
மில்லினர் (millionaire) ஆக வேண்டும் என்பது பெரும்பான்மை மக்களின் கனவாகவே இருக்கிறது. இதனை நோக்கிய ஓட்டத்தில்தான் சாதாரண ஆட்கள் திடீரென அசாதாரண நிலைக்கு வருகிறார்கள். நேற்றுவரை நடந்து சென்று கொண்டிருந்தவர் திடீரென வாங்கியிருப்பார். போன வருடம் வரைக்கும் வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்பட்ட உங்கள் தோழி திடீரென சொந்த வீடு வாங்கியிருப்பார்.
இவையெல்லாம் உடனே நடந்தது என்பது நம் கண் பார்வைக்குத்தானே தவிர அவர்கள் சிறுக சிறுக அவ்வபோது சேமித்து வைத்து இந்த நாளுக்காக காத்திருந்து அவர்கள் வாங்குவதுதான் உண்மை. அதற்கான கட்டுப்பாடுகள் அவர்களுக்குத்தான் தெரியும்.
எல்லோருக்கும் உடனடி கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்கிற ஆசை உள்ளது. ஆனாலும் நாம் பரம்பரை பணக்காரர்களாக இல்லாத பட்சத்தில் இது சாத்தியமேயில்லை .மில்லினர் ஆக வேண்டும் என்றால் ஒவ்வொரு படியாகத்தான் அதற்கான செயல்கள் செய்யவேண்டும்.
உடனே வேண்டும் என்கிற எண்ணம் பெரும்பான்மை மக்களுக்கு உண்டு. இதனை அவர்கள் கடக்கவேண்டும். வளரும் பருவத்தில் இருந்தே இப்போதே வேண்டும் என்கிற மனப்பான்மையை குழந்தைகளுக்கு புகட்டாமல் அவர்களுக்கு வேண்டுவதை தாமதித்து கொடுத்து வளர்த்துவதுதான் சிறந்தது.
உடனடியாக வேண்டியதை நிறைவேற்றிக் கொள்வது அப்போதைக்கு நிம்மதி தந்தாலும் பிற்பாடு அது உங்களுக்கு சிக்கலை தரும். உங்கள் ஒவ்வொரு பணத்தையும் நீங்கள் சரியானபடி செலவழிக்கிறீர்களா என்பதில்தான் நமது சாமர்த்தியம் இருக்கிறது. ஆசைப் படுவதை கொஞ்சம் தள்ளி போடுங்கள் .
உங்கள் வேலையில் நீங்கள் அதிக நேரத்தை முதலீடு செய்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு வரக்கூடிய நன்மைகளும் பொருளாதார ரீதியாக உங்களை சந்தோஷப்படுத்தும். விடாமல் உழைப்பதன் மூலம் நீங்கள் இழக்க போவது நிச்சயம் எதுவுமில்லை. பெறப் போவதோ எப்போதும் கிடைக்காத ஒரு பொக்கிஷம். வழக்கமான ஆட்டு மந்தை மனிதர்கள் போல வேலை செய்யாமல் விருப்பப்பட்டு உங்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள். இதற்கான பலன் கோடிகளில் கிடைக்கும்.
நீங்கள் நல்ல வசதியான வாழ்க்கை வாழ விரும்பியிருக்கலாம். நம்மிடம் இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்வது எப்படி என்கிற வித்தையையும் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். குறைவான பட்ஜெட்டில் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ நீங்கள் பழகிக் கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள பணத்தை செலவழிக்கும் சமயங்களில் உங்களுக்கு நீங்களே கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு சேமிக்கும் பழக்கம் இருக்க வேண்டும். உங்கள் தேவை எது விருப்பம் எது என்பதை பிரித்தறியும் திறனும் உங்களுக்கு இருக்க வேண்டும்.
உலகின் மிக பெரிய கோடிஸ்வரர்களான மார்க் ஸுக்கர்பெர்க், வாரன் பப்பேட் , ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்கள் எளிமையான வாழ்க்கையைத்தான் விரும்பியிருக்கிறார். இதனால் அவர்கள் சிக்கனமானவர்கள் என்று அர்த்தம் இல்லை. அதன் நிம்மதியை உணர்ந்தவர்கள் என்றுதான் பொருள்.
அதிகமாக வெளியில் இருந்து பொருட்களை குவித்தல், உணவுகளுக்கு செலவு செய்தல் , பார்ட்டி செய்தல் போன்றவை நமக்கு அவசியமா என்பதை யோசித்து செலவழிக்க பழகுங்கள். இதனை செய்வதால் உங்கள் சேமிப்பு அதிகமாகும். கோடீஸ்வரர் ஆக விரும்பினால் அதிகம் சம்பாதிப்பது என்று அர்த்தம் இல்லை எவ்வளவு சேமிக்கிறோம் என்பதில்தான் அடங்கி இருக்கிறது.
ஒரு சிறப்பான நிதி திட்டமிடல்தான் எல்லாவற்றிக்கும் அடிப்படை என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் தேவைகள் குறித்த விழிப்புணர்வு உங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் செலவுகளை வகை வகையாக பிரித்து வைத்து அதன் முக்கியத்துவம் பற்றி முடிவெடுங்கள். உங்களுக்கு வரக்கூடிய வருமானம் மற்றும் நீங்கள் செய்யக் கூடிய செலவுகள் பற்றிய தெளிவு உங்களுக்கு இருப்பது அவசியம்.
மில்லினராக இருப்பதற்கு பரம்பரை சொத்து , திறமை, மற்றும் அதிர்ஷ்டம் போன்றவை அடிப்படை காரணமேயில்லை. ஆனால் முதலீடு செய்வது பெரும்பாலும் பெரும் பணக்காரர்கள்தான் செய்கிறார்கள். இது ஏன் என யோசிக்க வேண்டும். முதலீடு செய்ய பெரும்பணம் தேவை என்று அனைவரும் நினைக்கலாம். ஆனால் சிறிது சிறிதாக முதலீடு செய்யவும் நம்மால் முடியும் என்பதை மனதில் கொள்ளுங்கள். சரியாக செய்யும் எந்தவித முதலீடும் உங்களை பெரும் பணக்காரர் ஆக்கும் என்பதில் ஐயமில்லை.
சிறு சிறு அடியாக வைத்து நகர்ந்து கொண்டே இருங்கள். நீங்கள் நினைக்காத ஒரு நாள் நீங்கள் விரும்பிய இடத்திற்கு நின்று கொண்டிருப்பீர்கள்.
ஒரு மில்லினராக வாழ வேண்டும் என்கிற உங்கள் கனவு நிறைவேற எங்கள் வாழ்த்துக்கள்.
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்.
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi