Home & Garden

எளிமையாக குறைந்த பராமரிப்பில் வீட்டிற்குள் வளர்க்க கூடிய செடிகள்!

Nithya LakshmiNithya Lakshmi  |  Nov 18, 2019
எளிமையாக  குறைந்த பராமரிப்பில் வீட்டிற்குள் வளர்க்க கூடிய செடிகள்!

தாவரங்களை வளர்க்கும் ஆர்வம் உள்ளவர்கள் அதற்காக நேரம் ஒதுக்க முடியாமல் செடிகள் வாடி விடுமோ என்ற சந்தேகத்தில் வளர்க்க முயற்சிப்பதில்லை. உங்களுக்காக உங்கள் ஆசைகளை பூர்த்தி செய்ய, வீட்டிற்குள் சிறிது இடத்தில் மிகவும் குறைவான நேரத்தில், குறைவான பராமரிப்பில் வளர்க்கக்கூடிய செடிகளைப் (low maintenance indoor plant) பற்றி பார்க்கலாம். 

சாதாரணமாக வீட்டில் வளர்க்கும் செடிகள், சக்குலெண்ட்ஸ் (succulents), மற்றும் மண்ணில்லாமல் காற்றில் வளரும் செடிகள் என மூன்று வகையான செடிகளின் பட்டியல் இதோ:

அலங்காரத்திற்காக வைக்கப்படும் செடிகள்

1. பீஸ் லில்லி(peace lily)

சின்ன தொட்டியில், வீட்டிற்குள் வைக்கக்கூடிய உயரத்தில் வளரக்கூடிய செடி இது. இதன் இலைகள் அழகாக இருக்கும். அலங்காரத்திற்கு ஏற்ற செடி இது.

குறிப்பு : 

இலைகளின் நுனி காய்ந்து விடும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கான குறிப்பு – தொட்டியில் உள்ள மண் ஈரப்பதமாக இருந்தால், தண்ணீர் ஊற்றாதீர்கள். காய்ந்திருந்தால் மட்டும் தண்ணீர் அளவாக ஊற்றுங்கள். நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் வைத்தால், அழகான வெள்ளைப்பூக்கள் பூக்கும். வெளிச்சம் குறைவான இடங்களில் வளர்த்தால், பூக்காது.

2. மணி பிளான்ட்(money plant)

Pexels

குறிப்பு : 

மண்ணில் வளர்க்கும்போது, மண் நன்றாக காய்ந்த பிறகு தண்ணீர் ஊற்றினால் போதும். அப்போதுதான் விரைவில் வளரும். 

3. ரப்பர் பிளான்ட்

குறிப்பு:

மேலே உள்ள குருத்தை நறுக்கினால் கிளைகள் தோன்றும்.நேரடியாக வெயிலில் வைக்காமல், வெளிச்சமான இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும். 

சக்குலன்ட்ஸ்(Succulents)

Pexels

காற்றில் வளரும் செடிகள்(Air Plants)

மண்  இல்லாமல், முற்றிலும் காற்றில் வளரக்கூடிய சில செடிகளைப் பற்றி பார்க்கலாம். இவற்றிற்கு எந்தப் பராமரிப்பும் தேவை இல்லை. நீங்கள் விரும்பும் விதங்களில் இவற்றைக் கொண்டு வீட்டை அலங்கரிக்கலாம். 

1. காட்டன் கேண்டி டில்லேண்ட்சியா(cotton candy tillandsia)

கற்றாழையைப் போன்ற சிறிய இலைகளைக் கொண்ட காட்டன் கேண்டி, பிங்க் நிறத்தில் பூக்கும்போது மிகவும் அழகாக இருக்கும்.உங்கள் பால்கனியில் அழகாக தொங்கவிட்டு அலங்கரிக்கலாம். மண் பயன்படுத்தி அந்த இடம் கறுப்பாகும், என்ற பயம் தேவை இல்லை. எந்த பராமரிப்பும் தேவை இல்லை. 

2. ஸ்பானிஷ் மாஸ்(spanish moss)

Pexels

எளிதாக வளரக்கூடிய செடிகளில் இதுவும் ஒன்று. வேர்களைப் போல தோற்றமளிக்கும் இந்த செடியை உயரத்தில் தொங்கவிட்டால் அழகாக இருக்கும். 

3. பௌண்ட் பை லவ்(bound by love)

பௌண்ட் பை லவ் என்ற பெயரில் கிடைக்கும், இரண்டு அழகான செடிகள் லோனந்தா(lonantha) மற்றும் ப்ராச்சிகாலாஸ்(Brachycaulos) லோனந்தா கூடுதல் அழகு கொண்ட ஒரு செடி. மிகவும் மென்மையான இலைகளைக் கொண்டது. வெள்ளை நிறத்தில் இலைகளில் படர்ந்திருக்கும் ட்ரைகோம்ஸ், இயற்கையாக சூர்ய ஒளியை பிரதிபலிக்கும்.

ப்ராச்சிகாலாஸ் அகலமாக, உறுதியான இலைகளைக் கொண்டது. அன்னாச்சிப்பழத்தின் மேல் பகுதியைப்போல் காட்சியளிக்கும். சிவப்பு மற்றும் பிங்க் நிறத்தில் பூக்கும்போது மிக அழகாக இருக்கும். வெயிலின் தாக்கத்தைப் பொறுத்து நிறம் மாறும் தன்மை கொண்டது. 

இப்படி பல காற்றில் வளரும் செடிகளை இங்கு  வாங்கலாம். 

மேலே குறிப்பிட்டவை மிகச் சிறிய பட்டியல்தான். எண்ணற்ற ராகங்களில், அழகழகாக கிடக்கிறது. மாதத்தில் இரண்டு முறை மட்டுமே கவனம் தேவைப்படும்.  இத்தகைய செடிகளை உங்கள் இல்லத்தில் அலங்கரித்து , உட்புற காற்றின் தரத்தை மேம்படுத்தி , போதுமான ஆக்ஸிஜனை நிரப்பி , அமைதியான தூக்கத்தை பெற்று சந்தோஷம் அடையுங்கள் ! 

 

மேலும் படிக்க – பால்கனி தோட்டம் அமைப்பது எப்படி? சில எளிய தோட்ட அமைப்பு குறிப்புகள் மேலும் படிக்க – டெல்லியில் காற்று மாசு எதிரொலி : சுத்தமான ஆக்ஸிஜனுக்கு ஷோரூம்! 299 ரூபாய்க்கு விற்பனை!

பட ஆதாரம்  – Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Home & Garden