Beauty

வெயிலால் ஏற்படும் வரண்ட சருமம் சரி செய்வதற்கான எளிய முறைகள்!

Mohana Priya  |  May 12, 2019
வெயிலால் ஏற்படும் வரண்ட சருமம் சரி செய்வதற்கான எளிய முறைகள்!

வெயிலில் அதிகமாக பயணம் செய்வதாலும், உடலில் நீர்ச்சத்து குறையும் போதும் முகம் மற்றும் உடல் வரண்டு காணப்படும். வெயிலின் தாக்கத்தால் நீர்ச்சத்துக்கள் அனைத்தும் உறிஞ்சு எடுக்கப்படுகின்றது. இதனால் முகம் பொலிவிழந்து வரண்டு போய்விடுகின்றது. வீட்டிலிருந்தே வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் வரண்ட சருமம் பிரச்சணையை எளிய முறையில் சரி செய்யலாம்.

முகத்தின் அழகை கெடுக்கும் முடியை வீட்டிலேயே சரி செய்யலாம்!

செக்க சிவந்த அழகான உதடு வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம்!

மேலும் எளிமையான ஸ்க்ரப்கள்

காபி கொட்டை ஸ்க்ரப்:
காபி கொட்டைகள் சருமத்திற்கு புத்துணர்ச்சியை கொடுக்கின்றன. வறண்ட சருமத்திற்கு இது ஒரு நல்ல தீர்வாகும். காபி கொட்டைகளை அரைத்து கொள்ளவும். அரைத்த தூளுடன் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி நன்றாக சூழல் வடிவில் தேய்க்கவும். 5 நிமிடங்கள் தேய்த்தவுடன் தண்ணீரால் முகத்தை(dry) கழுவவும். இயற்கையான முறையில் சருமம் புத்துயிர் பெற இது உதவுகிறது.

சர்க்கரை ஸ்க்ரப்:
வெதுவெதுப்பான நீரை முகத்தில் தெளிக்கவும். மெல்லிய துணியால் முகத்தை(dry) ஒத்தி எடுக்கவும். க்ளென்சிங் க்ரீமை ஒரு கிண்ணத்தில் போடவும். நைசாக அரைத்த சர்க்கரையை அதில் சேர்க்கவும். இரண்டையும் கலந்து கெட்டியான பேஸ்டை உருவாக்கவும்.

இந்த கலவையை முகத்தில் தடவவும். பின்பு சூழல் வடிவில் தேய்க்கவும். இந்த கலவை கண்களில் படாமல் பார்த்துக் கொள்ளவும். நன்றாக தேய்த்தவுடன் துணியால் அந்த கலவையை முகத்தில் இருந்து நீக்கவும். குளிர்ந்த நீரால் முகத்தை(dry) கழுவவும். வறண்ட சருமத்திற்கான இந்த ஸ்க்ரப் சருமத்தில் உள்ள துளைகளை மூடி, முகத்தை(dry) பொலிவாக்கும்.

க்ரீன் டீ மற்றும் தேன்:
க்ரீன் டீ வயது முதிர்வை தடுக்கும் ஒரு சிறந்த பொருள் . முகத்தில் உள்ள சுருக்கங்கள், கட்டிகள் மற்றும் தழும்புகளை போக்க இவை உதவுகின்றன. க்ரீன் டீயை கொதிக்க வைக்கவும். அதில் 1 ஸ்பூன் டீயை எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றவும். ஆறியவுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். நன்றாக கலந்து கொண்டு, தேனை சேர்க்கவும். ஈரப்பதத்தை கொடுக்கும் தன்மை தேனுக்கு உண்டு. இந்த ஸ்கரப்பை முகத்தில் தடவவும். சில நிமிடங்கள் நன்றாக முகத்தை(dry) தேய்க்கவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை(dry) கழுவவும்.

இனி அன்பான உறவுகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம்!

எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய் ஸ்க்ரப்:
தேங்காய் எண்ணெய் உடலுக்கு சிறந்த மருந்து மற்றும் எலுமிச்சை சருமத்திற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். வறண்ட சருமத்திற்கு எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும் ஸ்க்ரப்கள் நல்ல தீர்வை கொடுக்கும். ½ கப் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். இதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். இதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

இதனை சேர்ப்பதால் இந்த ஸ்க்ரபுக்கு சுத்தீகரிக்கும் தன்மை கிடைக்கிறது . முகத்தை(dry) நன்றாக கழுவி, காய்ந்தவுடன் இந்த ஸ்க்ரப்பை முகத்தில் தடவவும். நன்றாக தேய்த்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தை(dry) கழுவவும். கடலை எண்ணெய் மற்றும் வெஜிடபிள் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Beauty