Education

குழந்தைகளுக்கு எது நல்லது? ஹோம் ஸ்கூலிங்கா ட்ரெடிஷனல் ஸ்கூலிங்கா !

Deepa Lakshmi  |  Jul 23, 2019
குழந்தைகளுக்கு எது நல்லது? ஹோம் ஸ்கூலிங்கா ட்ரெடிஷனல் ஸ்கூலிங்கா !

இன்றைய குழந்தைகள்தான் நாளைய உலகத்திற்கான நம்பிக்கை வேர்கள். வேர்களை சரியாகப் பராமரித்து விட்டோம் என்றால் மரத்தின் வளர்ச்சி பற்றிய கவலை நமக்கு இருக்காது.

ஒரு குழந்தைக்கு அறிவினை ஊட்டுவதற்காக அதன் மூளையைப் பயன்படுத்தி அதனை விரிவடைய செய்வதற்காக நாம் அதனை பள்ளிக்கு அனுப்புகிறோம்.

காலத்துக்கு காலம் கல்வி பயிலும் முறை என்பது மாறிக் கொண்டுதான் இருக்கிறது. பழங்காலங்களில் குருகுல வாசம் இருந்தது. அதுவே தற்போது ஹாஸ்டல் என்று அழைக்கப்படுகிறது.

அதன் பின்னர் சுதந்திர காலம் ஆரம்பித்த சமயத்தில் குழந்தைகளுக்கான கல்வியைத் தர பள்ளிகள் உருவாக்கப்பட்டன.

அந்தப் பள்ளிகள் வளர்ந்து வளர்ந்து தமிழ் மீடியம், ஆங்கில மீடியம், மெட்ரிகுலேஷன் , சிபிஎஸ்சி எனப் பலவகையான மாற்றங்களோடு மாறிக் கொண்டே இருக்கிறது.

pixabay, twitter, youtube

 

இந்த நிலையில்தான் சமீப காலமாக ஹோம் ஸ்கூலிங் (home schooling)  என்றொரு பள்ளி வகை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இது நாள் வரை பள்ளிக்கு கல்வி கற்க சென்று கொண்டிருந்த குழந்தைகள் என்கிற வடிவம் மாறி குழந்தைகளை வீடு தேடி வந்து பயிற்றுவிக்கும் பள்ளி என்பதுதான் ஹோம் ஸ்கூலிங்.

பொதுவாக வீடுகளிலேயே பெற்றோர் சொல்லிக் கொடுத்து படிக்கும் முறைதான் என்றாலும், கல்விக்கான தேடல்கள் அதிகரிக்கையில் அதனைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர் தேவையாக இருக்கிறார்.

ஆசிரியர்கள் வீட்டிற்கே வந்து குழந்தைக்கான அறிவு தேவையை பூர்த்தி செய்வதுதான் ஹோம் ஸ்கூலிங். இது பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமான முடிவுகளைத் தந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஹோம் ஸ்கூலிங் என்பது வீட்டில் இருந்து சொல்லித் தரப்படுவது என்கிற அர்த்தம் தொனித்தாலும் வீடு மாதிரியான சூழலை உருவாக்கி பள்ளிகள் தரும் பயன்களைக் கொடுக்க சில ரெசிடென்ஷியல் பள்ளிகளும் நடைமுறையில் இருக்கின்றன.

சாதாரணமாக பள்ளி சென்று பயிலும் மாணவனை விட அறிவுக்கூர்மையில் ஹோம் ஸ்கூலிங் முறையில் பயிலும் மாணவன் 30 சதவிகிதம் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்திய பெற்றோர்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் மற்றவர்களுடன் பழகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் ஒரு குழந்தையானது வெளி சூழல் மற்றும் மனிதர்களுடன் கலந்துரையாடாமல் வாழ்வது அதற்கு ஆரோக்கியமானது அல்ல என்று நினைக்கின்றனர்.

 

pixabay, twitter, youtube

உண்மையில் பாகுபாடுகள் நிறைந்த பள்ளிகள், பொறாமை போட்டி நம்பிக்கை துரோகங்களால் நிறைந்திருக்கும் வெளி உலகம் ஆகியவற்றில் இருந்து சில வருடங்கள் வரை குழந்தை விலகி பாதுகாப்பாக இருப்பதே நல்லது என்றுதான் தோன்றுகிறது.

அதற்கான பக்குவம் ஏற்பட்டபின்னர் குழந்தையை பள்ளிக்கு அனுப்பலாம். அதுவரையில் ஹோம் ஸ்கூலிங் முறையில் நாமே நம் குழந்தைக்கு அடிப்படை அறிவை ஊட்டி விட முடியும். அதற்கான பல விடியோக்கள் யூட்யூப்பில் கொட்டிக் கிடக்கின்றன.

அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாக வளர்த்தால் அதற்கடுத்த 10 தலைமுறைகள் நல்லவிதமாக இருக்கும். ஆகவே உங்கள் குழந்தைக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அதன்படி செயல்படுங்கள். கல்வி என்பது அறிவு சார்ந்தது. ஆனால் குழந்தைகள் உணர்வு ரீதியானவை.

pixabay, twitter, youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                 

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.                                                                           

Read More From Education