Lifestyle

மாமியார் மருமகள் பிரச்சணைகளை எப்படி சமாளிப்பது!

Mohana Priya  |  Mar 22, 2019
மாமியார் மருமகள் பிரச்சணைகளை எப்படி சமாளிப்பது!

பையனுக்கு திருமணம் முடித்ததும் இந்த மாமியார் மருமகள் பிரச்சணைகள்(fights) ஆரம்பித்துவிடுகின்றன. எந்த ஒரு வீட்டிலும் மாமியார் மருமள்கள் சண்டை இன்றி சந்தோஷமாக இருந்ததற்காக சரித்திர புராணங்கள் கிடையாது. மாறாக மருமகள் என்ன தவறு செய்வாள் அதை எப்படி பெரிது படுத்தலாம் என கண்ணில் விளக்கு எண்ணெய் ஊற்றி பார்த்துக் கொண்டிருப்பார்கள் மாமியார்கள். அதோ போன்று மாமியார் பற்றி இன்று என்ன குறையெல்லாம் கணவர் வந்ததும் சொல்லலாம் என் மருமகள் கணக்கு போட்டு வைத்துக்கொண்டிருப்பார்கள். இது எப்பவுமே பிரச்சணைக்குரிய தளங்கள் தான்.

பிரச்சனைக்குரிய தளங்கள்
பொதுவாக முதன்முதலில் மாமியார் மருமகள் பிரச்சனை(fights) தொடங்குவது தேனிலவிற்கு பிறகான காலகட்டத்தில். குறிப்பாக இந்த நேரம் பிரச்சனை(fights) தொடங்குகிறது என்று வரையறுக்க முடிவதில்லை என்றாலும் திருமணம் செய்த முதல் சில ஆண்டுகளில் பிரச்சனை தலை தூக்குகிறது. புதிய அனுபவம், புதிய சமையல், புதிய வாழ்க்கை முறை என்று இந்த விஷயங்களில் பிரச்சனை வேரூன்ற ஆரம்பிக்கிறது. பிரச்சனை(fights) உண்டாக மற்றொரு முக்கிய காரணாம், வீட்டு நிர்வாகம் குறித்த கட்டுப்பாடு மற்றும் பங்களிப்பு குறித்ததாக உள்ளது. ஒருவேளை மாமியார் மருமகள் ஆகிய இருவரும் வேலைக்கு சென்று சம்பாத்திப்பவர்கள் என்றால் வீட்டு நிர்வாகத்தில் இருவரின் எதிர்பார்ப்பும் மிக அதிகமாக இருக்கும். மேலே கூறிய எல்லா பிரச்சனைகளையும்(fights) பொறுத்துக் கொண்டு அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்வது என்பது ஒரு கடினமான செயல்பாடு ஆகும். நீங்கள் மாமியாருடன் இல்லாத சூழ்நிலையிலும், என்றாவது ஒரு நாள் அவர் வீட்டிற்கு வந்து போக இருந்தாலும் இந்த பிரச்சனைகள் தலை தூக்கும்.

இதற்கு என்ன தீர்வு?
ஒவ்வொரு பிரச்சனைக்கும் இரண்டு பரிமாணம் இருக்கும். மாமியார் ஒரு விதத்தில் சொல்லுவார். அதே நிலையை மருமகள் வேறு விதத்தில் விவரிப்பார். ஆகவே இதற்கு என்ன தீர்வு என்று பார்த்தால், ஒரே வீட்டில் வாழும் சூழ்நிலையில், இருவருக்குமான உறவில் பரஸ்பரம் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். காலம் செல்லச்செல்ல, ஈகோவைத் தள்ளி வைத்து அல்லது மாற்றிக் கொண்டு, வீட்டின் நன்மதிப்புக்காக சில விஷயத்தை செய்ய முன்வர வேண்டும். ஒரு மணமுடித்த ஜோடியாக ஒரு சிலருக்கு கவுன்சிலிங் தேவைப்படலாம். இதன் மூலம் நீங்கள் இந்த பிரச்சனையின் எந்த நிலையில் இருகிறீர்கள், இதனை எப்படி அணுகுவது இருவரும் சேர்ந்து எப்படி பயணிப்பது என்பது குறித்த ஒரு புரிதல் ஏற்படலாம்.

கவுன்சிலிங்
கவுன்சிலிங் பெரும் பெண்களுக்கு இந்த பிரச்சனைகள் பெரும்பாலும் சிறியதாக தோன்றும். ஆனால் மாமியார் தன்னுடைய மற்றும் தன் கணவரின் தனிப்பட்ட விஷயத்தில் உட்புகுந்து முடிவெடுப்பது பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இந்த விஷயங்களை சவாலாக எடுத்துக் கொள்வதால் எந்த ஒரு நன்மையையும் ஏற்படப்போவதில்லை. ஒருவரோடு மற்றவர் அமர்ந்து பேசி, இதற்கான தீர்வை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

மரியாதை
மாமியார்களுக்கு கூற வருவது என்னவென்றால், அவர்களின் எதிர்பார்ப்புகளை எளிமையான வழியில் மருமகளுக்கு புரிய வைக்க வேண்டும். வீம்பாக செய்ய விரும்பும் காரியம் வெற்றி பெறாது. அது தவறான கோணத்தில் மட்டுமே பார்க்கப்படும். உங்களுடைய எதிர்பார்ப்பிற்கு தக்க விளக்கம் கொடுங்கள். தற்போதைய மாமியார்களுக்கும், இனி வரப்போகும் மாமியார்களுக்கும் ஒன்றை மட்டும் முக்கியமாக சொல்லிக் கொள்ள விழைகிறோம், மற்றொரு பெண்ணின் விருப்பத்திற்கும் முடிவுகளுக்கும் மரியாதை கொடுங்கள். அவர்களுடைய விருப்பம் உங்களுடன் பொருந்தவில்லை என்றாலும் அதனை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.

பெஸ்ட் பிரண்ட்ஸ்
ஒரு மாமியாரும் மருமகளும் சிறந்த தோழிகளாவது மிகவும் கடினம். மாமியாரை தாய் போல், மருமகளை மகள் போல் பார்ப்பதும் கடினம் திருமணம் முடிந்த சில மாதங்களில் கணவன் மனைவியின் பேச்சைக் கேட்பது என்பது நடக்காத விஷயம். காரணம், இது போன்ற பிரச்சனைகளை(fights) அவர் இதற்கு முன் இந்த வீட்டில் கண்டிருக்க மாட்டார். மேலும், அவருடைய தாயின் முடிவு தவறு என்பதை ஒரு மகனால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே மனைவியிடம் கோபம் ஏற்படலாம். இதனால் அவர் ஆதரவு மனைவிக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் இந்த சூழ்நிலையில் கணவன் மனைவி மனம் விட்டு பேசி , அவர்களின் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். இரண்டு பக்கமும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் முடிவெடுக்க பழக வேண்டும்.

முடிவெடுப்பதில் கட்டுப்பாடு
மாமியாரை இது குறித்து கேட்கும்போது, இவர்கள் இப்படி செய்வது நல்ல நோக்கத்திற்காக மட்டுமே என்று கூறுகின்றனர். இவர்களின் பிள்ளைகள் வாழ்க்கையில் எந்த ஒரு முடிவையும் தவறாக எடுக்கக் கூடாது என்று அவர்கள் மேல் கொண்ட பாசத்தால் அவர்கள் இப்படி செய்வதாகக் கூறுகின்றனர். முடிவெடுப்பதில் கட்டுப்பாடு விதிப்பதில்லை என்றும் கூறுகின்றனர்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Lifestyle