பல்வேறு சர்ச்சையில் சிக்கி இன்று வெளியான ஐரா திரைப்படத்தின் திரைவிமர்சனத்தை தான் தற்போது பார்க்க போகிறோம். முதல் முறையாக லேடி சூப்பர் ஸ்டார் இரண்டு வேடங்களில் நடித்திருக்கின்றார். படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றாலும் பல்வேறு கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகின்றது. ஐரா திரைப்படத்தின் டிரைலர் Youtubeல் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
மக்கள் மெயில் என்கிற பத்திரிகையில் பணியாற்றி வருகிறார் யமுனா என்கிற நயன்தாரா(nayanthara). அவரது வீட்டில் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க உடனே வீட்டை விட்டு எஸ்கேப் ஆகிறார்.
எப்போதும் போல நயன்தாரா(nayanthara) தன் நடிப்பால் இரண்டு ரோல்களிலும் கலக்கியுள்ளார். குறிப்பாக பவானி என்கிற கருப்பான பெண் வேடத்தில் ஆவரது நடிப்பு அல்டிமேட். ஹோட்டலில் சட்டையுடன் பணியாற்றும் கெட்டப் துவங்கி கிளைமாக்ஸில் திருமண கோலத்தில் இருக்கும்போது கதறி அழுவது வரை பல காட்சிகளில் அவரது முகபாவனை மற்றும் நடிப்பு நம் கண்களிலேயே இருக்கும்.
பிளாஷ்பேக்கில் பவானி (இதுவும் நயன்தாரா(nayanthara)தான்) பிறந்தது முதல் சந்தித்த துயரங்கள் கருப்பு வெள்ளையில் திரையில் வருகிறது. அவர் எப்படி இறந்தார், அவர் ஏன் நயன்தாராவை(nayanthara) கொல்ல நினைக்க காரணம் என்ன என்பதை எமோஷனலாக காட்டுகிறது மீதி படம்.
இயக்குனர் சர்ஜுன் முதல் பாதியில் வழக்கமான பேய் படம் போல கதையை நகர்த்தியிருந்தாலும், இரண்டாம் பாதியில் கதை எமோஷனலாக மாறுகிறது. முதல் பாதியில் வரும் பல சம்பவங்கள் அழுத்தமாக் இல்லாதது குறையாக தெரிந்தாலும், இரண்டாம் பாதி அதற்கு ஈடுகட்டுகிறது.
கருப்பாக இருக்கும் நயன்தாரா(nayanthara) ஏன் மற்றொரு நயந்தாராவை(nayanthara) பழிவாங்க துடிக்கிறார் என்கிற கேள்வி தான் கிளைமாக்ஸ் வரை த்ரில்லாக வைத்திருந்தது.
மெட்ராஸ் கலையரசன் தான் நயன்தாராவிற்கு(nayanthara) படம் முழுவதும் பயணிக்கிறார். நடிப்பில் ஓரளவு மெச்சூரிட்டி தெரிந்தது. நடிகர் யோகிபாபுவிற்கு படத்தில் அதிகம் வேலையில்லை. நயன்தாராவுடன் அவரது சீன்கள் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. மற்ற ரோல்களில் நடித்திருந்தவர்கள் குறை கூற முடியாத அளவிற்கு தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
– நயன்தாராவின்(nayanthara) நடிப்பு .. இரண்டு கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக நடித்திருப்பது. குறிப்பாக பவானி ரோலில் அவரது பல சீன்கள் நம்மை கண்கலங்கவைக்கும் அளவுக்கு நடிப்பு இருக்கும்.
– சுந்தரமூர்த்தி பின்னணி இசை மற்றும் ஆங்காங்கே பின்னணியில் வந்த பாடல்கள் பெரிய பிளஸ்.
– ரசிக்கும்படியாக இருந்த ஒளிப்பதிவு மற்றும் த்ரில்லிங்காகவே வைத்திருந்த எடிட்டிங்.
பவானி பேய் ஏன் நயன்தாராவை பழிவாங்க துடிக்கிறது என அறிய நமக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடைசியில் வைத்த சின்ன ட்விஸ்ட் நல்ல ஒர்க்கவுட் ஆகியுள்ளது.
மொத்தத்தில் ஐராவை நயன்தாராவிற்காக(nayanthara) நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம். ஐரா திரைப்படத்தின் இயக்குநர் இதற்கு முன்னர் குறும்படங்கள் மா மற்றும் லட்சுமி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தர வாழ்த்துகிறோம்.
Read More From Wedding
இறுதி நேரத்தில் மலர்ந்த காதல்..நெகிழ்வில் முடிந்த நேசம்..திருமணத்தில் இணைந்த முதிய நட்பு !
Deepa Lakshmi
திருமணம் மற்றும் சிறப்பு நாட்களில் அணிய, வித விதமான வங்கிகள்! (Designs For Bride In Tamil)
Meena Madhunivas
சென்னையில் சிறந்த திருமண மண்டபங்கள் தேடுபவருக்கு (Best Marriage Halls In Chennai In Tamil)
Deepa Lakshmi
அனிதா சம்பத்திற்கு கல்யாணம் .. வலை தளம் முழுக்க சந்தோஷம் ..
Deepa Lakshmi