DIY Life Hacks

ஆன்லைன் கவனச்சிதறலை தவிர்த்து எப்படி உங்கள் வேலையில் கவனத்தை ஏற்படுத்துவது?

Meena Madhunivas  |  Apr 29, 2019
ஆன்லைன் கவனச்சிதறலை தவிர்த்து எப்படி உங்கள் வேலையில் கவனத்தை ஏற்படுத்துவது?

இணையதளம் பல நன்மைகளை நமக்குத் தந்தாலும், இன்று வளர்ந்துள்ள தொழில்நுட்பம், அதனுடன் சேர்ந்து நாம் உபயோகிக்கும் கணினியும், கைபேசியும் நம் கவனத்தை வேலையில் செலுத்த விடாமல், சிதற வைக்கிறது. பல கோடிக்கணக்கான வலைதளங்கள் இணையதளத்தில் உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை நமக்கு நல்ல தகவல்களையும், சேவைக்காகவும் மற்றும் பொருட்களை வீட்டில் இருந்தபடிய வாங்கவும் உதவுகிறது. இதனால் நீங்கள் இருந்த இடத்திலேயே உங்களுக்குத் தேவையான விடயங்களை செய்வதால், நேரத்தை அதிகம் சேமிப்பதோடு, மற்ற விடயங்களுக்கு உங்களால் நேரம் ஒதுக்கவும் முடிகிறது.

எனினும், நாம் அனைவரும் வெறும் தகவல் மற்றும் சேவைகளுக்காக மட்டுமா இணையதளத்தை (online) பயன் படுத்துகிறோம்? நிச்சயம் இல்லை!

நம் தேவைக்கும் மேலாக அதில் இருக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நம்மை அதனுடனேயே இருக்குமாறு கட்டாயப் படுத்தி விடுகிறது. இதனால் அனேகமானவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு, தங்கள் வேலை, படிப்பு, குடும்பம், ஏன் நம் தினசரி கடமைகளையும் மறந்து அதனுள் மூழ்கி விடுகிறார்கள். இது பெரிய அளவு ஒருவரின் வாழ்க்கையில் பதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு இணையதளத்தினுள் மூழ்கி விடுபவர்கள், தங்கள் குடும்பத்தினர்களுடன் போதுமான நேரம் ஒதுக்குவதில்லை, நம் அருகே யார் இருக்கிறார்கள் என்பதைக் கூட உணராமல், பொது இடங்களிலும், வீட்டிலும், ஏன், இன்னும் கூறப் போனால், காலைக்கடனை முடிக்க குளியலறை சென்றால், அங்கேயும் ஸ்மார்ட் போனுடனே செல்கிறார்கள். இதனால் ஒருவருக்கு அனைத்து காலைக்கடன்களை முடிக்க 3௦ நிமிடங்கள் தேவைப்பட்டால், இன்றோ மணிக்கணக்கில் ஆகிறது, உள்ளே சென்றவர் வெளியே வர.

இவ்வாறான பழக்கங்களால் மனிதர்கள், அன்பு, நட்பு, மற்றும் குடும்பத்தினர்களுடனாக நல்ல உறவையும் மறந்து, நம் குறிக்கோள் என்ன, நம் இன்றைய கடமை என்ன, மற்றும் நம் எதிர் காலம் என்ன என்பதையே மறந்துவிடுகிறார்கள். இந்த நிலை நீடித்தால் மனிதர்களின் வாழ்க்கையில் ஏன் பிறந்தோம் என்ற காரணமேத் தெரியாமல் போய்விடும்.

இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்:

·         உடல் நல பிரச்சனையை: நீங்கள் இணையதளத்தை கணினியிலோ அல்லது உங்கள் ஸ்மார்ட் போனிலோ பயன் படுத்துவதால், மணிக்கணக்கில் ஒரே நிலையில் அமர்ந்து, விடாமல் பார்த்துக் கொண்டிருப்பதால், கண் பார்வை பிரச்சனையை, முதுகுத் தண்டு பிரச்சனை, கழுத்தில் பிரச்சனை, உடல் எடை அதிகரிப்பு, இதனால் நீரழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுவது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

·         நல்ல உறவு மற்றும் நடப்பை இழக்கும் நிலை: ஒருவர் வீட்டில் இருந்தாலும், வெளியில் சென்றாலும் ஆன்லைனிலேயே அதிகம் மூழ்கிக் கிடப்பதால் தன்னுடைய குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடாமல் விட்டு விடுகிறார். இதனால் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசமுடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் உறவுகளுக்குள், குறிப்பாக கணவன் மனைவி மற்றும் பெற்றோர் குழந்தைகளுக்குள் இருக்கும் உறவு அதிகம் பாதிக்கப் படுகிறது. மனம் விட்டு ஒருவருக்கொருவர் பேச முடியாத சூழல் ஏற்படுவதால் மன அழுத்தம் ஏற்படவும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

·         உத்தியோகத்தை இழக்கும் நிலை: ஆன்லைனில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் விளையாட்டு, ஷாப்பிங், பொழுதுபோக்கு என்று பல விடயங்கள் சுவாரசியமானது தான். எனினும் அந்த சுவாரசியம் நீங்கள் உங்கள் அலுவலக வேலையில் கவனம் செலுத்த விடாமல் தடுத்து காலப்போக்கில் நீங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழலை உங்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது.

·         சுயமாக சிந்திக்க முடியாத சூழல்: நீங்கள் சிறியதோ பெரியதோ, அனைத்திற்கும் ஆனலைனின் துணையை நாடுவதால், உங்களால் ஒரு மனிதன் எதார்த்தமாக சிந்தித்து செயல் படும் திறனும் காலப்போக்கில் குறைந்து விடுகிறது. குறிப்பாக சொல்லப்போனால், ஒரு சிறு கணக்கு போட வேண்டும் என்றாலோ அல்லது ஓர் இடத்திற்கு செல்ல வேண்டும் என்றாலோ, உடனே கூகிளை நாடுகிறது உங்கள் மனம். சுருக்கமாக சொல்லப்போனால், உங்கள் மூளையை நீங்கள் இணையலத்திடம் அடமானம் வைத்து விட்டது போல தான். ஒரு மனிதன் சுயமாக சிந்தித்து செயல் படும் திறனை இழந்து விட்டால், வாழ்க்கையில் சவாலான தருணங்கள் வரும்போது செய்வதறியாமல், உதவிக்கு யாரும் இல்லாமல் நிற்க நேரிடும்.

·         குறிக்கோள் இல்லாத வாழ்க்கை: இவை மட்டுமல்லாமல் உங்கள் வாழ்க்கையில் எந்த அர்த்தமும் இல்லாமல், குறிக்கோளும் இல்லாமல், எதை நோக்கி நாம் இந்த வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் எம்பதையே மறந்து விட்டு ஆன்லைனில் மூழ்கிக் கிடப்பவர்கள் பலர் உண்டு. இவ்வாறான வாழ்க்கை அர்த்தமற்றதாகவும், குறிக்கோளற்றதாகவும் மாறி விடுகிறது.

 எப்படி ஆன்லைன் கவனச்சிதறலை தவிர்த்து உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது:

ஆன்லைனால் ஏற்படும் சில ஆபத்தான பிரச்சனைகளை பார்த்தோம். இப்போது அதற்குத் தீர்வாக, எப்படி இந்த பிரச்சனைகளை நாம் சரி செய்து நம் கவனத்தை குறிக்கோள் நோக்கி திருப்புவது என்று பார்க்க, இங்கே உங்களுக்காக சில முக்கிய குறிப்புகள்;

·         தேவை இல்லாத சமயங்களில் ஆன்லைன் செல்வதை தவிருங்கள்: நமக்கு சிறிது நேரம் ஓய்வு கிடைத்தால் உடனே ஸ்மார்ட் போன் எடுத்து ஆன்லைன் சென்று விடுகிறோம். அவ்வாறு செய்யாமல், தேவைப் படும் போது மட்டுமே பயன் படுத்தி விட்டு, மற்ற நேரங்களில் வேறு ஏதாவது வேலைகளில் உங்கள் நேரத்தை செலவிடலாம். உதாரணத்திற்கு, வீட்டில் ஏதாவது சுத்தம் செய்யும் வேலை அல்லது பராமரிப்பு வேலை, இருந்தால் பார்க்கலாம். மேலும் உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடன் சிறிது நேரம் பேசலாம், சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று உங்களுக்குப் பிடித்தது போல உங்கள் கவனத்தை மாற்றுங்கள்.

·         உங்கள் குறிக்கோள் மீது கவனத்தை திருப்புங்கள்: ஒவ்வொரு மனிதருக்கும் நம் வாழ்க்கையில் இவ்வாறு ஆக வேண்டும், உயரமான இடத்திற்கு வாழ்க்கையில் செல்ல வேண்டும் என்று பல குறிக்கோள்கள் இருக்கும். சிலருக்கு விரும்பிய கார் அல்லது வீடு கட்டுவது என்று இருக்கும். அதன் மீது உங்கள் கவனத்தை திருப்பி அதர்க்கான வேலைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்வதால் நீங்கள் ஆன்லைன் செல்வதை தவிர்ப்பதோடு உங்கள் குறிக்கோளை விரைவில் அடையவும் செய்வீர்கள்.

·         முக்கியமான வேலைகள் மீது கவனத்தை திருப்புங்கள்: உங்களுக்கு ஏதாவது முக்கியமான வேலைகள், அலுவலகத்திலோ, அல்லது வீட்டிலோ அல்லது சொந்த வேலைகளோ இருந்தால் அதற்க்கு நேரம் ஒதுக்குங்கள். இது உங்கள் வேலையை விரைவில் முடித்து விட்டு நீங்கள் ஓய்வெடுக்க உதவும்.

·         பொழுதுபோக்கு வேலைகளுக்கு கவனத்தை திருப்புங்கள்: ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பொழுதுபோக்குத் திறன் இருக்கும். அதாவது, புதிதாக ஆடை டிசைன் செய்து அணிவது, படங்கள் வரைவது, தோட்டம் வளர்ப்பது, புதிதாக ஏதாவது ஒன்றை முயற்சி செய்வது என்று. அவ்வாறு ஏதாவது இருந்தால் அதன் மீது உங்கள் கவனத்தை செலுத்தும் போது நீங்கள் ஆன்லைன் பயன்பாட்டை குறைக்கத் தொடங்குவீர்கள். மேலும் இத்தகைய பொழுதுபோக்கு உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சியையும் தரும்.

·         உங்கள் கவனச்சிதரலை கட்டுப்படுத்துங்கள்: ஒரு முறை நீங்கள் ஆன்லைன் பயன் படுத்துவதன் சௌகரியத்தை உணர்ந்து விட்டால் அதில் இருந்து வெளியில் வருவது நிச்சயம் கடினமே. எனினும், இதனை ஒரே நாளில் சரி செய்ய முடியாது என்றாலும், நீங்கள் சிறிது சிறிதாக கட்டுப்படுத்த முயற்சி செய்யத் தொடங்க வேண்டும். இவ்வாறு கட்டுப்படுத்தி உங்களை நீங்களே பழகிக்கொண்டால் காலப்போக்கில் ஆன்லைன் பயன் பாட்டை குறைத்து விடுவீர்கள். உங்கள் வேலைகள் மீதும் கவனத்தை செலுத்தத் தொடங்குவீர்கள்.

·         தெரியாததை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை தவிருங்கள்:

உங்களுக்குத் தெரியாத விடயங்களை தெரிந்து கொள்வதால் பல நன்மைகள் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும், உங்கள் வாழ்க்கை முறைக்கும், வாழ்வாதாரத்திற்கு துளியும் சம்பந்தம் இல்லாத விடயங்களை பற்றி ஆழமாக தெரிந்து கொள்ள முயற்சி செய்வது உங்கள் நேரத்தை வீன்னாக்குவதையே குறிக்கும். அவ்வாறு ஆர்வம் ஏற்பட்டால் சில விடயங்களை மேலோட்டமாக தெரிந்து கொண்டு, ஆனலைனை விட்டு வெளியே வந்து விடுவது நல்லது.

·         உங்கள் கைபேசியே ஒரு பெரிய காரணி:

கணினியில் மட்டுமில்லாமல், ஸ்மார்ட் போன்கள் உங்கள் ஆன்லைன் பயன் பாட்டை எளிதாக்கியதாலேயே பிரச்சனைகள் அதிகமாகி விட்டது. அதனால் முடிந்த வரை உங்கள் கைபேசியை அழைக்கவும், அழைப்புகளுக்கு பதில் சொல்வதற்கு மட்டும் அதிகம் பயன் படுத்தி விட்டு தேவை இல்லாத விடயங்களுக்கு பயன் படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இதனால் உங்கள் ஆன்லைன் பயன் பாடு பெரிதும் குறையும்.

·         தனியாக நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள்: ஓர் விடயத்தில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் உங்களுக்கு அலுவலக பனி மற்றும் வீட்டில் பனி இருக்கும் போது ஆன்லைன் செல்வதில்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு ஏதாவது ஆன்லைனில் தகவல்கள் தேவைப்பட்டாலோ, சேவைகள் ஏதாவது தேவைப்பட்டாலோ அதற்காக நேரம் ஒதுக்கி பார்த்துக் கொள்ளலாம் என்று உங்கள் நேரத்தைத் திட்டமிடுங்கள். இவ்வாறு செய்யும் போது நீங்கள் அதிகம் ஆன்லைன் செல்வதை தவிர்த்து உங்கள் வேலையில் கவனத்தை செலுத்தலாம்.

·         உடனடியாக செயல் படுத்துங்கள்: நீங்கள் இனி ஆன்லைன் அதிகம் செல்லமாட்டேன் என்று தீர்மானமாக இருக்க வேண்டும். அவ்வாறு எடுத்த தீர்மானத்தை உடனடியாக செயல் படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் நீங்கள் உங்கள் வேலையில் கவனம் செலுத்த அதிக நேரம் கிடைக்கும்.

·         உங்கள் வேலைகளை பட்டியலிடுங்கள்: முடிந்த வரை உங்களது வேலைகளை நாள், வாரம், மாதம் மற்றும் வருடம் என்ற அடிப்படையில், இந்த காலகட்டத்திற்குள் இந்த வேலைகளை நான் முடித்து விட வேண்டும் என்று பட்டியலிட்டு, அதற்காக நேரத்தை ஒதுக்கத் தொடங்குங்கள், இவ்வாறு செய்யும் போது நீங்கள் உங்கள் கடமைகளை விரைவாக எந்த சிக்கலும் இல்லாமல் செய்து முடிப்பதோடு, ஆன்லைன் மீது உங்கள் கவனம் சிதறாமலும் இருக்கும்.

மேலே கொடுக்கப்பட்ட இந்த குறிப்புகள் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது மட்டுமல்லாது ஒவ்வொரு தனி நபருக்கும் தங்களது வாழ்க்கையை எப்படித் திட்டமிட வேண்டும் என்று கனவுகளும் குறிக்கோள்களும் இருக்கும். இடைக்காலத்தில் வந்த இந்த இணையதளத்தை நம் தேவைக்காக மட்டும் பயன் படுத்தி விட்டு, நம் வாழ்க்கையை அதனிடம் கொடுத்து விடாமல், நமக்கென இருக்கும் இந்த அழகான வாழ்க்கையை வாழ முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு வாழ்வதால் நீங்கள், உங்கள் குடும்பத்தினர்கள், நண்பர்கள் மற்றும் உங்களை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். மேலும் உங்கள் மனமும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சுதந்திரங்களால் ஏற்படுகிற சுகவீனங்கள் – பலவீனத்தை பயன்படுத்தும் ஆண்களிடம் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From DIY Life Hacks