Bigg Boss

சமயம் பார்த்து கமலை பலி வாங்கிய காயத்ரி! வச்சு செய்றதுன்னா இது தான் போல

Mohana Priya  |  May 15, 2019
சமயம் பார்த்து கமலை பலி வாங்கிய காயத்ரி! வச்சு செய்றதுன்னா இது தான் போல

பிக்பாஸ் சீசனில் தன்னை கமல் கிண்டலடித்ததை காயத்ரி(gayathri) தற்போது வைத்து செய்கிறார் என நெட்டீசன்கள் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து காயத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் எனக்கு அறிவுரை கூறிய நீங்கள், இந்துக்களிடம் மன்னிப்பு கேளுங்கள் என்று கமல்ஹாசனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெயிலால் ஏற்படும் வரண்ட சருமம் சரி செய்வதற்கான எளிய முறைகள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து பிக் பாஸ் சீசன் 3 ஒளிபரப்பாக உள்ளது. முன்னதாக 2017-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஆரவ், ஓவியா, சினேகன், வையாபுரி, காயத்ரி(gayathri) ரகுராம், ஜூலி உள்ளிட்ட மொத்தம் 19 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த கமல் போட்டியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக இவர், காயத்ரி(gayathri) ரகுராம் ஓவியாவுக்கு இடையே அடிக்கடி முட்டி கொள்ளும். அதனால் காயத்ரியை(gayathri) கமல் மறைமுகமாகவும் நேரடியாகவும் தாக்கிப் பேசினார். பதிலுக்கு என் அப்பாவை தவிர எனக்கு யாரும் அட்வைஸ் பண்ண கூடாது? என்று புறம்பேச அதற்கும் கமல் பதிலடி கொடுக்க, திக்குமுக்காடி நின்றார் காயத்ரி(gayathri) ரகுராம்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அரவக்குறிச்சியில் பேசிய கமல்ஹாசன், ‘முஸ்லிம்கள் அதிகம் வாழும் இடம் என்பதற்காக நான் இதைக் கூறவில்லை. காந்தியின் சிலையின் முன்பு நின்று கூறுகிறேன். சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று கூறினார். கமலின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையாகி உள்ளது. கமல் இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டார் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காயத்ரி(gayathri), ‘மன்னிக்கறவங்களோட மன்னிப்பு கேக்கறவங்க தான் பெரிய ஆளு, நல்ல மனிதர் என்று நீங்கள் என்னிடம் பலமுறை கூறியிருக்கிறீர்கள். எனவே இந்துக்களிடம் மன்னிப்பு கேட்பது பெரிய விஷயம் ஆகிவிடாது. இதில் நீங்கள் மதத்தினை உள்ளே கொண்டு வராதீர்கள்.

மாற்றத்தை கொண்டு வருவீர்கள் என்று மக்கள் பெரிதும் நம்பி இருக்கிறார்கள் மற்றவர்களைப் போல நீங்களும் இருப்பதை விரும்பவில்லை’ என்று பதிவிட்டுள்ளார். மேலும் தன்னுடைய மற்றொரு பதிவில், தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை. இங்குள்ள மத வெறுப்பாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள். ஜெயலலிதா அம்மா இருந்திருந்தால் அதை நடத்தியிருப்பார். இந்த சத்தமே இருக்காது. நீங்களும் அதையே செய்யுங்கள்’ என்று கூறியுள்ளார்.

என்னுடைய தவறு தான்! அன்னையர் தினத்தன்று உறுக்கமான பதிவு வெளியிட்ட ஸ்ரீரெட்டி

காயத்ரி(gayathri) ரகுராமின் பதிவை கண்ட பலரும் காயத்ரி(gayathri) சரியான நேரத்தில் கமலை வச்சு செய்கிறார் என்று கூறி வருகின்றனர்.

பெண்களின் மார்பகம் பற்றி ஆண்கள் கூறும் கருத்துக்கள்!

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Bigg Boss