நம் வீட்டு சமயலறையில் அஞ்சறைப்பெட்டி நிச்சயமாக இருக்கும் ஒரு பொருள் சீரகம். இது சமையலின் சுவைக்காக சேர்க்கப்படுவது மட்டுமில்லாமல் பல்வேறு உடல் நன்மைகளுக்காகவும் பயன்படக் கூடியது. நம் அகத்தை சீராக்குவதால் அதன் பெயர் சீரகம்.
சீரகத்தில் பொட்டாசியம் உள்ளதால் இதனை உணவில் சேர்ப்பதால் அதன் சுவை கூடுவதோடு உடலுக்கும் வலு சேர்க்கிறது. வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை (jeera water) குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது. சீரக நீரை அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.
உணவு செரிமானம் : சீரகம் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. காலையில் ஒரு டம்ளர் சீரக நீர் அருந்துவதால் கார்போஹைட்ரேட், குளுக்கோஸ் மற்றும் கொழுப்புகளை உடைக்க உதவும் என்சைம்கள் உற்பத்தியை சீரகம் தூண்டுகிறது. சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.
அஜீரண பிரச்சனைகளுக்கு : தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது. அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வயிற்று வலிக்கும் தீர்வு தரும். இது உங்கள் வளர்சிதை வளர்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாய்வு போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு : கர்ப்பிணி பெண்களும் சீரக நீர் பருகலாம்.அது கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான நொதிகளைத் தூண்டும். பால் சுரப்பையும் ஊக்குவிக்கும்.
மேலும் படிக்க – சரும அழகிற்கு கமலாப்பழம் தோல் – வீட்டில் எளிய முறையில் பேஸ் பாக் செய்யலாம்!
அல்சரை குணப்படுத்த : சீரகம், ஏலம் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் 1/4 ஸ்பூன் அளவு சாப்பிட அல்சர் குணமாகும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை (jeera water) குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். மேலும் சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சல் நீங்கும்.
pixabay
இரத்தசோகை குணப்படுத்த : சீரகத்தில் உள்ள இரும்பு சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உடலில் இரத்தசோகையை குணப்படுத்தும். மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கும். சீரக நீர் சுவாச கட்டமைப்புக்கும் நன்மை சேர்க்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க : நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். 1 டம்பளர் சீரக நீரில் ஒரு நாளுக்கு பரிந்துரைக்க பட்ட இரும்பு சத்து உட்கொள்ளலில் 7% பூர்த்தியாகிறது.தொடர்ந்து இந்த நீரை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும்.
மேலும் படிக்க – குளிர்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் சுரத்தை போக்க வீட்டு வைத்தியம்!
வலி நிவாரணி : மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாகவும் விளங்குகிறது. அந்த சமயத்தில் சீரக நீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும்.
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு : சீரக நீர் கல்லீரலும் பலம் பெற உதவுகிறது. இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி பித்தப்பைக்கு பாதுகாப்பு அளிக்கும். அடிக்கடி வயிற்று கோளாறு இருந்தால் வீட்டில் சாதாரண தண்ணீருக்குப் பதில் பாதி சூட்டில் சீரகத்தண்ணீர் அருந்துங்கள் வயிற்று கோளாறு குணமாகும்.
pixabay
ஞாபக சக்திக்கு : தொடர்ந்து இந்த நீரைக் குடித்து வருவதால் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யலாம். சளி பிரச்சனை, சுவாசக் குழாயில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து சளி மற்றும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். சளியை குணப்படுத்தவும் உதவும்.
உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் சீரக நீரை (jeera water) குடித்தால் அதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
அழகு நன்மைகள்
- சரும பளபளப்புக்கும் சீரக நீரை பயன்படுத்தலாம். அதில் பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. அவை தோலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.
- சீரக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால், முகம் பளபளக்கும். சருமம் மென்மையாக, மிருதுவாகவும் இருக்கும். சீரகத்தில் உள்ல வைட்டமின் ஈ சத்து இளமையை தக்கவைக்க உதவும்.
- நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் சத்துகளை உறிஞ்சுவதற்கு ஏற்ற சக்தியை சருமத்திற்கு கொடுப்பதும் சீரகத்தின் பயனாகும். இதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற தன்மையால் சிறு வயதிலேயே வயது முதிர்ந்த தோற்றம் உருவாவதை தடுக்கும்.
- இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்குவதோடு. முடியின்வேர்கள் வளர்வதற்கு உதவும். முடி உதிர்தலை தடுக்கும்.
மேலும் படிக்க – குங்குமப்பூவின் அழகு மற்றும் ஆரோக்கிய பயன்கள்!
#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi