Beauty

பூக்களை பயன்படுத்தி சரும அழகை பாதுகாப்பது எப்படி : தெரிந்து கொள்ளுங்கள்!

Swathi Subramanian  |  Aug 14, 2019
பூக்களை பயன்படுத்தி சரும அழகை பாதுகாப்பது எப்படி : தெரிந்து கொள்ளுங்கள்!

பூக்கள் (flowers) ரசிப்பதற்கு மட்டும் அழகல்ல, அழகுக்கே அழகு சேர்க்கும் அற்புத குணங்கள் கொண்டவை.  அழகான பூக்கள் நமது சரும அழகை மேம்படுத்த உதவுகிறது. ஏனென்றால் பூக்களில் அதிகப்படியான புரதச்சத்துக்களும், வைட்டமின்களும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் மற்றும் சருமத்திற்கு நன்மை பயக்கும் பல்வேறு சத்துக்கள் உள்ளது. இந்தப் பூக்களை நமது முகத்திற்கு உபயோகிப்பதால் முகமானது பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.  சாமந்திப்பூ, செம்பருத்தி, ரோஜா, மல்லிகை, மகிழம் பூ உள்ளிட்ட பூக்கள் சரும அழகிற்கு முக்கிய பங்காற்றுகிறது. 

கண்ணாடி போன்ற சருமத்தை பெற தினமும் செய்ய வேண்டிய இயற்கை ஃபேஸ் பேக்ஸ்!

pixabay

ரோஜா பூ

ரோஜா பூவானது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. ரோஜா இதழ்கள் சிலவற்றை சூரிய ஒளியில் உலர செய்து பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவும். 2 ஸ்பூன் ரோஜா இதழ் பொடியுடன் 2 ஸ்பூன் கோதுமை மாவு மற்றும் சிறிது தயிர் சேர்த்து ஒர பேஸ்ட் போல கலந்துக் கொள்ள வேண்டும். இதனை முகத்தில் போட்டு சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இது முகத்திலுள்ள பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்கி, சருமத்தைப் பளபளப்பாக்கும்.

மல்லிகைப் பூ

வெயிலினால் ஏற்பட்ட கருமை போக்கும் தன்மை மல்லிகைப் பூவிற்கு உள்ளது. ஒரு கப் மல்லிகைப்பூவுடன் 4 லவங்கம் சேர்த்து அரைக்கவும். அதில் சுத்தமான சந்தனம் சேர்த்து, வெதுவெதுப்பான தண்ணீர் விட்டுக் முகம், நெற்றி, கழுத்து, முதுகுப் பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சின்னச் சின்ன கட்டிகள் சரியாகி சருமம் ஒரே சீரான நிறத்துக்குத் திரும்பும்.

மகிழம் பூ

மகிழம் பூவை தினமும் உபயோகித்துக் குளிப்பதால் வியர்வை நாற்றமே இருக்காது. ஒரு கைப்பிடி அளவு மகிழம் பூவை ஊற வைத்து அரைக்கவும். இது வெயிலினால் உண்டாகும் சருமப் பிரச்னைகளைத் தவிர்க்கும். மகிழம் பூவை பொடி செய்து குளிக்கும் நீரில் கலந்து குளித்து வர வேண்டும். இதனால் வெயிலில் அலைந்ததால் உண்டான வேர்க்குரு, வேனல் கட்டிகள் போன்றவற்றையும் விரட்டும். 

எண்ணெய் பசை சருமத்திற்கான காரணங்கள் மற்றும் இயற்கை முறையில் பராமரிக்கும் வழிமுறைகள்!

pixabay

செம்பருத்தி பூ

செம்பருத்தி பூ சரும சுருக்கங்களை நீக்கி இளமை தோற்றத்தை தருகிறது. செம்பருத்திப் பூக்களை (flowers) வெயிலில் காய வைத்து பொடி செய்த வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 3 ஸ்பூன் செம்பருத்தி பொடியுடன் 4 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் சந்தன பவுடர் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை தினமும் போட்டு வந்தால் முகமானது பொழிவுடனும் மிருதுவாகவும் இருக்கும். 

குங்குமப் பூ

சிகப்பழமைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப் பூ ஒன்றே போதும். குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும்,உதடுகளிலும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

மருத்துவ குணங்கள் நிறைந்த வெட்டி வேர் : ஆரோக்கிய மற்றும் அழகு பலன்கள் !

ஆவாரம் பூ

ஆவாரம் பூ (flowers) 100 கிராம் ஆவாரம் பூவுடன், 50 கிராம் வெள்ளரி விதை சேர்த்து பால் விட்டு விழுதாக அரைத்து முகம், கழுத்து, கை, கால்களுக்கு பேக் மாதிரி போடலாம். இயற்கையான சன் ஸ்கிரீமாக ஆவாரம்பூ செயல்படும். ஆவாரம் பூவை தினமும் தூங்குவதற்கும் சாப்பிட்டு படுத்தால் உடல் தங்க நிறம் பெறும். முகத்திலுள்ள தேவையில்லாத முடிகளை நீக்க, கோரைக்கிழங்கு, உலர்ந்த ஆவாரம் பூ, பூலான் கிழங்கு இம்மூன்றையும் சம அளவு எடுத்து பசை போன்று செய்து தினமும் முகத்தில் தேய்த்து குளிக்க வேண்டும். 

pixabay

தாமரை பூ

தாமரை  பூ வறண்ட சருமத்திற்கு மிகவும் நல்லது. மேலும் இது சருமத்துளைகளை இறுக்க செய்வதோடு சருமத்திற்கு நல்ல நிறத்தையும் தரக்கூடும். 5 முதல் 6 தாமரை இதழ்களை சிறிது பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சிறிது பாதாம் பவுடரை சேர்த்து முகத்தில் போட வேண்டும். சிறிது நேரம் கழித்து அதனை கழுவி விட வேண்டும். 

ஜாதிமல்லியும் முல்லையும்

ஜாதிமல்லி மற்றும் முல்லையில் தலா 10 பூக்கள் எடுக்கவும். அத்துடன் 2 டீஸ்பூன் பால் சேர்த்து நைசாக அரைத்து முகம், உடம்பு முழுக்கவே தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து, பிறகு கடலை மாவு, பயத்த மாவு கலந்த குளியல் பொடி உபயோகித்துக் குளிக்கலாம். இது வெயில் காலத்தில் உண்டாகிற அத்தனை சருமப் பிரச்னைகளுக்கும் தீர்வு தரும்.

இதில் எதையாவது ஒன்றை தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Beauty