Beauty

சரும நிறத்திற்கு ஏற்ற பவுன்டேஷன்னை தேர்வு செய்வதற்கான ரகவசிய டிப்ஸ்!

Mohana Priya  |  Apr 19, 2019
சரும நிறத்திற்கு ஏற்ற பவுன்டேஷன்னை தேர்வு செய்வதற்கான ரகவசிய டிப்ஸ்!

சிறந்த பவுன்டேஷன்னை(foundation) தேர்ந்தெடுப்பது என்பது எல்லா பெண்களுக்கும் மிகவும் சவாலான காரியம் தான். ஆனால் பவுன்டேஷன் சரியில்லை என்றால் என்ன தான் மேக்கப் போட்டாலும் முகம் ப்ரெஷ்ஷாக தெரியாது. முகத்தை பளிச்சென்று காட்டுவதற்கு பவுன்டேஷன் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. சரி உங்கள் முன்னாள் ஆயிரக்கனக்கான பவுன்டேஷன் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள், ஆப்ஷன்ஸ் அதிகம் இருக்கின்றது. ஆனால் இதில் எதை தேர்ந்தெடுப்பீர்கள். அப்படியான நிலமை தான் இன்று நிலவுகின்றது. சந்தையில் அதிகப்படியான பவுன்டேஷன்கள் இருக்கின்றன. ஆனால் இதில் எது சிறந்தது, நமது சருமத்திற்கு எது ஒத்துப்போகும் என்கிற தெளிவு நிறை பேரிடம் இருப்பதில்லை. இதற்கு காரணம் நாங்கள் மேலே சொன்னது தான்.

ஓகே உங்கள் சருமத்திற்கு ஏற்ற பவுன்டேஷன்னை(foundation) எப்படி தேர்வு செய்வது என்று இங்கு பார்ப்போம்.

1. உங்களது ஆயில் சருமமா?
உங்களது ஆயில் சருமம் என்றால் ஆயில் ப்ரீ பவுன்டேஷன்னை(foundation) தேர்ந்தெடுப்பது நல்லது. இது தான் உங்கள் சருமத்திற்கு சிறந்தது. ஆயில் பவுன்டேஷன்னை(foundation) தேர்ந்தெடுப்பீர்கள் என்றால் உங்கள் சருமத்தில் ஆயில் வடிவது போன்ற உணர்வை தரும். பிறகு மேக்கப் போட்டும் சீக்கிரம் அனைத்தும் கலைந்து விட வாய்ப்பு உள்ளது. ஆயில் ப்ரீ பவுன்டேஷன்னை(foundation) தேர்ந்தெடுத்தால் முகத்தை கொஞ்சம் டிரையாக காட்டும். எண்ணை வடிவது குறையும்.


2. சென்சிடிவ் ஸ்கின்
உங்களுக்கு சென்சிடிவ் ஸ்கின்னாக இருந்தால் பவுன்டேஷன்னை(foundation) நேரடியாக அப்ளை செய்வதை விடுத்து லோஷன் போட்ட பிறகு பவுன்டேஷன்னை(foundation) போடுவது நல்லது. இது உங்கள் சருமத்தை அலர்ஜியிலிருந்து விடுவிக்கும். மேலும் நல்ல தரம் உள்ள பவுன்டேஷன்னை(foundation) உபயோகிப்பது நல்லது.

3. வயதான  தோற்றம்
வயதானவர்களுக்கு என மேட்டி பவுன்டேஷன் கடைகளில் கிடைக்கின்றது. இது வயதானவர்கள் உபயோகிக்கும் போது வயதான தோற்றத்தை தவிர்ப்பதற்காக இதனை பயன்படுத்துவார்கள். அப்படியான பவுன்டேஷன்னை(foundation) இளம் பெண்கள் பயன்படுத்த வேண்டாம். இதனை நீங்கள் பயன்படுத்தும் போது மாவு போன்று உங்கள் சருமத்தில் படிந்திருக்க வாய்ப்புள்ளது. இதனால் இளம் பெண்கள் வயதான தோற்றத்தை பெறுவீர்கள். இளம் பெண்களுக்கு என்று சில்கி, லிக்வீட் பவுன்டேஷன்கள் கடைகளில் கிடைக்கின்ற. அதனை வாங்கி பயன்படுத்தவும்.

4. SPF
எஸ் பி எப் பவுன்டேஷன்னை(foundation) பார்த்து வாங்கி பயன்படுத்தவும். இது அலர்ஜ்சி மற்றும் சரும எரி்ச்சல்களிலிருந்து உங்களை விடுவித்து காக்கின்றது. சரும பாதிப்பு வராமலும் பாதுகாக்கின்றது.

5. வரண்ட சருமம்
வரண்ட சருமம் உள்ளவர்கள் மாய்சிடைசர் உள்ள பவுன்டேஷன்னை(foundation) பயன்படுத்துவது நல்லது. இது உங்கள் சருமத்தில் உள்ள வறட்சியை நீக்கி புத்துணர்ச்சியை தருகின்றது. சருமம் ஆயில் நிறைந்தது போன்ற உணர்வை தந்து பளபளப்பாக வைத்திருக்க உதவும்.

6. நார்மல் ஸ்கின்
நார்மல் ஸ்கின் உள்ளவர்கள் அடர் பளுப்பு நிறம் கொண்ட பவுன்டேஷன்னை(foundation) பயன்படுத்த வேண்டாம். கொஞ்சம் லிக்விட் கொண்ட பவுன்டேஷன்னை(foundation) பயன்படுத்தினால் நல்லது. மேலும் கேக்கி பவுன்டேஷன்னை(foundation) பயன்படுத்த வேண்டாம். பவுன்டேஷன்னை(foundation) அப்ளை செய்ததும் நன்கு தடவி மசாஜ் செய்துக் கொள்ளவும். இல்லையெனில் நார்மல் ஸ்கின் கொண்டவர்களுக்கு அப்படியே முகத்தில் தங்கி விடும்.

என்ன பெண்களே பார்ட்டிக்கு தயாராகும் போது நாங்கள் சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் பவுன்டேஷன்னை எப்படி தேர்வு செய்வது என்பதை கீழே உள்ள வீடியோவிலும் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள் புதிய முயற்சியுடன்.

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

சரியான பிரா சைஸ்சை கண்டுபிடிப்பது எப்படி? மார்கெட்டில் கிடைக்கும் பிரா வகைகள்!

ரகசியம்: திருமணத்திற்கு பெண்கள் தங்களை தயார் செய்து கொள்வது எப்படி?

மஞ்சள் உடையில் கிளாமரில் கலக்கும் தமிழ் நடிகைகள்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Beauty