Beauty

கெட் தி லுக் : பார்ட்டி சீசன்களில் பிரகாசமான தோற்றத்தை எவ்வாறு அடையலாம்?

Nithya Lakshmi  |  Jul 15, 2019
கெட் தி லுக் : பார்ட்டி சீசன்களில் பிரகாசமான தோற்றத்தை எவ்வாறு அடையலாம்?

பார்ட்டிகளுக்கு நீங்கள் அடிக்கடி செல்வது உண்டா? பிறந்தநாள்  பார்ட்டி(party) , திருமணம், ஆபீஸ் பார்ட்டி, நண்பர்களுடன் அல்லது உங்கள் கிளப் பார்ட்டி என்று இப்போதெல்லாம் அடிக்கடி பல்வேறு பார்ட்டிகள் மற்றும் அழைப்புகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. அடுத்தடுத்து வரும் பார்ட்டிகளில் உங்கள் தோற்றத்தில் எந்தவித மாற்றமுமில்லாமல், சோர்வும் தெரியாமல் திகைப்பூட்டும் தோற்றத்தை (glow) பெற, மேலும் இதுபோல் நிகழும் நாட்களில்  உங்கள் சருமத்தை பராமரிக்க நாங்கள் உங்களுக்கு சில உத்திகளை இங்கு அளிக்கிறோம். 

ஜொலித்திடும் சருமத்தை பெற சில எளிய வழிகள்

விடிந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை உங்கள் சருமத்திற்கு தேவையான அனைத்தும் இங்கு உள்ளது.

1. உங்கள் நாளை புத்துணர்ச்சியுடன் ஆரம்பிக்க

தினமும் காலையில் எழுந்தவுடன் உங்கள் முகத்தில் இருக்கும் அசுத்தங்களை அகற்றுவது அவசியம். அதை எளிதில் செய்யக்கூடிய ஒரு ஃபேஸ் வாஷ் தேவை. இதற்கு நாங்கள் பரிந்துரைப்பது பாடி ஷாப் வழங்கும் டி ட்ரீ பேஸ் வாஷ். இது உங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற எண்ணையை அகற்றி உங்கள் சருமத்தை வறண்டு போகாமல் பாதுகாத்து ஒரு தெளிவான சருமத்தை விரைவில் அளிக்கும். இதை நீங்கள் தினமும் இரண்டு முறை பயன்படுத்தலாம்.

பலன் :  பருக்களை விரைவில் அகற்றிவிடும் , காம்பினேஷன் தோலுக்கு (skin) ஏற்றது

குறைபாடு :  விலை சிறிது அதிகமாக இருக்கலாம்  

2. உடனடி பொலிவிற்கு பேஸ் மாஸ்க்

உங்கள் முகத்தை உடனடியாக பிரகாசிக்க வைக்க பேஸ் மாஸ்க் பயன்படுத்துங்கள். அரிசியின் நற்குணங்கள் கொண்ட இந்த ஃபேஸ் மாஸ்க் உங்கள் முகத்தில் இருக்கும் சோர்வான தோற்றத்தை எளிதில் அகற்றி நொடிகளில் உங்கள் சருமத்தை ஒளிரச் செய்கிறது. உங்கள் சரும பராமரிப்பிற்கு நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்றால் இது போல் ஒரு பேஸ்மாஸ்க் உங்களுக்கு நிச்சயம் தேவை.இதை தேவைக்கேற்ப வாரத்தில் ஓரிரு முறை பயன்படுத்தலாம்.

 பலன் :  விலை குறைவு, எளிதாக பயன்படுத்தலாம், 10 – 20 நிமிடங்களில் தீர்வுகாணலாம் 

குறைபாடு :  அதிக நேரம் முகத்தில் இருந்தால் சருமம் மேலும் வறண்டு போகலாம்

3. பொலிவூட்டும் டே கிறீம்

நாள் முழுவதும் பிரகாசமாகத் தோன்ற (look) யாருக்குத்தான் விருப்பம் இல்லை? நீங்கள் பவுண்டேஷன், பிபி கிரீம், பிரைமர் என்று எதையும் உபயோகிக்க விரும்பவில்லை என்றால்  இந்த லாக்மி அபிசொல்யுட் டே கிரீமை பயன்படுத்தலாம் .இதில் இருக்கும் பொருட்கள் உங்கள் முகத்திற்கு தேவையான புத்துணர்ச்சியை உடனடியாக அளித்து மேலும் இது நாள் முழுவதும் நீடித்து பயனளிக்கிறது.

 பலன் : விலை குறைவு, எளிதில் பயன்படுத்தலாம்

 குறைபாடு :  வறண்ட சருமத்திற்கு ஏற்றதல்ல

4. கவர்ச்சியான உதடுகளுக்கு

 நீங்கள் ஒப்பனையில் அதிகம் ஈடுபாடு இல்லாதவர்களாக இருந்தால் இது போல் வெறும் டே  கிரீமை உபயோகித்து விட்டு ஏதேனும் ஒரு பளிச்சிடும் உதட்டுச் சாயத்தைப் பூசிக்கொண்டு பார்ட்டிகளுக்கு செல்லலாம்.மேலும் உங்கள் உதட்டை பராமரிக்க மேபிளீன் வழங்கும் பேபி லிப்ஸ் கலர் பாம்மை  பயன்படுத்தலாம். இது உங்கள் உதடுகளை மென்மையாக்கி நீண்ட நேரத்திற்கு தேவையான ஈரப்பதத்தை லாக் செய்து உங்கள் உதடுகளை பாதுகாக்கிறது.

பலன் : லிப்ஸ்டிக்குகளை  போல் இதிலும் பல வண்ணங்கள் உள்ளது, எளிதில் பயன்படுத்தலாம் ,பயணத்திற்கு ஏற்றது

குறைபாடு:  இதன் அடர்த்தியான மெழுகு போன்ற அம்சம், பிசுபிசுப்பு தன்மை.

 

பட்டுப்போன்ற மென்மையான உதடுகளுக்கு : வீட்டிலேயே லிப் ஆயிலை தயார் செய்வது எப்படி?

5. ஒளிரும் கண்களுக்கு

பார்ட்டி சீசன்களில் இரவு முழுவதும் கொண்டாட்டத்தில் இருப்பதால் அல்லது காலதாமதமாக உறங்கும்போது மறுநாள் உங்கள் கண்கள் உங்கள் சோர்வை மிகத்தெளிவாக காட்டிவிடும். அதை சரி செய்ய அதற்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து கருவளையங்களை நீக்கி மேலும் சுருக்கங்கள் மற்றும் வீக்கங்களை மிக எளிதில் அகற்றுகிறது இந்த ஒளே அல்டிமேட் ஐ -கிரீம். தினம் இதை படுக்கும் முன் உங்கள் கண்களில் பூசிக்கொண்டாள் சோர்வான கண்களில் இருந்து எளிதில் விடை பெறலாம்.

பலன் : தேவையான தீர்வை விரைவில் காணலாம் 

குறைபாடு : விலை சிறிது உயர்வு, பாரபீந் உள்ளது 

6. இரவில் பராமரிப்பிற்கு கிளென்சர்

நீங்கள் உங்கள் முகத்தில் ஒப்பனை செய்து கொள்ளாவிட்டாலும் நாள் முழுவதும் உங்கள் சருமத்தில் ஏற்படும் அசுத்தங்கள் மற்றும் எண்ணெய் தன்மையை அகற்றும்  ஒரு கிளின்சர் அவசியம். இந்த லாஃமே டீப் கிளன்சர் மில்க்கை ஒரு பஞ்சில் சிறிதளவு எடுத்துக்கொண்டு உங்கள் முகத்தில் மெதுவாக துடைத்து எடுக்கவும். இதில் உள்ள பால், அவகேடோ மற்றும் விட்டமின் ஈ நற்குணங்கள் உங்கள் சருமத்திற்கு தேவையான பொலிவைக் கூட்டி கொடுத்து அதை சுத்தமாகவும் மென்மையாகவும் நீண்ட நேரத்திற்கு வைக்க உதவுகிறது. 

பலன்: 10- 12  மணி நேரத்திற்கு உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை இது அளிக்கிறது, தினமும் உபயோகிக்கலாம் விலை குறைவு . 

குறைபாடு : உணர்திறன் கொண்ட சருமத்திற்கு ஏற்றதல்ல. சோதித்து பயன் படுத்தவும்

மேல் கூறியிருக்கும் பொருட்களை பயன்படுத்துவதோடு அதிகம் தண்ணீர் பருகுவதும் உங்கள் உணவில் அதிக பட்சமாக பழங்களை சேர்ப்பதும் அவசியம். இதுவே உங்கள் சருமத்திற்கு தேவையான பொலிவை (பிரகாசம்) இயற்கையாகவே அளிக்க உள்ளது. 

இப்போது நீங்களும் பார்ட்டிகளுக்கு எளிதில் தயார் ஆகலாம்!

பட ஆதாரம் –  இன்ஸ்டாகிராம் 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Beauty