கர்ப்ப காலங்களை சந்திக்கும் பெண்கள் அனைவருக்கும் குழந்தை பிறப்பு என்பது மகிழ்ச்சி தரும் விஷயம்தான். ஆனால் அதனால் அவர்கள் உடலில் ஏற்படும் சில நிரந்தர மாற்றங்கள் அவர்களுக்கு கவலை அளிக்கிறது.
முக்கியமாக கர்ப்ப காலத்தில் வயிறு விரிந்து கொடுப்பதால் மற்ற பாகங்கள் வீங்குவதால் பிரசவத்திற்கு பிறகு அந்த வீக்கங்கள் நேராகும்போது சருமம் வரி வரியாக கோடுகளை (stretch marks)இதற்கான தடயங்களை உடலில் விட்டு செல்கிறது. ஆகவே பிரசவம் முடிந்த பெண்கள் புடவை கட்டும்போது கூட தழும்புகளை மறைத்தாக வேண்டிய அவசியம் உண்டாகிறது.
சந்தையில் விற்கும் பல்வேறு மருந்துகள் சில நாட்களில் இதனை சரி செய்வதாக கூறுகின்றன. ஆனால் அதன் பலன்கள் அவ்வாறு இருப்பதில்லை. எப்போதும் சருமத்தில் ஏற்படும் சிக்கல்களை சரி செய்ய சில காலம் எடுக்கும். பிரசவம் என்பது பெண்கள் கடந்து வரும் மிக முக்கியமான நிலை. அதனால் ஏற்படும் உடல் மாற்றங்கள் உடனடியாக மறையாது என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
தேங்காய் எண்ணெய் (Coconut oil)
சாதாரண தேங்காய் எண்ணெயிலா தழும்புகளை மறைய செய்யும் வழி இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். தேங்காய் எண்ணெய் பல அற்புதங்களை செய்யவல்லது. கர்ப்பமாக இருக்கும்போதில் இருந்தே நீங்கள் தேங்காய் எண்ணெயை வயிற்றில் தடவி வரலாம். தழும்புகள் மீதும் லேசான சூட்டில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்து வர வேண்டும். தினமும் மூன்று முறை இப்படி செய்ய வேண்டும். இதனால் தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.
Youtube
சர்க்கரை ஸ்க்ரப் (sugar syrub)
சருமத்தில் ஏற்படும் தழும்புகளை நீக்க ஒரு ஸ்பூன் சர்க்கரை ஒரு ஸ்பூன் எலுமிச்சை ரசம் சில துளிகள் வைட்டமின் ஈ எண்ணெய் ஆகியவற்றை கலக்கவும். இதனை சிசேரியன் தழும்புகள் மற்றும் பிரசவ வரிகள் மீது தடவி ஸ்க்ரப் செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இதனால் குறைந்த காலத்தில் தழும்புகள் சருமத்தோடு சருமமாக காட்சியளிக்கும். தழும்பின் தடயங்கள் உடலில் இருக்காது.
Youtube
ஆப்ரிகாட் மாஸ்க் ( Apricot mask)
கடைகளில் விற்கப்படும் உலர்ந்த ஆப்ரிகாட் அல்லது புதிய பிரெஷ் ஆப்ரிகாட்களை வாங்கி அதன் சதை பகுதியை நன்கு மசித்து கொள்ளுங்கள். இதனை தழும்புகளின் மீது தடவ வேண்டும். அதற்கு முன் ஆப்ரிகாட் விதையை நீக்கி விடுதல் முக்கியம். ஆப்ரிகாட் எண்ணெய் அல்லது எசென்ஸ் கிடைத்தால் அதனையும் பயன்படுத்தலாம். 15 நிமிடம் சருமத்தில் ஊற விட்டு பின்னர் கழுவி விடவும்.
Youtube
தக்காளி சாஸ் (Tomato sauce)
தக்காளி சரும பளபளப்பிற்கு பெருந்துணை புரிகிறது என்பது நீங்கள் அறிந்த ஒன்றுதான். தக்காளிப்பழம் மூலம் செய்யப்படும் சாஸ்கள் இதனையே இன்னும் வீரியமாக செய்கின்றன. காரம் இல்லாத தக்காளி சாஸ் வாங்கி கொள்ளுங்கள். இதனை சருமத்தில் பிரசவத் தழும்புகள் உள்ள இடங்களில் இரவு உறங்க போகும் முன்னர் தடவிக் கொள்ளுங்கள். காலையில் கழுவி விடவும். இதனால் தழும்புகள் வெகு சீக்கிரம் மறைந்து விடும்.
Youtube
கற்றாழை (Aloe vera)
கற்றாழை சர்வ ரோக நிவாரணி. அதனால் கற்றாழை ஜெல்லை எடுத்து சிசேரியன் தழும்பு மற்றும் பிரசவ தழும்புகள் மீது தடவி விடவும். அதன் பின்னர் 15 நிமிடம் கழித்து கழுவி மீண்டும் பேபி லோஷன் எடுத்து தழும்புகள் மீது தடவி வரவும். இதனால் தழும்புகள் மறைய ஆரம்பிக்கும். மூன்று மாதங்களில் முற்றிலுமாக மறைந்து விடும்.
Youtube
கோகோ பட்டர் (Coco butter)
பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் தழும்புகளை மறைய செய்ய கோகோ பட்டர் உதவி செய்கிறது. கர்ப்பமாக இருக்கும்போதில் இருந்தே இந்த கோகோ பட்டரை உங்கள் வயிற்றில் தடவி இரவு முழுதும் விட்டு காலையில் குளிக்கலாம். அதிகமாக பயன்படுத்த கூடாது. சருமத்துளைகள் வழியே குழந்தைக்கு ஆபத்து விளைவிக்கலாம். பிரசவத்திற்கு பின்னர் தழும்புகள் மீது கோகோ பட்டர் தடவி மசாஜ் செய்து 15 நிமிடங்கள் ஊறவிட்டு பின்னர் குளிக்கவும்.
மேலே சொன்ன வழிமுறைகள் எல்லாமே உடனடி பலன் தருபவை அல்ல. தொடர்ந்து தினமும் இரண்டு முறை மூன்று மாதங்கள் செய்து வர வேண்டும். மூன்று மாதங்களில் நல்ல பலன்களை கொடுக்கும். மூன்று மாதங்களுக்கு பின்னர் தழும்புகள் நிரந்தரமாக மறைந்து உங்கள் உடல் அழகை மீட்டு கொடுக்கும்.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Ayurveda
தொட்டுப் பார்க்க சொல்லும் பட்டுப்போன்ற முகம் வேண்டுபவர்களுக்கு.. வெண்ணெய் பேக் போதுமானது!
Deepa Lakshmi
அழகை அதிகரிக்கும் ஆலோவீராவின் அற்புதங்கள்! பட்ஜெட் விலையில் உங்கள் அழகை மேம்படுத்தலாம்!
Deepa Lakshmi