Beauty

இந்த ஒரு பொருளை பயன்படுத்தி கூந்தலை நீரில் அலசிய தோற்றத்தை நொடிகளில் பெறுங்கள் !!

Nithya Lakshmi  |  Feb 21, 2019
இந்த ஒரு பொருளை பயன்படுத்தி கூந்தலை நீரில் அலசிய தோற்றத்தை நொடிகளில் பெறுங்கள் !!

என் உச்சந்தலையில் அதிகமாக எண்ணெய் பசை ஏற்படும். ஆகையால் நான் இரண்டு நாட்களிற்கு ஒரு முறை என் கூந்தலை அலசுவது பழக்கம். என் கூந்தலின் அமைப்பு மென்மையானது. அதனால் , அதை அடிக்கடி அலசும்போது மிகவும் வறண்ட தோற்றத்தை குடுக்கும். ஆகையால், என்னால் அடிக்கடி அலச முடியாது. இதற்கு மேல், எல்லோருக்கும் இருக்கும் முடி கொட்டும் பிரெச்சனைகள் எனக்கும் இருக்கிறது என்று சொன்னால் அதில் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை.

இந்த நிலையில், கூந்தலை அலசும்  நாட்களிற்கு நடுவில் எங்கேயாவது செல்லும் யோசனைகள் இருந்தால், என்னால் அந்த புத்துணர்ச்சி ஊட்டும் தோற்றத்தை இயல்பாக குடுக்க முடியாது. இதற்கு நான் என்ன செய்வது என்று பல ஆராய்ச்சிகள் செய்து பார்த்தேன். அப்போதுதான் எனக்கு இந்த ட்ரை ஷாம்பூவின் (dry shampoo) பயன்களை பற்றி தெரிய வந்தது.
இது தண்ணீர் இல்லாமல் உங்கள் கூந்தலிற்கு  புத்துணர்ச்சி அளிக்க உதவும்!

உலர்ந்த (ட்ரை) ஷாம்பூ என்றால் என்ன ?

இது மற்ற ஒப்பனை பொருட்களை போலதான். உங்கள் வாசனை திரவியங்களை போல இதுவும் ஒரு ஸ்பிரே பாட்டிலில் வருகிறது. இதன் பேக்கிங் இதை பயன்படுத்த மிகவும் எளிதாக அமைந்திருக்கிறது.இது வெறும் பவுடர் வடிவில் இருக்கும் ஒரு ஷாம்பூ. இது உங்கள் கூந்தலில் இருக்கும் எண்ணெய் பசையை உறிஞ்சி அதை அடர்த்தியாக இருப்பது போல் காண்பிக்க உதவும். மேலும் இதில் இருக்கும் பவுடர் மற்றும் மற்ற பொருட்கள் உங்க கூந்தலை மென்மையாக்கி நறுமணத்தை  குடுக்கும்.

இதை எவ்வாறு பயன்படுத்தலாம்?

படம்

நீங்கள் தலை அலச முடியாத நாட்களில், பயணம் செய்யும் நாட்களில், ரயிலில், அல்லது உங்களுக்கு கூந்தலை அலச நேரம் இல்லாத போதிலும் இது உங்களுக்கு உபயோகமாக இருக்கும். உங்கள் வாசனை திரவியத்தை  போல் உங்கள் கூந்தலில் (உச்சந்தலையில்) 2அடி தூரத்தில் இதை வைத்து அடியுங்கள்.உங்கள் விரல்களால் மிதமாக கூந்தலை கோதி விடுங்கள். 

கூந்தலில் இருக்கும் எண்ணெயை உரிய ஏதேனும் ஒரு டால்கம்/பேபி  பவுடர் போதுமானதாக இருந்தாலும், இது போன்ற ஷாம்பூகளில் இருக்கும் மற்ற நன்மைகள் உடன் வருவது சந்தேகம் தான் . மேலும் உங்கள் கூந்தலை தண்ணீரில் அலசியது போல் வராவிட்டாலும், தண்ணீர் இல்லாத நேரங்களில் இது போன்ற ஷாம்புகள்  உங்களுக்கு நிச்சயம் கை குடுக்கும்.

நான் பயன்படுத்திய ட்ரை ஷாம்பூ – பாடீஸ்ட் (Batiste)

இதை இங்கே வாங்குங்கள்

என் கூந்தலை பற்றி கூறுகையில், அது மிக மிக மென்மையாகவும்  நீளமாகவும் இருக்கும். என்னை பார்த்து என் தோழிகள் மற்றும் சகோதரிகள் ‘உன் தலை முடி எவ்வளவு சாப்ட்’ என்று பலமுறை கூறி இருக்கிறார்கள்! இருப்பினும் என் கூந்தல் அவ்வளவு திடமானது அல்ல. அதனால், நான் எந்த ஒரு கூந்தல் சார்ந்த பொருட்களையும் உபயோகிப்பதில்லை.
இதை நான் கூறுவது  ஏன் என்றால், நான் என் கூந்தலை (hair) கொண்டு எவ்வளவு உணர்ச்சிபூர்வமாக இருக்கிறேன் என்று நீங்கள் அறிய தான். இந்நிலையில், நான் பாடீஸ்ட் எனும் ட்ரை ஷாம்பூவை ஒரு நாள் பயன்படுத்தினேன்.

எனக்கு மிகவும்  பிடித்தது –

பாடீஸ்ட் ட்ரை ஷாம்பூவில் மூன்று வித நறுமணச்சுவை இருக்கிறது. நீங்கள் கூந்தலை அலசாத அந்த நாட்களில் மிக நம்பிக்கையுடன் புத்துணர்ச்சியுடன் (ஸ்டைல்) வெளியில் செல்ல வேண்டும் என்றால் அதற்க்கு சிறந்த பொருள் இது போல் ஒரு ட்ரை  ஷாம்பு தான் .

மற்ற பிராண்டுகளில் கிடைக்கும் ட்ரை ஷாம்புகள் –

டவ் இன்விகோரேட்டிங் ட்ரை ஷாம்பு
பி ப்ளண்ட் பாக் லைப் ட்ரை ஷாம்பூ
வெள்ளா ப்ரொபெஷனல்
ஐனிஸ்பிரீ ட்ரை ஷாம்பு

இனி நீங்கள் உங்கள் பார்ட்டி, காலேஜ் , இன்டெர்வியூ , அலுவலகம் என்று போகும் அணைத்து இடங்களிலும் ட்ரை ஷாம்பூவை ( உங்கள் கூந்தலை அலசும் நாட்களின் இடையில்..) பயன்படுத்தலாம்!

பட ஆதாரம்  – இன்ஸ்டாகிராம் 

 
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Beauty