Beauty

நீங்கள் அறியாமல் செய்யக்கூடிய பேஸ் மாஸ்க் ஷீட் (face mask sheet) தவறுகள்

Nithya Lakshmi  |  Jan 29, 2019
நீங்கள் அறியாமல் செய்யக்கூடிய பேஸ் மாஸ்க் ஷீட் (face mask sheet) தவறுகள்

ஷீட் மாஸ்க் பல வகைகளில் மார்க்கெட்டில் கிடைக்கிறது. உங்கள் சருமத்தின் பராமரிப்பை மிக எளிதாக்கி விடும் இந்த பேஸ் ஷீட் மாஸ்க் ! ஆனால், மற்றவர்களை போல் உங்களுக்கு போதுமான அளவிற்கு இதன் பலன் கிடைக்கவில்லையா? பல  முறை பயன் படுத்தியும் அதன் நன்மைகளை உங்கள் சருமம் பெறவில்லை என்றால், தவறு (mistakes) நீங்கள் பயன்படுத்தும் விதத்தில் இருக்கலாம்! ஆகவே , நாங்கள் உங்களிடம் நீங்கள் மறதியாக ஷீட் மாஸ்க் பயன்பாட்டில் செய்யக்கூடிய சில தவறுகளை கூற உள்ளோம்.

இதை திருத்தி அடுத்து முறை பேஸ் ஷீட் மாஸ்க்கை (face sheet mask)  சரியாக பயன்படுத்துங்கள்!

கிலேன்ஸ் செய்யாமல் அணிவது  –

உங்கள் மாஸ்க்கை அணியும் முன் உங்கள் முகத்தை கிலேன்ஸ் அல்லது சுத்தம் செய்வது அவைசியம். எப்போதும் நீங்கள் மற்ற மாஸ்க் போடும் பொது முகம் கழுவுவதை போல்தான் இதற்கும் செய்வது முக்கியம். இதனால், உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்கு விலகிவிடும்.இல்லாவிட்டால், முகத்தில் இருக்கும் அழுகின் மேல் எந்த மாஸ்க் ஆகா இருந்தாலும் திறம்பட வேலை செய்வது  கடினம்.

உங்கள் சருமத்திற்கு பொருத்தமற்ற மாஸ்க் –

எந்த சரும பராமரிப்பு பொருள் ஆக இருந்தாலும், உங்கள் சருமத்திற்கு ஏற்றதா என்று நன்று அறிந்து பயன்படுத்துங்கள். உங்கள் தோழி ஒரு பேஸ் மாஸ்க்கை பரிந்துரைத்தால் அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதா என்று கண்டு அறியுங்கள். இல்லாவிட்டால்,ஒரு தவறான மாஸ்க் உங்களுக்கு எந்த பலனையும் அளிக்காது. அது மேலும் பல சரும பிரச்னைகளை  கூட உண்டாக்கலாம் .

அதிக நேரம் வைத்திருப்பது –


‘அதிக நேரம் = அதிக பலன் ‘ கிடையாது !

நீங்கள் நினைக்கலாம்.. அதிக நேரம் பஸ் மாஸ்க் அணிந்திருந்தாள் அதிலிருக்கும் பலன்களை அதிகமாக பெற முடியும் என்று. தவறு! இதை நீங்கள் 10 -20 நிமிடம் மட்டுமே வைக்க வேண்டும். அதற்க்கு மேல் வைத்தால் உங்கள் சருமம் மேலும் வறண்டு போய்விடும். உங்கள் சருமத்தில் இருக்கும் ஈர தன்மை  மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சி உறிஞ்சி விடும்.

பல மாஸ்க் ஷீட்டை பயன் படுத்துவதில்லை –  

இதற்கு பெயர் தான் ‘மல்டி டாஸ்கிங் ‘. உங்கள் சருமத்தில் ப்ளாக் ஹெட் இருந்தால் அதற்கு ஒரு மாஸ்க், பருக்களிற்கு வேற ஒரு மாஸ்க், ஒரு பொலிவு பெற அதற்கேற்ற மாஸ்க் என்று நீங்கள் பயன்படுத்த வேண்டும். ஏன் என்றால், வெவேறு மாஸ்க் வெவேறு பலன்களை அளிக்க உதவும்! 

மொய்ஸ்சுரைசர் போட மறப்பது –

பேஸ் மாஸ்க் ஷீட்டை அணிந்து எடுத்த பின், உங்கள் சரும பராமரிப்பு வழிகள் முடிந்தது என்று நினைக்க வேண்டாம். நீங்கள் ஏதேனும் ஒரு மிதமான மொய்ஸ்சுரைசர் உங்கள் சருமத்திற்கு ஏற்றதாக ஒன்றை பூசுங்கள். ஏனெனில் மாஸ்க் ஷீட் பயன்படுத்திய பின் சருமம் வறண்டு போக அதிக வாய்ப்புகள் உள்ளது.

உடனே கழுவுவது –

எந்த பேஸ் மாஸ்க் ஆகா இருந்தாலும் அதில் இருக்கும் நன்மை பயக்கும் அம்சங்களை உங்கள் சருமம் உள்வாங்க சிறுது நேரம் ஆகும். சிறிது நேரம் உங்கள் முகத்தில் இதை வைத்த பின் , எடுத்து விட்டு மெதுவாக ஒரு மென்மையான  துண்டில் தடவி எடுங்கள். மாஸ்க்கை எடுத்த பிறகும், சில அம்சங்கள் உங்கள் சருமத்தை பராமரிக்க வேலை செய்யும் ! அதனால், மற்ற கையால் தயாரித்த மாஸ்க்கை பூசி உலர்ந்த உடன் கழுவுவதை போல் , இதில் உடனடியாக முகம் கழுவுவதை தவிர்க்கவும்.

இப்போது உங்கள் தவறுகளை கண்டறிந்தீர்கள் அல்லவா ?உடனடியாக ஆரம்பித்து நிமிடங்களில் ஒளிரும் தோற்றத்தை பெறுங்கள்!

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்  

கட்டுரை  பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Beauty