Beauty

பளபளப்பான மென்மையான உதடுகளை அளிக்கும் லிப் கிளாஸ்களை வீட்டில் தயாரிப்பது எப்படி?

Nithya Lakshmi  |  Nov 13, 2019
பளபளப்பான மென்மையான உதடுகளை அளிக்கும்  லிப் கிளாஸ்களை வீட்டில் தயாரிப்பது எப்படி?

எல்லாவற்றிலும் ஆர்கானிக் பொருட்களைத் தேடிச் செல்ல ஆரம்பித்து விட்டோம். மேக்கப் பொருட்களையும் இயற்கையாக, வீட்டிலே செய்ய முடிந்தால், அதுவும் பல்வேறு வகைகளில் செய்யலாம் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? லிப்ஸ்டிக் பல நிறங்களில் கிடைக்கக்கூடிய, உதடுகளின்மீது பயன்படுத்தும் செயற்கையான, ரசாயனம் கலந்த பொருள்.
லிப் க்ளாஸ் என்பது உதடுகளுக்கு மினுமினுப்பைத் தரக்கூடியது. அடர்ந்த நிறங்கள் இல்லாமல், பளபளப்பை மட்டும் வெளிப்படுத்தும். இதிலும் ரசாயனம் கலந்துதான் கிடைக்கிறது.

இப்பொது நாம் குளிர்காலத்தில் இருப்பதால், உதடுகளுக்கு லிப்ஸ்டிக் அளிக்கும் பளபளப்புடன் கூடிய வண்ணத்தை விட, நம் உதடுகளுக்கு அதிக ஈரப்பதம் தேவை! இத்துடன் ஒரு இலகுவான நிறம் இருந்தால் , குளிர்காலங்களில் லிப்ஸ்டிக் அவசியம் இல்ல! இவை அனைத்தையும் ஒரு லிப் க்ளாஸ்சில் பெறலாம். அதுவும் இயற்கையான பொருட்களைக் கொண்டு இருந்தால்? லிப் க்ளாஸ் வகைகளை வீட்டிலேயே எளிதில் இயற்கை பொருட்களுடன் (natural) எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்!

1. சாக்லேட் லிப் கிளாஸ்

Shutterstock

வாவ்! சாக்லேட் சுவையில் லிப் கிளாஸ்சா?! ஆம்! கொஞ்சம் பொருட்களை மட்டும் வைத்து வீட்டிலேயே செய்யலாம். 

தேவையான பொருட்கள் :

1 தேக்கரண்டி ஆர்கானிக் தேங்காய் எண்ணெய்
1 தேக்கரண்டி தேன்கூட்டு மெழுகு
1 தேக்கரண்டி ஆர்கானிக் கொக்கோ வெண்ணை
½ தேக்கரண்டி ஆர்கானிக் நான்-பெர்மென்ட்(non-fermented) கொக்கோ பவுடர்
10 துளிகள் பெப்பர்மின்ட் அல்லது ஸ்வீட் ஆரஞ்சு எண்ணெய்
3 துளிகள் வைட்டமின் ஈ எண்ணெய்

செய்முறை :

  1. ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மிதமான சூடு வருமாறு அடுப்பில் வைக்கவும்.
  2. அதன்மீது மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், தேன்கூட்டு மெழுகு, கொக்கோ வெண்ணை ஆகியவற்றை சேர்த்து வைக்கவும்.
  3. உருகியதும், அதோடு கொக்கோ பவுடர் சேர்த்து அடுப்பில் இருந்தவாறு கலக்குங்கள்.
  4. கட்டியில்லாமல் கலங்கியதும் அடுப்பை அனைத்து விடுங்கள்.
  5. கொஞ்ச நேரம் சூடு தனிய விட்டு, அதில் வைட்டமின் ஈ மற்றும் அத்தியாவசிய எண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள். 
  6. ஒரு பாட்டிலில் ஊற்றி ஆற விடுங்கள். பிறகு மூடி போட்டு மூடி வைத்து தேவைப்படும்போது பயன்படுத்துங்கள்.

2. வெண்ணிலா லிப் கிளாஸ்

Shutterstock

நிறம் இல்லாமல் வெண்ணிலா வாசனையுடன் ஒரு லிப் க்ளாஸ் (lip gloss) செய்வது  எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ஷியா வெண்ணை     – 3 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய்     – 2 தேக்கரண்டி
துருவிய தேன்கூட்டு மெழுகு – 2 தேக்கரண்டி
வெண்ணிலா எண்ணெய்     – 2 சொட்டு

செய்முறை:

  1. ஷியா வெண்ணை, தேங்காய் எண்ணெய், துருவிய தேன்கூட்டு மெழுகு ஆகிய மூன்றையும் சேர்த்து ஒரு கிண்ணத்தில் வைத்து, தண்ணீர் கொதிக்கும் தண்ணீர்மீது வைத்து உருக விடுங்கள். 
  2. அல்லது மைக்ரோவேவ் ஓவென்னிலும் வைத்து உருகிக்கொள்ளலாம்.
  3. இவற்றை நன்றாக கலந்துகொண்டு உங்களுக்கு தேவையான வாசனைக்கு ஏற்றவாறு வெண்ணிலா எண்ணெயைப் இதோடு சேர்த்து கலக்குங்கள்
  4. ஒரு சுத்தமான பாட்டிலில் ஊற்றுங்கள். சிறிது நேரத்தில் திடமாகிவிடும்.  இப்போது உங்கள் உதடுகளின் மீது பயன்படுத்தலாம். லிப்ஸ்டிக் போட்ட பிறகும் அதன்மீது பயன்படுத்தலாம். அல்லது வெறும் க்ளாஸ் மட்டும் பயன்படுத்தலாம்.
  5. தேங்காய் எண்ணெய் மாய்சரைசர் போல வேலை செய்யும். ஷியா வெண்ணை உதட்டுக்கு ஊட்டச்சத்தை கொடுக்கும். மெழுகு குணப்படுத்தும் தன்மை கொண்டது. 

3. பெப்பர்மின்ட் லிப் கிளாஸ்

Shutterstock

குளிர்காலத்தில் உதடுகள் வெடிப்புற்று காணப்படும். அதற்கு ஏற்றவாறு ஒரு அருமையான கூல் லிப் க்ளாஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

8 துளிகள் பெப்பர்மின்ட் எண்ணெய்
2 தேக்கரண்டி பாதாம் எண்ணெய்
1 தேக்கரண்டி தேன்கூட்டு மெழுகு (bees wax)

செய்முறை:

  1. ஒரு கண்ணாடி பாட்டிலில் தேன்கூட்டு மெழுகு (ஆர்கானிக் கடைகளில் எளிதில் கிடைக்கும்) மற்றும் பாதாம் எண்ணெய்யைப் போட்டுக்கொள்ளுங்கள்.
  2. மற்றொரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடாக்குங்கள்.
  3. பாட்டிலை தண்ணீர் மீது வைத்து உருகும்வரை சூடாக்குங்கள்.
  4. நன்றாக கலக்கி, சிறிது ஆறியதும் பெப்பர்மின்ட் எண்ணெய் கலந்துகொள்ளுங்கள். இது சற்று எரிச்சல் கொடுக்கும், அதனால் கொஞ்சம் குறைவாகவே கலந்து கொள்ளுங்கள்.
  5. உங்களுக்கு அழகான நிறத்தில் இந்த க்ளாஸ் வேண்டுமெனில், உங்களுக்கு விருப்பமான நிறமுடைய லிப்ஸ்டிக் கொஞ்சம் இதில் கலந்து கொள்ளலாம். 
  6. அடிப்படையில்  தேன்கூட்டு மெழுகை வைத்து, அதோடு நீங்கள் விரும்பும் நறுமணத்தில் பல வகைகளில் லிப் க்ளாஸ் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். அப்படி பயன்படுத்தும் பொருள்களின் தன்மையை அறிந்து, அது உங்களுக்கு ஏற்றதா என்று சோதித்து பின் தயார் செய்யுங்கள்.

 

மேலும் படிக்க – லிக்விட் லிப்ஸ்டிக்ஸை பற்றி நீங்கள் அறியாத 10 விஷயங்கள்

மேலும் படிக்க – மேக்கப் பொருட்களை பாதுகாக்க சில சிறந்த வழிகள்!

பட ஆதாரம்  – shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Beauty