Lifestyle

ஜென்மாஷ்டமி – கிருஷ்ண ஜெயந்தியை பற்றி தெரிந்து கொள்ள சில சுவாரசியமான தகவல்கள்!

Meena Madhunivas  |  Jun 24, 2019
ஜென்மாஷ்டமி – கிருஷ்ண ஜெயந்தியை பற்றி தெரிந்து கொள்ள சில சுவாரசியமான தகவல்கள்!

சிறுவரும் சிறுமியரும் பால கண்ணனை போலவும், அழகிய ராதையை போலவும்  வேடமணிய, பிஞ்சி குழந்தையின் பாதங்கள் கண்ணன் வீட்டிற்குள் வருகைத் தருவது போல நடந்து தடம் பதிக்க, இளம் காளையர்கள் உறியடித்து வீரத்தையும், உற்சாகத்தையும் வெளிபடுத்த, கன்னிப் பெண்கள், கோலாட்டம் ஆடி, தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்த, பெற்றோர்களும், பெரியோர்களும், இதனை இனிப்பு பலகாரங்களோடு கண்டு ஆனந்தம் கொள்ள, கோலாகலமாக கொண்டாட்டம் நிறைந்திருக்கும் ஜன்மாஷ்டமி என்னும், கிருஷ்ண ஜெயந்தி (janmashtami) பண்டிகை அனைத்து வீடுகளிலும் ஒரு எதிர் பார்க்கும் பண்டிகையாக அமைகின்றது!

இந்த ஆண்டு, 2019ல் கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி கொண்டாடப் படுகின்றது. ஒவ்வொரு வருடமும், இந்தியா முழுவதும், இந்த ஜென்மாஷ்டமி பண்டிகை கொண்டாப் படுகின்றது. கண்ணன் பிறந்த இந்த திருநாளை அனைவரும், குதூகலத்தோடு மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும், இந்த ஜென்மாஷ்டமி வெவ்வேறு வகையில் கொண்டாடப் படுகின்றது. அவரவர் மாநில மற்றும் கலாசார அடிப்படையில், இந்த திருவிழாவை கோவில்களிலும், வீடுகளிலும் கொண்டாடி வருகின்றனர். இனிப்பு பலகாரங்கள் மற்றும் வீடு முழுவதும் அலங்காரங்கள் மட்டுமின்றி, மனம் முழுவதும் நிறைந்த மகிழ்ச்சியோடு மக்கள் இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதை பற்றித தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்.

ஜென்மாஷ்டமி பற்றி சில சுவாரசியமான தகவல்கள் (Interesting Facts About Krishna Jayanti)

பொதுவாக ஜென்மாஷ்டமி என்பது கண்ணன் பிறந்த நாளை குறிப்பது. அன்று அனைவரும், வீட்டிற்குள் கண்ணன் சிறு குழந்தையாக தனது செந்தாமரை பாதத்தால் அடி மேல் அடி வைத்து வருவது போல, பச்சரிசி மாவால் பாதத்தை வரைந்து, மேலும் வண்ணக் கோலங்கள் மற்றும் பூக்களால் வாசலை அலங்கரித்து வீட்டிற்குள் அவனை வரவேற்ப்பார்கள். இது மட்டுமன்றி, கண்ணனின் வெவ்வேறு வடிவிலான மண்ணால் ஆன சிலைகளை வாங்கி வந்து, பூஜை அறையிலோ அல்லது வீட்டின் விசாலமான ஓர் இடத்தில் அமர்த்தி, அவரவர் வசதிக்கேற்ப பூக்கள், வஸ்திரம் மற்றும் நகை ஆபரங்கன்களால் அலங்கரிப்பார்கள்.

இதனோடு சேர்த்து, கண்ணனுக்கு பிடித்த வெண்ணை, மற்றும் சீடை, முறுக்கு, என்று பல வகை பலகாரங்களை படையளிடுவார்கள். மேலும் பல வகை பழங்களையும் படைப்பார்கள்.

இந்தத் திருநாளில் தங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு அவரவர் வயதிர்க்கேர்ப்ப கண்ணனை போலவும் அல்லது ராதையைப் போலவும் அலங்காரம் செய்து அழகு படுத்தி பார்ப்பார்கள். மேலும், உறவினர்கள், மற்றும் பக்கத்து வீட்டார்கள் என்று அனைவரும் ஒன்று கூடி, ஆட்டம், பாட்டு என்று மகிழ்ச்சியாக சில நிகழ்சிகளை நடத்தி கொண்டாடுவார்கள்.

கிராம்பு உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மை தீமைகள்!

ஜன்மாஷ்டமி பற்றி மேலும் சில தகவல்கள், உங்களுக்காக இங்கே:

1. கம்சனை அளித்த கண்ணனை போற்றும் விதமாக அவன் பிறந்த நாளில் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப் படுகின்றது

2. இந்த நாளை கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, க்ரிஷ்ணாஷ்டமி, அஷ்டமி ரோகினி என்று பல பெயர்களில் அழைப்பார்கள்

3. இந்த திருநாளில், மக்கள் ஒரு வேளை உணவோடு விரதம் இருந்து, அஷ்டமி திதி அன்று கொண்டாடுவார்கள்

4. புளியோதரை, எலுமிச்சை சாதம், என்று பல வகை சாத வகைகள், முறுக்கு, அதிரசம், சீடை, லட்டு என்று பல வகை பலகாரங்கள், வெண்ணை என்று அவரவர் வசதிக்கேர்ப்பு படைத்து கண்ணனை வணங்குவார்கள்

5. ஹரே கிருஷ்ண (janmashtami) ஹரே ராம என்ற பஜனைகள் ஆங்காங்கே ஒழித்துக் கொண்டிருக்கும்

6. நேபால், இலங்கை, சிங்கபூர், மலேசியா, கனடா, ஜெர்மனி, லண்டன் போன்ற வெளிநாடுகளிலும், கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக மக்களால் கொண்டாடப் படுகின்றது

7. ஒரு நாள் முதல் மூன்று நாட்கள் வரையிலும் இந்த பண்டிகை பல நிகழ்சிகளோடு கொண்டாடப் படுகின்றது   

8. பங்களாதேசத்தில் இந்த படிகைக்கு 1902 முதல் அரசு விடுமுறை கொடுக்கப் பட்டுள்ளது

Twitter

தமிழ்நாட்டில் எப்படி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப் படுகின்றது (How To Celebrate Janmashtami)

இந்தியாவின் பல மாநிலங்களில் பல வகையில் கொண்டாடப் படும், ஜென்மாஷ்டமி, தமிழ்நாட்டில் சற்று மாறுபட்டு, எனினும், அடிப்படையில் ஒரே நோக்கத்தோடு கொண்டாடப் படுகின்றது.

ஆவணி மாதம், அஷ்டமி திதி, ரோகினி நட்சத்திரம் அன்று கிர்ஷ்ண ஜெயந்தி கொண்டாடப் படுகின்றது. தென்னிந்தியாகில் பொதுவாக கோகுலாஷ்டமி ஒரே மாதிரியாகத் தான் கொண்டாடப் படுகின்றது. இதில் பெரிதாக எந்த வேறுபாடும் அல்லது வித்தியாசங்களும் இருக்காது. இந்த வகையில் தமிழ்நாட்டில் எப்படி கிருஷ்ண ஜெயந்தி (janmashtami) கொண்டாடப் படுகின்றது என்பதை இங்கே காணலாம்:

மகிழ்ச்சியை வெளி படுத்தும் வகையில் அங்கு நடக்கும் நிகழ்சிகளில் கலந்து கொள்வார்கள்

கிருஷ்ண ஜெயந்தி அன்று நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகள் (Activities Takes Place During Janmashtami)

கிருஷ்ண ஜெயந்தி (janmashtami) அன்று பல சுவாரசியமான நிகழ்சிகள் நடத்தப் படுகின்றது. அவை பெரும்பாலும், குழந்தைகளுக்கும், இளம் வயதினர்களுக்கும் மகிழ்ச்சி தரும் வகையில் இருகின்றது. இந்த வகையில், சில சுவாரசியமான நிகழ்வுகள், கிருஷ்ண ஜெயந்தி அன்று தமிழ்நாட்டில் நடத்தப் படுவதை பற்றி காணலாம்

1. கண்ணனும் ராதையும்

கிருஷ்ண ஜெயந்தி (janmashtami) அன்று பெரும்பாலான வீடுகளில், ஒரு எளிய மற்றும் சுவாரசியமான நிகழ்வாக, அவர்கள் வீட்டில் இருக்கும், பிறந்த குழந்தை முதல், இளம் வயது பெண்கள் மற்றும் இளஞர் வரை, பெற்றோர்கள் கண்ணனைப் போலவும், இராதையைப் போலவும் வேடம் இட்டும் கண்டு மகிழ்வார்கள். இது அனைத்து குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு நிகழ்வாகவும் இருக்கும். எளிமையான மாடு மேய்க்கும் கண்ணன் முதல் அரசு குழந்தை கண்ணன் வரை அலங்காரங்கள் வேறுபடும்.

இயற்கையின் பாடங்களை கற்றிட இந்தியாவின் 20 சிறந்த ட்ரெக்கிங் பகுதி!

2. மயிலிறகு கிரீடம்:

குழந்தைகளுக்கு ஒரு சுவாரசியமான வேலை கொடுக்கும் வகையில், கண்ணனுக்கு மயில் இறகில் கிரீடம் செய்யச் சொல்வார்கள். இந்த கிரீடம், அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு அழகான வடிவம் பெரும்.

3. வெண்ணைப் பானை அலங்கரித்தல்

பொதுவாக மண் பானையை அலங்கரித்து அதில் வெண்ணை அல்லது தயிர் வைத்து கண்ணனுக்கு படைப்பார்கள். இந்த வகையில், மண் பானைகளை புதிதாக வாங்கி, அதனை வண்ணம் தீட்டி அளகரிப்பது மேலும் ஒரு சுவாரசியமான நிகழ்வாக இருக்கும்.

4. கண்ணனின் பாதம் வரைதல்

ஒவ்வொருவரும் அவரவர் விருப்பம் மற்றும் திறமைக்கு ஏற்றவாறு கண்ணனின் பாதங்களை வரைவார்கள். இதற்கு பச்சை அரிசி மாவு மற்றும் கோலப் பொடிகளை பயன் படுத்துவார்கள்.

5. கிராமத்து நிகழ்வு

சிறு சிறு பொம்மைகள், மற்றும் கண்ணனின் பொம்மைகளை வைத்து ஒரு கிராமத்து தோற்றத்தை உண்டாக்கி, அழகான நிகழ்வாக அதனை கொண்டாடுவார்கள். இது சிறுவர்களுக்கு ஒரு சுவாரசியமான நிகழ்வாக இருக்கும்.

6. உரியடி

குழந்தைகளுக்காக வீட்டிலேயே அல்லது, அருகாமையில் இருக்கும் திறந்த வெளியில், அனைவரும் ஒன்று கூடி, உரியடி விளையாட்டை நிகழ்த்துவார்கள். இது மற்றுமொரு சுவாரசியம் தரக்கூடிய நிகழ்வாக இருக்கும். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப் படுகின்றது.

7. புல்லாங்குழலை அலங்கரித்தல்

கண்ணன் என்றாலே, முதலில் நினைவிற்கு வருவது அவனது புல்லாங்குழல் இசை தான். இதில் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படி இருக்கும் வகையில், கிருஷ்ண ஜெயந்தி (janmashtami) அன்று முக்கியத்துவத்தோடு அலங்கரிக்கப்பட்டு, கண்ணனோடு சேர்த்து வழிபடப் படும் ஒரு இசை கருவி புல்லாங்குழல். இதனை மக்கள் மிக அழகாக அலங்கரிக்க ஆர்வம் காட்டுவார்கள்.

8. பலகாரங்கள் செய்வது

கிருஷ்ண ஜெயந்தி (janmashtami) அன்று கண்ணனுக்கு பிடித்த பலகாரங்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு பிடித்தமான பலகாரங்களையும் செய்வார்கள். இதை செய்வதற்கு அவர்களையும் ஈடுபடுத்துவார்கள். இது குழந்தைகளை மேலும் உற்சாகப் படுத்தும்.

9. பொம்மைகள் செய்வது

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இணைந்து கண்ணன், ராதை, பசு மாடுகள், மரம் என்று மேலும் பல பொம்மைகளை செய்து, ஒரு பொம்மலாட்டம் நடத்துவது அல்லது வேறு வகையான நாடகம் அரங்கேற்றுவது என்று நிகழ்சிகளை நடத்துவார்கள். இது சிறுவர்களை மேலும் மகிழ்ச்சி அடைய செய்யும்.

10. கண்ணன் படம் வரைவது

குழந்தைகளை வித விதமான கண்ணன் படங்களை வரைய ஊக்க விப்பார்கள். மேலும் அப்படங்களுக்கு வண்ணம் தீட்டும் வேலையையும் அவர்களுக்கே கொடுத்து விடுவார்கள். இதனால் அவர்களின் கற்பனை கலந்து, மேலும் உற்சாகத்தோடு இதனை சிறுவர்கள் செய்வார்கள். இது ஒரு சுவாரசியமான நிகழ்வாக கிருஷ்ண ஜெயந்தி (janmashtami) அன்று இருக்கும்.

Twitter

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் (Happy Krishna Jayanti Wishes)

1. இந்த திருநாளில்
கண்ணன் வந்து
உங்கள் துன்பங்களையும் கவலைகளையும் திருடி சென்று
இன்பத்தையும் வளத்தையும் அளிக்க
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்…

2. இந்த திருநாளில் பாலகோபாலன்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
மகிழ்ச்சியை கொண்டு வர
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்…

3. தர்மம் தழைக்க
உழைத்தவன் நீ…
வன்மம், ஆசை, பொறாமை பரவிட்ட இந்நாளில்
வருவாயா திருவாயா…
புது அவதாரமா…
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்…

4. கண்ணன் உங்கள் வீட்டிற்கு வரும் இன் நன்னாளில்
அவனோடு சேர்ந்து மகிழ்ச்சியும், ஆரோக்கியமும், ஐஸ்வரியமும் வரட்டும்!
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்!

5. ஒவ்வொரு வருடமும் புதிதாய் பிறப்பதில்லை கண்ணன்!
பிறந்தது ஒரு முறை என்றாலும், ஒவ்வொரு வருடமும் நம்
நினைவில் ஆழமாய் அவன் நின்ற இந்நாள் ஒரு திருநாளாக மாற
வாழ்த்துக்கள்!

6. வெண்ணையும், சீடையும், முறுக்கும் அவன் விரும்ப,
பூஜை அறையில் படையலாய் அவன் முன் வைக்க,
உங்கள் வீட்டு பிள்ளைகள் அதனை கண்ணனாய் மாறி ருசிக்க,
கண் இமைக்காமல் உங்கள் வீட்டிற்குள் கண்ணன் வந்து விட்டத்தை நீங்கள் கண்டு மகிழ..
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!

7. என்று வரும் காத்திருந்த திருநாள் வந்து விட்டது!
இனி என்றும் உங்கள் வீட்டில் ஆனந்தமும், ஆரோக்கியமும்,   
ஆயுளும் நிறைந்திருக்கும்!
கிருஷ்ண ஜெயந்தி நல வாழ்த்துக்கள்!

8. அனைவரது மனம் கவர்ந்த கள்வன் கண்ணன
இன்று விசேடமாய் உங்கள் உள்ளத்தை கொள்ளைக் கொள்ள வருகிறான்.
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!

9. இதை விட ஒரு சிறந்த நாள் வேறு என்ன இருக்க முடியும்!
தயாராகுங்கள்… 
உங்கள் வீட்டிற்கு கண்ணன் வந்து விட்டான்!
இனிய கிருஷ்ண ஜென்யந்தி வாழ்த்துக்கள்!

1௦. கிருஷ்ண ஜெயந்தி வந்துவிட்டது
உங்கள் வீட்டு குட்டி கண்ணனும் ராதையும் தயாரா?
கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்!

கிருஷ்ண ஜெயந்தி அன்று செல்ல வேண்டிய பிரபலமான கோவில்கள் (Temples To Celebrate Krishna Janmashtami)

கிருஷ்ண ஜெயந்தி (janmashtami) அன்று மக்கள் வீடுகளில் வழிபாடுகளை முடித்து விட்டு, அருகில் இருக்கும் கண்ணன் கோவில்களுக்கு செல்வது வழக்கம். இந்த வகையில், சில பிரபலமாக கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி அன்று விசேடமான நிகழ்வுகள் நடத்தப் படுவது வழக்கம். அப்படி தமிழ்நாட்டில் பிரபலமான கோவில்களில், சில உங்களுக்காக

1. ராஜ கோபால சாமி கோவில் (திருநெல்வேலி

மன்னார்குடி, திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் இந்த கோவில் கிருஷ்ண ஜெயந்தி (janmashtami) திருவிழாவிற்கு புகழ் பெற்றது. இந்த கோவிலை, தக்ஷின துவாரகா என்றும் அழைப்பார்கள். இங்கு பங்குனி திருவிழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா பிரபலமாக நடை பெரும்.

2. பண்டவதூதர் கோவில்.

இது காஞ்சிபுரத்தில் இருகின்றது

3. இஸ்கான் கோவில்

இதற்கு பல கிளைகள், சென்னை, சேலம் என்று பல இடங்களில் தமிழகம் முழுவதும் இருகின்றது. இங்கு உலகளவில் இருந்து சுற்றுலா பயணிகள், குறிப்பாக கிருஷ்ண ஜெயந்தி (janmashtami) திருவிழாவில் கலந்து கொள்ள வருகை தருவார்கள்.

4. பார்த்தசாரதி கோவில்

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இந்த கோவில் மிகவும் பிரபலமான ஒன்று. இது 6 மற்றும் 9 ஆம் நூற்றாண்டு சரித்திரத்திலும் இடம் பெற்றுள்ளது. இங்கு கிருஷ்ண ஜெயந்தி (Gokulashtami), நரசிம்ம ஜெயந்தி என்று பல குறிப்பிடத்தக்க திருவிழாக்கள் கொண்டாடப் படுகின்றது.

5. வடக்கு தாமரை குளம் கிருஷ்ண ஆலயம்

இது 2005ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி (janmashtami) திருவிழா கோலாகலமாக கொண்டாடப் படுகின்றது. இது கன்யாகுமாரி மாவட்டத்தில் உள்ளது. இங்கு அதிகம் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

Twitter

சுலபமாக மற்றும் எளிமையாக செய்ய சில கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள் (Easy & Simple Recipes For Janmashtami)

வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய விரைவான காலத்தில் யாருக்கும் பொறுமையாக மற்றும் விசேடமாக பலகாரங்கள் செய்ய நேரம் இருப்பதில்லை. இருந்தாலும், கண்ணனின் பிறந்த நாள் அன்று விசேடமாக ஏதேனும் செய்யவில்லை என்றால், மனம் கேட்குமா. உங்கள் வேலையை எளிமையாக்கி, கண்ணனையும் மகிழ்ச்சி அடைய செய்ய, இங்கே உங்களுக்காக எளிமையாக செய்ய சில பலகாரங்கள்:

1. வெல்ல அவள் (Vella Aval Recipe)

இது கிருஷ்ண ஜெயந்தி (Gokulashtami) அன்று கட்டாயமாக செய்யப்படும் ஒரு பலகாரம். இதனை நீங்கள் 1௦ நிமிடங்களிலேயே செய்து விடலாம். இது சுவையாகவும் இருக்கும். இதை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்

தேவையான பொருட்கள் (Ingredients)

செய்முறை (Method)

என்றும் இளமை வேண்டுமா ! ஆரோக்கியமான அழகான வாழ்க்கைக்கு இந்துப்புவை இப்படி பயன்படுத்துங்கள

2. பஞ்சாமிருதம் (Panchamirtham Recipe)

இனிமையும் ஆரோக்கியமும் சேர்ந்த ஒரு அற்புதமான பலகாரம் என்று கூறலாம். இதை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் (Ingredients):

செய்முறை (Methods):

3. சுக்கு வெல்லம் (Sukku Vellam Recipe)

இது மற்றுமொரு எளிமையான மற்றும் சுவையான பலகாரம். எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் (Ingredients):

 

செய்முறை (Methods):

4. அவல் லட்டு (Aval Ladoo Recipe)

லட்டு என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு பலகாரம் என்று கூறலாம். இதனை சில நிமிடங்களிலேயே எளிதாக செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் (Ingredients):

 

செய்முறை (Methods):

5. பருப்பு பாயாசம் (Paruppu Payasam Recipe)

இதை எளிமையாக நீங்கள் செய்து விடலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் (Ingredients):

செய்முறை (Methods)

கேள்வி பதில் (FAQs)

1. ஏன் ஜென்மாஷ்டமி கொண்டாடப் படுகின்றது?

கண்ணனின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆவணி மாதமும் அஷ்டமி திதி அன்று மக்கள் கொண்டாடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவன் கம்சனை அளித்து மக்களுக்கு நிம்மதியான சூழலை ஏற்படுத்தியதே.

2. கிருஷ்ண ஜெயந்தி அன்று ஏன் விரதம் இருக்க வேண்டும்?

பெரும்பாலான மக்கள் கிருஷ்ண ஜெயந்தி (Gokulashtami) அன்று விரதம் இருப்பதை ஒரு புண்ணியமாக கருதுகின்றனர். இதனை அவர்கள் கடவுளுக்கு செய்யும் சேவையாகவும், தங்களது பக்தியின் வெளிப்பாடாகவும் கருதுகின்றனர். மேலும் அது அவர்களுக்கு வேண்டுதலை நிறைவேற்று உதவுவதாகவும் நம்புகின்றனர்.

3. கிருஷன் ஜெயந்தி அன்று நீங்கள் குறிப்பிடத்தக்க பலகாரம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏதாவது உண்டா?

அப்படி எதுவும் இல்லை. அவரவர் வசதிக்கேற்ப மற்றும் நேரத்திற்கேற்ப உங்களால் முடிந்த பலகாரங்களை செய்து கண்ணனுக்கு படையளிடலாம். இன்று பெரும்பாலனவர்கள் கடைகளில் வகை வகையாக விற்கும்ம் பலகாரங்களை வாங்கி கண்ணனுக்கு படையலிட்டு, வழிபடுகின்றனர், இது அவர்களது வேலை சுமையையும் குறைகின்றது. நேரத்தையும் மிச்சப் படுத்துகின்றது.

4. ஜென்மாஷ்டமி அங்கீகரிக்கப் பட்ட அரசு விடுமுறையா?

இந்தியாவில் பல மாநிலங்களில் ஜென்மாஷ்டமி அன்று அரசு விடுமுறை விடப்பட்டுல்லாது. ஆனால், சில மாநிலங்களில் அப்படி விடுமுறை இல்லை. பங்களாதேஷ் நாட்டில் ஜென்மாஷ்டமி அன்று அரசு விடுமுறை விடப் பட்டுள்ளது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Lifestyle