Beauty

உங்கள் சருமம் என்றும் இளமையாக இருக்க வேண்டுமா? பயன்படுத்துங்கள் ஆளி விதை மாஸ்க்!

Swathi Subramanian  |  Oct 9, 2019
உங்கள் சருமம் என்றும் இளமையாக இருக்க வேண்டுமா? பயன்படுத்துங்கள் ஆளி விதை மாஸ்க்!

உலகத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த ஆளி விதை எண்ணெய் வித்துக்களில் முக்கியமான ஒன்று.  அதிக நார்ச்சத்து மிகுந்த உணவாக கருதப்படும் ஆளி விதையை (flax seed) நமது அன்றாட உணவில் சேர்த்து வர இளைமையான தோற்றம் தக்க வைக்கப்படும். ஆளி விதையில் உள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலம் சருமத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது. 

இது உடலில் இருக்கும் மாசுக்களை நீக்கி வறண்ட சருமத்தை மிருவாக்கும். இதில் உள்ள மூலப்பொட்கள் முகம் மற்றும் சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை தருகிறது. மேலும் சுருக்கங்களை போக்கி சருமம் என்றும் இளமையாக வைத்து கொள்ள உதவுகிறது. ஆளி  விதை மாஸ்க் கொண்டு உங்கள் சரும அழகை பாதுகாக்கும் விதம் குறித்து இங்கே பார்ப்போம்.

pixabay

சுருக்கங்களை நீக்க

தேவையான பொருட்கள் 

ஆளி விதை – 1 டேபிள் ஸ்பூன்,
முல்தானி மட்டி  -1 டீஸ்பூன்,
ரோஸ் வாட்டர் – 1/2 டீஸ்பூன். 

தெளிவான மற்றும் அழகான சருமத்திற்கு – தக்காளி பேஸ் பாக்!

முதலில் ஆளி விதைகளை  நன்கு அரைத்து கொள்ளவும். இதனுடன் முல்தானி மட்டி, ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி உலர விட வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பட்டுபோல மின்னும். மேலும் இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வர சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கும். 

pixabay

இளமையான சருமத்திற்கு

மாஸ்க் -1

தேவையான பொருட்கள் 

1 தேன் – 1 ஸ்பூன்,
ஆளி விதை – 1 ஸ்பூன்,
யோகார்ட் – 1 ஸ்பூன்.

ஆளி விதையை (flax seed) பொடி செய்து அதனுடன் தேன், யோகார்ட் கலந்து முகம் கழுத்து ஆகியவற்றில் தடவுங்கள். மேல் நோக்கி மெதுவாய் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். யோகார்ட் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றிவிடும். ஆளிவிதை சுருக்கங்களை போக்கி சரும இறுக்கத்தை தரும். மேலும் தேன் ஈரப்பதம் அளித்து, சுருக்கங்களை போக்கி, இளமையான மென்மையான சருமம் தரும். இதனை வாரம் மூன்று நாட்கள் செய்து வர நல்ல பலன்கள் கிடைக்கும். 

சோனா முதல் அக்ஷயா வரை! ஜோதிகாவைப் பற்றி நீங்கள் அறிந்திடாத சில சுவாரசியமான விஷயங்கள் !

மாஸ்க் – 2 

தேவையான பொருட்கள் 

1 தேன் – 1 ஸ்பூன்,
ஆளி விதை – 1 ஸ்பூன்,
யோகார்ட் – 1 ஸ்பூன்.

ஆளி விதையை பொடி செய்து அதனுடன் தேன், யோகார்ட் கலந்து முகம் கழுத்து ஆகியவற்றில் தடவுங்கள். மேல் நோக்கி மெதுவாய் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். யோகார்ட் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றிவிடும். ஆளிவிதை சுருக்கங்களை போக்கி சரும இறுக்கத்தை தரும். மேலும் தேன் ஈரப்பதம் அளித்து, சுருக்கங்களை போக்கி, இளமையான மென்மையான சருமம் தரும். இதனை வாரம் மூன்று நாட்கள் செய்து வர நல்ல பலன்கள் கிடைக்கும்.

pixabay

 

மாஸ்க் – 3 

தேவையான பொருட்கள் 

வாழைப்பழம் – 2,
பால் – 1 கப்,
ஆளி விதை  எண்ணெய் – 1 ஸ்பூன். 

வாழைப்பழத்தை நன்கு மசித்து அதனுடன் பால், ஆளி விதை எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள். இந்த மாஸ்க் முகத்தில் உள்ள முதுமைத் தோற்றத்தைப் போக்கி இளமை தோற்றத்தைக் கொடுக்கும். 

சருமத்தை பாதுகாக்கும் கிளிசரின் சோப்பு : இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே தயாரிக்கலாம்!

மாஸ்க் – 4 

தேவையான பொருட்கள் 

கிராம்பு தூள் – 1 டீஸ்பூன், 
ஆளி விதை – 1 ஸ்பூன்,
யோகர்ட் – 1 ஸ்பூன்.   

நன்கு அரைத்த ஆளி விதையுடன் (flax seed) கிராம்பு, யோகர்ட் சேர்த்து கலக்கி முகத்தில் பூச வேண்டும். பின், 15 நிமிடம் மசாஜ் செய்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பொலிவு பெற்று இளமையான தோலை தரும்.

pixabay

முகப்பருக்கள் நீங்க

தேவையான பொருட்கள் 

ஆளி விதை – 1 ஸ்பூன்,
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்,
தேன் – 1 ஸ்பூன். 

நீரில் முதல் நாள் இரவிலே ஆளி விதைகளை ஊற வைக்க வேண்டும். பின் அடுத்த நாள் அதனை நன்கு அரைத்து கொள்ளவும். இதனுடன் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனை தொடர்ந்து செய்து வர முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்கி சருமம் பொலிவாகும். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Beauty