Lifestyle

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான எளிய குறிப்புகள்

Mohana Priya  |  Feb 7, 2019
இரவில் தூக்கம் வராமல் தவிப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான எளிய குறிப்புகள்

இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப்(sleep) பெறுவது என்பது மிகவும் முக்கியம் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால் அந்த தூக்கத்தை பலர் இழந்து தவிக்கின்றனர். அதோடு பரிசாக உடல் பருமன், சர்க்கரை நோய், பக்கவாதம், சிறுநீரக நோய்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களையும் பெற்றுள்ளனர்.

இந்த தூக்க பிரச்சனைக்கு நல்ல தீர்வு வழங்கும் விதமாக தமிழ் போல்ட் ஸ்கை சில ஆயுர்வேத நிவாரணங்களைக் கொடுத்துள்ளது. ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த நிவாரணிகள் இரவில் நல்ல தூக்கத்தைப்(sleep) பெற உதவுவதோடு, உடலில் உள்ள வேறு சில பிரச்சனைகளையும் போக்கும்.

சீமைச்சாமந்தி கொண்டு தயாரிக்கப்படும் டீயை இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் குடித்தால், அது உடலை ரிலாக்ஸ் அடையச் செய்து, இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தைப்(sleep) பெற உதவும்.

பச்சை ஏலக்காயை பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் குடித்தால், 15 நிமிடத்தில் ஆழ்ந்த தூக்கத்தைப்(sleep) பெறலாம்.

இந்த பால் மிகவும் சுவையாக இருப்பதோடு, தூக்கமின்மை பிரச்சனைக்கும் நிவாரணம் அளிக்கும். அதற்கு நன்கு காய்ச்சிய பாலில் பட்டைத் தூள் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும்.

இந்த பால் மிகவும் சுவையாக இருப்பதோடு, தூக்கமின்மை பிரச்சனைக்கும் நிவாரணம் அளிக்கும். அதற்கு நன்கு காய்ச்சிய பாலில் பட்டைத் தூள் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும்.

புதினாவை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, தேன் கலந்து இரவில் படுக்கும் முன் குடித்தால், தசைகள் ரிலாக்ஸாகி, நல்ல தூக்கம் கிடைக்கும்.

இரவில் படுக்கும் முன் கடுகு எண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்து வர, உடலில் இரத்த ஓட்டம் மேம்பட்டு, தசைகள் ரிலாக்ஸாகி, நல்ல தூக்கத்தைப்(sleep) பெறலாம்.

தூக்கம் வராமல் அவஸ்தைப்படுபவர்கள், சீரகத்தைப் பொடி செய்து, வாழைப்பழத்தை தொட்டு இரவில் படுக்கும் முன் சாப்பிட, ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

பாட்டி வைத்தியம் இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு என்ன சொல்கிறது தெரியுமா?

40 வயதை கடந்த பலர் இரவில் தூக்கம் வராமல் தவிப்பதை நாம் பார்க்கிறோம். இதற்கு குடும்ப சுமை, நோய் என பல காரணங்கள் உண்டு. ஒரு என சராசரியாக குறைந்தது 8 மணி நேரம் இரவில் தூங்கினால் தான் அவன் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வகையில் இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு எளிதில் தூக்கம் வர சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை இங்கு பார்ப்போம் வாருங்கள்.

குறிப்பு 1 : இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் பாலை நன்கு சுட வைத்து அதில் இரண்டு பல் பூண்டை போட்டு குடித்து வந்தால் இரவில் பூண்டை வரும். அதோடு இதன் மூலம் செரிமான பிரச்சனைகள் தீருவதோடு உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் நீங்கும்.

குறிப்பு 2 : துளசி, வில்வம், மணலிக் கீரை ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு நன்கு காயவைத்து பொடி செய்து இரவு தூங்குவதற்கு ஒரு மணி செய்து முன்பு 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனை தீரும்.

குறிப்பு 3 : தண்ணீரில் ஜீரகம் சேர்த்து கொதிக்கவைத்து, அதோடு சிறிதளவு தேன் கலந்து இரவில் குடித்துவர தூக்கமின்மை பிரச்சனை தீரும்.

குறிப்பு 4 : வெள்ளை மிளகு, ரோஜாப்பூ, சுக்கு ஆகிய மூன்றையும் 50 கிராம் அளவு எடுத்துக்கொண்டு நன்கு அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு, காலை மாலை பொடி இருவேளையும் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனை தீரும்.

குறிப்பு 5 : தூக்கமின்மை பிரச்சனை தீர தயிர் ஒரு நல்ல தீர்வாக உள்ளது. தினமும் மூன்று கப் அளவு தயிரை உட்கொண்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனை தயிரை இதே போல வாழைப்பழமும் தூக்கமின்மை பிரதச்சனையை போக்கும். ஆகையால் இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனை தீரும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Lifestyle