Lifestyle

தூரமாக இருக்கும் உங்கள் காதல் துணையை அருகில் இருப்பதாக உணர வைக்க செய்ய வேண்டியவை!

Swathi Subramanian  |  Jul 29, 2019
தூரமாக இருக்கும் உங்கள் காதல் துணையை அருகில் இருப்பதாக உணர வைக்க செய்ய வேண்டியவை!

அனைவருக்கும் தங்களது காதல் துணை (relationships) அருகிலேயே இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக தூரமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அது வேலை உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட விஷயங்களை பொறுத்து இருக்கலாம். அன்றைய காலங்களில் கடிதம் எழுதி காதலை வளர்த்து வந்த நிலையில் தற்போது தொழிழ்நுட்ப வளர்ச்சி காரணமாக செல்போனில் வளர்த்து வருகின்றனர். உங்களது துணை தூரமாக இருந்தாலும், நீங்கள் அவர் அருகிலேயே இருப்பதாக உணர வைக்க சில ட்ரிக்ஸ்கள் உள்ளன. அவை என்ன என்பதை இங்கு காணலாம்.

மேலும் படிக்க – லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப் நல்லதா? : சட்டவிதிகள், தீர்ப்புகள் குறித்து ஒரு முழு பார்வை!

twitter

வீடியோ கால்

தற்போதைய நவீன உலகத்தில் வீடியோ கால் வசதி சிறந்த அம்சமாகும். நாம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் வீடியோ கால் செய்து பேசுவதால் அருகில் இருப்பதாக உணர முடியும். காலையில் எழுந்தவுடன் அல்லது பணிக்கு செல்லும் முன்னர் ஒருமுறையும், இரவு தூங்கும் முன்னர் உங்க துணைக்கு (relationships)வீடியோ கால் செய்து பேசினாலே போதுமானது. அவர்கள் உங்கள் அருகிலேயே இருப்பதாக தோன்றும் என்பதால் மறக்காமல் செய்து விடுங்கள்.

பரிசு பொருட்கள்

காதலர்களுக்கு இடையே நெருக்கத்தை உண்டாக்குவதில் முக்கிய பங்கினை பரிசு பொருட்கள் செய்கின்றன என கூறலாம். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப துணைக்கு பரிசு பொருட்கள் கொடுப்பது வழக்கம். ஆனால் நாம் கொடுக்கும் பரிசு பொருள் காதலர்/காதலியின் கூடவே இருப்பதாக கொடுத்தால் சிறப்பு. அதாவது காதலிக்கு பரிசு கொடுக்கும் போது மோதிரம் போன்றவற்றையும், காதலனுக்கு என்றால் பைக் சாவி கொத்து, வாட்ச் போற்றவற்றை கொடுக்கலாம். இதனால் உங்கள் துணைக்கு நீங்கள் அவரருகில் இருப்பதான தோற்றம் உருவாகும்.

மேலும் படிக்க – பாய் ஃபிரண்டை அன்போடு அழைக்க உங்களுக்கான சில அழகிய செல்லப் பெயர்கள்!

pixabay

புகைபடங்கள் பகிர்வு

உங்கள் துணையுடன் (relationships) நீங்கள் இருக்கும் போது உங்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. உங்கள் உலகம் அவர்களை சுற்றியே வருவதை போல உணர்வீர்கள். அத்தகைய மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படம் எடுத்து வைத்து கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து இருக்கும் போது அந்த புகைப்படத்தை உங்கள் துணைக்கு அனுப்புங்கள். கடந்த ஞாபகங்களில் அவர் திளைத்திருக்கும் நேரத்தில் தற்போதைய புகைப்படத்தை எடுத்து அனுப்புங்கள். இது அவருடன் இருப்பது போன்ற உணர்வை தரும்.

எதிர்பாராத சந்திப்பு

உங்கள் துணை தூரமாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு தெரியாமலே சர்ப்ரைசாக நீங்கள் அவரை பார்க்க செல்லலாம். எதிர்பாராத நேரத்தில் சென்று அவரை சந்தித்தால் கண்டிப்பாக அவர் உற்சாமகமடைவார். துணையை சந்தித்து அவரை வெளியே அழைத்து செல்லலாம். கடற்கரையில் அமர்ந்து பேசுவது, கேண்டில் லைட் டின்னர் போன்ற சுவாரஸ்யமான விஷயங்கள் செய்வதால் இருவருக்குமான காதல் அதிகமாகும். 

 

pixabay

மெசேஜ்

அன்றைய காலத்தில் மரத்தடியிலும், ஆறு, ஓடை கரைகளிலும் வளர்ந்த காதல் தற்போது கையடக்க செல்போனில் வளர்ந்து வருகிறது. தூரமாக இருக்கும் உங்கள் துணையை அருகில் உணர வைக்க தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மெசேஜ் செய்வது அவசியம். காலையில் எழுந்தவுடன் குட் மார்னிங்கில் தொடங்கி இரவு குட் நைட் சொல்றவரைக்கும் மெசேஜ் செய்ய வேண்டும். ஏதாவது ஒரு பொருளை பார்க்கும் போது உங்கள் துணையின் நியாபகம் அதனை புகைப்படம் எடுத்து அனுப்பி அதுகுறித்த ஞாபகங்களை பேசலாம்.

எதிர்கால திட்டமிடல்

உங்கள் துணையை நீங்கள் பிரிந்து இருக்கும் நேரத்தில் எதிர்கால சந்திப்பு குறித்து அவருடன் திட்டமிடுங்கள். அடுத்து சந்திக்கும் போது எங்கே போகலாம் என்பது குறித்து பேசுங்கள். இதனால் பிரிந்து இருக்கும் நேரத்தில் விரைவில் சந்திக்க போகிறோம் என எண்ணம் உருவாகுவதால் அவர் மகிழ்ச்சியடைவார்.

மேலும் படிக்க – பெண்ணின் உடலில் இத்தனை ஜி ஸ்பாட்களா ! இனி உங்கள் தாம்பத்யம் உச்சத்தில் பறக்கட்டும் !

pixabay

கடிதம்

காதலுக்கு மிக பெரிய பங்கு தூதாக இருக்க கூடிய காதல் கடிதம் தான். என்னதான் தொழிநுட்ப வளர்ச்சியால் நாம் செல்போனில் மணிக்கணக்கில் பேசிக்கொண்டாலும் கடிதத்தில் தனது மனதில் தோன்றுவதை எழுதி அனுப்பலாம். தூரமாக இருக்கும் உங்கள் துணைக்கு உங்களால் எதையுமே கொடுக்க முடியவில்லை என நினைக்காதீர்கள். இவை எல்லாவற்றையும் காட்டிலும் சிறப்பு பரிசாக காதல் கடிதம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு பக்கம் எழுதி திரும்ப படித்து பார்த்தால் உங்களது எண்ணங்கள் உங்களையே வியக்க வைக்கும். முயற்சித்து பாருங்கள்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

 

 

Read More From Lifestyle