Beauty

வறண்ட கூந்தல் பிரச்சனையா? : பொலிவான கூந்தலுக்கு தேன் மாஸ்க் பயன்படுத்துங்கள்!

Swathi Subramanian  |  Oct 15, 2019
வறண்ட கூந்தல் பிரச்சனையா? : பொலிவான கூந்தலுக்கு தேன் மாஸ்க் பயன்படுத்துங்கள்!

நம் சமையலறையில் இருக்கும் முக்கிய பொருட்களில் ஒன்றான தேன் அழகு பராமரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. நம் கூந்தலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் மாற்றவும் தேன் உதவுகிறது. தேனை தலையில் தேய்த்தால் முடி நரைத்துவிடும் என்று சின்ன வயதிலிருந்தே சொல்லி பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். 

ஆனால் அது முற்றிலும் தவறான ஒன்று. வறண்ட  கூந்தல் மற்றும் முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு ஹேர் மாஸ்க் செய்து தீர்வு காணமுடியும் என்று மருத்துவர்கள் உறுதியளிக்கின்றனர்.  

கூந்தலுக்கு தேனை தேய்ப்பதால் ஏராளாமான நன்மைகள் கிடைக்கிறது. அவை என்னென்ன என்பது குறித்தும் எதனுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் இங்கு விரிவாக காண்போம்.

pixabay

கரும்புள்ளிகளால் பொலிவிழந்த முகத்திற்கு கல் உப்பு வைத்தியம்.. செலவில்லாமல் அழகாகுங்கள் !

pixabay

pixabay

மாஸ்க் – 1 

தேவையானவை 

தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன், 
தேன் – 2 ஸ்பூன்,
முட்டை – 1.

செய்முறை 

ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் எண்ணெய்யையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் தேனை அதில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை கொண்டு முடியை கவர் செய்து 60 நிமிடங்கள் கழித்து மைல்ட் ஷாம்புவினால் கழுவி வந்தால் கூந்தல் மிருதுவாகும். 

பெண்களின் கர்ப்பப்பை நோய்களுக்கு தீர்வாகும் அதிமதுரம்..

மாஸ்க் – 2 

தேவையானவை : 

தேங்காய் பால் – கால் கப், 
தேன் – 2 ஸ்பூன், 
விட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 1, 
ரோஸ் வாட்டர் -சில துளிகள், 
கிளிசரின் – சில துளிகள்.

செய்முறை :

முதலில் தேங்காய் பால், தேன், ரோஸ் வாட்டர், கிளிசரின் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். கடைசியாக விட்டமின் ஈ கேப்ஸ்யூலை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் ஸ்கால்ப்பிலிருந்து முடியின் நுனி வரை போட்டு தலையை ஒரு பாலிதின் கவரால் மூடி விடுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை வெதுவெதுப்பான நீரில் அலசி வந்தால் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.  

pixabay

மாஸ்க் -3 

தேவையானவை :

தேன்-1 ஸ்பூன், 
பாதாம் எண்ணெய் – இரண்டு துளிகள், 
ரோஸ் வாட்டர்- 1 ஸ்பூன், 
பால் – 1 ஸ்பூன்

செய்முறை :

மேலே கொடுத்துள்ள அனைத்தையும் ஒன்று சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரம் தலையில் ஊற விடுங்கள். பின் நீரில் அலசவும். வாரம் ஒரு முறை இப்படி செய்தால் முடி உதிர்தல், பொடுகு ஆகிய பிரச்சனைகள் நீங்கி கூந்தல் அழகாய் இருக்கும்.  

எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்த திரிபலா சூரணம் : ஆரோக்கிய மற்றும் அழகு நன்மைகள்!

மாஸ்க் – 4 

தேவையானவை :

வாழைப்பழம் – 1
தேன் – 2 ஸ்பூன் 
தயிர் – 2 ஸ்பூன் 

செய்முறை :

வாழைப்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும். பின் அதில் தேன் (honey) மற்றும் தயிர் சேர்த்து கொள்ளவும். இவை அனைத்தையும் நன்கு பிசைந்துக் கொள்ளவும். இந்த கலவையை கூந்தலின் வேர் முதல் நுனி வரை தடவி 20 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் அலசி விடவும்.

இந்த ஹேர் மாஸ்கை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் கூந்தல் உதிர்வு நின்று கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கூத்துக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Beauty