகிறீர்களா?
அது நீங்கள் சந்திக்கும் நபர்களை சார்ந்தது.வழக்கமாக தினம் சந்திக்கும் உடன் பணிபுரியும் பெண் என்றால் இது அவசியமில்லை. அரிதாக அல்லது இடைவெளி விட்டு சந்திப்பவர்களுக்கானது கைகுலுக்கல்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi