Beauty

பனிக்கால பாத வெடிப்பு…. வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி எளிதாக குணப்படுத்தலாம்!

Swathi Subramanian  |  Jan 6, 2020
பனிக்கால பாத வெடிப்பு…. வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி எளிதாக குணப்படுத்தலாம்!

பொதுவாக சருமம் வறண்டு போகும்போது பாத வெடிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக பனி காலத்தில் சருமம் அதிகம் வறண்டு போகும். அதனால் பாதங்களில் வெடிப்புகள் உண்டாகும்.  

முகத்திற்கும், தலை முடிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை கால்கள் மற்றும் பாதங்களுக்கு நாம் அவ்வளவாக கொடுப்பதில்லை. இதனால் கால்களில் வறண்ட சருமம், சொரசொரப்பான பாதம், பித்த வெடிப்பு, கால் ஆணி போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

பாத வெடிப்பு (cracked heels) என்பது அழகுப் பிரச்னையாக மட்டுமின்றி ஆரோக்கியம் சார்ந்த பிரச்னையாகவும் பார்க்க வேண்டும். எனினும் இதுகுறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை. வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டே எளிமையாக பாத வெடிப்பை குணப்படுத்தலாம். 

pixabay

தேங்காய் எண்ணெய் 

கால்களில் தோல்பகுதி வறண்டு காணப்பட்டால் இரவில் படுக்கும் முன்பு தேங்காய் எண்ணெயை லேசாகத் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் கால் மிருதுவாக மாறுவதோடு வெடிப்பு ஏற்படாமல் இருக்கும். கால்களை அவ்வப்போது மசாஜ் செய்து வந்தால் பாத வெடிப்பு போன்ற எவ்வித பிரச்னைகளும் ஏற்படாது. 

அரிசி மாவு 

இரண்டு ஸ்பூன் அரிசி மாவுடன், சில துளிகள் தேன் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். பாதங்கள் மிகவும் வறண்டு வெடிப்புகள் அதிகமாக இருந்தால் இந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளலாம். இது உங்கள் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் மறைந்து விடும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்து வரலாம்.

பளிச்சென்ற கண்களுக்கு ஐ-லாஷ் கர்லர்ஸ்! சரியாக பயன்படுத்துகிறீர்களா?

உப்பு 

இரவு நேரங்களில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு அந்த நீரில் கால்களை சில நிமிடங்களுக்கு வைத்திருந்து கால்கள் சுத்தமான பின் எடுத்து துடைக்க வேண்டும். இதேபோல் சுடுநீரில் ஷாம்பு கலந்தும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் பாதங்கள் மற்றும் விரலிடுக்கில் உள்ள அழுக்குகள் வெளியேறும். இதனால் பாதங்கள் மென்மையாகும்.

 

pixabay

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் பாதங்களில் உள்ள வறட்சியைப் போக்கி, நீர்ச்சத்து கொண்டதாக மாற்றும். எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் பன்னீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பாதத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் பாத வெடிப்பு விரைவில் குணமாகும்.  

ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு கல் உப்பை சேர்த்துக் கொள்ளவும். அந்த நீரில் 10 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும். மேலும் அந்த கலவையை உங்கள் பாதங்களில் (cracked heels) தேய்த்து மறுநாள் காலை கழுவவும். 

குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்கும் அற்புத பானம்!

படிக கல் 

மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை படிகல்லால் (Pumice stone) பாதங்களின் ஓரம் மற்றும் அடிப்பகுதியில் தேய்த்து மசாஜ் செய்வதால், ரத்த ஓட்டம் சீராவதோடு வெடிப்புகளும் நீங்கும். மசாஜ் செய்த பின்பு வெதுவெதுப்பான நீரில் பாதங்களை கழுவிக் கொள்ள வேண்டும். 

வாழைப்பழம் 

வாழைப்பழம் மற்றும் அவகாடோவை ஒன்றாக மசித்துக் கொள்ளவும். இந்த கலவையை பாதங்களில் வெடிப்புகள் உள்ள இடத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கால்களைக் கழுவவும். உங்கள் பாத வெடிப்புகள் நீங்கி மென்மையாக மாறும் வரை தினமும் இதனை செய்து வரலாம். வாழைப்பழம் ஒரு சிறந்த மாயச்ச்சரைசர் . இது பாத சருமத்தை மென்மையாக மாற்றுகிறது.

 

pixabay

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லியை தூங்குவதற்கு முன்பாக பாதங்களில் தடவி வந்தால் பாதவெடிப்பு பிரச்னையிலிருந்து விடுபடலாம். தினமும் பாதங்களில் மாய்ச்சரைசிங் க்ரீம்களை தடவிக் கொள்ளும்போது சருமத்தின் ஈரப்பதம் காக்கப்படுவதால் வெடிப்புகள் உண்டாகாது.  

தேன் 

ஒரு கப் வெதுவெதுப்பான நீரில், 4 ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதில் உங்களுடைய பாதங்களை 20 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு மென்மையாக பாதங்களை ஸ்க்ரப் செய்யவும். தேன் ஒரு இயற்கையான கிருமி நாசினியாக இருப்பதால் இதனை தொடர்ந்து செய்து வர பாத வெடிப்புகள் (cracked heels) வேகமாக சரியாகும்.

குளிர்காலத்தில் கூந்தல் அதிகளவு உதிர காரணங்கள் மற்றும் சில பராமரிப்பு டிப்ஸ்!

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Beauty