Celebrity Life

என் மனைவி ஆசையை நிறைவேற்றிவிட்டேன், அஜித் இன்றி இது சாத்தியமில்லை : நெகிழ்ந்த போனி கபூர்!

Swathi Subramanian  |  Aug 6, 2019
என் மனைவி ஆசையை நிறைவேற்றிவிட்டேன், அஜித் இன்றி இது சாத்தியமில்லை : நெகிழ்ந்த போனி கபூர்!

தன் மனைவி ஸ்ரீதேவியின் கனவை நினைவாக்கியுள்ளதாக நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்னும் இரு தினங்களில் வெளியாக இருக்கிறது. அமிதாப் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் அஜித்குமார் நடித்துள்ளார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லிகணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.

சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்த ஆங்கர்கள் குறித்து ஒரு பார்வை!

twitter

பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் அடிப்படைக் கதை அம்சத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப கமர்ஷியல் அம்சங்களை சேர்த்து நேர்கொண்ட பார்வை படத்தை உருவாகியிருப்பதாக இயக்குநர் ஹெச்.வினோத் கூறியுள்ளார். நாளை மறுநாள் படம் வெளியாக உள்ள நிலையில் எல்லா திரையரங்குகளிலும் டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் திரையரங்குகள் முன் குவிந்துள்ளனர். 

இந்நிலையில் இப்படத்தின் பிரிமீயர் காட்சி இன்று சிங்கப்பூரில் காலை 9 மணிக்கு நடந்தது. பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்களுக்கான பிரிமீயர் காட்சியை ஒரு தினம் முன்னதாக மட்டுமே திரையிடுவார்கள். ஆனால் இப்படத்தை இரண்டு தினம் முன்பே திரையிட்டு ஆச்சரியப்படுத்தி உள்ளார்கள். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ‘என்னுடைய மனைவி ஸ்ரீதேவியின் கனவை நான் நிறைவேற்றிவிட்டேன்.

 

இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு சிங்கப்பூரில் இன்று ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடல் ஆரம்பிக்கிறது. அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் இல்லாமால் இது சாத்தியமில்லை. நேர்கொண்ட பார்வை படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார். ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் அஜித் கவுரவத் தோற்றத்தில் நடித்தார். அப்பொழுது அஜித்தை வைத்து தன் கணவர் போனி கபூர் ஒரு தமிழ் படத்தை தயாரிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி ஆசைப்பட்டார்.

சின்னத்திரை கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி ஜாக்குலின் : புரோமோ வெளியீடு!

twitter

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சமூக அக்கறை கொண்ட படத்தில் அஜித்தை நடிக்க வைக்க விரும்பினார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியின் ஆசை நிறைவேறுவதற்குள் அவர் இறந்துவிட்டார். மறைந்த தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற அஜித்தை வைத்து பிங்க் படத்தை தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் போனி கபூர். ஹெச். வினோத் இயக்கியுள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் 8ம் தேதி ரிலீஸாக உள்ளது. 

இந்நிலையில் உணர்வுபூர்வமாக போனி கபூர் ட்வீட் செய்துள்ளார். இதற்கு அஜித் ரசிங்கர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். நேர்கொண்ட பார்வை படம் சிங்கப்பூரில் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆனால் படம் கசிந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் சார் என்று அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் நடிக்கும் படத்தையும் ஹெச். வினோத் தான் இயக்குகிறார், போனி கபூர் தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஹெலிகாப்டர் பெற்றோர்” – உலகின் மிக நீண்ட தொப்புள் கொடி பற்றி அறிந்ததுண்டா ?

twitter

இதனிடையே இந்த படத்தில் ‘அகலாதே…’ என்ற பாடல் வைரல் ஆகி வருகிறது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா இசையமைத்து பாடியிருக்கிறார். பா.விஜய் பாடல் வரிகளை எழுத யுவனுடன் இணைந்து பிரித்வி பாடியிருக்கிறார். இந்த பாடல் கணவன் – மனைவிக்கு இடையேயான பாசம், காதல் மற்றும் புரிதலை விளக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. கணவன் மனைவியிடம் ஒரு நொடி கூட என்னை விட்டு செல்லாமல் இருக்க வேண்டும். 

என் வாழ்வில், நடுவில் வந்த உறவு என்றாலும், நெடுந்தூரம் வருபவள் நீதான். என் குறைகள் நூறை மறந்து, எனக்காக தன்னை அர்பணித்தவள் என்று கணவன் மனைவியை புகழும் விதத்தில் பாடல் வரிகளை அமைத்திருக்கிறார் பா.விஜய். இந்த பாடல் வரிகளுக்கு மனதை மயக்கும் விதத்தில் இசையமைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அவருக்கே உரிய பாணியில் இந்த பாடலை பாடியிருக்கிறார். இந்தியில் வெளியான இப்படத்தின் நீளம் 130 நிமிடங்கள். ஆனால் நேர்கொண்ட பார்வை 158 நிமிடங்களுக்கு உள்ளது. 

twitter

இதுகுறித்து ஆங்கில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத், “மூலப்படத்தின் அடிப்படைக் கதை அம்சத்தை மாற்ற விரும்பவில்லை. அஜித் ரசிகர்களை மனதில் வைத்துக் கொண்டு கூடுதலாக 25 நிமிடங்களை நேர்கொண்ட பார்வை படத்தில் இணைத்துள்ளேன். இதில் வித்யாபாலன் வருகிற 10 நிமிடங்களும் உள்ளன. படத்தின் மையக்கருத்தை இழக்காமல் கமர்ஷியல் படமாக உருவாக்க எண்ணினேன்” என்று கூறியுள்ளார். 

இந்த படம் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் சிறப்பு காட்சி இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் இருந்து பட காட்சிகள், வசனங்கள் எதுவும் வெளியாக கூடாது என்று பெரிய பதற்றத்தில் ரசிகர்கள் உள்ளார்கள். இதில் படத்தின் முதல் பாதி முடிய பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Celebrity Life