
பருவமடைதல்
பருவமடைதல் என்பது நம் நாட்டை பொறுத்த வரை மிக முக்கியமான, புனிதமான ஓர் நிகழ்ச்சி, ஏழை முதல் பணக்காரர்கள்வரை பல ஆயிரங்கள் செலவழிக்கும் ஓர் நிகழ்ச்சி. பருவமடைதல் என்பது பெண்/ஆண் இருபாலருக்கும் இயற்கையாக நடக்கக்கூடிய ஓர் உடல்ரீதியான மாறுதலாகும். பெண்/ஆண் குழந்தையை பொருத்தவரை பருவமடைதல் என்பது உடல் ரீதியாக அவர்கள் (அதாவது ஒரு ஆணும் ஒரூ பெண்ணும்) உடலுறவு மூலம் குழந்தையை உருவாக்க தகுதிபெற்று விட்டார்கள் பருவமடைதல் என்பதைக் காட்டுகிறது.#StrengthOfAWoman
மாதவிடாய் சுழற்சி
மாதவிடாய்(menopause) சுழற்சி என்பது உடல் ரீதியான இயற்கையான வளர்ச்சி முறையாகும். இச்சுழற்சி பெண்கள் வயதுக்கு வந்தவுடன் தொடங்குகிறது. இது முறையாகவும், குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக வருவதனால் இதனை மாதவிடாய் சுழற்சி என்கிறோம். இது எவ்வாறு நிகழ்கிறது என்றால், மாதவிடாய்(menopause) வருவதற்கு 2 வாரங்களுக்கு முன்னர் ஒரு பக்க கருமுட்டைப்பையில் ஒரு முட்டை உருவாகி முதிர்ச்சி அடைகிறது. அது சினை குழாயின் வழியாக வரும்போது கருப்பையை அடைகின்றது. அப்படி அது கருப்பையை அடைந்து உயிரணுவோடு #StrengthOfAWoman சேரவில்லை என்றால் முக்கிய ஹார்மோனின் காரணமாக கருப்பை சுருங்குகிறது. அப்படி சுருங்கும் போது அதன் உட்சுவரில் உள் தோல் பகுதியாகிய என்டோமெடரியம் சிறு சிறு துண்டுகளாக பிரிக்கப்பட்டு அவை உதிர்கின்றன. அப்போது அதோடு தொடர்புடைய ரத்த நாளங்களும் துண்டிக்கப்படுவதால் இரத்தமும், கருவுறாத முட்டையும், உட்சுவராகிய சளிச்சவ்வும் வெளியே தள்ளப்படுகின்றது. மாதவிடாய்(menopause) என்பது 3 முதல் 6 நாட்கள் வரை தொடரும்.
அதற்கும் பல காரணங்கள் உள்ளன அவை
மன அழுத்தம்
நெடுந்தூரப் பயணம்
சூழ்நிலை மாறுபாடு
உடல்நிலை பாதிப்பு
அதிக வெப்பம்
சத்தின்மை
ஹார்மோன்கள் சுரக்கும் தன்மை போன்றவையாகும்.
மாதவிடாய் பற்றிய பல மோசமான எண்ணங்கள்தான் இன்று பெண்கள் மத்தியல் நிலவி வருகிறது. மாதவிடாய்(menopause) ஆன பெண் தீட்டு ஆனவள், அவள் யாரையும் தொடக்கூடாது. தனித்திருக்க வேண்டும். கடவுள் அறை பக்கம் போகக்கூடாது. கோயிலுக்கு போகக்கூடாது, மங்களகரமான செயல்களிலும், வைபவங்களிலும் ஈடுபடக்கூடாது ஒதுங்கியே இருக்க வேண்டும் என்று மேற்கூறிய யாவும் தவறான கருத்துக்களே. மாதவிடாய்(menopause) என்பது இயற்கையான ஒன்று, அந்த காலகட்டத்தில் பெண் தூய்மையாக#StrengthOfAWoman இருக்க வேண்டும். நிறைய ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அதன் நோக்கமே தவிர, மேற்கூறிய தவறான கருத்துக்கள் இல்லை.
1. தூய்மையாய் இருக்க வேண்டும்
2. எளிதான உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்
3. போதுமான அளவு நல்ல சரிவிகித உணவு உட்கொள்ள வேண்டும்.
4. தூய்மையான பருத்திதுணி அல்லது நாப்கின் போன்றவற்றை இரத்தப் போக்கை உறிஞ்ச பயன்படுத்த வேண்டும்.
5. துணியை மீண்டும் உபயோகப்படுத்துபவராக இருந்தால் நன்றாக துவைத்து பின் டெட்டால் போட்டு நல்ல வெயிலில் காயவைத்த பின் உபயோகப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தொற்று கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது.
6. இரத்தப்போக்கிற்கு ஏற்ப அணையாடையை#StrengthOfAWoman அவ்வப்போது மாற்றி கொள்ள வேண்டும். அதிக நேரம் ஒரே துணியையோ அல்லது 8 நாப்கினையோ உபயோகப்படுத்தினால், அதனால் பல தொற்று நோய் ஏற்பட வழி உண்டு.
7. காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும்
8. நாப்கின் உபயோகப்படுத்துபவராக இருந்தால் அதை மாற்றும் போது கழிப்பறையில் போடக்கூடாது. அது போய் கழிவு நீர் குழாயை அடைக்க வாய்ப்புள்ளது. எனவே ஒரு கவரில் போட்டு குப்பை தொட்டியில் போடுவது நல்லது.
9. மாதவிடாயின் போது அடிவயிற்சில் சிலருக்கு வலி வருவது இயற்கை, அதற்கு சூடான நீரை அடிவயிற்றில் ஒத்தடம் கொடுத்தால்#StrengthOfAWoman குறைந்து விடும். முதுகு வலி ஏற்பட்டால் குனிந்து நிமிர்ந்து உடற்பயிற்சி செய்தால் சரியாகி விடும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi