DIY Life Hacks

உங்கள் வீட்டில் தினசரி பயன்படுத்தும் தண்ணீரை எப்படி சேமிப்பது?

Meena Madhunivas  |  Aug 5, 2019
உங்கள் வீட்டில் தினசரி பயன்படுத்தும் தண்ணீரை எப்படி சேமிப்பது?

இந்த கோடைகாலத்தின் வறட்சி நிச்சயம் அனைவருக்கும் தண்ணீரின் முக்கியத்துவத்தையும், அதை சேமிக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தி இருக்கும். இந்த அனுபவங்களை மனதில் கொண்டு அனைவரும், இனி வரும் நாட்களிலாவது, ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த வரை தண்ணீரை சேமிக்க முயற்சிக்க வேண்டும். மேலும் கிடைக்கும் தண்ணீரை எப்படி சிக்கனமாகவும், ஒரே நீரை பலமுறை சுழற்சி முறையில் எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றின விழிப்புணர்ச்சியையும் உண்டாக்கிக் கொள்ளவேண்டும்.

நீங்கள் தண்ணீரை (water) சேமிக்க வேண்டும், மேலும் குறைவான பயன்பாட்டில் எப்படி உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இங்கே உங்களுக்காக சில குறிப்புகள்;

Pinterest

தண்ணீர் சேமிப்பதன் முக்கியத்துவம் என்ன?

நீங்கள் ஏன் தண்ணீர் சேமிக்க வேண்டும் என்பதற்கு இனிகே சில முக்கிய காரணங்கள்;

·         மின்சாரம் சேமிப்பு: இன்று அனைவரது வீடுகளிலும், பல வகையான மின் கருவிகள், குறிப்பாக தண்ணீரை சூடு செய்வது, நிலத்தடி நீரை மேலே இருக்கும் தொட்டிக்கு ஏற்றுவது, என்று பல விதங்களில் உள்ளன. அவற்றை தொடர்ந்து அனைவரும் பயன்படுத்துவதால், மின்சாரக் கட்டினம் அதிகமாகஈன்றது. ஆனால், நீங்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் போது இந்த மோட்டார்கள் மற்றும் பிற இயந்திரங்களின் பயன்பாடுகள் குறையும், தண்ணீரும் சேமிக்கப்படும்

·         பணத்தை சேமிக்கலாம்: தண்ணீர் சிக்கனம் ஏற்படும் போது, இயல்பாகவே நீங்கள் பயன்படுத்தும் இயந்திரங்களின் தேவைகளும் குறைகின்றது. இதனால் மின் கட்டனும் குறைகின்றது. மற்றும் தண்ணீர் சிக்கனம் ஏற்படும் போது நீங்கள் தேவையற்ற பல உபகரணங்களை தவறிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனாலும் உங்கள் பணம் சேமிக்கப்படுகின்றது.

எப்படி தண்ணீரை சேமிப்பது – மறுசுழற்சி செய்வது?

தண்ணீரை எளிதாக சேமிக்கவும், மறுசுழற்சி செய்து பயன்படுத்தவும் இங்கே உங்களுக்காக சில எளிமையான முக்கிய குறிப்புகள்;

1.   வாளியில் தண்ணீர் வைத்து குளியுங்கள்: இன்று அனைத்து வீடுகளிலும், ஷவர் என்கின்ற குளியலுக்கு பயன்படுத்தும் உபகரணம் உள்ளது. இது மழை போல நீரை உங்கள் மீது மொட்டினாலும், இதனால் அதிக தண்ணீர் வீணாகின்றது என்பதை பலர் புரிந்து கொள்வதில்லை. ஆனால், நீங்கள் வாளியில் தண்ணீர் வைத்து குளிக்கும் போது, அதிக அளவு நீரை சேமிக்கலாம்.

2.   காய் கனிகளை கழுவிய நீரை மறுசுழற்சி செய்யுங்கள்: தினமும் சமையலுக்குத் தேவையான கைகளை கழுவுவதர்கென்றே ஒரு கணிசமான அளவு நீர் பயன்படுத்தப் படுகின்றது. ஆனால், இந்த நீரை அப்படியே நீங்கள் கீழே விட்டு விடாமல், அரிசி, காய், பழங்கள் போன்றவற்றை கழுவிய நீரை உங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு பயன்படுத்தலாம். இதனால் நீங்கள் செடிகளுக்கு தனியாக தண்ணீர் ஊற்ற வேண்டிய தேவை இருக்காது.

3.   செல்லப்பிராணிகளை அடிக்கடி குளிக்க வைக்காதீர்கள்: உங்கள் வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் இருந்தால், அவற்றை அடிக்கடி குளிக்க வைக்காதீர்கள். போதிய இடைவேளைக்கு ஒரு முறை குளிக்க வைத்தால் போதும். மேலும் அவை விளையாட தண்ணீர் டப்புகளை நிரப்பி வைக்காதீர்கள். இதனால் ஒரு பெரும் அளவு தண்ணீரை நீங்கள் சேமிக்கலாம்.

4.   தேவைப்படாத போது குழாயை மூடி விடவும்: உதாரணத்திற்கு, நீங்கள் பற்கள் விளக்கும் போது, அல்லது சாப்பிட்டு கைகளை கழுவும் போது அல்லது முகம் கழுவும் போது, தொடர்ந்து குழாயை திறந்து வைக்காதீர்கள். இதனால் பெரும் அளவு தண்ணீர் வீணாகும். மாறாக ஒரு செம்பில் தண்ணீர் எடுத்துக் கொண்டு, கைகள் மற்றும் முகம் கழுவுவது மற்றும் பற்கள் விளக்குவது என்று செய்தால், நீங்கள் அதிக அளவு தண்ணீரை சேமிக்க முடியும்.

 

pinterest

5.   குழாய் ஒழுகினால் உடனடியாக சரி செய்யவும்: வீட்டில் இருக்கும் குழாய் மற்றும் அது சம்பந்தமான பைப்புகள் என்று எதிலாவது ஓட்டை இருந்து, தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தால், அதனை உடனடியாக சரி செய்யுங்கள். இது பெரும் அளவு நீரை பாதுகாக்க உதவும்.

6.   வாகனம் கழுவுவது: இன்று பெரும்பாலான வீடுகளில் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் கட்டாயம் இருகின்றது. இதனை சுத்தம் செய்ய பெரும் அளவு தண்ணீர் செலவழிக்கப் படுகின்றது. ஆனால் நீங்கள் சற்று சிந்தித்து, எப்படி சிக்கனமாக உங்கள் வாகனத்தை சுத்தம் செய்யலாம் என்று முயற்சி செய்தால் நிச்சயம் அது எளிதாகும். குறிப்பாக கார் சுத்தம் செய்ய இன்று நவீன திரவம் கிடைகின்றது. வெறும் அரை லிட்டர் தண்ணீரில் சிறிதளவு இந்த சுத்திகரிப்பு திரவத்தை சேர்த்து, ஒரு துணியில் நனைத்து உங்கள் காரை துடைத்தால், அது புத்தம் புதிதாக மாறி விடும். அதனால் இரண்டு – மூன்று வாளிகள் தண்ணீர் செலவாவதை நீங்கள் தவிர்க்கலாம்.

7.   பாத்திரம் கழுவும் இயந்திரத்தை தவிருங்கள்: இன்று பெரும்பாலான வீடுகளில், துணி துவைக்க மற்றும் பாத்திரம் கழுவ இயந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றது. ஆனால் இந்த இயந்திரங்கள் பெரும் அளவு தண்ணீரை எடுத்துக் கொள்கின்றது. அதனால் முடிந்த வரை கைகளில் துணி துவைப்பது மற்றும் பாத்திரங்கள் கழுவுவது என்று செய்தால் அதிக அளவு தண்ணீரை சேமிக்கலாம்.

8.   செடிகளுக்கு மாலை நேரத்தில் தண்ணீர் ஊற்றவும்: பலர் தங்கள் தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு காலையில் தண்ணீர் ஊற்றுவது வழக்கம். ஆனால் அப்படி செய்தால் பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால், தண்ணீர் சீக்கிரம் வற்றி, மாலையில் மீண்டும் செடிகள் புத்துணர்ச்சியோடு இருக்க நீங்கள் தண்ணீர் ஊற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால், அதற்கு மாறாக, மாலை அந்தி சாய்ந்த பிறகு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினால், அது வற்றுவது முற்றிலும் குறைந்து, அடுத்த நாள் பகல் நேரத்திலும் தேவையான தண்ணீர் செடிகளுக்கு இருக்கும். இதனால் நீங்கள் பெரும் அளவு தண்ணீரை சேமிக்கலாம்.

9.   குழாயை மெல்லியதாக திறக்கவும்: முடிந்த வரை குழாயை முழுமையாக திறக்காமல், மெல்லியதாக திறந்தாள், நீங்கள் சிறிதளவு தண்ணீரிலேயே உங்கள் தேவைகளை எளிதாக முடித்து விடலாம். இதனால் பெரும் அளவு தண்ணீர் வீணாவது தவிர்க்கப் படும். 

pinterest

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From DIY Life Hacks