Beauty

கண்களுக்கு காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டியவைகள்

Mohana Priya  |  Aug 12, 2019
கண்களுக்கு காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டியவைகள்

1. கண்களின் மேல் இமை ரோமங்களிலும் கீழ் இமை ரோமங்களிலும் சரிசமமாக பட்டையான கோடுகளை தீட்டினால், அது தான் அடிப்படை ஸ்டைல். இந்த ஸ்டைலுடன் தனியாக கூடுதல் கொசுறு எதுவும் செய்யத் தேவையில்லை. இதனை செய்ய வெறும் 2 நிமிடங்கள் போதும். முக்கியமாக அவசரமாக வெளியேறும் போது, இது தோதான வழிமுறையாகும்.

2. ஒரு பார்மல் தோற்றம் தேவைப்பட்டால், கண் மையை கண்களின் மேல் இமை ரோமங்களின் மேல் மட்டும் தடவி, கீழ் இமை ரோமங்களை அப்படியே விட்டு விட வேண்டும். பார்மல் ஆடை அணியும் போது இந்த ஸ்டைல் நன்றாகவே பொருந்தும்.

3. மேல் கூறிய ஸ்டைலுக்கு அப்படியே நேர் எதிரான இந்த ஸ்டைலும் கூட அழகை அதிகரிக்கும். சில நேரம் உங்களுக்கு மேக் அப் செய்து கொள்ள விருப்பம் இருப்பதில்லை. ஆனால் வெளிறிய கண்களை மட்டும் சரிசெய்ய தோன்றலாம். அப்படிப்பட்ட நேரத்தில் கீழ் இமை ரோமங்களில் மட்டும் கண் மையை தடவி, மேல் இமை ரோமங்களை அப்படியே விட்டு விடுங்கள்.

4. இவ்வகை தோற்றம் அளிக்க, கண்களுக்கு பட்டையாக மேக் அப் போட வேண்டும். உங்கள் மேல் இமை ரோமங்களில் கண் மையை தடவி, ஏதாவது பெட்ரோலிய ஜெல்லியை கொண்டு இமையில் நன்றாக தேய்க்கவும். இவ்வகை மேக்-அப் உங்கள் கண்களுக்கு நீங்கள் விரும்பிய ஸ்மோக்கி தோற்றத்தை அளிக்கும்.

5. கண்களை மட்டும் தனிப்படுத்தி காட்ட வேண்டுமா? அப்படியானால் இந்த ஸ்டைலை முயற்சி செய்யுங்கள். வெண்ணிற ஐ ஷாடோவை கொண்டு கண் இமைகளில் தடவி, அதனை வெண்மையாக மாற்றுங்கள். பின் கண் மையை கொண்டு, கோண வடிவத்தில் பட்டையான கோடுகளை மேல் மற்றும் கீழ் இமை ரோமங்களில் தடவுங்கள்.

 

pixabay

6. மேக்-அப்பில் கருமை நிற கண் மை அதிகமாக பயன்படுத்தப்படும். கோதிக் மேக்-அப்பை முயற்சி செய்ய கண் மைகளை கொண்டு தடித்த கோடுகள் தீட்ட வேண்டும். மேலும் இருள் நிறைந்த வண்ணத்தில் ஐ ஷாடோவைப் பயன்படுத்த வேண்டும்.

7. இவ்வகை பேஷன் மீண்டும் உயிர் பெறுகிறது. இந்த ஸ்டைலை பின்பற்ற வேண்டுமானால், கண் மையை மேல் இமை ரோமங்களுக்கு சற்று மேலே தீட்ட வேண்டும். இதனால் உங்கள் கண்களை பார்ப்பதற்கு, மேல் நோக்கி சாய்ந்திருப்பதை போன்ற தோற்றமளிக்கும்.

8. பெண் மானை போன்ற கண்கள் மேக்-அப் என்பது 1960 மற்றும் 1970-களில் புகழ் பெற்று விளங்கியது. ஆனால் இன்றும் கூட இதனை நம் பாலிவுட் கனவு கன்னிகள் செய்து வருகின்றனர். கண் மையை மேல் மற்றும் கீழ் இமை ரோமங்களில் பட்டையாக தடவி, கண்களின் மூலையில் ‘u’ போன்று வளைத்து விடுங்கள். இவ்வகையில் கண் மை தீட்டினால் ஒரு மென்மையான தோற்றத்தை தரும்.

9. சில பெண்களுக்கு அடர்த்தியாக கண் மையை தடவி, கண்களை கருமையாக காட்ட விருப்பம் இருக்கும். அதை நாம் கவனிக்கவும் செய்திருப்போம். அப்படிப்பட்ட ஸ்டைல் வேண்டுமானால், கண் மை பென்சிலை இரண்டு அல்லது மூன்று முறை கண் இமை ரோமங்களில் தீட்டினால், இந்த விளைவு கிடைத்துவிடும்.

10. முக்கியமான பார்ட்டி மற்றும் விசேஷங்களுக்கு செல்ல வேண்டுமானால், இந்த ஸ்டைலை பயன்படுத்தலாம். உங்கள் மேல் இமை ரோமங்களில் அழகிய பறக்கும் சிறகை போல் கோடை தீட்டிக் கொள்ளுங்கள். மேலும் கீழ் இமை ரோமங்களில் தீட்டும் கோடு, கீழ் நோக்கி வளைய வேண்டும்.

 

pixabay

காஜல் பயன்படுத்தும் போது கவனிக்கவேண்டியவை

காஜல்(kajal) கண்களுக்கு அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல் மாசிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது. சீக்கிரம் அழியாது என்பதற்காகச் செயற்கை இரசாயனப் பொருள்கள் அதிகளவில் கலந்த காஜலைச் சிலர் தேர்ந்தெடுக்கின்றனர்.

இப்போது, புதிதாக பென் (pen) மாதிரியான வடிவில் ப்ரௌன், ப்ளாக் கலர்ஸில் கிடைக்கின்றன. இவை மாதிரியான காஜல்களைப்(kajal) பயன்படுத்தும்போது நாம்தான் மிகக் கவனமாக இருக்க வேண்டும். செயற்கையான காஜல் எதுவுமே கண்களுக்கு நன்மையைத் தராது.

இந்தப் பாதிப்புகளைத் தவிர்க்க வீட்டிலேயே காஜல்(kajal) தயாரிக்கலாம். கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்துக் காய்ந்த, காட்டன் திரியை நல்லெண்ணெய் ஊற்றிய விளக்கில் எரியவிடவும். அந்த விளக்கின் மேல் பகுதியில் குமிழ் போன்ற பாத்திரத்தைப் பாதி திறந்த நிலையில் வைக்கும்போது, அதில் கரித்துகள் படியும். இதை பேஸ்ட் மாதிரி எடுத்து வைத்து, அதனுடன் விளக்கெண்ணெய் கலந்து பயன்படுத்தினால் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும்; பக்க விளைவுகளும் கிடையாது.

ஹெர்பல் காஜல்ஸ் அதிகமாகக் குமிழ் மாதிரியான வடிவில்தான் அதிகம் வரும். ஆனால், இது சீக்கிரமே அழிந்துவிடாமல் இருப்பதற்குக் கொஞ்சம் விளக்கெண்ணெய்யைக் கலந்துகொண்டு பயன்படுத்தலாம்.

காஜல் கண்களுக்கு உட்பகுதியில் போடுவது ஒரு வகை, கண்களின் கீழ்ப் பகுதியில் போடுவது மற்றொரு வகை. கண்கள் பெரிதாக, அழகாகத் தெரிய வேண்டும் என நினைப்பவர்கள் கண்களின் உட்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் காஜல்(kajal) அப்ளைப் பண்ணும்போது ரொம்ப அட்ராக்டிவான அழகைக் கொடுக்கும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Beauty