Lifestyle

காதலர் தினத்தை அழகான கவிதைகளுடன் கொண்டாடுங்கள்! (Valentines Day Quotes In Tamil)

Meena Madhunivas  |  Dec 17, 2019
காதலர் தினத்தை அழகான கவிதைகளுடன் கொண்டாடுங்கள்! (Valentines Day Quotes In Tamil)

மேற்கத்திய கலாச்சாரமாக இருந்தாலும், இன்று உலகமெங்கும் பலரால் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் காதலர் தினத்திற்கு ஒரு சிறப்பு இருக்கத்தான் செய்கின்றது.

உண்மை காதலுக்கு என்றும் தோல்வி இல்லை என்பதற்கு ஏற்ப, காதலிப்பவர்கள் மட்டும் கொண்டாடும் ஒரு திருவிழாவாக இல்லாமல், இளம் வயதினர் முதல், புதிதாய் திருமணம் ஆன தம்பதியினர் முதல், மூத்த வயதுடைய என்றும் இளமை மாறா மனமும் அன்பும் கொண்டு பல ஆண்டு திருமண வாழ்க்கையை வெற்றிகரமாய் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஜோடிகளும், இன்று இந்த காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

காதலை போற்ற ஒரு தினம். அந்த சிறப்பான தினத்தில் நீங்கள் உங்கள் காதலை உங்களுடையவர்களுடன் கொண்டாட(Valentine day), இங்கே உங்களுக்காக சில அற்புதமான மற்றும் மனமுருகும் காதல் கவிதைகளும்(quotes/wishes), அழகான வரிகளும்!

காதலனுக்கு காதலர் தின வாழ்த்துக்கள் (Valentines Day Quotes For Boyfriend)

1. எப்படித் தான் தெரியப்படுத்துவேன் ?
உன்மேல் நான் கொண்ட காதலை.
ஒரு பூவை நீட்டும் பழைய முறையிலா ?
வாசம் வீசும் புத்தகத்தில் ஒளித்து வைக்கும்மயில் பீலி வழியாகவா ?
ஒரு நான்குவரிக் கவிதையிலா ? – இல்லை
கையெழுத்தைச் செதுக்கி நான் செய்த காகிதக் கடிதத்திலா ?
தெரியவில்லை எனக்கு. எப்படி சொல்வேன் ?
படபடக்கும் என் பட்டாம்பூச்சிச் சிறகுகளுக்கு எந்த பதில் பாறையையும்
சுமக்கும் தெம்பில்லை! அதனால் நீயே சொல்லி விடு
என்னைக் காதலிக்கிறேன் என்று!

2. வம்பான பார்வையை அம்பாக எய்கின்றாய்
நீ தூரமாக இருந்தாலும் உனது குரலை கேட்காத நொடிகள் இல்லை
கேட்கிறேன் – இதய துடிப்பில்
ஏனென்றால் என் இதயம் துடிப்பது உனக்காக அல்லவா!!

3. மனமும் மகிழ்வில் உன் விழிகளில் என்னை காண்பதால்
என்னை மறந்து கொஞ்ச நேரம் உலகை ரசிக்க நினைத்தால்
அங்கும் வந்துவிடுகிறாய் நானே… உன் உலகமென்று
கொஞ்சும் மொழியில் கெஞ்சும் உன் வார்த்தைகளில்
என் கோபங்களும் மறைந்து விடுகிறது!!! அழகே!!

4. மழைச்சாரலாய் நீவர கவிச்சோலையானேன் நான்…!
மனதிலிருக்கும் ஆசைகளையெல்லாம் கொட்டி தீர்த்தவன்
அயர்ந்து போனேன் குழந்தையாய்…!
காற்றோடு பேசும் மலராய் உன் மனதோடு பேசி கொண்டிருக்கின்றேன்
நான்…!
நான் மறைந்தாலும் உன் மனதில் மறக்கப்படாதளவுக்கோர்
அழகிய வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டும், உன்னுடன் ஒரு நாலாவது!!!

5. பார்க்க மறுத்த விழிகளும் காத்துக்கிடக்கு உன்னன்பில் தொலைந்து…!
இடைவெளி வலியை தருமென தெரிந்தும் பிடிவாதமாய்
அனுபவித்திருக்கிறோம் இருவரும்…!
விடைப்பெறட்டும் நாணம் விடைத்தருகிறேன் நானும்
உன் பார்வையின் கேள்விக்கு!!!

6. உலகை காட்டியது பெற்றோரென்றாலும்
அதை ரசிக்க வைத்துக்கொண்டிருப்பது நீ…!
உன் சிறுத்துளி நினைவு போதுமென் அகம் முகம் மகிழ…!
மனம் மகிழ வாழ்த்துகிறேன் இந்த காதலர் தினத்தன்று!!!

7. தூரம் வலியை கொடுத்தாலும் சுகமே
நினைவுகள் உன்னை சுற்றியே சுழன்று கொண்டிருப்பதால்
நினைவு கடலில் நீந்துகின்றேன் கரை சேர்த்திட வருவாயென…!
நம்மை நனைத்த மழைதுளி உலர்ந்தபோதும்
நாம் இணைந்த நினைவு துளி இன்னும் ஈரமாகவே மனதில்…!
என்னவனுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

8. என்னால் நீ அனுபவித்த காயங்களையெல்லாம் ஆற்றிடவேண்டும்
அன்பில்…!
தித்திக்கும் உன் நினைவுகளை சந்திக்கும் போது தான்
காத்திருக்கும் வலிகள் கூட காணாமல் போய் விடுகின்றது!!
என் கனவுகள் நீயாக இருக்கும் வரை என் கவிதைகள்
உன் பெயர் சொல்லும்!!
அது விதியின் செயல் அல்ல நீ செய்த மாய வலை…!
என்னவனுக்கு, காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

9. வரிகளில் இல்லாத ரசனை உன்னிரு விழிகளில் உணர்ந்தேன்…!
நீ விடைபெறும் போதெல்லாம் என்னிடம் தாவிக்கொள்கின்றது
சிறு குழந்தையாய் உன் நினைவுகள்…!
சுதந்திரமான மனதும் சுயநலமாகி போனது
உனதன்பு எனக்கே எனக்குமட்டும் சொந்தமென்று!!!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

10. மாட்டிய கொலுசில் மனசையும் கோர்த்து விட்டாயா
ஒலிக்குமிசையில் உன்பெயர் கேட்குதே!!
உறங்காத கண்களும் உறங்கிப்போனது
உன் நெஞ்சமெனும்பஞ்சணையில்!!
உளிகொண்டு பார்வையில் செதுக்குகின்றாய்
சிலையாகின்றேன் நானும்!!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

வேடிக்கையான காதலர் தின வாழ்த்துக்கள் (Valentines Day Quotes In Tamil)

Pexels

11. காதலின் வெளிபாடுதான் முத்தமென்றால்
நாமும் பரிமாறிக்கொள்வோம் முத்தங்களை
விழிகளை இதழ்களாக்கி!!
கண்களில் தொடங்கி கட்டிலறையில் முடிவதல்ல காதல்
மனதில் மலர்ந்து மணவறை சென்று மரணம் வரை உடனிருப்பதே
உண்மை காதல்!!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

12. உன்னில் நானும் என்னுள் நீயுமாக வாழும் நமக்கு
தினமும் காதலர் தினமே!!
எந்த தினம் என்றாலும் அனுதினமும் அவனுடன் இருந்தால்
காதலர்தினம் தான்…!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

13. அம்மாவை விட்டுகொடுக்காத அப்பா, அப்பாவை விட்டுகொடுக்காத அம்மா
இவர்களைவிடவா சிறந்த காதல் ஜோடி இவ்வுலகில் உண்டோ?
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

14. சத்தமின்றி யுத்தம் செய்யும் உன் பார்வையில்
ரத்தமின்றி போர்க்களமானது மனம்…!
ஒட்டி கொண்டிருக்கும் தாடிக்குள் சிக்கி கொள்கிறது
மனம் தினம்!!
உறங்காத விழிகளுக்குள் மறைந்துகொண்டு
இம்சிக்கிறாய் இதமாய்!!
துன்பக் கடலில் தத்தளித்தபோது அலை போல் வந்தென்னை
கரைசேர்த்தாய்!!
சுட்டெரிக்கும் வெயிலிலும் மழைசாரலாய்
நீயென்னை கடக்கயில் இதயமும் நனையுதே!!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

15. என் ஒவ்வொரு நொடியின் தொடக்க புள்ளி நீ!
ஜன்னலை பூட்டியபின்னும் காட்சியை ரசிக்க தவறாத
விழிகளை போல்!!
மனதை பூட்டியபின்னும் உன் நினைவுகளை
நினைக்க தவறியதில்லை மனம்…
செல்லும் இடமெல்லாம் வந்து விடுகின்றாய்
நிலவை போல் நீயும் நினைவில்!!
உதிரா மலராய் நீ மனதில் மலர்ந்திருக்க
இந்த உதிரும் மலரும் ஏனோ!!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

16. உன்னால் தண்டனை அனுபவிக்கின்றது நகமும் கொஞ்சம்
திருப்பிக்கொள் உன் பார்வையை!!
தனித்திருக்கும் போதெல்லாம் மனம் உன்னிடமே தாவுது…
மறைத்துக்கொள் நெஞ்சத்தை எனக்கு சொந்தமான
இதயத்தை தீண்ட காற்றுக்கும் அனுமதியில்லை!!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

17. விழிகளுனை கண்டுவிட்டால் மனமும் ஏனோ பறக்கின்றதே
சிறகடித்த வண்ணத்துப்பூச்சியாய்!!
கூந்தலை பிடித்திழுத்து விளையாடி ஜிமிக்கியும்
உன்னை அடிக்கடி ஞாபகபடுத்துது!!
தாயை காண காத்திருக்கும் குழந்தையாய்
உன் வழி நோக்கி என் விழிகளும் காத்திருக்கு!!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

18. அகிலமும் அசைவற்று போனது ஒற்றை நொடியில்
நெற்றி முத்தத்தில் நான் எனை மறந்த போது!!
பொழியும் மழையை விட உன் பார்வையின்
சாரலே என்னை நனைத்து செல்கிறது!!
சிந்தும் நீரை சிறை பிடிக்க சிக்கி கொண்டது
உன் நினைவு!!
கனவு கலைந்த பின்னும் விழிகள்
மூடிக்கிடக்கின்றேன் உன் பிம்பம் கலைந்திட கூடாதென!!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

19. இந்த நொடி நீளாதா என்று மனதை தவிக்கவிடுகிறாய்
சுகமாய்!!
மலரும் நினைவுகள் மனதை தாலாட்ட உறங்கிப்போனது
விழிகள்!!
ஏதோ ஒரு நினைவு விழிகளை நனைக்கும் போதெல்லாம்
புன்னகையுடனேயே கடந்துவிடுகின்றேன் அந்நொடியை!!!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

20. பிடித்த தனிமையும் கொடுமையானது உன்னுள் தொலைந்ததிலிருந்து!!
யாரிடமும் ஆறுதலை எதிர்பார்க்காத மனம் உன் தோளை
மட்டுமே தேடுது சாய்ந்து கொள்ள!!
நினைவும் ஒரு அழகிய இசை அது நீயென்பதால்!!
விழி மொழி புரிந்தும் மௌனத்தை பரிசளித்து
நீயே என் விடையாகிப் போனாய்!!
துரத்தும் பிம்பத்தை களைத்து போனது என் கண்கள்!!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

என்னுடைய காதல் கவிதை (Love Poems For Valentines)

21. நினைவிலும் நிஜத்திலும் என் மகிழ்வெல்லாம்உன்னால்
உன் நினைவு தொற்றி கொண்டால் என்னுள்ளும்
பல கிறுக்கல்கள் கவிதைகளாக
உன் தேடல் எதுவாகவும் இருக்கட்டும்
என் தேடல் நீயே!!!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

22. வாழ்க்கை வெறும் கனவோ என்றிருந்தேன்
நீயும் வந்தாய் கலையாத வண்ண கனவாய்!!
உன் வருகை தாலாட்டுது மனதை
மாலை நேர தென்றலாய்!!
நம் உலகத்தில் உன்னென் நிழலை தவிர
வேறெதற்கும் இடமில்லை!!!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

23. இரு விழி கவி எழுத வீழ்ந்தேன்
உன் இதயத்தில்!!
நீள்கின்ற நிமிடங்களும் நொடிகளாய்
கரைந்திடுதே உன்னில் மூழ்கி விட்டால்!
உன் கண்ணில் தூசி விழ கலங்கியது
என் விழிகள்!!
திணறடிக்கும் உன் அன்பில் சிறையிருக்க வேண்டும்
ஆயுளின் கடைசி நொடிவரை!!
ஆயுள் கைதியாய் உன் இதயத்தில்
தேநீரில் கரைந்த சக்கரையாய் கலந்துவிட்டாய்
என்றும் திகட்டாத தித்திப்பாய் மனதில்!!!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

24. சலிக்காமல் காத்திருக்கும் நிலவாக உனை
காண நான்!!
என் கவிதைகளின் தலைப்பு நீ!!
உன் கவிதைகளின் வரிகள் நான்!!
நான் என்றோ தொலைந்தேன் உன்னுள்
உனக்குள் நான்!!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

25. அளவில்லாத உன் அன்பு வேண்டும்
என் ஆயுள் முழுவதும்!!
கருங்கூந்தலை கலைத்திடும் தென்றல் காற்றும்
உன் ஸ்பரிசத்தையே நினைவூட்டி செல்கிறது
மறக்க நினைக்குறேன் இருந்தும்
மறக்காமல் நினைக்கிறேன்!!
எல்லோருக்கும் அழகை வர்ணிக்க தானே கவிதை தேவைப்படும்
எனக்கு மட்டும் கவிதையை வர்ணிக்க நீ தேவைப்படுகிறாய்!!!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

26. நின்று திரும்பிப் பார்க்க விடவில்லை நாணம்
நீ நிழலாய் பின்தொடர்கிறாய் என தெரிந்தபின்பும்
உன் உள்ளங்கையில் குடியேற ஆசைப்பட்டு
முற்றத்தில் சொட்டியது அந்திமழை
உதிர்ந்தது பூ வலியில் துடித்தாய் நீ!
சொட்டுச் சொட்டாக உள் இறங்கி
உரைந்துப் பனிச் சிலையானது!
மனசெல்லாம் நீ!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

27. தீக்குள் விரலை வைத்தால் உன்னை தீண்டும் இன்பம்
தோன்றுதடி!!
நான் பூக்களை பரித்துவிட்டால் உன் பாதி உயிர்
கரையுதடி!1
நீ என்ன முரண்களின் மகளா!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

28. காதல் அரும்பிய தருணங்கள்!!!
காலைப் பனி ஈரம் உதிர்க்கும் இலைகள்!!
வெயிலறியா மரத்தடி உன் தலையை சுமந்த என் நெஞ்சம்!!
கண்களிரண்டையும் கலக்கவிட்டு தொடுக்கிறாய்!
கேள்விக்கணை ஒன்றை! காதல் கொண்டதேனென்று!!
புன்னகைக்கு புன்னகையையே பதிலிறுக்கும் இந்தப் புன்னகை தான்
காரணமென்று!
வார்த்தைகளின்றி புன்னகைக்கிறேன், சொல்லித் தெரிவதில்லை காதல்.
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

29. நம் காதல் உன் உள்ளங்கையின் உஷ்ணத்தில்
இன்னும் ஊறிக் கொண்டிருக்கிறது என் உடல்…!
உன் கரு வட்ட விழிகளுக்கு நடுவே
சிக்கிக் கொண்டுள்ளது என் மனது…!
உன் கூந்தல் முடிகளுக்கு பின்னால்
அலைந்து கொண்டிருக்கிறது என் வாழ்க்கை…!
உன் வார்த்தைகளின் இடைவெளிகளில்
மறைந்து கொள்கிறது என் மௌனம்…!
உன் கன்னம் கிள்ளிவிட்ட என் விரல்களில்
ஒட்டிக் கொண்டுள்ளது நம் காதல்…!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

30. காதலர் தினத்திற்கு முந்தைய நாள் மாலையில்
“காதல் பரிசாய் உனக்கொன்று தரப் போகிறேன்” – “என்ன அது ?”
பதிலை நாளை சொல்வதாய் தொடர்பைத் துண்டித்துக்
கொண்டாய் நீ!…..
மறுமுறை முயன்றும்உன்னைத் தொடர்பு கொள்ள முடியாமல்
போனது என்னால் ! அடடா! என்ன செய்வேன் !
என் இனிய காதலர்தின வாழ்த்துக்கள்…

மேலும் படிக்க – காதலர்களிடையே பிரச்சனைகளின்றி அந்யோநியமாக இருக்க பின்பற்ற வேண்டிய முக்கிய கட்டளைகள்!

காதலர் தின வாழ்த்துக்கள் (Valentines Day Wishes In Tamil)

Pexels

31. காணும் கண்ணில் கலந்தாய் கண்ணா காதலி என்னில் கலந்தாய்!
வேணு கானம் இசைத்தே எந்தன் விரதம் நீயும் தணித்தாய்!!
மெல்லத் துடித்ததென் உதடுகள்! மாயவன் பேரைச் சொல்லியே
கிள்ளிய பூப்போல் விழுந்த துந்தன் மடிமீதிந்த அல்லியே!!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

32. எனக்கே என்னிடம் பிடிக்காத என் முன்கோபம் கூட ரசிக்கிறாய் நீ
என் அசைவுகள் அத்தனையும் படம் பிடித்து ரசிக்கும் உன் கண்களாலும்
அது ஒய்வாக இருக்கும் போது உன் விரல்களின் கவிதைகளாலும்
என் காதலை தூண்டிக் கொண்டேயிருக்கிறாய்!!
எனக்கொன்றும் செய்யத் தெரிவதில்லை உன் மீதும் உன் கவிதைகள்
மீதும் பைத்தியம் கொள்வதைத் தவிர!!
இனிய காதலர்தின வாழ்த்துக்கள்…

33. தினம் தினம் சுவாரசியமாக காதலிக்கும் நமக்கு காதலர்
தினம் தேவையில்லை…
இன்று, மற்றுமொரு நாளே….!!
இருந்தாலும், “காதலர் தின” வாழ்த்துக்கள்….!!!

34. காமம் சுமந்து காதலிப்பவர்கள் மத்தியில்
நான் காதல் மட்டும் சுமந்தபடி உன்னை காதலிக்கிறேன்!
வாழும்வரை நேசிப்போம், காதலை மூச்சாய் சுவாசிப்போம்!
கனவிலே கூட காதலை யோசிப்போம், காதலை கவிதையாய் வாசிப்போம்!
கண்களில் காதல் வைத்து, இதயத்தில் காதலியை தைத்து
கனவில் காதல் கீதம் இசைத்து காலமெல்லாம் காதலோடு
வாழத்துடிக்கும் காதலர்களுக்கு…..
காதலர் தின வாழ்த்துக்கள்…

35. என் தேவதை கண்களில் கண்ணீரா?
என் உள்ளமே உன் கண்ணீராய்…
என் செந்நீர் சிந்தியாவது துடைப்பேனடி?
என் செல்லமே உன் கண்களில்
கண்ணீரை கொடுத்த என்னவள் சூடிய
மல்லிகையை பழிக்கின்றேனடி?
எது வந்தாலும் என் தோள் மீது சாய்ந்து கொள்ளடி…
என் கைகள் உன் கண்ணீரை துடைக்கட்டும் ….!!!
காதலி:
காதலர் தின வாழ்த்துக்கள்…

36. நாம் பரிமாறிக்கொண்ட பரிசுப் பொருட்களைவிட இன்று நாம்
சிந்தும் கண்ணீர்த்துளிகள் தான் மிகவும் சிறந்தது
காதலர்கள் ஏன் சாகத் துணிகிறார்கள் என்கிறான் கடவுள்
கடவுளுக்கு ஒன்றுமே தெரியவில்லையென்று நினைத்துக் கொண்டேன்!!!

37. கடந்த சில ஆண்டுகளைப் போலவே இன்றையக் காதலர்தினத்திலும்
பரிசுப் பொருள்களோடும், வாழ்த்து அட்டைகளோடும், ரோஜாப் பூவோடும்
கை குலுக்கி விடைபெறுகிறோம், திருமண பேச்சு எடுக்காமல்….

38. திருமணம் ஆன பின்பும் மறக்க முடியவில்லை!
காதலர் தின பொய்!!
இமைக்கும் போதும் உன் ஞாபகம் கண் மூடினால் உன்னோடு வாழப்போகும்
வாழ்க்கை வந்து பயமுறுத்துகிறது!!
எதற்கும் பயப்படாதவள் நான் உன்னைக் காதலித்த போது பயம் வந்து
சூழ்ந்து கொண்டது!!
விழிகளில் பொய்யையும் விரல்களில் உண்மையையும் சுமந்து கொண்டு
திண்டாடுகிறது உன் காதல்.. சரி.. சரி.. வெட்கப்படாமல் என்னை கட்டிக்கொள்!!!

39. கண்ணைகட்டி விளையாடலாம் என்று என் கண்களை மறைத்தாய்.
உலகம் மறைந்தது! உன் காதல் முழுதாய் தெரிந்தது!!
பார்க்கும் போது பாதியாகவும் திரும்பிக் கொண்டு முழுதாகவும்
காதலை கொடுக்கும் வித்தையை நீ எப்போது கற்றாய்?
என் மீது சாய்ந்தபடி ஏதேதோ நகைச்சுவை உதிர்த்த படி
நீ சிரிக்கிறாய்…….நான் சின்னா பின்னமாகிறேன்…..

40. காதலர் தினத்திற்கு எல்லோரும்
காதலிப்பவர்களுக்குதான் பரிசுகள் கொடுப்பார்கள்…
ஒரு வித்தியாசமாய், உன்னையும் என்னையும் இணைத்து
காதலர் தினத்திற்கே நம்மை பரிசாக கொடுத்துவிடலாமே…..
காதலர் தின நல்வாழ்த்துகள்!!!

தனித்து இருப்பவர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள் (Valentine’s Day Quotes For Singles)

41. உன்னை மட்டுமே நேசித்து
உனக்காக வாழும் சுகம் போதும்
உன்னை எதிர் பார்த்தே வாழ்ந்திருப்பேன்
என் வாழ்நாளின் இறுதி வரை
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!!

42. நீ நேசித்த ஓன்று உன்னை விட்டு சென்றாலும்
உன் நினைவை விட்டு செல்லாமல் காத்திருக்கும் உனக்காக!
இனிய காதலர் தின வாழ்த்துகள்.

43. உன்னை ஏன் இதயம் என்று சொல்ல மாட்டேன்.
ஏன் தெரியமா?
உன்னை துடிக்க விட்டு உயிர் வாழ எனக்கு விருப்பம் இல்லை!!!
இனிய காதலர்தின வாழ்த்துக்கள்…

44. ஒவ்வொரு காதலர் தினத்திலும் நீ தோல்வியையும்
விரக்தியையும் தான் பரிசாக தந்தாய் எனக்கு…
இந்த காதலர் தினத்தில் எதை தரபோகின்றாய் என்ற எதிர்பார்ப்பில்
ரோஜாவோடு நான் இருக்கிறேன்…..
இனிய காதலர்தின வாழ்த்துக்கள்…

45. உன் தொலைப்பேசி முத்தங்களுக்கெல்லாம் மௌனமே காக்கிறேன்
பரிசுகளாக திருப்பித்தர காதலர் தினத்தை எதிர்பார்த்து…

46. வாழ்த்துமடல்களில்லை, வந்து குவியும் பரிசுகளில்லை,
நான் அங்கும், நீ இங்குமில்லை, எல்லா விடுமுறை நாட்களின்
மதியப் பொழுதின் வெறுமைப் போலவே கழிகிறது
இந்த காதலர் தினமும்…

47. உன்னுடன் நான் கழித்த நொடிகளைத் தான்
உருக்கி வார்த்து உலகம் கொண்டாடுகிறது காதலர் தினமென…
இந்தக் காதலர் தினத்திலாவது தந்துவிடுவாய் என ஏக்கத்துடன் நான்…
பிரிவிற்கு பின்னும் உன்னுடையதாகவே இருக்கும் என்னிதயம்…

48. உன் கூந்தலில் ஒரு நாள் உயிர் வாழ்ந்து மகிழ்ச்சியாய் உயிர்விட்டன பூக்கள்…
அது போல தான் உன் இதயத்தில் ஒரு நாள் உயிர் வாழ்தால் போதும்
மகிழ்ச்சியாய் உயிர்விடுவேன் நானும்…

49. வெண்ணிலவே………….! நீண்ட நிர்மூல வான்வெளியை
வெறித்து நோக்கிக் காத்திருந்தேன்!!
நேற்று வரை என்னுடன் இருந்தாய், நிறைந்த பௌர்ணமி எழில் தந்தாய்!!
நேற்றுச் சொன்னாய் என்னிடம், என் மனம் இருப்பதோ உன்னிடம்,
துணிந்து கேட்டாய் இப்பெண்ணிடம் துணை இருப்பாயா தன்னிடம்
தயக்கம் எனக்கு என்றுரைத்தேன்!!
மயக்கம் இதில் எதற்கென்றாய், தாமதமின்றி பதில் தந்தேன்!
தனிமையை போக்கிட வரம் தந்தாய்!
இன்று உனக்காய் காத்திருந்தேன், உணர்வால் உன்னை நினைத்திருந்தேன்!1
நினைவுகளை மட்டும் விட்டுவிட்டு தடயங்கள் யாவும் மறைத்துச் சென்றாய்!!
தடுமாறி உன்னைத் தேடுகிறேன் தாமதம் இன்றி வருவாயா!!

50. தாகம் கொண்டு என் மனம் ஏங்க, தண்டனையாய் நீ மறைந்தனையோ!
மோகம் கொண்ட மேகத்திடம், தஞ்சம் நீ சென்றனையோ!
வஞ்சம் கொண்டு விண்மீன்கள் நெஞ்சகத்தில் மறைத்தனவோ!
காலம் விரைந்து செல்கிறது காதலும் விரையம் ஆகிறது!
காத்திருக்கும் எனக்காக கருணை கொண்டு வந்திடுவாய்!
பூத்திருக்கும் மலராக –நெஞ்சில் பொதிந்து நான் வைத்திடுவேன்!!!

கணவருக்கு காதலர் தின வாழ்த்துக்கள் (Valentines Day Quotes For Husband)

Pexels

51. தொலைத்த புன்னகையெனும் முகவரியை என்னவன்
தேடி கொடுத்தான்!!
காற்றலையில் கலந்து வந்த உன் குரல்
இதயத்தை நனைக்க மனமும் பூத்தது பூஞ்சோலையாய்!!
காதல் கணவா களைந்திருக்கும் உன் கண்களுக்கும்
ஓய்வுகொடு கனவில் சந்திப்போம்!!!
அன்பு கணவனுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

52. என் வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளிகளிலும் உயிர்த்தேனை கலந்து
காதலுக்குள் வாழ வைத்துக் கொண்டிருக்கும் அவனின் நேசத்திற்கு என் காதல் மொத்தமும் கொடுத்தும்
அவனுக்குள்ளேயே தினம் தினம் தொலைந்து நானும் போகின்றேன்….
என் கணவனுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்….

53. அறுபது வருடங்கள் கடந்தும் இன்றும் அன்று போல் என்னை எனக்காக மட்டுமே காதலித்துக் கொண்டிருப்பவன்….
என் தோழனாய் காதலனாய் என் உயிர்க் கணவனாய் எனக்கு அனைத்துமாகி
நிற்கும் அவன் தளர்ந்து போய் என் கரம் பிடிக்கும் வேளைகளில் என்றும் அவன் எனக்கு முதல் குழந்தை தான்….
என் கணவனுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்….

54. இறக்கும் இறுதி நொடியிலும் அவன் கண்கள் சொல்லும் காதலை கண்டவாறே என் கண்களை நானும் மூடிட வேண்டும்..
என்னோடு இணைந்தே அவனும் விண்ணுலகம் வந்திட வேண்டும்…
அவன் என் அருகில் இல்லாத ஒவ்வொரு துளிகளும் அது சொர்க்கமேயென்றாலும் எனக்கது நரகம் தான்….
என் கணவனுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்….

55. யாரும் அழைத்தால் மட்டுமே கேட்கும் என் இதயம்
அவளை மட்டும் நினைத்தாலே ஒளிர்கிறது………..
என்னவனுக்குள் தொலைந்த நொடியிலிருந்து
தினமும் எனக்கு காதலர் தினமே

56. நீ என்ருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை நீ எனக்குள் இருகிறாய் என்பதும்!!
என்னவனுக்கு, இனிய காதலர்தின வாழ்த்துக்கள்…

காதலர் தின அடைமொழி (Valentines Day Captions)

57. காதல் – இந்த சொல்லுக்கு தான் எத்தனை எத்தனை உணர்வுகள்!
பழமையின் புதுமை இது. புதுமையின் பழமையும் இதுவே!!
பல வேளைகளில் புரியாத புனிதம். சில சமயங்களில் சிலிர்க்கும் சில்மிஷம்!
வளர்ந்ததுக் கொண்டே வரும் ஒரு ஆற்றல் இந்த காதல்.!!!!

58. நெஞ்சு குழிக்குள் முள்ளு மொளச்சா, காதல் வந்தததென்று அர்த்தமா ?
பட்டாம்பூச்சிக்கு பல்லு மொளச்சா, காதல் வந்தததென்று அர்த்தமா ?
உச்சந் தலைக்குள்ள ஊசி வெடி போட்டு, கிச்சு கிச்சு பண்ணும் காதல்!
உசுர மட்டும் விட்டு ஒவ்வொன்னாக தின்னு, கலகமெல்லாம் பண்ணும் இந்த காதல்!

59. அன்பே நிலவு தெரியுமா உனக்கு என்றாய்!
எனக்குத் தெரியாது என்றேன்!
கடல் தெரியுமா உனக்கு என்றாய்! எனக்குத் தெரியாது என்றேன்!
கண்டம் தெரியுமா உனக்கு என்றாய்! எனக்குத் தெரியாது என்றேன்!
கடைசியில் எதுவுமே தெரியாது என்றால், என்னை மட்டும் எப்படித் தெரியும் என்றாய்!
ஏனென்றால் நீ தானடா என் உலகம் என்றேன்!

60. ஆயிரம் ஆசைகள் அத்தனையும் நிறைவேற்ற
ஆயிரம் ஆயுள் வேண்டும்! உன்னோடு மட்டும்!!
என் இதயம் அவளிடத்திலும், அவளது இதயம் என்னிடத்திலும்
ஆரோக்கியமாக துடிக்கின்றனவா என உறுதிச்செய்துக் கொள்ளும்
வருடாந்திர இதய பரிசோதனைத்தான் காதலர் தினம்…
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

61. நீர்த்துப் போன நினைவுகள் நீரோட்டமான வாழ்வு
நீந்த மறுக்கும் நினைவுகள் இன்றும் ஓர் தினம்
நிறங்களைத் தொலைத்து விட்டு நினைவுகளை ஏந்தியபடி…

62. அவனுள் நான் தோற்று எனக்குள் அவன் தோற்கும் ஒவ்வொரு மணித்துளிகளிலும்
புதிதாய் நானும் பிறக்கையில் புது மலராய் என்னைத் தாங்கும் அவன் அன்பில்
தினமும் நான் என்னை மறந்து தான் போகிறேன்….

63. என் சின்னச் சின்ன ஆசைகளையும் நினைவில் கொண்டு நிறைவேற்றிடும் இனிய தருணங்கள்…
மடி சாய்ந்து மழலையாய் உறங்கும் நொடிப் பொழுதுகள்..
என் மூக்கோடு உரசிச் செல்லும் அவன் சுவாசங்கள்…
விரலோடு விரல் கோர்த்து கடல் அலையோடு கால் நனைக்கும் நி மிடங்கள்…
அவன் தோளோடு நான் சாய்ந்து அவன் விழிகள் சொல்லும் காதலை எனக்குள் நானே மொழிபெயர்த்துக் கொள்ளும் அந்த மௌனமான தருணங்களில் காதலில்லாமல் அவன் கரம் பிடித்த கல்யாண நினைவுகள்
என் கண் முன்னே தோன்றி கண்ணடித்துச் செல்கின்றன….

64. நேரமில்லாதவர்கள் நேரம் கொள்ளாதவர்கள்
நேரம் கொள்ள அனுசரிக்க ஒரு நாள் நேரமின்றி எல்லா
நேரமும் காதல் கொள்ளும் நமக்கும் வேண்டுமா ஒரு தினம்
நேரம் எவ்வளவு இட்டாலும் நேர்த்தியாக கொண்டாட
நேசம் நல்கொண்டு
நெகிழ்ச்சியுடன் நெஞ்சிலுள்ள நேர்மையான காதலுடன்
நேராக சென்று வாழ்த்த வேண்டும் காதலர் தினம்!!!

65. காதலர் ஒன்றிணைந்து கைத்தலம் பற்றிட
வேதனை. தீரும் விரைந்து!
மெய்க்காதல் என்றென்றும் மாறுமோ இப்புவியில்
பொய்க்காதல் சாகுஞ் சரிந்து! .
பொழுதினைத் தள்ளவே காதலுஞ் செய்வார்
கழுகுக் கண்ணில் மாட்டாதே! .
இணையொன்று கிட்டினால் இன்பமே நாளென்று
துணையொன்று தேடாதிரு!
காதலில்லா உள்ளம் களர் நிலமே
ஆதலினால் காதல்செய் வீரன்பில் வீழ்ந்து!!

66. உன் புன்னகயுடன் சிணுங்கி விளையாடும்
வண்ண வண்ண வளையல்கள் என்னை கட்டி இழுக்க வில்லை !
உன் இடை உடைகள் யாவும் என்னை கட்டி இழுக்க வில்லை !
உன்னிடம் நான் பழகிய சில நாட்களில் கண்டேன் உன்மேல் காதலை !
காரணம் –
நான் அறிவேன் என்றுமே உன் அன்பு அது என்று சொல்வேன் !
அன்பே மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் !
இந்த காதலர் தின திரு நாளில் !
நான் உன்னை உயிராக இன்று போல் என்றுமே காதலிப்பேன் என்று!!!!

வாட்ஸ் ஆப்பிள் பகிர காதலர் தின வாழ்த்துக்கள் (Valentines Day Status For Whatsapp)

Pexels

67. உணர்வுகளாள் கருவாகி உருவாகி கனிகின்ற காதல்
உண்மை உணர்வுகளாள் பூஜிக்கப்படும் நாள் இத்திருநாள்!!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

68. மனதின் எண்ணங்கள் தந்தியின்றி சேர்த்து வைக்கும்
அன்பு மனங்களை வக்கிரம் விதைக்காதீர்
வித்தகராய் விதைகொள்ளும் இன்பச்சாரலாய் காதல் செய்வீர்
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

69. கண்ணில் என்னைப் பார்த்தேன் – கண்ணா
உன்னில் என்னைப் பார்த்தேன்!
கண்டேன் அண்ட சராசரங்களும் கூடவே
காதலி என்னையும் பார்த்தேன்!!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

70. குன்றாக் காதல் ஒளியே! கரையிலா இன்பக் கடலே!
என்றனை யாளும் இறைவா! ஆனந்த வாழ்வு தர வா!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

71. நீ மௌனம் கொண்டால் நானும் மௌனமாகிறேன்!!
உன் மௌனத்தை படிப்பதற்கென…..
என் இனிய காதலர்தின வாழ்த்துக்கள்…

72. நீ என்னைப் பார்க்கும் போது, என்னுள் நிகழ்கிறது ஜல்லிகட்டு !
முடிவில் சாந்தமாய் நான் உன் பின்னால் !
என் இனிய காதலர்தின வாழ்த்துக்கள்…

73. “வீழ்வது வெட்கமல்ல வீழ்ந்தே கிடப்பதே வெட்கம்”
வீழ்ந்தேன் நான் வெட்கப்பட்டாய் நீ…
என் இனிய காதலர்தின வாழ்த்துக்கள்!!

74. காதலர்தின வாழ்த்து ஒரு நாள் மட்டும் கொண்டாடி மகிழ்வதற்கு
காதல் ஒன்றும் திருவிழாவும் அல்ல வைத்த அன்பை
திரும்ப பெறுவதற்கு காதல் ஒன்றும் கடனும் அல்ல..
என் இனிய காதலர்தின வாழ்த்துக்கள்…

75. திறக்காத மனங்கள் எல்லாம் திறந்து கொள்ளும் நாள் இன்று!!
திறந்து நீயும் சொல்லாவிடில் எதற்குனக்கு காதல் என்று!!
தயக்கத்தை மென்று பயத்தைக் கொன்று தந்தே விடு
அவ(ள்)ன் கையில் ரோஜா ஒன்று!!!
என் இனிய காதலர்தின வாழ்த்துக்கள்…

76. நீ கேட்டு நான் கொடுக்க காதல் என்ன புத்தகமா?
பத்திரமாய் ஒருத்தனுக்கு மட்டுமே அர்ப்பணிக்கும்
இராண்டம் உயிர் கேட்டவுடன் கிடைத்திடுமா!!
இனிய காதலர்தின வாழ்த்துக்கள்…

காதலர் தின தகவல்கள் (Valentines Day Messages)

77. காகிதத்தில் கவிதை எழுதி தெருவிலே அவள் அன்ன நடையிட்டு வருவதையறிந்து வழியிலே வண்ணமலோரூடு காகிதத்தையும் போட்டு விட்டு !
நான் தென்னை மர ஓரமாக நின்று பார்கிறேன், அவள் அதை எடுக்கிறாளா என்று!
வண்ண பையிங்கிளியின் பாதாம் அருகில் பட்டவுடன் !
இதமான காற்றில் அந்த பூ மொட்டு திரும்பியது அவள் கைகள் தரையை நெருகிங்கி தழுவியது காகிதத்தை, ஒரு அழகிய புன்னகையுடன் என்னைப் பார்த்து!
இவள் வரவுக்காக காத்திருக்கும் இந்த ஒரு நாள் மட்டும் எனக்கு காதல் திரு நாள் அல்ல, தினம் தினம் இவளை நினைத்து ஏங்கும் என்றுமே எனக்கு காதல் திரு நாள் தான்!

78. வாராய காதல் கொண்டாட, கண்கள் காதலில் திண்டாட!
காதில் தென்றல் வந்தாட, செந்தமிழ் நாவில் பந்தாட!
நீ காதல் கண்ணாலே வந்து கனிமொழி பேச
நெஞ்சோடு சங்கீதம் தான் வீசும் !
என் கண்மணியே அல்லிப் பூ தேனே !
உன்னைக் கண்டு உருகினேன் நானே !

79. காதலுக்கு ஒரு கோயில் உண்டா ?
கண்கள் தவிர வேறு வீடு உண்டோ ?
தாஜ்மகாலைப் பார்த்தால் கூட உந்தன் சாயலில் தோன்றும் !
காதலினால் உயிர்கள் வாழும் காதலித்தால் துன்பம் வீழும்!
காத்திருக்கும் சுகத்தில் பூத்திருக்கும் ஜகமே!
கண்களைக் காட்டுது உந்தன் காந்தள் பூவின் முகமே!
உன் காதல் மொழிகளும் எத்திக்கும் பரவித் தேனைப் போலவே தித்திக்க!
காதலர் தினமும் புத்திக்குள் புது கலைகள் பலவற்றை கற்பிக்க!

80. கருத்தொருமித்த காதல் காலத்தால் அழியாது.
கட்டுப்பாடான உணர்வுகளோடு காதல் வளர்த்தால்
காண்போர்களிடம் கூட காதலுக்கு மரியாதை!
காட்டாற்று வெள்ளமாய் காதலுணர்வு கரை புரண்டால்
நட்டாற்றில் வீழ்கின்ற நாட்களே உருவாகும்!
தனிமைச் சந்திப்பிலும் தரங்கெடா ஒழுக்கமே
இனிமை சேர்த்திடும் இல்லறம் வரையிலும்!
காதலைக்கொண்டாடுங்கள் கனிவோடு இதயத்துக்குள்.
காட்சிப்பொருளாய் ஆக்காதீர் காதலென்ற புனிதமதை!

81. இனம், மொழி எல்லைகளைக் கடந்து மனம் மட்டும் பேசிக் கொள்ளும்
மொழி “காதல்”……
காதல் செய்வோம் என்றழைத்தான் பாரதி
அவன் பெயருக்கேற்ப பார் அதிர காதலிப்போம் வாருங்கள்……

82. என் கண்களில் எல்லாமே அழகாகத் தெரிகின்றன.
பிடிக்காததெல்லாம் இப்பொழுது பிடிக்கிறது
அவளையும் சேர்த்து கவிதையின் கருப் பொருளுக்கு
கவலைப்படுவதில்லை என் பேனா நானும் காதலிக்கிறேன்!!!

83. கண்கள் பேசிய வார்த்தை ஜாலத்தை விட அதிகமாய் கூறப்போவதில்லை,
வாழ்த்து அட்டையும்! ஒற்றை ரோஜாவும்! மனதில் கொண்டாடு காதலர் தினத்தை!
கண்டு கொள்கிறேன் கண்களில் காட்சியாய்….!

84. கவிதை போட்டியில் கலந்து கொண்டேன்
காதல் என்று தலைப்பு தந்தார்கள்…..
எதுவுமே எழுத தோன்றவில்லை.. உன்னிடம் என்ன சொல்ல
என்று நினைத்த போது…..
என்னுள் தோன்றியதை எழுதி கொடுத்து விட்டேன்…
சிறந்த கவிதை என்று முதல் பரிசு தந்தார்கள்….
அதனிலும் சிறந்த பரிசு நீ…………….

85. காத‌லைச் சொல்லிக் க‌ளிப்ப‌டையும் காத‌ல‌ர்தின‌ப் பெருவிழா!
இத‌ய‌ங்க‌ளின் இணைப்புத் திருவிழா..
இனிய‌ ந‌ட்பின் முதிர்ச்சிப் பெருவிழா!
உயிரைப் பிரிந்தால் உட‌ல் மாயும், உள்ள‌க் காத‌லை ம‌ற‌ந்தால்
உயிர்போகும்!
காத‌ல் செய்து உயிர் வ‌ள‌ர்ப்பீர்..
கால‌ம் முழுதும் ம‌கிழ்வ‌டைவீர்!…

86. காதல் என்னும் மூன்றெழுத்தை, கடமை என்னும் மூன்றெழுத்தால்
கவலை என்னும் மூன்றெழுத்தாய், காலம் என்னும் மூன்றெழுத்து
ஆக்கியதால்…
முகம் முழுதும் தாடி வைத்து, அகம் முழுதும் சோகம் வைத்து
இகம் என்னும் கானகத்தில் சுகம் இழந்த பிணமானான்…….

அன்பான காதலர் தின பொன்மொழிகள் (Lovable Valentines Day Quotes)

Pexels

87. காதலே !
என்றும் உனை நான் மறவேன்……..
முதல் நாளில் நீ சிந்திய புன்னகை
இரண்டாம் நாளில் நீ பேசிய முதல் வார்த்தை……
மூன்றாம் நாளில் எதையும் மறவேன் அன்பே….
மறக்கவும் முடியாது இன்னொரு காதலி கிடைக்கும் வரை…..

88. ஆயிரம் ஆசைகள்… அத்தனையும் நிறைவேற்ற ஆயிரம் ஆயுள்
வேண்டும் உன்னோடு மட்டும் !!!
வாழ்க்கை தெரியவும் புரியவும் உன்னோடு வாழவேண்டும் ஓர் வாழ்க்கை!!!
காதல் பறவை பட்டாம் பூச்சியாய் அமர்ந்து, பறவையாய் பறந்து சென்றாள்…
இரை தேட அல்ல நல்ல துனை தேட……

89. நீ பூமி நான் வானம், இடையில் தென்றலுக்குப் பொறாமை,
தேனிலும் இனிமையிலும் இனிமை!
நம் காதலைப் போல் எதுவும் இல்லையாம்!!!
அன்பே!!!
கடற்கரையில் நீ நடக்கும் போது அலைகளுக்குள் போராட்டம்
உன் பாதங்களை யார் முதலில் முத்தமிடுவது என்று!!!

90. “இதயத்துடிப்பின் அர்த்தம்” உன் இதயத்தை கேட்டு பார்
ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு அர்த்தம் சொல்லும்.
ஆனால் ….
என் இதயத்தை கேட்டு பார் ஒவ்வொரு துடிப்பின் அர்த்தமே நீதான்
என்று சொல்லும்…!!!

91. நினைத்தவளோட வாழ குடுத்து வைக்காவிட்டாலும்
அவள் வாழ்க்கை பட்டுப்போக காரணமாய் இருப்பதல்ல காதல்!
அவள் வாழ்க்கைப்பட்டுப் போற இடத்தில்
சந்தோசமாய் வாழ நினைப்பது தான் உணமைக்காதல்….

92. அறிமுகம் இல்லாத எண்ணம் மறைந்து போகும்
உன்னை கண்டால்!!
காதலை தேடிய காகிதம்! காகிதத்தை தேடிய பேனா!
பேனா உள்ளே உறங்கிக் கொண்டு இருக்கும் மை!
இது தான் காதல்!!!

93. இன்று ஒரு நாள் மட்டும் இதயத்துக்குள் காதல் பூசியுங்கள்
புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து, அகக் கண்ணால் அன்பு செலுத்துங்கள்
நேருக்கு நேர் சந்தித்து பேசாதீர்கள் நெஞ்சுக்குள்ளேயே ஆராதியுங்கள்!!!
கண்ணியமாய் கருணையாய் கண் இமைக்குள் கண்ணாக்கி
காதலை நீங்கள் தெய்வமாக்க – உங்களுக்கு
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

94. ஒருவர்க்கு ஒருவர் அன்பை பகிர்ந்து,
ஒருவர்க்கு ஒருவர் விட்டு கொடுத்து,
ஒருவர்க்கு ஒருவர் மதிப்பளித்து,
ஒருவர்க்கு ஒருவர் புரிந்து கொண்டு,
ஒருவர்க்கு ஒருவர் உண்மையாய் அவளுக்காக அவனும்
அவனே நினைவாக அவளும்.. வாழும் அன்பான இதயங்களுக்கு….
காதலர் தின வாழ்த்துக்கள்!!!

95. காதலர்களே உங்களுக்கு
காதலர் தின வாழ்த்து……….
இன்று ஒரு நாள் மட்டும்
இதயத்துக்குள் காதல் பூசியுங்கள்
புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து
அகக் கண்ணால் அன்பு செலுத்துங்கள்
நேருக்கு நேர் சந்தித்து பேசாதீர்கள்
நெஞ்சுக்குள்ளேயே ஆராதியுங்கள்

96. கடற்கரையிலும் காபி பாரிலும்
கட்டிப் பிடித்துக் கொள்வது காதல் அல்ல
கண்ணியமாய் கருணையாய்
கண் இமைக்குள் கண்ணாக்கி
காதலை நீங்கள் தெய்வமாக்க – உங்களுக்கு
காதலர் தின வாழ்த்துக்கள்!!!

மனம் கவர்ந்த காதலர் தின பொன்மொழிகள் (Inspiring Valentines Day Quotes)

97. காதல் – உயிர் கொண்டு தொடுக்கும் பூச்சரம்;
பொய்யின் பால் குடித்து வளரும் உண்மை குழந்தை….
கவிதை தத்துவம் பாடல் தொடங்கி
உலகின் ஒட்டு மொத்த இயக்கம் ,ஏன் வேற்று கிரக பிரவேசம் வரை
காதலே பிரதானம்!

98. விதியை மட்டுமே நம்பும் இடத்தில், வாழ்கை தோற்று போகிறது!!
காதலின் முதல் வெற்றியே விதியை வெல்வதில் இருந்து தான்
தொடங்குகிறது….
ஹோர்மோன் தூண்டல் மட்டுமே காதல் இல்லை என்று புரிய
கொஞ்சம் காலம் எடுக்கும்….
காதலர் தின வாழ்த்துக்கள்!!!

99. கண்ணசைவில் அரும்பிடும் காதல், கை அசைவால் தொடர்ந்திடும் காதல்
விரும்பியே பேசி விரிந்திடும் காதல், இதயங்களை இணைத்திடும் காதல் !
சாதிமதத்தை மறக்கடிக்கும் காதல், உணர்வால் உருவாகுவதே காதல் !
இனம்மொழியை இணைத்திடும் காதல் தகுதியெனும் தடைகளை மீறும் காதல் !
காதலர் தின வாழ்த்துக்கள்!
தள்ளாடும் தாமரைகள் தரையினிலே, விழுந்து தவித்திடுமே தாபத்தீயினிலே !
தொட்டிடும் இதயங்கள் தொடர்ந்திடும், சொந்தமாகும் காதலெனும் பந்தத்தால் !
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!

100. காதலெனும் கட்டுமரங்கள் கடலினிலே
கவிழ்ந்தாலும் எழுந்திடுமே ஊடலிலே !
கரை சேரும் எதிர் நீச்சலால் பல காதல்
கடல்நீரில் மூழ்கிடுமே சில காதல் !

101. காதலிக்கும் உள்ளங்களே முடிவெடுங்கள்
காதல் வயப்ப்படும் முன் சிறிது சிந்தியுங்கள் !
கண்ணாக வளர்த்தோரை நினைத்திடுங்கள்
காதலிக்கும் தகவலை சொல்லி விடுங்கள் !

102. இருவீட்டார் இசைந்த பின் தொடர்ந்திடுங்கள்
இதய நிறைவுடனே நீங்கள் காதலியுங்கள் !
காலமும் மகிழ்ந்திட ஞாலத்தில் வாழ்ந்திட
காதலர் தினம் நீங்கள் கொண்டாடுங்கள் !

103. காதலர் தினம் கொண்டாடும் உள்ளங்களே
அன்னை , தந்தை , முதியோர் தினத்தையும்
என்றும் மறவாதீர் மகிழ்வோடு கொண்டாட மண்ணில் உள்ளவரை மனிதராய் உள்ளவரை !
காதலிக்கும் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் !

104. கருத்தொருமித்த காதல் காலத்தால் அழியாது.
கட்டுப்பாடான உணர்வுகளோடு காதல் வளர்த்தால்
காண்போர்களிடம்கூடகாதலுக்கு மரியாதை!
காட்டாற்று வெள்ளமாய் காதலுணர்வு கரைபுரண்டால்
நட்டாற்றில் வீழ்கின்ற நாட்களே உருவாகும்!
தனிமைச் சந்திப்பிலும் தரங்கெடா ஒழுக்கமே
இனிமை சேர்த்திடும் இல்லறம் வரையிலும்!
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!!!

105. மனமொன்றி நேசித்து மனைவியாய் மாறியும்
வாரிசுகள் பெற்று வசதிகள் பெருகியும்
வாழ்க்கைப் பிரச்சினைகள் வதைப்பது தாளவில்லை…..
திருமண வாழ்க்கை தூரத்துக் கானல்நீர்….
மீண்டும் வராதோ அந்த மெல்லிய உணர்வுகளென
ஏங்கும் என் துணைவியை எப்படி நான் தேற்றிடுவேன்?

மேலும் படிக்க – நீங்கள் அதிகம் நேசிப்பவருக்கு சுவாரசியமான காதல் கவிதைகள்! 

பட ஆதாரம்  – Shutterstock 

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Lifestyle