Beauty

ஸ்ட்ரைட்னிங்னாலே செலவுதானா?செலவேயில்லாமல் சிறந்த ஸ்ட்ரைட்னிங் வீட்டிலிருந்தபடியே செய்யலாம்

Deepa Lakshmi  |  Sep 16, 2019
ஸ்ட்ரைட்னிங்னாலே செலவுதானா?செலவேயில்லாமல் சிறந்த ஸ்ட்ரைட்னிங் வீட்டிலிருந்தபடியே செய்யலாம்

நவீன யுகத்தின் யுவதிகள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள்தான். காரணம் இயல்பாக என்ன இருக்கிறதோ அதனை அப்படியே காட்டிக் கொள்வதை விட இன்னும் கொஞ்சம் கூடுதல் சிறப்புக்களை தங்கள் அழகிற்கும் சேர்த்துக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சுருள் முடி கொண்டவர்கள் வாழ்நாள் முழுதும் அதிலேயே இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் தேவைப்பட்டால் முடியை ஸ்ட்ரைட்னிங் (straightening) செய்து கொள்ளலாம். அதைப்போலவே எப்போதும் சில்கி கூந்தலோடு இருப்பவர்கள் தங்கள் கூந்தலை சுருள்களாக மாற்றி அழகாக்கி கொள்ளலாம்.
மேலும் பாதி ஸ்ட்ரைட்னிங் பாதி சுருள் முடி கலந்த ஸ்டைலில் ஸ்ட்ரீக்ஸ் கூட செய்து கொள்ளலாம்.

பேரழகு மின்னும் பளிங்கு முகம் வேண்டுமா? மங்கு ,கரும்புள்ளிகளை நீக்கும் குங்குமாதி தைலம் !

Youtube

ஆனால் இதுவரைக்கும் ஸ்ட்ரைட்னிங் அல்லது ஸ்ட்ரீக்ஸ் எதுவாக இருந்தாலும் அதற்குப் பார்லர் சென்று சில ஆயிரங்களை நாம் அழ வேண்டிதான் இருக்கிறது. அழகியல் வரலாற்றில் முதல் முறையாக ஸ்ட்ரைட்னிங் என்பதை நாம் இனி வீட்டிலேயே செய்து கொள்ள முடியும் என்கிற வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.

பார்லரில் ஒருமுறை ஸ்ட்ரெய்ட்டெனிங் (straightening) செய்ய பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் வரை ஆகிறது. அதை விடவும் பால் எனும் மூலப்பொருளைக் கொண்டே நமது வீட்டில் இருந்து நாமே நமது முடியை ஸ்ட்ரைட்னிங் ஆக்கிக் கொள்ளலாம் என்பது சந்தோஷமான செய்திதான் அல்லவா. இதற்கு தேவை கொஞ்சம் பொறுமை மட்டுமே.

காண்போரைக் கவரும் பொலிவான முகம் வேண்டுமா ? இறந்த செல்களை எளிதாக நீக்கும் இயற்கை வழிகள் !

Youtube

ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்யத் தேவையான பொருள்கள்

பால் அல்லது தேங்காய்ப்பால் – மூன்று கப்

வாழைப்பழம் /ஸ்ட்ராபெரி – சிறிய அளவு

ஸ்பிரே பாட்டில் – 1

சீப்பு (மர சீப்பு இருந்தால் நலம் ) – 1

(பால் இல்லாதவர்கள் பால் பவுடரையும் கூட பயன்படுத்தலாம்)

கொஞ்சம் பொறுமை மற்றும் நேரம்

அழகிய பெண்கள் என்றால் அது கோவைப்பெண்கள்தான் ! அவர்கள் ஆடைகள் எல்லாமே தனித்துவம்தான் !

Youtube

செய்முறை

உங்கள் முடியை ஸ்ட்ரைட்னிங் (straightening) செய்வதற்கு முன்பாக நல்ல நீரில் நன்றாக அலசிக் காய வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஸ்ப்ரே பாட்டிலில் பாலை ஊற்றி அதனுடன் நசுக்கிய ஸ்டராபெரி அல்லது வாழைப்பழத்தை சேருங்கள்.

அதன் பின்னர் உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களில் படுமாறு ஸ்பிரே பாட்டில் மூலம் ஸ்ப்ரே செய்யுங்கள். நன்கு வேர்க்கால்கள் பால் மூலம் நனைந்திருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

அதன் பின்னர் உங்களிடம் உள்ள நெருக்கமான பற்கள் கொண்ட சீப்பால் உங்கள் முடியை சீவ ஆரம்பியுங்கள். நன்கு அழுத்தமாக அதே சமயம் சீராக மெதுவாக உங்கள் தலைமுடியை சீவ ஆரம்பியுங்கள். உங்கள் முடியில் உள்ள நெளிவுகள் நீங்கும் வரை இப்படி செய்ய வேண்டும்.

கருப்பு அழகு – நீங்கள் கருப்பு நிறம் கொண்ட பெண்ணா? இந்த பதிவு உங்களுக்காகத்தான்!

Youtube

இப்படி செய்து முடித்தபின்னர் மேலும் ஒரு 20 நிமிடங்கள் உங்கள் கூந்தலை அப்படியே பாலில் ஊற விடுங்கள். அந்த நேரத்தில் உங்களுக்குப் பிடித்த பாடலையோ அல்லது சீரியலையோ நெட்ப்ளிக்ஸ் ஹாட்ஸ்டாரில் கண்டு ரசியுங்கள்.

அதன் பின்னர் ஒரு மென்மையான ஷேம்பூ மூலம் உங்கள் கூந்தலை அலசுங்கள். குளிர்ந்த நீரில் அலசுங்கள். பாலின் வாசனை போகும் வரை ஷேம்பூவினால் நன்கு கழுவி அதன்பின்னர் உங்கள் கூந்தலை உலர்த்துங்கள்.

உங்கள் கூந்தல் ஈரம் காய்ந்தபின்னர் உங்களுக்கே தெரியும் உங்கள் கூந்தல் எவ்வளவு நேராக ஸ்ட்ரைட்டாக மாறி அலையலையாக உங்களைக் கவர்கிறது என்று. அடிக்கடி இப்படி செய்துவந்தால் நிரந்தரமான ஸ்ட்ரைட்னிங் (straightening) கூந்தல் உங்கள் வசமாகும்.

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Beauty