Beauty

குளிர்கால தலைமுடி பராமரிப்பு டிப்ஸ் மற்றும் மூலிகை எண்ணெய் தயாரிக்கும் விதம்!

Swathi Subramanian  |  Jul 16, 2019
குளிர்கால தலைமுடி பராமரிப்பு டிப்ஸ் மற்றும் மூலிகை எண்ணெய் தயாரிக்கும் விதம்!

குளிர்காலம் என்றாலே குளிர்ந்த காற்றும் மிதமான பனிபொழிவும் நிலவும். இந்த காலங்களில் நமது உடல்நல மற்றும் சரும பராமரிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். குளிர்காலங்களில் வீசும் குளிர்ந்த காற்று ரசிக்கும் வகையில் இருந்தாலும், அது உங்கள் தலைமுடியை பாதிக்கக்கூடும் என்பதால் கூந்தல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குளிர்காலத்தில் தட்பவெட்ப நிலைகளில் வேறுபாடு ஏற்படுவது தலை முடி வறண்டு போவதற்கான காரணமாகும். உங்கள் தலைமுடிக்கான(hair)குளிர்கால பராமரிப்பு டிப்ஸ் இதோ உங்களுக்காக. இதனை பின்பற்றினால் அழகான தலைமுடியை(hair) எளிதாக பெறலாம்.

மினுமினுக்கும் முகப்பொலிவிற்கு எது அவசியம்? டோனரா சீரமா ஆம்பியூலா!அறிந்து பயன்படுத்துங்கள்

pixabay

pixabay

முகத்தின் சுருக்கத்தை விரட்டும் முல்தானி மெட்டி!.. எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?

pixabay

மூலிகை எண்ணெய் தயாரிப்பு

1. தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய் – 100 கிராம்
கீழாநெல்லி இலை – 100 கிராம்
கறிவேப்பிலை – 100 கிராம்
செம்பருத்தி பூ – 100 கிராம்
வெந்தயம் – 25 கிராம்
கரிசலாங்கண்ணி இலை – 50 கிராம்
தேங்காய் எண்ணெய் – 2 லிட்டர்

செய்முறை :

அனைத்து பொருட்களையும் வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் சுத்தமான வாணலியை வைத்து, மூலிகை மற்றும் தேங்காய் எண்ணெயை ஊற்றி கொதிக்கவிடவும். மூலிகையின் தன்மை எண்ணெயில் இறங்கி நிறம் மாறத்தொடங்கிய உடன், அடுப்பை அணைத்து எண்ணெயை ஆறவிடவும். மூன்று நாள்கள் கழித்து எண்ணெய்யை வடிகட்டி, ஒரு பாட்டிலில் ஊற்றிவைத்துப் பயன்படுத்தவும்.

 

pixabay

2. தேவையான பொருட்கள் :

தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர், 
மருதாணி – 10 கிராம்,
செம்பருத்தி – 10 கிராம்,
கறிவேப்பிலை – 10 கிராம்,
ஆவாரம் பூ – 10 கிராம்,
கரிசலாங்கண்ணி – 10 கிராம்,
வெட்டிவேர் – 5 கிராம்,
சோற்றுக் கற்றாழை – 50 கிராம்.

செய்முறை :

மருதாணி, செம்பருத்தி, கறிவேப்பிலை, ஆவாரம் பூ, கரிசலாங்கண்ணி, சோற்றுக் கற்றாழை இவற்றை ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு கடாயில் 1 லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றிஎண்ணெய் சிறிது சூடேறியதும் அரைத்து வைத்த மூலிகைகளை போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு வெட்டிவேர் சேர்த்து எண்ணெய் பொன்னிறமாக மாறும்வரை கொதிக்க வைத்து இறக்கி ஆறவைத்து பிறகு வடிகட்டி 2 நட்களுக்கு பிறகு பயன்படுத்தவும். இந்த எண்ணெயை வாரம் 3 நாள்கள் பயன்படுத்தி வர கூந்தல் வறட்சி இன்றி செழித்து வளரும்.

வரண்ட சருமத்தை பளபளப்பாக்கும் பாதாம் எண்ணெய் மற்றும் பேஷ் பேக்குகள்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

 

Read More From Beauty