
பெண்கள் அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இன்றைய காலகட்டத்தில் டிரன்டிங்கில் இருப்பது ‘நெய்ல் ஆர்ட்’. பல விதமான நெய்ல்ஆர்ட்கள் உள்ளன. நெய்ல்ஆர்ட் செய்ய முதல்ல தகுந்த நகம் வேண்டும். பல பேர் நெய்ல்ஆரட் செய்து கொள்ள தங்கள் நகங்களுக்கு பதிலாக ஆர்டிபிஷியல் நகம் பயன்படுத்துகிறார்கள் ஏன்னென்றால் அவர்கள் நகங்களை சரியாக பாதுகாத்திருக்க மாட்டார்கள். இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். நாங்கள் உங்களுக்கு ஆரோக்கியமான நகங்களை பெற வழிகாட்ட உள்ளோம். இதை பின்பற்றினால் நீங்கள் உங்கள் நகத்திலேயே ஒரு அற்புதமான கலர் அடிக்கலாம் அல்லது நைல் ஆர்ட் செய்து கொள்ளலாம் !
நகங்களின் வளர்ச்சி:
நகங்கள் நம்ம உடம்பில் உள்ள கெரட்டீன் என்ற புரோட்டின் வகையால் உருவாகிறது. இந்த கெரட்டீன் நகங்களுக்கு மட்டுமில்லை தலைமுடிக்கும் உண்டு. சராசரியாக மனிதனின் விரல் நகம் மாதத்திற்கு, ஒரு இன்ச்சில் ஒரு பங்கு மட்டுமே வளரும்,சிலருக்கு வளர்ச்சி குறைந்து இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் கற்ப காலத்தில் நகரங்களின் வளர்ச்சி வேகமா இருக்கும். விரல் நகம் எப்படி வளர்ந்தாலும் பராமரிப்பு (care) என்பது மிக அவசியமான ஒன்று. நகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பதை பார்க்கலாம்.
பலமான நகங்களை பெற:
என்னதான் மெனிக்கியூர், பெடிக்கியூர் என நகங்களுக்கு ஸ்பெஷல் அக்கறை எடுத்தாலும் ஏதாவது ஒரு வகையில் பல நாட்கள் பாதுகாப்பாக வைத்திருந்த நகம் படக்கென உடைந்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கிடும். இதற்கு காரணம் நம் உடலில் சரியான ஊட்டச்சத்து இல்லாதது தான். அதற்கு –
*கால்ஷியமும் புரோட்டீனும் அதிகமுள்ள உணவு வகைகளை(food) உட்கொள்ளவது நகங்களுக்கு சிறந்தது.இந்த சத்துக்கள் கிடைப்பதற்கு முட்டையை தினமும் உணவில் எடுத்து கொள்ளுங்கள்.
*அயன்/ஜிங்க் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும் அதாவது பேரிச்சம்பழம் கலந்த பால் சாப்பிட்டு வந்தால் உடைந்த நகம் கூட நன்கு வளரும்.
*ஒமேகா 3 சத்துக்கள் நகம் வலுப்பெற மிகவும் உதவியாக இருக்கும். அதற்கு கடல் மீன்கள் வாரம் ஒரு முறை எடுத்துக்கொள்ளுங்கள்
*கால்சியம் சத்துக்கள் முழுமையாக பெற தினமும் காலையிலும் மாலையிலும் பாலை பருகுங்கள்.
*விட்டமின்ஸ் போன்ற சத்துகள் நகம் வலுவுக்கு மிக அவசியம். கீரை, காய்கறிகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
* விட்டமின் ஏ மற்றும் பயோட்டீன்(விட்டமின் பி) நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளவது நகங்களுக்கு பலத்தை பெருக்கும்.கேரட், பீட்ரூட் போன்ற காய்கறி சேர்த்து கொள்ளுங்கள்.
*பெர்ரி குடும்பத்தை சேர்த்த ஸ்டராபெர்ரி,ப்ளூ பெர்ரி, திராட்சை போன்ற பழங்களை சேர்த்து கொள்ளுங்கள்.
*சியா விதைகள், சம்சா விதைகளை சேர்த்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான நகங்கள் கிடைக்கும் இவை துணை புரியும்.
மேலும் படிக்க : உங்கள் கிட்சேனில்(kitchen) சுலபமாக கிடைக்கும் இயற்கை வைத்தியங்கள்
நகங்களை பாதுகாக்க மற்றும் பராமரிக்க:
- மிகவும் ஸ்ட்ராங்கான சோப்புகள் அல்லது சோப்புத் தூள்களை அடிக்கடி கைகளில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- வெது வெதுப்பாக ஆலிவ் ஆயிலை சூடாக்கி நகங்களில் வாரம் ஒரு முறை மசாஜ் செய்து வந்தால் நகங்களை உடையாமல் பாதுகாக்கலாம்.
- பாதாம் எண்ணெய்யை இரண்டு சொட்டு நகத்தில் தேய்த்து வந்தால் இயற்கை முறையில் ஆரோக்கியமான பலப்பலப்பான நகம் வளரும்.
- கைகள் ஈரமாக இருக்கும் போது நகங்களை ஷேப் செய்வதை தவிர்த்து கொள்ளுங்கள்.
- தரமான நெய்ல் பாலிஷ்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
- நெய்ல் பாலிஷ் ரிமுவரை அடிக்கடி பயன்படுத்துவது நகரங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
- நெய்ல் பாலிஷ் ரிமுவர் உடன் சிறிது கிளிசரின் சேர்த்து உபயோக்கிப்பது நல்லது.
- நகங்களை சுற்றி உள்ள சதைகள் அடிக்கடி கிழிவது போல் காணப்பட்டால் உங்கள் உடலில் நீர் சத்து குறைந்து வருகிறது என்று புரிந்து கொள்ளுங்கள். உடலின் தேவைக்கேற்ற தண்ணீரை பருகுங்கள்.
- நகங்களை வெட்டும் முன் தேங்காய் எண்ணெயை அல்லது வீட்டில் இருக்கும் ஏதேனும் ஒரு எண்ணெயை தடவி சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால் அழகாக விரும்பும் வடிவத்தில் வெட்டலாம்.
- நகத்தை பற்களால் கடிக்கக் கூடாது. நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகமாக உள்ளது. சில சமயங்களில் ரத்தம் வரும் நிலை ஏற்படும்.
- நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து, அதிக வலியை ஏற்படுத்தும்.
- மாதம் ஒரு முறையாவது கை கால்களில் மருதாணி இட்டுக் கொள்வது நகங்களுக்கு நல்லது.
மேலும் படிக்க : உங்கள் உலர்ந்த கைகளை கையாள சில எளிமையான வழிகள்
கால் நகங்கள்:
* வேப்ப எண்ணெய்யை கால் விரல் நகங்களுக்கு இடையே தொடர்ந்து தடவி வந்தால் நகத்தில் ஏற்படும் சொத்தை குணமடையும்.
*தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி ஒரு டப்பில் ஊற்றி சிறிது கல் உப்பு, மஞ்சள் வேப்பிலை அல்லது வேப்ப எண்ணெய் கலந்து அதில் கால்களை சிறிது நேரம் வைத்திருந்தால் கால் நகங்கள் (nails) சுத்தமாகும் வெடிப்பு நீங்கும் கால் விரல்கள் புத்துணர்ச்சி பெறும்.
இது எல்லாமே அனுபவத்தில் சொன்னது! நீங்களும் செய்து நகங்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
கைகளின் கீரிடமான நகத்தை அக்கறையோடு பார்த்து கொள்ளுங்கள்.
படங்களின் ஆதாரங்கள் – ஜிபி,பேக்செல்ஸ்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.