Lifestyle

தாம்பத்ய பலம் தேவைப்படும் ஆண்களுக்கானது ! ரகசியங்கள் ரகசியமாக இருக்கட்டும்!

Deepa Lakshmi  |  Dec 11, 2019
தாம்பத்ய பலம் தேவைப்படும் ஆண்களுக்கானது ! ரகசியங்கள் ரகசியமாக இருக்கட்டும்!

தாம்பத்ய நேரங்களில் சீக்கிரமே உச்சக்கட்டம் செல்வது பல ஆண்களின் ரகசிய சங்கடங்கள்.. மேலும் தாம்பத்ய சுகத்திற்கு உடல் வலிமைக்கும் ஒன்றோடன்று தொடர்பு இருக்கிறது. ஆண்கள் வீர்யம் அவர்களது விந்தணுக்களில் அதிமாக இருக்கிறது. ரத்த அணுக்களில் கலந்திருக்கிறது.                                                    

ஆண்களின் உடம்பில் வலு சேர்க்க ரத்த அணுக்கள் புதியதாக சில உணவுகளை உங்களுக்கு ரகசியமாக பரிந்துரை செய்கிறோம். இதனை நீங்கள் தினமும் உங்கள் உணவுகளில் சேர்த்து வந்தால் தாதுபலம் (sexual strength) பெற்று தாம்பத்யத்தில் குதிரையின் வேகத்தை அடைவீர்கள்.                                                                        

 

முருங்கை கீரை

முருங்கைக்காய் என்றாலே எல்லோரும் இன்று கூட நமுட்டு சிரிப்பு சிரிப்பார்கள். உண்மையில் இரும்பு சத்து அதிகம் கொண்ட ஒரு மரம்தான் முருங்கை மரம். முருங்கை கீரையை பருப்பு மற்றும் முட்டையுடன் சேர்த்து ஒரு மாதம் சாப்பிட்டு வாருங்கள். ஆண்மை வீர்யம் அதிகரிக்கும்.                           

பொன்னாங்கண்ணி கீரை

தொடர்ந்து ஒரு மாதம் உங்கள் உணவில் பொன்னாங்கண்ணி கீரை மற்றும் நெய் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். பொன்னாங்கண்ணி பெயருக்கேற்றாற்போல உடலை தங்கம் போல மினுமினுக்க வைக்கும். உடலில் ரத்த அணுக்கள் கூடும். இரவில் ஆண்மை பலம் அதிகமாகும்.

Youtube

புதினா

ரத்த அணுக்களை அதிகரிப்பதில் புதினா உதவுகிறது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. தினமும் புதினாவை உங்கள் உணவில் சேர்த்தி வாருங்கள். டீ போட்டு கூட குடிக்கலாம். உடல் ஆரோக்கியம் தாம்பத்ய பலம் அதிகரிக்கும்.                                   

உலர் திராட்சை

உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்திகரிக்க உலர் திராட்சை பழம் உதவுகிறது. அனுதினமும் ஒரு உள்ளங்கை அளவு உலர் திராட்சை எடுத்து மென்று சாப்பிடுங்கள். உங்கள் தாம்பத்ய பலம் கூட அவசியமான ரத்த அணுக்களை இது அதிகரிக்க செய்யும்.                                         

Youtube

பப்பாளி பழம்

தினமும் சில துண்டுகள் பப்பாளி சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் அருந்தி வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். ரத்த அணுக்கள் கூடும். தாம்பத்யத்தில் நீங்கள் திருப்தியாக உணர்வீர்கள். ஆகவே பப்பாளி ஆண்களுக்கு அருமருந்து.                                          

அத்திப்பழம்

அத்திப்பழம் என்பது ஆண்மை அதிகரிக்க உதவி செய்யும் பழம். இப்பழத்தை உலர வைத்து சாப்பிடுவது ஆரோக்கியம் அதிகரிக்க செய்யும். உலர் அத்திப்பழத்தை பாலில் ஊற வையுங்கள். இதனை மிதமான சூட்டில் கொதிக்க வைத்து அதன் பின்னர் அந்த பாலை குடித்து அத்திப்பழத்தை மென்று சாப்பிடுங்கள். தாம்பத்ய நேரங்கள் இனி உங்களுக்கானதுதான்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Lifestyle